தேவதாஸ் – பார்வதி காதல் கதை – தமிழில்

தேவதாஸ் பார்வதியின் பால்ய பருவம்:

மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு ஊரில் தேவதாஸ் மற்றும் பார்வதி என்ற சிறுவர்கள் இருந்தனர்.

இவர்கள் இருவரும் ஒன்றாகத் கைகோர்த்துக் கொண்டு தான் பள்ளிக்குச் செல்வார்கள்.

ஒன்றாக விளையாடுவது, சாப்பிடுவது, ஊர் சுற்றுவது போன்ற எல்லா நிகழ்வுகளிலும் இணந்தது தான் இருப்பார்கள்.

இரவு தூங்கும் பொழுது மட்டுமே தன்னுடைய பெற்றோர்களிடம் இருப்பார்கள் மற்ற நேரம் அனைத்தும் இவர்களுக்காக ஒதுக்கப்பட்டவையாக இருந்தது.

இவர்கள் இருவரும் பக்கத்து வீடு என்பதால் அவர்களின் குடும்பத்தில் இவர்களை யாரும் அதிகம் தேடக் கூட மாட்டார்கள்.

தேவதாஸ் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன், பார்வதி நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள்.

இந்த இரு சின்னஞ்சிறு உள்ளங்களுக்கும் அந்தஸ்து சாதியைப் பற்றி என்ன தெரியும், இருவருக்கும் இடையில் அவர்களை அறியாமல் ஒருவிதமான ஈர்ப்பு இருந்தது.

அந்த வயதில் அது காதலாக யாருக்கும் தோனாது ஆனால் அது ஒரு புனிதமான அன்பாகவே அனைவருக்கும் தெரிந்தது.

தேவதாஸுக்கு ஒரு 13 வயது இருக்கும் பொழுது மேற்ப்படிப்புக்காக வெளியூர் சென்று படித்தான்.

பார்வதியின் காதல்:

அவன் சென்ற நாள் முதல் நாளிலிருந்து பார்வதிக்கு தேவதாஸீன் நினைவுகள் மட்டுமே இருந்தது.

தேவதாஸ் கொடுத்துச் சென்ற பரிசுப் பொருட்களை மட்டுமே அடிக்கடி எடுத்துப் பார்ப்பாள்.

அவன் ஊருக்குச் சென்ற பிறகு பார்வதிக்கு கடிதம் எழுதி அனுப்பியிருந்தான்.

அந்தக் கடிதத்தையும் அவன் பயன்படுத்திய பொருட்களையும் அவனின் நினைவுகளாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

பார்வதிக்கு புரிந்தது அவன் மேல் நட்பை தாண்டி காதல் கொண்டுள்ளோம் என்று.

பார்வதி அவனின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தாள்.

சில வருடங்களுக்குப் பிறகு தன் படிப்பை முடித்து விட்டு தேவதாஸ் வீட்டிற்கு வந்து அவன் முதலில் பார்த்தது பார்வதியைத்தான்.

பார்வதிக்கு எல்லையில்லா ஆனந்தமாக இருந்தது இவ்வளவு நாளாக ஏங்கி தவித்ததற்கு இன்று பலன் கிடைத்து விட்டது என்று.

தேவதாஸீற்கு அவள்மேல் அளவு கடந்த அன்பு இருந்தது.

பார்வதியின் மனதில் தேவதாஸீன் மேல் அளவு கடந்த காதல் வளர்ந்து கொண்டே இருந்தது.

இருவரும் சிறுவயதில் உள்ளதைப் போல் அனைத்து இடங்களுக்கும் ஊர் சுற்றினர். ஊஞ்சல் ஆடினர்.

இவர்கள் இருவருமே எப்பொழுது பார்த்தாலும் பேசிக் கொண்டு இருந்தனர், இதைக் கவனித்த பார்வதியின் தாய் சுமித்ரா சந்தேகப்பட்டு அவனின் மேல் காதல் கொண்டுள்ளாயா? என்று வினவினாள்.

பார்வதியும் ஆம் நான் அவனைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்றாள்.

அதற்கு அவளின் தாய் அவனோ பணக்காரன் நாமோ ஏழை எப்படி உன்னை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று கேட்டாள்.

அதற்கு பார்வதி நான் அவனை மட்டும் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அடம்பிடித்தாள்.

மேற்கு வங்காளத்தில் அந்தக் காலத்தில் எல்லாம் பெண்களின் வீட்டார்களே மாப்பிளை கேட்டுச் செல்ல வேண்டும் என்ற வழக்கம் இருந்தது.

மேலும் படிக்க  காலம் உள்ளவரை காத்திருந்தான்

பார்வதியின் விருப்பத்திற்காக அவளின் வீட்டார்கள் தேவதாஸீன் வீட்டிற்குச் சென்று மாப்பிள்ளை கேட்டார்கள்.

பார்வதி மிகவும் அன்பானவள் என்பதால் அவளைப் பிடிக்கும் தேவதாஸீன் குடும்பத்திற்கு, ஆனால் பார்வதின் குடும்பம் அந்தஸ்தில் தங்களை விட குறைந்தவர்கள் என்பதால் அவர்களை அவமானப்படுத்தி  வீட்டை விட்டு வெளியே அனுப்பினர்.

பிறகு பார்வதியின் தாய் இவனை விட பெரிய பணக்காரனையே உனக்கு திருமணம் முடித்து வைப்பேன் என்று சொல்லி அவளை தன் வீட்டிற்கு அழைத்து வந்தாள்.

வெகு விரைவிலேயே பார்வதிக்கு ஒரு பணக்காரனை நிச்சயம் செய்து வைத்தனர்.

அன்றிரவே பார்வதி தேவதாஸை சந்தித்து வாருங்கள் நாம் எங்காவது சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என்று கெஞ்சினாள். ஆனால் அவனுக்கு என்ன முடிவு எடுப்பதென்று தெரியாமல் அவளை வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.

தேவதாஸிற்கு அவள்மேல் அதிகபாசம் இருந்தாலும் தன் குடும்பத்தை மீறி அவனால் எந்த முடிவும் எடுக்க தெரியாதவனாய் இருந்தான்.

தேவதாஸீன் செயல்:

அன்றிரவே யாரிடமும் சொல்லாமல் கல்கத்தாவிற்கு கிளம்பிச் சென்றான். அங்கு சென்றபின் பார்வதிக்கு கடிதம் எழுதினான்.

நான் உன்மேல் வைத்திருந்தது நட்பா காதலா என்று தெரியவில்லை ஆனால் அதீத அன்பை வைத்துள்ளேன். அது காதலாக இருந்தாலும் என் வீட்டை எதிர்த்து என்னால் ஒன்றும் செய்ய இயலாது.

நீ உன் வீட்டில் பார்க்கும் மாப்பிளையை திருமணம் செய்துகொள், நாம் பழையபடி பக்கத்து வீட்டு நபர்களாகவே இருந்துவிடலாம் என்று எழுதியிருந்தான்.

இதைப் பார்த்து பார்வதி கண்ணீர் விட்டு கதறுகிறாள், பின்பு அரை மனதுடன் திருமணத்திற்கு சம்மதித்தாள்.

இவளின் திருமணத்திற்கு ஒருநாள் முன்னாடியே தேவதாஸ் வந்து, உன்னைப் பிரிந்த இந்த சிறிது நாட்களில் தான் உன்மேல் நான் வைத்திருந்தது காதல் என்று புரிந்தது.

நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது வா நாம் எங்காவது சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என்றான்.

ஆனால் பார்வதி நான் உன்னோடு வரமுடியாது, அன்று இப்படித்தானே நான் கெஞ்சிருப்பேன் என்னுடைய காதலை நீ புரிந்து கொண்டாயா? இன்று எப்படி உன்னை என்னால் ஏற்க முடியும், நான் விடிந்ததும் அடுத்தவரின் மனைவியாகப் போகிறவள் இங்கே இருந்து சென்று விடு என்றாள்.

அவள் அப்படி வெளியில் திட்டினாலும் அவளால் தேவதாஸை மறக்க முடியாமல் அழுது கொண்டு தான் இருந்தாள்.

பார்வதியின் திருமணம்:

பார்வதிக்கு திருமணம் நடந்தது. அவளுடைய கணவனுக்கு42 வயது இருக்கும். ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

அவருடைய முதல் மனைவி இறந்து விட்டதால் பார்வதியை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

தேவதாஸ் பார்வதியின் மேல் உள்ள காதலால் மது மற்றும் போதைப் பொருளுக்கு அடிமை ஆனான்.

அவனின் நண்பன் அவனை விலைமாதுவிடம் அழைத்துச் சென்றான்.

மேலும் படிக்க  ஒரு கிராமத்து காதல் கதை - (சின்னம்மா, செலையன்)

அங்குள்ள சந்திரமுகி என்ற பெண் இவளின் இந்த நிலைமைக்கு யார் காரணம் கேட்டாள்.

எதனால் இப்படி குடிக்கிறீர்கள் என்றாள், இவன் அனைத்து கதையையும் சொன்னான்.

தேவதாஸ்


தேவதாஸ் அந்தப் பெண்ணை தன் சுண்டு விரலால் கூட தொடாமல் இனிமேல் இந்தமாறி தொழில் பண்ணாதே உனக்கு என்று ஒரு வேலையை தேடிக்கொள் என்று சொல்லி அவள் கையில் பணத்தைக் கொடுத்து விட்டு வந்தான்.

இதனால் சந்திரமுகிக்கு இவன்மேல் காதல் வந்தது.

சந்திரமுகி தேவதாஸுக்காக தான் சம்பாதித்த பொருள்களை எல்லாம் விற்றுவிட்டு ஒரு பணிப்பெண்ணாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவனிடம் வந்து சந்திரமுகி உங்களை நான் நன்றாக கவனித்துக் கொள்கிறேன் இனிமேல் இந்த  குடியை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சினாள்.

தேவதாஸீன் உடல்நிலை:

ஆனால் அவன் அதைக் கேட்காமல் குடித்துக் கொண்டே இருந்தான்.

இவனின் உடல்நலம் மிகவும் மோசமாகிக் கொண்டே சென்றது. இன்னும் ஒரு பாட்டில் மது குடித்தால் தேவதாஸ் இறந்து போய்விடுவான் என்று மருத்துவர்கள் பேசிக் கொண்டிந்ததை தேவதாஸ் அறிந்து கொண்டான்.

ஒருநாள் தேவதாஸின் நண்பன் ஒருவன் அவனை மது குடி என்று சொன்னதால் தன் நண்பனுக்காக அதை வாங்கிக் குடித்தான்.

. அவன் மதுவை குடித்த அடுத்த நொடியில் இருந்து அவனின் உடல் நிலை மிகமும் மோசமானது.

நாம் இறந்துவிடப் போகிறோம் என்று தெரிந்ததும் ஒரு முறையாது பார்வதியை பார்க்க வேண்டும் என்று எண்ணினான் தேவதாஸ்.

.அவன் பார்வதியின் வீட்டிற்கு அருகில் வரும்பொழுதே பார்வதியின் கணவன் அவனை அடையாளம் கண்டுகொண்டு வாயில் கதவை அடைக்கச் சொன்னான்.

அவன் கதவின் அருகே நின்று பார்வதி பார்வதி என்று கதறினான். கடைசியாக ஒரு தடவை மட்டும் உன் முகத்தை பார்த்து விட்டு போய்கிறேன் கதவைத் திற என்று கதறினான்.

பார்வதியும் அந்த கதவின் பின்னாடி நின்று கொண்டு அழுது கொண்டிருந்தாள்.

பார்வதியை கடைசியாக பார்க்காமலே அவனின் உயிரும் பிரிந்து சென்றது.

தேவதாஸீன் உடல் வாயிலில் கிடக்கவும் அவனை அனாதை பிணம் என்று நினைத்து அந்த ஊர் மக்கள் எரித்து விட்டனர்.

அவன் இறந்த பொழுதும் கூட பார்வதியை பார்க்க யாரும் அனுமதிக்கவில்லை.

சத்யவான் சாவித்திரி கதை – தமிழ் கதை

2 thoughts on “தேவதாஸ் – பார்வதி காதல் கதை – தமிழில்”

Comments are closed.