எட்டாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் பாடம் -1

படைவேழம்

1) கலிங்கத்துப்பரணியை இயற்றியவர் யார்?

     விடை: செயங்கொண்டர்

2) செயங்கொண்டர் யாருடைய அவைக்களப் புலவராக விளங்கினார்?

     விடை: முதற்குலோத்துங்கச் சோழன்

3) செயங்கொண்டரை யார் பரணிக்கோர் செயங்கொண்டர் என்று புகழ்ந்துள்ளார்?

     விடை: பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

4) கலிங்கத்துப்பரணியை தென்தமிழ்த் தெய்வப்பரணி என்று புகழ்ந்தது யார்?

     விடை: ஒட்டக்கூத்தர்

5) கலிங்கத்துப்பரணி ———- பாவகையால் பாடப்பட்டது?

     விடை: கலித்தாழிசையால்

6) பரணி எத்தனை தாழிசைகளைக் கொண்டது?

     விடை: 599

7) முழை என்னும் சொல்லின் பொருள் யாது?

     விடை: மலைக்குகை

8) கரி என்னும் சொல்லின் பொருள் யாது?

     விடை: யானை

9) மறலி என்னும் சொல்லின் பொருள்?

     விடை: காலன்

10) வெங்கரி என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக

     விடை: வெம்மை + கரி

11) என்றிருள் என்னும் சொல்லை பிரித்து எழுதுக

     விடை: என்று + இருள்

12) போல் + உடன்றன என்பதனைச் சேர்த்து எழுதுக

     விடை: போலுடன்றன

விடுதலைத் திருநாள்

1) மீரா வின் இயற்பெயர் என்ன?

     விடை: மீ. இராசேந்திரன்

2) அன்னம் விடு தூது என்னும் இதழை நடத்தியவர் யார்?

     விடை: மீரா

3) மீரா எழுதிய நூல்கள் யாவை?

 1.      ஊசிகள்
 2.      குக்கூ
 3.      மூன்றும் ஆறும்
 4.      வா இந்தப் பக்கம்
 5.      கோடையும் வசந்தமும்

4) சீவனில்லாமல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக

     விடை: சீவன் + இல்லாமல்

5) விலங்கொடித்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக

     விடை: விலங்கு + ஒடித்து

6) காட்டை + எரித்து என்னும் சொல்லைப் சேர்த்து எழுதுக

     விடை: காட்டெரித்து

7) இதம் + தரும் என்னும் சொல்லை சேர்த்து எழுதுக

     விடை: இதந்தரும்

பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன்

1) மதிய உணவுத்திட்டதை சத்துணவுத் திட்டமாக மாற்றியவர் யார்?

     விடை: எம்.ஜி.ஆர்

2) எம்.ஜி.ஆர் பிறந்த ஆண்டு எது?

     விடை: 1917 ஆம் ஆண்டு ஜனவரி 11

3) இந்திய அரசு மிகச் சிறந்த விருதுக்கான பாரத் விருதை யாருக்கு வழங்கியது?

     விடை: எம்.ஜி.ஆர்

4) எம்.ஜி.ஆரின் பெற்றோர்கள் யார்?

     விடை: கோபாலன் – சத்தியபாமா

5) சென்னைப் பல்கலைக்கழகம் ——- பட்டத்தை எம்.ஜி.ஆருக்கு வழங்கியது?

மேலும் படிக்க  பத்தாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் பாடம் 1

     விடை: டாக்டர்

6) 1988 ஆம் ஆண்டு ——- விருது எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்டது?

     விடை: பாரத ரத்னா

7) பொன்மனச் செம்மல் என்று அழைக்கப்பட்டவர் யார்?

     விடை: எம்.ஜி.ஆர்

8) எம்.ஜி.ஆர் ——- என்னும் ஊரில் கல்வி பயின்றார்.

     விடை: கும்பகோணம்

9) ஐந்தாம் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம் ———-

     விடை: மதுரை

10) ராமச்சந்திரனுக்கு அழியாத புகழைத் தேடித்தந்த திட்டம் ——–

     விடை: சத்துணவுத் திட்டம்

11) எம்.ஜி.ஆர் படிப்பைத் தொடர முடியாமைக்குக் காரணம் ——

     விடை: குடும்ப வறுமை

அறிவுசால் ஔவையார்

1) ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்தது யார்?

     விடை: அதியமான் நெடுமான் அஞ்சி

2) சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது

  ஆதல் நின்னகத்து அடக்கிச்

  சாதல் நீங்க எமக்கீந் தனையே – என்று கூறியவர் யார்?

     விடை: ஔவையார்

3) இதில் எந்தக் கூற்று தவறானது.

 1. தொண்டைமான் அதியமானிடம் போர்புரிய எண்ணினான்.
 2. ஔவையார் தொண்டைமானிடம் அமைதி தூதுவராக வந்தார்.
 3. அதியமானே நெல்லிக்கனியைக் மரத்தில் இருந்து பரித்துக் கொடுத்தார்.
 4. ஔவையாரும் தொண்டைமானும் உறவினர்கள்.

           விடை: 4. ஔவையாரும் தொண்டைமானும் உறவினர்கள்

வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்

1) க, ச, த, ப என்னும் எழுத்துகளுக்கு முன் வல்லின ———– வரும்.

     விடை: மெய் எழுத்து

வல்லினம் மிகும் இடங்கள்

2) அந்த இந்த என்னும் சுட்டுத்திரிபுகளைக் அடுத்து —— வரும்.

     விடை: வல்லினம் (அந்தப்பக்கம், இந்தப்பக்கம்)

3) வல்லினம் மிகும் இடங்கள் யாவை?

 1. உவமைத்தொகை ( தாய்த்தமிழ்)
 2. உருவகம் (தமிழ்த்தாய்)
 3. திசைப்பெயர்களை அடுத்து (கிழக்குக்கடல்)
 4. இரண்டாம் வேற்றுமைத்தொகை (தலையைக் காட்டு)
 5. நான்காம் வேற்றுமைத்தொகை (எனக்குத் தெரியும்)
 6. வன்தொடர் குற்றியலுகரத்தில் (படித்துப் பார்)
 7. அந்த, இந்த, எந்த, அப்படி, எப்படி, இப்படி என்னும் சொற்களில் (அந்தப்பக்கம்)
 8. இகரத்தில் முடியும் வினையெச்சத்தில் ( எழுதிப்பார்த்தாள்)
 9. எட்டு, பத்து என்னும் பெயர்களை அடுத்து ( எட்டுத்தொகை, பத்துப்பாட்டு)

4) வல்லினம் மிகா இடங்கள் யாவை?

 1. உம்மைத்தொகையில் (தாய்தந்தை)
 2. வினைத்தொகையில் (எழுதுபொருள்)
 3. அப்படி, எப்படி, இப்படி என்னும் சொற்களைத் தவிர, படி என முடியும் சொற்களில் வராது. (எழுதும்படி)
 4. எழுவாய் சொற்களில் (யானை பிளிறியது)
 5. அது, இது, எது என்னும் சொற்களில் (அது சென்றது)
 6. பெயரெச்சம், எதிர்மறை பெயரெச்சம் (எழுதிய பாடல்)
 7. உகரத்தில் முடியும் வினையெச்சத்தில் (தின்று தீர்த்தான்)
 8. இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வரும் இடத்தில் (காய் தின்றேன்)
    எட்டாம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் பாடம் – 3

1 thought on “எட்டாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் பாடம் -1”

Comments are closed.