செலூக்கியஸ் நிகேடர் வருகை:
மாவீரன் அலெக்சாண்டர் இறந்த பின் அவரது தளபதி செலூக்கியஸ் நிகேடர் அலெக்சாண்ட்ரின் நினைவுகளளோடு அதே பாலைவனத்திற்கு வருகிறார், அந்தப் பெரும்படையின் நடுவில் மகள் சோபியா பல்லக்கில் வந்து கொண்டிருந்தாள்.
அலெக்சாண்டர் நேசித்த இந்தியாவை அவரது தளபதி நான் வெல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டே கண்ணீர் வடிக்கிறார். தந்தையே இந்தியாவை அடைந்து விட்டோமா? என்று வினவினாள் சோபியா. ஆம் என்றான் செலூக்கியஸ்.
அலெக்சாண்டரின் தளபதி அல்ல, அலெச்சாண்டரே வந்தால் கூட வரட்டும் ஆசான் காட்டும் வழியிருக்கிறது, என்னுடைய வாள் இருக்கிறது என்றான் சந்திர குப்தன்.
அன்றைய காலக்கட்டத்தில் சாணக்கியரின் புகழ் பரவிருந்தது தன்னுடைய மாணவர்களாலே. சாணக்கியர் சொன்னார், சந்திரா வெற்றி உன்னுடையதே என்று.
அவரின் கைகள் குடுமியை தடவ ஆரம்பித்தது. அன்று நள்ளிரவில் சந்திர குப்தன் தன் வாளை தீட்டிக் கொண்டிருந்தான். சாணக்கியர் தன் புத்தியை தீட்டினார்.
சாணக்கியர் சந்திர குப்தனை அழைத்து நீ இன்று மேலைக்காட்டிற்கு வேட்டைக்குப் போ, அதுவும் தனியாக போக வேண்டும் என்று கட்டளை இட்டார். மறுவார்த்தை பேசாமால் வேட்டைக்குப் புறப்பட்டான், சாணக்கியர் காரணம் இல்லாமல் போக சொல்ல மாட்டார்.
பாலைவனத்தின் வெயிலில் வாடிய சோபியா, ஒரு நதியில் விளையாடிக் கொண்டிருந்தாள், அவள் ஒரு வெண்ணிலா போலவே தோன்றினாள்.
அவளின் அழகிய தொப்புல்களில் விளையாடிய நதியின் அலைகள் அவளை தன்னுடனே இழுத்துச் சென்று கொண்டிருந்தது.
நதியில் சோபியா:
சோபியாவின் கூக்குரல் கேட்டு அனைவரும் அஞ்சினர் அவள் எந்த நிலமையில் இருப்பாள் என்று, அளவைக் காப்பாற்ற. அந்த நதியின் கரையோரத்தில் ஒரு முதியவர், அவரிடம் கிரேக்க வீரர்கள் , நீங்கள் முதியவர் ஆபத்திற்கு பாவம் இல்லை எங்கள் இராஜகுமாரியை காப்பாற்றுங்கள் என்றனர்.
அந்த முதியவர், சோபியாவை தன் கையில் தூக்கிக் கொண்டு தன் மடியில் போட்டார், அவள் ஆடையின்றி, பிறந்த குழந்தையைப் போல் அவரின் மடியில் கிடந்தாள்.
அவளின் சக தோழிகள் ஓடிவந்து ஆடையை அவளின் உடலில் சுற்றினார்கள்.
அவள் மூச்சில்லாமல் கிடந்தாள், இவர் தன் கருஞ்சிவப்பு உதட்டால் சோபியாவின் அழகிய உதட்டில் இருந்து நீரை வெளியேற்றினாள்.
அவள் கண் விழித்து, நீங்கள் யார் வாலிபரே என்றாள், நீருக்குள் இறங்கியதால் அவனின் மாறுவேடம் கலைந்திருந்தது, அதற்கு அவனோ என்னை சந்திர குப்தன் என்பார்கள் என்றான்.
சந்திர குப்தா, நீ என் மகளின் உயிரை காப்பாற்றினாய், அவளின் மானம் காத்தாய் என்று சொல்லிக் கொண்டே கண் கலங்கினார், கைகுலுக்கினார்.
சந்திர குப்தனும் கிரேக்க இளவரசி சோபியாவும் புதுப்புது விளையாட்டுகளை உற்பத்தி செய்யவும், பல விளையாட்டு வல்லுநர்கள் உற்பத்தி செய்ததை கற்கவும் பறந்தன.
சாணக்கியரின் சதிச்செயல்:
சாணக்கியர் தன் குடுமியை தடவ ஆரம்பித்தார். சந்திர குப்தன் சோபியா மீது அளவு கடந்த காதலில் கிடந்தார்.
ஒருநாள் சோபியாவிற்கு பாம்பு கடித்து கல்லறைக்கு போனாள். சந்திர குப்தன் ஷாஜகான் போல் கல்லறையிலே கிடந்தான்
ஷாஜகானை இருந்தவனை மீண்டும் சந்திர குப்தனாக மாற்றினார் சாணக்கியன்.
போர் பறவையானான். காலம் ஓடிக் கொண்டே இருந்தது. ஒரு குப்த இளவரசியை மணக்க வைத்து ஒரு வாரிசும் வந்தது.
ஒரு மாலை நேரத்தில் சோபியாவின் கல்லறையில் கண்ணீருடன் எல்லாம் விதி என்றான் சந்திரன், அது விதி அல்ல சதி என்று சோபியாவின் ஆவி கதறியது. நல்லவேளை ஒரு கிரேக்க கருப்பையில் குப்த வாரிசு பிறக்கவில்லை என்று நினைத்தார் சாணக்கியர்.
சோபியவை பாம்பு கடிக்க வைத்ததே சாணக்கியரின் வேலை என்று அறியாமல் இருந்தான் சந்திர குப்தன்.
உன்னை பைத்தியமாக்கும் காதலே – (துளசி)
3 thoughts on “சந்திர குப்தர் மௌரியர் – சோபியா காதல் கதை”
Comments are closed.