You have been blocked from seeing ads.

பீமன் வாழ்க்கை கதை – மகாபாரதக் கிளைக்கதை

பீமனின் பிறப்பு:

குந்தி தேவிக்கும் வாயு தேவனுக்கும் மகனாகப் பிறந்தவர் தான் பீமன்.

பீமனின் முழுமையானப் பெயர் பீம சேனன் ஆகும்.

பீமன் சிறுகுழந்தையாக இருக்கும்பொழுது குந்திதேவியின் கையில் இருந்த பீமனை கை தவறி பாறையின்மேல் போட்டு விடுகிறாள்.

பின்பு அழுது கொண்டே பீமனை தூக்கிப் பார்கிறாள், பீமனுக்கு ஒன்றும் நேரமில்லை.

ஆனால் பீமன் விழுந்த பாறைதான் உடைந்து போய் இருந்தது.

பீமன் பாண்டவர்கள் ஐவரில் இரண்டாவதாக பிறந்தவன், ஐவரில் பீமசேனனே பலசாலியாக விளங்கினான்.

அஸ்தினாபுர அரண்மனையில் இவர்கள் வாழும் பொழுது இவனின் பலத்தைக் கண்டு பொறாமை கொண்டான் கௌரவர்களில் மூத்தவனான துரியோதனன்.

ஒருநாள் பீமன் கௌரவர்கள் மரத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது அவர்களை வம்பிழுக்க மரத்தின் கிளைகளை உழுக்கினான்.

கௌரவர்கள் அனைவரும் கீழே விழுந்து காயமுற்றனர், இதனால் துரியோதனன் பீமனைக் கொல்ல திட்டம் தீட்டினான்.

பீமனிடம் நல்லவன் போல் பேசி அவனை நதிக்கரைக்கு அழைத்துச் சென்று விஷம் கலந்த உணவை அருந்த வைத்தான்.

பின்னர் மயங்கிய நிலையில் இருந்த பீமனை நாகங்கள் நிறைந்திருந்த ஆற்றில் தூக்கி போட்டான்.

ஏற்கனவே அவனது உடம்பில் விஷம் கலந்து உள்ளதால் நாகங்கள் தீண்டியதும் அவனது உடம்பில் உள்ள விஷங்கள் முறிந்து விட்டன.

பீமனின் வீரம்:

பின்பு நாகர்களின் தலைவனான வாசுகி நாகம் பீமனுக்கு 10 யானைகளுக்கு சமமாம பலத்தைக் கொடுக்கும் அமிர்தத்தை வழங்கியது.

அதை அருந்தியதும் பீமனின் உடலில் ஒருவித புத்துணர்ச்சி தோன்றியது.

பீமன் உயிரோடு வந்ததை அறிந்த துரியோதனனுக்கு பேரதிர்சியாக இருந்தது.

பின்பு பாண்டவர்களை அழிக்க வாரணாவதத்தில் அரக்கு மாளிகை அமைத்து அதை தீ மூட்ட ஏற்பாடு செய்திருந்தான் துரியோதனன்.

அதை அறிந்த பாண்டவர்கள் சுரங்கப்பாதை அமைத்து அதன் வழியே தப்பித்து வந்தனர்.

பீமன்

You have been blocked from seeing ads.

அப்பொழுது காட்டின் வழியே நடந்து நடந்து அனைவரும் சோர்வடைந்தனர் பீமனைத் தவிர.

தன் தாயையும் தன் சகோதர்களையும் தன் தோளில் சுமந்து கொண்டு நடந்தான்.

பின்பு ஒரு மரத்தின் அடியில் அனைவரையும் உறங்கச் செய்து விட்டு அவர்களுக்கு காவல் காத்துக் கொண்டிருந்தான்.

அந்தக் காட்டின் தலைவனான இடும்மன் தன் தங்கையான இடும்பியை அழைத்து மனிதர்களின் வாசம் அடிக்கிறது, நீ சென்று அவர்களை அழைத்து வா.

இடும்பன் மனிதர்களை உண்டு வாழும் அரக்கன் ஆவான், அவனுடைய தங்கையான இடும்பி அவளுக்கு வேண்டிய உருவத்தில் உருவத்தை மாற்றும் ஆற்றல் கொண்டவள்.

உருவத்தை மாற்றிக் கொண்டு பாண்டவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தாள்.

 பீமனின் திருமணம்:

அப்பொழுது பீமனின் உடம்பை பார்த்து ஆச்சர்யப்பட்டாள்.அவனை பார்த்ததுமே அவனின் மீது ஒருவித ஈர்ப்பு வந்தது.

மேலும் படிக்க  முத்துராமலிங்கத் தேவர் வரலாறு

நேரம் கடந்தும் இடும்பி வராததால் இடும்பனே அவர்கள் இருக்குமிடம் வந்து பீமனை தாக்கினான்.

அப்பொழுது ஒரு மரத்தைப் பிடிங்கி எறிந்தான், அவனின் வீரத்தைக் கண்டு பீமனின் மீது காதல் கொண்டாள்.

பின்பு இடும்பனைக் கொன்று விட்டு இடும்பியை திருமணம் செய்து கொண்டான் பீமசேனன்.

அந்த வனத்திலே ஒரு வருடம் தங்கினர், இடும்பிக்கும் பீமனுக்கும் கடோத்கஜன் என்ற மகன் பிறந்தவுடன் அவர்களை பிரிந்து வந்தனர் பாண்டவர்கள்.

பீமனுக்கு 3 மனைவிகள் இருந்தாலும் அதில் மூத்த மனைவி இடும்பியே ஆவாள்.

துரியோதனன் பாஞ்சாலியை அவமானப்படுத்திய பொழுது அவனது தொடையை பிளப்பேன் என்ற சபதம் எடுத்தான்.

அதோடு மட்டுமல்லாமல் கௌரவர்கள் 100 பேரையும் எனது கையாலே கொள்வேன் என்றும் சபதம் மேற்க்கொண்டான்.

அவன் சொன்னது போல் 100 கௌரவர்களையும் குருஷேத்திர போரில் கொன்றான்.

அவர்கள் வனத்தில் வாழ்ந்த பொழுது ஏகசக்ரபுரம் என்ற கிராமத்தின் எல்லையில் பகாசூரன் என்ற அரக்கன் வாழ்ந்து கொண்டிருந்தான்.

அவன் அந்த கிராமத்தில் வசிக்கும் மக்களிடம் ஒரு வண்டி நிறைய உணவும் அந்த வண்டியை ஓட்டிச் செல்லும் நபரும் எனக்கு உணவாக வரவேண்டும் என்று மிரட்டியிருந்தான்.

அந்த ஊரில் இருந்து தப்பித்துச் சென்றாலும் அவர்களை கண்டு பிடித்து கொன்று விடுவானாம்.

அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்த அந்த தாயின் ஒரே மகன் அந்த அரக்கனுக்கு இன்று உணவாக செல்ல வேண்டிருந்தது, இதை நினைத்து அந்தத் தாய் அழுது கொண்டிருந்தாள்.

குந்தி இன்று என்னுடைய மகனான பீமனை அனுப்புகிறேன், நீங்கள் கவலை கொள்ளாதீர்கள் என்று ஆறுதல் அளித்தாள்.

பீமன் அரக்கனுக்கு கொண்டு சென்ற உணவை எல்லாம் உண்டு கொண்டிருந்தான் அந்த அரக்கனின் குகைக்கு அருகில்.

பகாசூரனுக்கு கோவம் தாங்க முடியாமல் பீமனை தாக்க முற்ப்பட்டான், ஆனால் பீமனோ உணவை எல்லாம் முடித்து விட்டு, அரக்கனை கொன்று வீழ்த்தினான்.

பீமன் கீசகனையும் மகத அரசன் ஜராசந்தனையும் கொன்றான்.

பீமனுக்கும் காசியின் இளவரசி வளந்தரைக்கும் திருமணம் முடிந்து சாவர்கன் என்ற மகன் பிறந்தான்.

பாஞ்சாலிக்கும் பீமனுக்கும் பிறந்த குழந்தையின் பெயர் சுதசோமனாகும்.

கதாயுத்ததிலும் யானைகள் செலுத்துவதிலும் பீமனுக்கு இணையாணவன் யாரும் இல்லை.

மாவீரன் கர்ணன் கதை – மகாபராதக் கிளைக்கதை
You have been blocked from seeing ads.

1 thought on “பீமன் வாழ்க்கை கதை – மகாபாரதக் கிளைக்கதை”

Comments are closed.