You have been blocked from seeing ads.

எட்டாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் பாடம் -2

ஒன்றே குலம்

1) ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறியவர் யார்?

     விடை: திருமூலர்

2) ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

  நன்றே நினைமின் நமனில்லை நாணாமே – இதில் நமனில்லை என்னும் சொல் எதைக் குறிக்கிறது?

     விடை: எமனில்லை

3) திருமந்திரத்தை இயற்றியவர் யார்?

     விடை: திருமூலர்

4) திருமந்திரம் எத்தனை பாடல்களைக் கொண்டது?

     விடை: 3000

5) பன்னிரு திருமறைகளுள் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ள நூல் எது?

     விடை: திருமந்திரம்

6) அறநெறியில் வாழ்பவர்கள் உயிரைக் கவர வரும் ——- க் கண்டு அஞ்சமாட்டார்கள்.

     விடை: நமனை

7) நமனில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக

     விடை: நமன் + இல்லை

8) ஒன்றே ——- என்று கருதி வாழ்வதே மனிதப்பண்பாகும்.

     விடை: குலம்

9) நம்பர்க்கு + அங்கு என்னும் சொல்லை சேர்த்து எழுதுக

     விடை: நம்பர்க்கங்கு

10) அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவராகவும் பதினெண் சித்தர்களுள் ஒருவராகவும் விளங்கியவர் யார்?

அ) ஆண்டாள் ஆ) கண்ணப்பர் இ) திருமூலர் ஈ) அப்பர்

     விடை: இ) திருமூலர்

     மெய்ஞ்ஞான ஒளி

1) குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் என்ன?

     விடை: சுல்தான் அப்துல்காதர்

2) சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைகளில் தவம் இயற்றிய ஞானம் பெற்றவர் யார்?

     விடை: குணங்குடி மஸ்தான்

3) குணங்குடி மஸ்தான் எழுதிய நூல்கள் யாவை?

  • எக்காளக் கண்ணி
  • மனோன்மணிக் கண்ணி
  • நந்தீசுவரக் கண்ணி

4) மனிதர்கள் தம் —– தீய வழியில் செல்ல விடாமல் காக்க வேண்டும்.

     விடை: ஐம்பொறிகளை’

5) உள் + இருக்கும் என்னும் சொல்லை சேர்த்து எழுதுக

     விடை: உள்ளிருக்கும்

6) ஆனந்தவெள்ளம் என்னும் சொல்லை பிரித்து எழுதுக

     விடை: ஆனந்தம் + வெள்ளம்

7) ஞானியர் சிறந்த கருத்துக்களை மக்களிடம் ——-

     விடை: பகர்ந்தனர்

8) பராபரம் என்னும் சொல்லின் பொருள் யாது?

     விடை: மேலான பொருள்

9) பகராய் என்னும் சொல்லின் பொருள் யாது?

     விடை: தருவாய்

       அயோத்திதாசர் சிந்தனைகள்

 1) தென்னிந்தியச் சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை என்ற போற்றப்பட்டவர் யார்?

     விடை: அயோத்திதாசர்

2) அயோத்திதாசரின் இயற்பெயர் என்ன?

     விடை: காத்தவராயன்’

3) பாலி, வடமொழி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர் யார்?

அ) அம்பேத்கார் ஆ) பெரியார் இ) அயோத்திதாசர் ஈ) பாரதியார்

     விடை: இ) அயோத்திதாசர்

4) 1907 ஆம் ஆண்டு ஒருபைசாத்தமிழன் என்னும் வார இதழை காலணா விலையில் தொடங்கியவர் யார்?

அ) அம்பேத்கார் ஆ) பெரியார் இ) அயோத்திதாசர் ஈ) பாரதியார்

     விடை: இ) அயோத்திதாசர்

5) என் பகுத்தறிப்பு பிரச்சாரத்திற்கும் சீர்சிருத்தக்கருத்துகளுக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தவர்களுள் அயோத்திதாசரும் அப்பாதுரையாரும் ஆவார்கள் என்று கூறியவர் யார்?

அ) அம்பேத்கார் ஆ) பெரியார் இ) அறிஞர் அண்ணா ஈ) பாரதியார்

     விடை: ஆ) பெரியார்

மேலும் படிக்க  ஒன்பதாம் வகுப்பு தமிழ் முதலாம் பருவம் பாடம் – 2

6) அயோத்திதாசர் பதிப்பித்த நூல்கள் யாவை?

  • போகர் எழுநூறு
  • அகத்தியர் இருநூறு
  • சிமிட்டு இரத்தினச் சுருக்கம்
  • பாலவாகடம்

7) 1892 ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்டோர் உரிமைகளைப் பாதுகாக்க திராவிட மகாஜன சங்கத்தை தோற்றுவித்தவர் யார்?

அ) அம்பேத்கார் ஆ) பெரியார் இ) அயோத்திதாசர் ஈ) பாரதியார்

     விடை: இ) அயோத்திதாசர்

8) இலக்கியம், இலக்கணம், கணிதம், மருத்துவம், சமயத்துவம் உள்ளிட பலதுறைகளையும் கற்றுத் தேர்ந்தவர்?

அ) அம்பேத்கார் ஆ) பெரியார் இ) அயோத்திதாசர் ஈ) பாரதியார்

     விடை: இ) அயோத்திதாசர்

9) அயோத்திதாசர் எழுதிய நூல்கள் யாவை?

  • புத்தரது ஆதிவேதம்
  • இந்திரர் தேச சரித்திரம்
  • புத்தர் சரித்திரப்பா

10) திருவள்ளுவர், ஔவையார் ஆகியோர்களின் நூல்களுக்கு பௌத்த கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய விளக்கங்களைக் எழுதியவர் யார்?

அ) அம்பேத்கார் ஆ) பெரியார் இ) அயோத்திதாசர் ஈ) பாரதியார்

     விடை: இ) அயோத்திதாசர்

11) தாம்பரத்தில் உள்ள சித்த ஆராய்ச்சி மையத்துடன் இணைந்த மருத்துவமனைக்கு ——— பெயர் வைக்கப்பட்டுள்ளது?

அ) அம்பேத்கார் ஆ) பெரியார் இ) அயோத்திதாசர் ஈ) பாரதியார்

விடை: இ) அயோத்திதாசர்

12) வானம் பொய்ப்பதற்குக் காரணம் ஒழுக்கமுள்ள  ஞானிகள் இல்லாமையே என்று கூறியவர் யார்?

     விடை: அயோத்திதாசர்

13) அயோத்திதாசரின் புதுமையான சிந்தனைகளுக்கு அடித்தளமாக அமைந்தது அவரது——-

     விடை: ஆழ்ந்த படிப்பு

14) மக்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடையது ——–

அ) வானம் ஆ) கடல் இ) மழை ஈ) கதிரவன்

     விடை: இ) மழை

15) கல்வியோடு கைத்தொழிழையும் கற்க வேண்டும் என்று கூறியவர் யார்?

     விடை: அயோத்திதாசர்

   மனித யந்திரம்

1) 16 அணாக்கள் சேர்ந்தது எத்தனை ரூபாய்?

   அ) கால் ஆ) அரை இ) ஒன்று ஈ) இரண்டு

     விடை: இ) ஒன்று

2) சிறுகதை மன்னன் என்று போற்றப்படுபவர் யார்?

     விடை: புதுமைப்பித்தன்

3) புதுமைப்பித்தனின் இயற்பெயர் என்ன?

     விடை: சொ. விருத்தாசலம்

4) புதுமைப் பித்தன் எழுதிய சிறுகதைகள் யாவை?

  • கடவுளும் கந்தசாமிபிள்ளையும்
  • சாபவிமோசனம்
  • பொன்னகரம்
  • ஒருநாள் கழிந்தது

           யாப்பு இலக்கணம்

1) மரபு கவிதைகள் எழுதுவதற்கான இலக்கணம் —— ஆகும்.

     விடை: யாப்பு

2) யாப்பு இலக்கணத்தின் உறுப்புகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

விடை: 6

  • எழுத்து
  • அசை
  • சீர்
  • தளை
  • அடி
  • தொடை

3) அசை எத்தனை வகைப்படும்?

     விடை: 2 (நேரசை, நிரையசை)

4) சீர் எத்தனை வகைப்படும்?

     விடை: 4

  • ஓரசைச்சீர்
  • ஈரசைச்சீர்
  • மூவசைச்சீர்
  • நாலசைச்சீர்

5) ந, நம், நா, நாம் என்பது ——– அசை ஆகும்.

     விடை: நேரசை

6) கட, கடல், கடா, கடாம் என்பது —— அசை ஆகும்.

     விடை: நிரையசை

7) தளை எத்தனை வகைப்படும்?

     விடை: 7

8) அடி எத்தனை வகைப்படும்?

     விடை: 5

9) தொடை எத்தனை வகைப்படும்?

     விடை: 8

தொடை

You have been blocked from seeing ads.

10) இறுதி எழுத்து அல்லது இறுதி ஓசை ஒன்றிவருவது —— ஆகும்.

மேலும் படிக்க  ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் பாடம்-3

     விடை: இயைபு தொடை

11) ஒரு பாடலின் இறுதிச்சீர் அடுத்து பாடலின் முதற்சீராக வருவது —— ஆகும்.

     விடை: அந்தாதி தொடை

12) பா எத்தனை வகைப்படும்?

     விடை: 4

13) செப்பல் ஓசை உடைய பா எது?    

     விடை: வெண்பா

13) அகவல் ஓசை உடையது —— ஆகும்.

     விடை: ஆசிரியப்பா

14) துள்ளல் ஓசை உடையது —– ஆகும்.

     விடை: கலிப்பா

15) வஞ்சிப்பா —— ஓசை உடையது ஆகும்.

     விடை: தூங்கல்

16) முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது —— ஆகும்.

     விடை: மோனை தொடை

17) விடும் என்பது ——– சீர் ஆகும்.

அ) நேரசை ஆ) நிரையசை இ) மூவசை ஈ) நாலசை

     விடை: ஆ) நிரையசை

      திருக்குறள்

1) கான முயல்எய்த அம்பினில் யானை

  பிழைத்தவேல் ஏந்தல் இனிது – இந்தக் குறளில் பயின்று வந்துள்ள அணி யாது?

     விடை: பிறிதுமொழிதல் அணி

2) நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு – இந்தக் குறளில் பயின்று வந்துள்ள அணி யாது?

     விடை: உவமை அணி

3) பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்

  கலம்தீமை யால்திரிந்து அற்று – இந்தக் குறளில் பயின்று வந்துள்ள அணி யாது?

     விடை: உவமை அணி

4) பெருஞ்செல்வம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக

     விடை: பெருமை + செல்வம்

5) ஊராண்மை என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக

     விடை: ஊர் + ஆண்மை

6) திரிந்து + அற்று என்ற சொல்லை சேர்த்து எழுதுக

     விடை: திரிந்தற்று

7) ஆண்மையின் கூர்மை ——–

     விடை: வறியவருக்கு உதவுதல்

8) வறுமை வந்த காலத்தில் ——— குறையாமல் வாழ வேண்டும்.

     விடை: ஊக்கம்

9) பொருத்துக

  1. இன்பம் தருவது – நற்பண்பில்லாதவன் பெற்ற பெருஞ்செல்வம்
  2. நட்பு என்பது – குன்றிமணியளவு தவறு
  3. பெருமையை அளிப்பது – செல்வம் மிகுந்த காலம்
  4. பணிவு கொள்ளும் காலம் – சிரித்து மகிழ மட்டுமன்று
  5. பயனின்றி அழிவது – பண்புடையார் நட்பு

     விடை:

  1. இன்பம் தருவது – பண்புடையார் நட்பு
  2. நட்பு என்பது – சிரித்து மகிழ மட்டுமன்று
  3. பெருமையை அளிப்பது – குன்றிமணியளவு தவறு
  4. பணிவு கொள்ளும் காலம் – செல்வம் மிகுந்த காலம்
  5. பயனின்றி அழிவது – நற்பண்பில்லாதவன் பெற்ற பெருஞ்செல்வம்

எட்டாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் பாடம் -1

You have been blocked from seeing ads.

1 thought on “எட்டாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் பாடம் -2”

Comments are closed.