பிக்பாஸ் ஸ்ருதி பெரியசாமி வாழ்க்கை கதை

 ஸ்ருதி பெரியசாமி பிறப்பு :

ஸ்ருதி பெரியசாமி சேலத்தில் 24 நவம்பர் 1995 ஆம் ஆண்டு பிறந்தார்.

இவர் பள்ளிப் படிப்பை ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார்.

ஸ்ருதி நன்றாக படிக்கும் மாணவியாக இருந்தாலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கினாள்.

ஸ்ருதிக்கு மிகவும் பிடித்த விளையாட்டு கூடைப்பந்து ஆகும், அந்த விளையாட்டில் கலந்து கொண்டு நிறைய பரிசுகள் வாங்கியிருக்கிறார்.

இவரது பொறியில் படிப்பை பாரத் பல்கலைக்கழகத்தில் பயின்றார்.

கல்லூரி படிப்பை முடிக்கும் பொழுது கேம்பஸ் இன்டர்வியூவில் 6 கம்பெனிகளில் தேர்வாகி இருந்தார்.

இவரது பெற்றோருக்கு ஸ்ருதி ஒரே பெண் குழந்தை ஆவாள்.

இவரது தந்தையின் முதல் மனைவி இறந்ததால் ஸ்ருதியின் தாயாரை இரண்டாவது  திருமணம் செய்து வைத்திருக்கின்றார் அவரது தாத்தா. (அதாவது ஸ்ருதி அம்மாவினுடைய அப்பா)

ஸ்ருதியின் தாயாரை திருமணம் செய்யும் பொழுது அவருக்கு வயது 18 அவரது தந்தையின் வயது 53 ஆகும்.

ஸ்ருதியின் தாத்தாவிற்கும் அவரது அப்பாவிற்கும் ஒரே வயது ஆகும்.

இவரது தாத்தாவிற்கு ஸ்ருதியின் அப்பா பொருளுதவி நிறைய செய்திருந்ததால் நன்றிக்கடனுக்காக தன் மகளை இரண்டாவது மனைவியாக திருமணம் முடித்து வைத்துள்ளார்.

ஸ்ருதியின் தந்தை ஒரு அரசு அதிகாரி ஆவார், அவருக்கும் அவருடைய முதல் மனைவிக்கும் பிறந்தது 4 பசங்கள்.

அதில் 3 பசங்கள் ஸ்ருதியின் தாயாரை விட பெரியவர்கள், கடைசி பையன் மட்டும் ஸ்ருதியின் தாயை விட 2 வயது சிறியவன்.

ஸ்ருதியின் தந்தையான பெரியசாமி ஸ்ருதியையும் அவரது தாயையும் எப்பொழுதும் கொடுமைபடுத்திக்  கொண்டே இருப்பாராம்,காரணம் அவரது தாய் மிகவும் அழகாக இருப்பதால்.

ஸ்ருதி

பெரியசாமி எங்கயாது வெளியே சென்றால் இவர்கள் இருவரையும் வைத்து பூட்டி விட்டு சென்று விடுவார்.

தந்தை மரணம்:

ஸ்ருதி ஆறாவது படிக்கும் பொழுது அவரது தந்தை இறந்து விட்டார், மற்ற குழந்தைகளை போல் அழுகாமல் மிகவும் சந்தோஷமாக இருந்தார், இனிமேல் நமக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது என்று நினைத்து.

அவரது தந்தை இறந்தபின் அரசாங்கத்தில் இருந்து வரும் பென்சன் பணத்தை வைத்து குடும்பத்தை நடத்தினர் ஸ்ருதியின் தாய்.

ஸ்ருதி தன் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார், ஆனால் அவருக்கு அந்த வேலை திருப்தி அளிக்காததால் மாடலிங்க் துறையில் இறங்கினார்.

அப்பொழுது ஸ்ருதியின் தாயாருக்கு ஒரு பெரிய விபத்து ஏற்பட்டது, அதனால் குடும்பத்தை நடத்தும் முழுப்பொறுப்பும் ஸ்ருதியின் கையில் வந்தது.

இதனால் ஸ்ருதி நிறைய பேசன் ஷோவில் கலந்து கொண்டார்.

2019 ஆம் ஆண்டு நடந்த FFB ccolors femina miss india 2019 கலந்து கொண்டு பைனலிஸ்டாக வந்தார்.

மேலும் படிக்க  பிக்பாஸ் ஐக்கி பெர்ரி வாழ்க்கை கதை

2020 ஆம் ஆண்டு நடந்த லிவா மிஸ் திவா 2020 ல் கலந்து கொண்டு இதிலும் பைனலிஸ்டாக வந்தார்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு வரை ஒரு பினான்ஸ் கம்பெனியில் வேலை பார்த்தார்.

தற்பொழுது விஜய் டிவி நடத்தும் பிக்பாஸ் நிகழ்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக உள்ளார்.

இவர் கருப்பு நிறமாக இருந்ததால் ஆரம்ப காலத்தில் மாடலிங்க் துறையில் வர தயங்கினார்.

பிக்பாஸ் பாவ்னி ரெட்டி வாழ்க்கை கதை

1 thought on “பிக்பாஸ் ஸ்ருதி பெரியசாமி வாழ்க்கை கதை”

Comments are closed.