விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் வரலாறு

தன்னுடைய 24 வயதிலே நாட்டு மக்களுக்களின் விடுதலைக்காக தன்னுயிரை தந்த வீரர்.

போராட்டாகாரர்கள் உயிரை தியாகம் செய்தால் தான் நாடு விடுதலை அடையும் என்று கூறியவர்.

என்னுடைய உயிரை தியாகம் செய்தால் தான் நாட்டில் இருக்கும் லெட்சக்கணக்கான இளைஞர்களின் மனதில் புரட்சி வெடிக்கும் என்று கூறியவர்.

தன்னுடைய 12 வயதிலே ஆங்கிலேயர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய மக்களின் இரத்தம் படிந்த மண்ணை எடுத்து வணங்கியவர்.

ஒரு முழு புத்தகத்தைக் கூட முழுமையாக படிக்க விடாமல் அவரை கொலை செய்தது ஆங்கிலேய அரசு.

ஒட்டுமொத்த இந்திய இளைஞர்களின் மனதிலும் விடுதலை உணர்வை தூண்டியவர்.

சாஹீது என்று பலரால் அன்போடு அழைக்கப்பட்டவர். சாஹீது என்றால் மாவீரன் என்று பொருள்.

தனக்கு திருமணமே வேண்டாம் நாட்டின் விடுதலை தான் முக்கியம் என்று கூறி தன் வாழ்நாள் முழுவதும் இந்திய விடுதலைக்காக பாடுபட்டவர்.

நேதாஜியைப் போல் அவர்கள் அடித்தால் நாமும் திருப்பி அடிப்போம் அப்பொழுது தான் நாமும் அடிப்போம் என்ற பயம் அவர்களுக்கு வரும் என்று சொல்லி அதை செய்தும் காட்டி ஆங்கிலேயர்களை பயம் கொள்ளச் செய்தவர்.

அவர் தான் இளம் விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் இந்திய விடுதலை இயக்கத்தின் புரட்சியாளரும் ஆன பகத் சிங்.

பகத்சிங்கின் இளமைகாலம்:

பகத்சிங் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லயால்பூர் மாவட்டத்தில் பங்கா என்னுமிடத்தில் சீக்கிய வம்சாவளியைச் சேர்ந்த சர்தார் கிசன் கிங் மற்றும் வித்தியாவதி என்பவருக்கு 28 செப்டம்பர் 1907 ஆம் ஆண்டு இரண்டாவது மகனாகப் பிறந்தார்.

இவர் பிறந்த நாளன்று தான் அவரது தந்தையான கிசன் சிங் மற்றும் அவரது இரண்டு மாமாக்களும் விடுதலை பெற்று வந்தனர்.

தன்னுடைய மகன் பிறந்ததனால் தான் தனக்கு விடுதலை கிடைத்தது, தன்னுடைய மகனின் அதிஷ்டமே விடுதலைக்கி காரணம் என்று நம்பினார் கிசன் சிங்.

அதனால் அவருக்கு பகத் சிங் என்று பெயரிட்டார். “பகத்” என்றால் அதிஷ்டம் என்று பொருளாம்.

பகத் சிங்கின் வம்சாவளியைச் சேர்ந்த பலரும் இராணுவத்தில் பணிபுரிந்து வந்தனர்.

மேலும் அவர் குடும்பத்தில் உள்ள நபர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்ததால்  சிறுவயதிலிருந்தே பகத் சிங்கிற்கும் விடுதலை போராட்டத்தின் மீது ஈர்ப்பு வந்தது.

பகத்சிங்கின் தாத்தாவான அர்ஜூன் சிங் தயானந்த சரஸ்வதியின் இந்து சீர்சிருத்த இயக்கமாக ஆர்ய சமாஜை கொள்கையை பின்பற்றுபரானக இருந்தார்.

அர்ஜூன் சிங் ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் இருக்கும் பள்ளிகளில் பகத்சிங்கை சேர்க்காமல்  தயானந்தா ஆங்கிலேய வேதிக் பள்ளியில் சேர்த்து விட்டார்.

இவருக்கு 12 வயது ஆகும் பொழுது 1919 இல் ஜாலியன் வாலாபாக் என்னுமிடத்தில் ஆங்கிலயேருக்கும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் பொழுதே ஆங்கிலேய அரசின் தளபதியான ஜெனரல் டயர் என்பரின் ஆணையால் அப்பாவியான மக்கள் பலரை சுட்டுக் கொன்றது ஆங்கிலேய இராணுவம்.

அந்த நிகழ்வு ஜாலியன் வாலாபாக் படுகொலை என்று பின்னாளில் சொல்லப்பட்டது.

அந்த நிகழ்வு நடந்த இடத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களின் இரத்தம் படிந்த மண்ணை ஒரு கண்ணாடி பாட்டிலில் நிரப்பி அதை வழிபடத் தொடங்கினார்.

பின்பு அந்த இரத்தம் படிந்த மண்ணின் மீது இந்திய விடுதலையே எனது இலட்சியம் என்று சபதம் மேற்க்கொண்டார் அந்த பிஞ்சி வயதில்.

மேலும் படிக்க  கொடிக்காத்த குமரன் வாழ்க்கை வரலாறு

பின்பு காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் 1920 ஆம் ஆண்டு கலந்து கொண்டார் அப்போது அவருக்கு 14 வயது தான் ஆனது.

1922 ஆம் ஆண்டு  கோரக்பூரில் நடைபெற்ற “சௌரி சௌரா” என்ற வன்முறையில் மக்கள் அனைவரும் காவல்நிலையத்தை அடித்து நொறுக்கினர்.

அந்த வன்முறையான நிகழ்வை கண்டிக்கும் பொருட்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தி வைத்தார்.

இதனால் பகத்சிங் ஆத்திரம் அடைந்தார், அப்பாவி மக்களை ஆங்கிலேய அரசு அடிக்கும் பொழுது அமைதியாக இருக்க வேண்டும். ஆனால் நாம் திருப்பி அடித்தால் தவறா? இது என்ன நியாயம்?

நாம் இனிமேல் அகிம்சை முறையில் போராடினால் பலன் கிடைக்காது வன்முறையில் இறங்கினால் தான் ஆங்கிலேயரை இந்தியாவில் இருந்து துரத்த முடியும் என்று நினைத்தார்.

இந்துஸ்தான் கழகம்:

இவரே முதன் முதலில் வந்தே மாதரம் என்று கோசமிட்டவர்.

இவர் 1924 ஆம் ஆண்டு இந்துஸ்தான் குடியரசு கழகம் என்ற அமைப்பில் இணைந்தார்.

இந்த அமைப்பில் முக்கிய நபர்களாக சுக்தேவ் மற்றும் ராஜகுரு என்பவர்கள் இருந்தனர்.

1921 ஆம் ஆண்டு குருத்வாரா நானா சாஹிபில் ஆயுதமற்ற வீரர்களை கொல்லப்பட்டத்தை எதிர்க்க பல போரட்டாங்கள் செய்தார்.

பின் இவர் கட்டுரையின் மூலம் பஞ்சாப் மக்களின் பிரச்சனை எழுதி அதில் வெற்றி அடைந்தார்.

பின்னர் இவர் இந்துஸ்தான் குடியரசு அமைப்பை சோசலிச அமைப்பாக பெயர் மாற்றினார்.

1926 ஆம் ஆண்டு நவஜவான் சபா என்ற அமைப்பை உருவாக்கினார், நவஜவான் சபா என்றால் இந்தியாவின் இளைஞர் சங்கம் என்ற பொருள்.

விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் வரலாறு

இந்தச் சங்கத்தின் மூலம் நாட்டில் உள்ள பல இளைஞர்கள் தங்களின் ஆதரவைத் தந்தனர்.

இந்த இளைஞர்களைக் கொண்டு பல போராட்டங்களை நடத்தினார் பகத்சிங்.

இவரின் முயற்சியால் உறங்கிக்கொண்டிருந்த மக்களின் இதயத்தில் விவேகம் குடிகொள்ளத் செய்தது.

இவர் இப்படி நாட்டின் விடுதலை என்று இரவும் பகலும் உழைத்துக் கொண்டிருப்பதை பார்த்த அவரது குடும்பத்தார்கள் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார்கள்.

அதனால் வீட்டை விட்டு வெளியேறினார் பகத்சிங்க். என்னுடைய இந்திய உயிர் நாட்டின் விடுதலைக்காகேவே தான், நான் திருமணம் செய்து கொண்டு ஒரு பெண்ணின் வாழ்க்கையை அளிக்க விரும்பவில்லை.

நம் நாட்டு மக்களின் மகிழ்ச்சியே எனக்கு ஆனந்தம் என்று ஒரு கடிதஹ்தில் எழுதி வைத்துவிட்டு கிளம்பி வந்தார் பகத் சிங்.

இவரின் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார், அவரைப் போலவே இவரும் மக்களிடத்தில் புரட்சியை ஏற்ப்படுத்தினார்.

இவரின் புரட்சியால் பல இளைஞர்கள் வீறுகொண்டு போராடியதைக் கொண்டு ஆங்கிலேய அரசு அவரை குண்டு வீசிய வழக்கில் 1927 ஆம் ஆண்டு கைது செய்தது.

அவர் செய்தாத செயலுக்கு பொய் வழக்கு போட்டது, ஆனால் இரண்டு வாரங்களிலே அவர் நிரபராதி என்று தீர்ப்பளித்து அவரை விடுதலை செய்தது.

லாலா லஜபதிராயின் போராட்டம்:

பகத்சிங் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கும் ஆதரவு அளித்தார்.

அவர்களுக்காகவும் போராட்டம் நடத்தினார், ஏழைத் தொழிலாளர்களின் உழைப்பை திருடும் முதலாளிகளையும் ஒழிக்க வேண்டும் என்று கோசமிட்டார்.

ஆங்கிலேயரின் ஏகாதிபத்தியத்தை முற்றிலும் எதிர்த்து முதல் இளைய புரட்சியாளன், ஒரு மாபெரும் வீரன்.

மேலும் படிக்க  வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கை வரலாறு

இந்திய அரசியலமப்பை கண்காணிக்க ஆங்கிலேய அரசு சைமம் குழு என்ற அமைப்பை உருவாக்கியது.

ஆனால் அந்தக் குழுவில் இந்தியர்கள் எவரும் இல்லாததை கண்டித்து அகிம்சை முறையில் 1928 ஆம் ஆண்டு அக்டோடர் 30 ஆம் தேதி, போராட்டம் நடத்தினார் லாலா லஜபதி ராய்

அதில் காவல் மேலதிகாரியான ஜேம்ஸ் ஏ ஸ்காட் என்பர் லஜபதி ராயை பலமாக தாக்கினார்.

அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நாட்களிலே இறந்தும் போனார் லஜபதி ராய்.

இதனால் ஆத்திரம் அடைந்த பகத்சிங் அந்தப் போலீசை கொல்ல திட்ட மிட்டார்.

ஆனால் அவரை அடையாளம் தெரியாததால் வேறொரு காவல் அதிகாரியான சாண்டர்ஸ் என்பவரை சுட்டுக்கொன்று விட்டு அங்கிருந்து மறைந்தார்.

ஆங்கிலேய காவல் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டத்தை அறிந்த ஒட்டுமொத்த ஆங்கிலேயர்கள் அனைவரும் பீதி அடைந்தனர்.

இந்தியனும் நம்மை திரும்பி அடிக்கிறானே என்று எண்ணினர், அவர்கள் அனைவரையும் மரண பயத்தைக் காட்டினார் பகத் சிங்.

பிறகு ஆங்கிலேய அரசின் வெள்ளை மாளிகையின் அருகிலே வெடிகுண்டை வீசிவிட்டு இன்குலாப் ஜிந்தாபாத் என்று கோசமிட்டார்.

மரண பயத்தில் இருந்த ஆங்கிலேய அரசுக்கு மேலும் கொலை நடுங்கச் செய்தது இந்த வெடிகுண்டு சத்தம்.

சிறையில் பகத்சிங்:

பின்னர் அவரை கைது செய்தது, அவருக்கும் அவரது இரண்டு நண்பர்களான ராஜ்குரு மற்றும் சுக்தேவ் விற்கும் தூக்கு தண்டனை விதித்தது.

அவர் சிறையில் இருந்த காலத்தில் இந்திய கைதிகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எதிர்த்து உண்ணா விரதம் மேற்கொண்டார்.

இதனாலும் இவர் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டார், பின்னர் இந்திய மக்களின் விடுதலைக்காக சிறையிலே 119 நாட்கள் உண்ணாமல் வெறும் தண்ணீர் மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்தார்.

இவர் சிறை நாட்களில் புத்தகமும் கையுமாக மட்டுமே திரிந்தார், மேலும் 151 புத்தகங்களை படித்து உள்ளார், 6 புத்தகங்களை எழுதியுள்ளார்.

இவர் எழுதிய நான் நாத்திகனானேன் என்னும் புத்தகம் பிரலமடைந்தது.

பகத்சிங் சிறையில் இருந்த பொழுது இவரது வழக்கறிஞர் கொடுத்து புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கும் பொழுதே அவரது தூக்கு தண்டனையை நிறைவேற்ற முடிவு செய்தது.

அவருக்கு 1931 ஆம் ஆண்டு மார்ச் 24 காலை 6 மணிக்கு தூக்கு போடுவதாக  இருந்தது, ஆனால் மக்களின் கொத்தளிப்பு தீவிரமாக இருந்த காரணத்தினால் அன்றிரவே தூக்கிலிட்டனர்.

பகத்சிங்

அவரை தூக்கிலிடும் முன்பாக அவர் சொன்ன வார்த்தை என்னை ஒரு புத்தகத்தை கூட முழுமையாக படிக்க விட மாட்டீர்களா? என்று தான்.

பகத்சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் 1931 ஆம் ஆண்டு மார்ச் 23 அன்று லாகூர் என்னுமிடத்தில் தூக்கிலிடப்பட்டனர்.

ஜகவர்லால் நேரு வாழ்க்கை வரலாறு

2 thoughts on “விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் வரலாறு”

Comments are closed.