You have been blocked from seeing ads.

புரூஸ் லீ வாழ்க்கை கதை – தமிழில்

புரூஸ் லீ 1940 ஆம் ஆண்டு நவம்பர் 27 லில் ஹாங்காங் என்னும் இடத்தில் லீ ஹோய் சுன் மற்றும் கிரேஸ் ஹோ என்ற தம்பதியினருக்கு நான்காவது மகனாகப் பிறந்தார்.

இவருக்கு பெபே லீ, ஆக்னஸ் லீ, பீட்டர் லீ மற்றும் ராபர்ட் லீ என்ற சகோதரர்கள் இருந்தனர்.

இவர்கள் ஐவரில் புரூஸ் லீ மட்டுமே சுட்டியாக வளர்ந்து வந்தார், மற்ற நால்வரும் கூட எந்த வம்பு சண்டையும் செய்வதில்லை.

ஆனால் புருஸ் லீ தெருவில் உள்ள அனைத்து வீடுகளில் இருக்கும் குட்டி பசங்களையும் அடித்து விட்டு வந்து விடுவார்.

இவர் கைக்குழந்தையாக இருக்கும் பொழுதே இவரது பெற்றோர்கள் இவரை சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க கொடுத்திருந்தனர்.

புரூஸ் லீ யின் தந்தையும் ஒரு சினிமா கலைஞன் ஆவார், இவர்களின் பூர்வீகம் சீனா ஆகும்.

இவர் குழந்தை நட்சத்திரமாக 20 படங்களில் நடித்துள்ளார், அந்த சிறுவயதியிலேயே அனைவரின் மனதையும் தன் நடிப்பால் கவர்ந்தார்.

புரூஸ் லீ தெருவில் தான் சண்டை போடுவார் என்று பார்த்தால் பள்ளிக்கூடத்திலும் சக மாணவர்களை அடித்து விட்டு வருவார், இதனால் புரூஸ் லீ மீது அதீத வெருப்பைக் கொண்டிருந்தனர் அந்தப் பள்ளி ஆசிரியர்கள்.

இவர் ரிப்மேன் என்பரிடம் தற்காப்பு கலையைக் கற்றார், இவரின் வாலு தனத்தை தாங்கிக் கொள்ள முடியாத ஆசிரியர் ஒருவர் நீ வீரனாக இருந்தால் நமது பள்ளிக்கும் வேறு பள்ளி மாணவர்களுக்கு அடுத்த வாரம் நடக்கும் குத்துச் சண்டை போட்டியில் கலந்து கொண்டு உன் வீரத்தை காட்டு என்றார்.

புரூஸ் லீ யும் குத்துச் சண்டையில் கலந்து கொண்டார், மூன்று வருடம் தொடர்ந்து வெற்றி பெற்ற ஒரு மாணவனுடன் போட்டி போட்டு வெற்றி பெற்றார். அதுவே அவரின் முதல் வெற்றியாகும்

புரூஸ் லீ .

ஒருமுறை புரூஸ் லீ பெரிய இடத்து பையனின் மேல் கையை வைத்ததும் போலீஸ் கேஸ் என்று ஆனதால் இவரின் பெற்றோர்கள் சியாட்டலுக்கு அனுப்பி வைத்தனர்.

சியாட்டலில் புரூஸ் லீ யின் தந்தையின் நண்பரின் ஹோட்டலில் தங்கி வாஷிங்டன் பல்கலைகழகத்தில் சேர்ந்தார், அந்த ஹோட்டலிலே பகுதி நேர வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்.

அவரது பல்கலைகழகத்தில் படித்த லிண்டா எமெரியாவை காதலித்து 1964 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணத்தை லிண்டா எமெரியின் பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, காரணம் அவர் ஒரு சைனாக்காரர் என்பதால்.

அமெரிக்காவிலும் நம் நாட்டில் இருக்கும் சாதிப் பிரச்சனை போல் அங்கு இனப் பிரச்சனை இருந்து வந்தது.

இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தது.

புரூஸ் லீ இனப்பிரச்சனையை அகற்றுவதற்காக தன் நாட்டு தற்காப்புக் கலையான குங் பூ வை அமெரிக்காவிலுள்ள இளைஞர்களுக்கும் கற்றுத்தர நினைத்தார்.

மேலும் படிக்க  போதி தர்மர் வாழ்க்கை கதை – தமிழில்

புரூஸ் லீ அங்கு கலையை கற்று தருவதற்கு சீனாவில் உள்ள தற்கலை நிபுனர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அசாத்திய வீரன்!

அதனால் சீன தற்காப்பு நிபுனர்களுடன் சண்டையிட்டு அதில் வெற்றி பெற்றால் மட்டுமே அங்கு தன் நாட்டின் கலையை சொல்லித்தர அனுமதி கொடுப்பார்கள்.

புரூஸ் லீ யும் அந்த பயில்வானை சண்டையிட்டு வீழ்த்தினார், ஆனாலும் அவரின் மனதில் மகிழ்ச்சி இல்லை.

அவரது மனைவியான லிண்டா எமெரி, ஏன் சோகமாக இருக்கிறீர்கள்? நீங்கள் தான் வெற்றி பெற்று விட்டீர்களே என்று கேட்டாள்.

அதற்கு புரூஸ் லீ யோ நான் இவரை வீழ்த்த 3 நிமிடங்கள் ஆகிவிட்டது, எனது வாழ்வில் ஒருவரை வீழ்த்த இதுவரை இவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டது இல்லை என்று சோகமாக பதிலளித்தார்.

இதிலிருந்தே இவரின் ஆற்றலை நாம் தெரிந்து கொள்ளலாம், இவருக்கு ஒருவரை வீழ்த்த 1 நிமிடம் போதும் என்று.

இவர் ஒரு விநாடியில் 9 முறை பஞ்ச் கொடுப்பாராம் மற்றும் ஒரே விநாடியில் 6 முறை சைட் கிக் செய்வாராம் அப்படியென்றால் அவர் எப்படி அதிவேகமாக செயல்படுவார் என்று என்று நீங்களே நினைத்துப் பாருங்கள்.

இவரை விட இன்னும் இந்த உலகத்தில் அதிவேகமாக இயங்கும் மனிதன் இதுவரை பிறக்க வில்லை.

இவரின் அடியை தாங்க முடியாமல் பல குத்துச்சண்டை வீரர்கள் நிலை குலைந்து போயின.

புரூஸ்  குங்க் பூ வை விட குத்துச் சண்டை மேல அதிக ஆர்வம் காட்டினார். காரணம் குங் பூ வில் அடுத்து தாக்க வருமுன் எதிரிக்கு தெரிந்து விடும் இப்படிதான் தாக்க வருவான் என்று. அப்படி செய்வது இவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

புரூஸ் லீ

எதிரிக்கு நாம் எந்தப் பக்கத்தில் இருந்து தாக்க வருகிறோம் என்பதை அறியாமலே வீழ்த்த வேண்டும், அது குத்துச் சண்டையிலே நிகழும்.

இவர் தனக்கு ஏத்தவாறு தற்காப்பு கலையை மாற்றி அமைத்தார், அவ்வாறே தனது மாணவர்களுக்கும் கற்றுத் தந்தார்.

இவர் தற்காப்புகலை பள்ளி ஒன்றை நடத்தி வந்தார், அதில் அனைத்து இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் கற்றுத் தந்தார்.

புரூஸ் லீ க்கு முகமது அலி செய்யும் சைட் கிக் மிகவும் பிடித்த ஒன்று, புரூஸ் லீ யும் வலது காலில் கிக் செய்வார்.

விடா முயற்ச்சி!

சைட் கிக் பயிற்சி பெற்றிருக்கும் பொழுது இவரது முதுகுத்தண்டு அடிபட்டு போனது, மருத்துவர்கள் இனி உங்களால் குத்துச் சண்டை போட இயலாது என்று கூறி விட்டனர்.

அப்பொழுது பல சிறந்த ஆசிரியர்களின் நூல்களை படித்தார், அந்த நூல்களில் உள்ள கருத்துகளினால் உத்வேகம் அடைந்த புரூஸ் லீ மீண்டும் பயிற்சி மேற்க்கொண்டார்.

அவருடைய கடுமையான பயிற்சியினால் பழைய நிலமைக்குத் திரும்பினார்.

இவருடைய ஒரு சைட் கிக் 45 கிலோ கொண்ட மணல் சாக்கை சிதறடிக்கச் செய்யும். இவரின் ஒரு குத்தானது எதிரியை 20 அடிக்கு பின்னோக்கி தள்ளும் ஆற்றலை உடையது.

மேலும் படிக்க  இந்திரா காந்தி வாழ்க்கை கதை - தமிழில்

இவருடைய ஒரே கையைக் கொண்டு 400 முறை புஸ் அப் செய்வார், 2 விரல்களைக் கொண்டு 200 முறை புஸ் அப் செய்வார் அதுமட்டுமால் தன்னுடைய ஒற்றை கட்டை விரலைக் கொண்டு 100 முரை புஸ் அப் செய்வார்.

புரூஸ் லீ

You have been blocked from seeing ads.

இவரின் இந்தத் திறமையைப் பார்த்த ஹாலிவுட் வில்லன்கள் இவரிடம் வந்து பயிற்சிகளை மேற்கொள்வார்களாம்.

இவருக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் இருந்தாலும் எந்த இயக்குனர்களும் இவருக்கு வாய்ப்பு கொடுக்க முன்வரவில்லை. காரணம் இவர் சைனாவைச் சேர்ந்தவர் என்பதால்.

இதனால் இவர் ஹாங்காங் சென்று தொலைக்காட்சி தொடரில் நடித்தார், அவரின் நடிப்பில் ஈர்க்கப்பட்ட இயக்குனர்கள் இவரை வைத்து படம் எடுக்க முன் வந்தனர்.

இவரின் முதல் படம் “தி பிக் பாஸ்” இது மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தந்தது, அவரின் இரண்டாவது திரைப்படமான “பிஸ்ட் ஆப் பியூரி” அவரின் முதல் படத்தை விட அதிக வெற்றியை அடைந்ததது.

லீ யின் புகழ் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் பரவியது, அவர்களும் இவரின் கால்சீட்டிற்காக வரிசையில் காத்துக் கொண்டிருந்தனர்.

இவரின் ஐந்தாவது படம் சூட்டிங் நடைபெறும் பொழுது இவர் மயங்கி விழுந்தார், அவரை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவர்கள் அவருக்கு மூளையில் வீக்கம் ஏற்பட்டிருக்கு என்றனர், அதற்குப் பிறகு இரண்டு மாத காலமே உயிரோடு இருந்தார்.

அவருடைய மரணத்தில் இன்னும் பலருக்கு சந்தேகமே இருந்து வருகிறது, அவருடைய திரைப்பட உறவினர்களே அவருக்கு விஷம் வைத்து கொன்றதாகவும் பரவலாக பேசப்பட்டது.

இவரைப் போலவே இவரது மகன் பிரான்ட் லீ யும் தன்னுடைய ஐந்தாவது படம் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுதே இறந்து போனார்.

லீ தன்னுடைய 32 வயதில் மரணமடைந்தார், அவரின் மகன் பிரான்ட் லீ தன்னுடைய 28 வயதில் மரணமடைந்தார். இருவரின் மரணமும் சந்தேகத்திற்கு உட்பட்டதே.

32 வயது வரை வாழ்ந்தாலும் அவரின் செயல்கள் அனைவராலும் மறக்க முடியாததற்கு எடுத்துக்காட்டு 50 வருடம் கழித்தும் புரூஸ் லீ யைப் பற்றி பேசுவதுதான்.

ஜாக் மா வாழ்க்கை கதை – MOTIVATIONAL STORY
You have been blocked from seeing ads.