You have been blocked from seeing ads.

எட்டாம் வகுப்பு முதலாம் பருவம் பாடம் -3

நோயும் மருந்தும்

1) நீலகேசி ———- காப்பியங்களுள் ஒன்று.

     விடை: ஐஞ்சிறு காப்பியங்களுள்

2) நீலகேசி நூல் எந்த சமயக் கருத்துக்களை கூறுகிறது?

     விடை: சமண சமயம்

எச்சம்

You have been blocked from seeing ads.

3) நீலகேசி எத்தனை சருக்கங்களைக் கொண்டது?

     விடை: 10

4) தீர்வனவும் தீராத் திறத்தனவும் செய்ம்மருந்தின்

ஊர்வனவும்  போலாதும் உவசமத்தின் உய்ப்பனவும்

யார்வினவும் காலும் வைமூன்று கூற்றவா

  நேர்வனவே ஆகும் நிழல்இகழும் பூணாய் – இந்தப் பாடல் எந்த நீலகேசி நூலில் எந்த சருக்கத்தில் அமைந்துள்ளது?

     விடை: தருமவுரைச் சருக்கம்

5) நீலகேசி கூறும் மூன்று மருந்துகள் யாவை?

     நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம்

6) உடல்நலம் என்பது —— இல்லாமல் வாழ்தல் ஆகும்.

     விடை: பிணி

7) இவையுண்டார் என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக

     விடை: இவை + உண்டார்

8) தாம் + இனி என்ற சொல்லை சேர்த்து எழுதுக

     விடை: தாமினி

வருமுன் காப்போம்

1) கவிமணி தேசிக விநாயகானார் எந்த ஊரில் பிறந்தார்?

     விடை: குமரி மாவட்டத்தில் உள்ள தேரூர்

2) தேசிக விநாயகானார் எந்த நூலை தமிழில் மொழிபெயத்துள்ளார்?

     விடை: உமர்கய்யாம் பாடல்கள்

3) தேசிக விநாயகானார் இயற்றிய நூல்கள் யாவை?

     விடை:

           ஆசியஜோதி

            மருமக்கள் வழி மான்மியம்

            கதர் பிறந்த கதை

            மலரும் மாலையும்

4) உடலின் உறுதி உடையவரே

உலகில் இன்பம் உனடயவராம்;

 இடமும் பொருளும் நோயாளிக்கு

 இனிய வாழ்வு  தந்திடுவமோ? – என்ற பாடல் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?

     விடை: மலரும் மாலையும்

5) காந்தியடிகள் ——– போற்ற வாழ்ந்தார்.

     விடை: வையம்

6) நலமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக

     விடை: நலம் + எல்லாம்

7) இடம் + எங்கும் என்பதனைச் சேர்த்து எழுதுக

     விடை: இடமெங்கும்

தமிழர் மருத்துவம்

1) தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு ——- பயன்படுத்தினர்.

     விடை: தாவரங்களை

2) தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது ——- நீட்சியாகவே உள்ளது.

     விடை: உணவின்

3) உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று ———

     விடை: இரத்தக்கொதிப்பு

4) சமையலறையில் செலவிடும் நேரம் ——– செலவிடும் நேரமாகும்.

மேலும் படிக்க  ஒன்பதாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் பாடம் – 1

     விடை: நல்வாழ்வுக்காக

தலைக்குள் ஓர் உலகம்

1) மனித மூளையில் இருக்கும் செல்களின் எண்ணிக்கை யாது?

     விடை: ட்ரில்லியன்

2) எத்தனை நியூரான்கள் மனித மூளையில் உள்ளது?

     விடை: 100 பில்லியன் அல்லது பத்தாயிரம் கோடி

3) மூளை ——- இருந்து முளைக்கிறது.

     விடை: முதுகுத்தண்டு

4) மூளையை எத்தனை பாகங்களாக பிரிக்கலாம்?

     விடை: உள்மூளை, நடுமூளை, பின்மூளை

5) எந்த மூளை நம் உடலில் உள்ள அசைவுகளையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்துகிறது?

     விடை: சிறுமூளை

6) மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு எத்தனை மில்லி லிட்டர் குருதி தேவைப்படுகிறது?

     விடை: 800 மி.லி

7) உடம்பில் ஐம்பதில் ஒரு பங்காக இருப்பது எந்தப் பாகம்?

     விடை: மூளை

8) அனிச்சை செயல்கள் நிகழ எது ஆணை பிறப்பிக்கிறது?

     விடை: முதுகுத்தண்டின் குறுக்கு இணைப்புகள்

9) சுஜாதாவின் இயற்பெயர்  என்ன?

     விடை: ரங்கராஜன்

10) மிண்ணனு வாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் முக்கியப் பங்கு வகித்த எழுத்தாளர் யார்?

     விடை: சுஜாதா

11) சுஜாதா எழுதிய நூல்கள் யாவை:

 • என் இனிய எந்திரா
 • மீண்டும் ஜீனோ
 • ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்
 • தூண்டில் கதைகள்
 • தலைமைச் செயலகம்

12) எத்தனை நிமிடங்களுக்கு ஒரு முறை மனிதனின் மனநிலை மாறிக்கொண்டு இருக்கிறது?

     விடை: 90

13) மூளையின் வலது பகுதி ஆக்கிரம்பு உள்ளவர்கள் எந்தத் துறையில் சிறந்து விளங்குவார்கள்?

     விடை: நடிப்பில், பாடல் துறையில், நடனத்துறையில்

14) பேசுவது மற்றும் எழுதுவது எல்லாம் மூளையின் எந்தப் பகுதி பார்த்துக் கொள்கிறது?

     விடை: மூளையின் இடது பகுதி

எச்சம்

1) எச்சம் என்றால் என்ன?

     ஒரு சொல் முற்றுப் பெறாமல் வருவது ஆகும்.

      எ.கா: படித்த, படித்து, தைத்த, பாடிய, ஆடிய

2) எச்சம் எத்தனை வகைப்படும்?

     விடை: 2

 1. பெயரெச்சம்
 2. வினையெச்சம்

3) பெயரெச்சம் என்றால் என்ன?

     ஒன்றன் பெயரைக் கொண்டு முடியும் எச்சம் ஆகும்.

      இது மூன்று காலத்திலும் வரும்.

      எ.கா: படித்த மாணவன், படித்த பள்ளி,

4) பெயரெச்சம் எத்தனை வகைப்படும்?

     விடை: 2

 1. தெரிநிலை பெயரெச்சம்
 2. குறிப்பது பெயரெச்சம்

5) தெரிநிலை பெயரெச்சம் என்றால் என்ன?

     ஒரு செயலையும் காலத்தையும் தெளிவாகக் காட்டுவது ஆகும்.

      எ.கா: எழுதிய கடிதம்

மேலும் படிக்க  ஆறாம் வகுப்பு மூன்றாம் பருவம் – பாடம் 3

6) குறிப்பு பெயரெச்சம் என்றால் என்ன?

     ஒரு செயலையும் காலத்தையும் தெளிவாகக் காட்டாமல் பண்பை மட்டும் காட்டுவது ஆகும்.

      எ.கா: சிறிய கடிதம், பெரிய கடிதம், குட்டி கண்ணாடி

7) வினையெச்சம் என்றால் என்ன?

     ஒன்றன் வினையைக் கொண்டு முடியும் எச்சம் ஆகும்.

      எ.கா: படித்து முடித்தான், படித்து வியந்தான்.

8) வினையெச்சம் எத்தனை வகைப்படும்?

     விடை: இரண்டு

 1. தெரிநிலை வினையெச்சம்
 2. குறிப்பது வினையெச்சம்

9) தெரிநிலை வினையெச்சம் என்றால் என்ன?

     ஒன்றன் செயலையும் காலத்தையும் தெளிவாகக் காட்டி ஒரு வினைச்சொல்லோடு முடிவது ஆகும்.

      எ.கா: எழுதி வந்தான், வரைந்து வந்தான், ஆடி வந்தான், ஓடி வந்தாள்.

10) குறிப்பது வினையெச்சம் என்றால் என்ன?

     ஒரு செயலையும் காலத்தையும் தெளிவாகக் காட்டாமல் பண்பை மட்டும் காட்டும் வினையெச்சம் ஆகும்.

      எ.கா: மெல்ல வந்தான். வேகமாக வந்தான்

11) முற்றெச்சம் என்றால் என்ன?

     ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது ஆகும்.

      எ.கா: வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள்

      இதில் படித்தனள் என்பது படித்து என்னும் வினையெச்சப் பொருளைத் தருகிறது.

12) முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் ——— எனப்படும்.

     விடை: எச்சம்

13) பார்த்த என்னும் சொல் ———- எச்சம்.

     விடை: பெயரெச்சம்

14) குறிப்பு வினையெச்சம் ——— வெளிப்படையாகாக் காட்டாது.

     விடை: காலத்தை

15) பொருத்துக

 1. நடந்து – முற்றெச்சம்
 2. பேசிய – குறிப்புப் பெயரெச்சம்
 3. எடுத்தனன் உண்டான் – பெயரெச்சம்
 4. பெரிய – வினையெச்சம்

           விடை:

 1.    நடந்து – வினையெச்சம்
 2.    பேசிய – பெயரெச்சம்
 3.    எடுத்தனன் உண்டான் – முற்றெச்சம்
 4.    பெரிய – குறிப்பு பெயரெச்சம்
எட்டாம் வகுப்பு முதலாம் பருவம் பாடம் – 2
You have been blocked from seeing ads.