You have been blocked from seeing ads.

தேசியகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு

தன்னுடைய கவிதைகளால் நாட்டு மக்களிடம் விடுதலை உணர்வைத் தூண்டிய வீரர்.

இவருடைய எழுத்துக்களால் ஆங்கிலேய அரசையே மிரளச் செய்தவர்.

இவர் இந்திய நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம் என்று காந்தியடிகளே புகழ்ந்த மாமனிதர்.

தன்னுடைய 11 ஆம் வயதிலே கவிபாடும் திறன் கொண்டு பாரதி என்ற பட்டத்தைப் பெற்றவர்.

அவர் இம்மண்ணை விட்டு மறைந்து 100 ஆண்டுகளுக்கு மேல் கடந்து சென்றாலும் இன்றளவும் அவரின் கவிதைகளாலும் எழுத்துக்களாலும் மக்களின் மனதில் வாழ்ந்து கொன்டிருப்பவர்.

இவர் சிந்துக்கு தந்தை, மீசைக் கவிஞன், முண்டாசுக் கவிஞன் என்றும் போற்றப்படுபவர்.

அவர்தான் தேசியகவி என்ற போற்றப்படும் சுப்பிரமணிய பாரதியார்.

இளமைக்காலம்:

இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி சின்னச்சாமி ஐயர் என்பவருக்கும் இலக்குமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார்.

இவரின் இயற்பெயர் சுப்பிரமணி, இவரை செல்லமாக சுப்பையா என்றும் அழைத்து வந்தனர்.

இவருடைய தாய் இலக்குமி அம்மையார் பாரதி ஐந்து வயதாகும் பொழுதே இறந்து போனதால் இவரின் பாட்டியான பாகீரதி என்பவரிடம் வளர்ந்து வந்தார்.

பாரதியை ஆங்கில வழிக் கல்வியில் படிக்க வைத்தார் அவரின் தந்தை, ஆனால் பாரதிக்கு தமிழ்மொழி மேலே அதிக ஆர்வம் இருந்தது.

இவர் சிறுவயதிலே கவிபாடும் திறனை பெற்றார், அவருடைய 11 ஆம் வயதில் கவிபாடுவதில் சிறந்து விளங்கியதால் எட்டயபுர மன்னரால் பாரதி என்ற பட்டத்தைப் பெற்றார்.

இவருடைய பதினாறாம் வயதில் இவரின் தந்தை இறந்து போனாதால் வறுமையில் வாடிக் கொண்டிருந்தார்.

பிறகு எட்டயபுர மன்னரின் அரண்மனையில் சிறிது காலம் பணி புரிந்தார்.

அதன்பின் காசிக்குச் சென்று அங்கு உள்ள அலகாபாத் பல்கலைகழகத்தில்  ஹிந்தியிலும் சமஸ்கிருதத்திலும் புலமை பெற்றார்.

இவர் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதம், வங்காளம் ஆகிய மொழிகளிலிலும் சிறந்து விளங்கினார்.

அதனால் தான் யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதானது எங்கும் காணோம் என்றார்.

பாரதியார் தமிழ்மொழி போல் அளவு கடந்த பிரியம் வைத்திருந்தார்.

இவர் சிறுவயதிலே புலமை பெற்ற தமிழ் அறிஞர்களோடு வாதம் செய்து வெற்றி அடைந்து இருக்கிறார், இதனால் அன்றைய காலக்கட்டத்தில் பாரதியார் புகழ் திருநெல்வேலி சீமையில் பரவத் தொடங்கியது.

பாரதிக்கு 14 வயது இருக்கும்பொழுதே அவருக்கு 7 வயதே ஆன செல்லம்மாள் என்ற சிறுமியை மணமுடித்து வைத்தனர்.

குடும்ப வாழ்க்கை என்னவென்றே தெரியாமல் இருந்தார் பாரதி, பின்னாளில் அவர் குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார்.

இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர்.

இவர் 4 ஆண்டுகள் காசியில் இருந்து படித்த பிறகு எட்டயபுர மன்னரின் அழைப்பை ஏற்று எட்டயபுர அரண்மனைக்குச் சென்றார்.

மேலும் படிக்க  விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் வரலாறு

தேசியகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு

அங்கு இவருக்கு அரசவைக் கவிஞர் என்ற பதவியைக் கொடுத்தார், சிறிது காலம் அங்கு பணியாற்றினார்.

பின்னர் மதுரைக்கு வந்து சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார்.

இவர் எழுதிய கவிதைகள் 1904 ஆம் ஆண்டு மதுரையில் விவேகபானு என்னும் இதழில் முதன் முதலில் வெளியானது.

பின்னர் இவரின் எழுத்துத்திறமையை அறிந்து இருந்த சுப்பிரமணிய ஐயர் என்பவர் சுதேசமித்தரின் இதழுக்கு உதவி ஆசிரியாரக நியமித்தார்.

விடுதலைப் போராட்டத்தில் பாரதியார்:

1909 ஆம் ஆண்டு அரசியலில் இணைந்தார் பாரதி அப்பொழுது வ.உ.சி யுடன் நட்பு ஏற்பட்டது.

அவருடன் மகாசபை கூட்டத்திற்கு கல்கத்தா சென்றார் அப்பொழுது விவேகானந்தனின் சீடையான நிவேதிதாவை தன்னுடைய ஞானகுருவாக ஏற்றுக் கொண்டார்.

1907 ஆம் ஆண்டு இந்தியா என்ற இதழை நடத்தினார், இந்த இதழில் ஆங்கிலேய ஆட்சியை எதிர்க்கும் வண்ணம் பல கவிதைகளையும் கேளிச்சித்திரங்களையும் வெளியிட்டார்.

அவர் கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது சத்தியத்தை நித்தியத்தை நம்பும் யாவும் சேருவீர் என்று பாடினார்.

அவருடைய கவிதைகள் மக்கள் மனதில் பல புரட்சிகளை தூண்டச் செய்தது.

பாரதி தன்னுடைய இதழினால் ஒட்டு மொத்த இந்திய மக்களின் மனதிலும் விடுதலை உணர்வை விதைத்துக் கொண்டிருந்தார்.

இவர் தேச உணர்வை தூண்டும் வகையாக கவிதை எழுதியதால் இவரை தேசியகவி என்றழைத்தனர்.

தேசியகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு

You have been blocked from seeing ads.

இதைக் கவனித்த ஆங்கிலேய அரசு இவரை கைது செய்ய ஏற்ப்பாடு செய்தது, இதை அறிந்த பாரதி புதுச்சேரி சென்று மறைந்து இருந்தார்.

அங்கேயும் இந்தியா நாழிதழை தன் கவிதை மூலம் நடத்திக் கொண்டிருந்தார்.

1918 ஆம் ஆண்டு மீண்டும் சென்னை வந்த பாரதியை ஆங்கிலேயே அரசு கைது செய்து 34 நாட்கள் சிறையில் வைத்தது.

பின்னர் சிறையில் இருந்து வெளிவந்த அவர் மனைவி செல்லம்மாளின் பிறந்த ஊரில் சிறிது காலம் வாழ்ந்தார்.

இவர் இந்தக் காலக்கட்டத்திலும் கூட கண்ணன் பாட்டு குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திச் சூடி, போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார்.

1912 ஆம் ஆண்டு பகவத்கீதையை தமிழில் மொழி பெயர்த்தார்.

இவர் ஒருமுறை சென்னையில் உள்ள ராஜாஜி இல்லத்திற்கு வந்தார், அப்பொழுது அங்கு இருந்த காந்திஜியின் முன் அமர்ந்து, நீங்கள் நாளைக்கு ஏற்ப்பாடு செய்திருக்கும் ஒரு போராட்டத்திற்கு தலைமை தாங்குவீர்களா? என்று கேட்டார்.

அப்பொழுது காந்தியோ நாளை வரமுடியாது வேறொரு நாள் வேண்டுமென்றால் போராட்டத்தை மாற்றி வையுங்கள் என்றார்.

அதற்கு பாரதியோ ஏற்ப்பாடு செய்த போராட்டத்தை நிறுத்தினால் வீரர்கள் ஏமாற்றம் அடைவார்கள் என்று கூறி அங்கிருந்து வந்து விட்டார்.

மேலும் படிக்க  கொடிக்காத்த குமரன் வாழ்க்கை வரலாறு

அவர் சென்ற பின் ராஜாஜி இவர் தான் தமிழ்நாட்டின் கவிஞர், இவர் தமிழ்நாட்டின் சொத்து என்றார்.

அதற்கு காந்தியோ இவர் தமிழ்நாட்டின் சொத்து அல்ல, இந்தியாவின் சொத்து, இவரை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்றாராம்.

இவர் வறுமையில் வாடிய பொழுதிலும் காக்கைக்கும் குருவிக்கும் உணவளிப்பாராம்.

இவர் தீண்டாமை, பெண்ணடிமை, குழந்தைத் திருமணம் போன்றவற்றை தன் கவிதையின் மூலம் எதிர்த்தவர்.

அவர் இறக்கும் தருவாயிலும் கூட வறுமையில் வாடியவர்.

இறப்பு:

1921 ஆம் ஆண்டு ஜீலை மாதம் பாரதி திருவெல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு வந்த பொழுது அங்கு உள்ள கோவில் யானை தாக்கப்பட்டு உடல்நிலை சரியில்லாமல் போனார்.

பின் 1921 ஆம் ஆண்டு  செப்டம்பர் 11 ஆம் தேதி கடுமையான வயிற்றுப் போக்கு காரணமாக உயிர் இழந்தார்.

இவர் வாழ்ந்த இல்லங்களை எல்லாம் பாரதியின் நினைவிடமாக மாற்றியது தமிழ்நாடு அரசு.

கொடிக்காத்த குமரன் வாழ்க்கை வரலாறு
You have been blocked from seeing ads.