You have been blocked from seeing ads.

ஔரங்கசீப் மகள் ஜெகபுன்னிசா காதல் கதை

அகில்கானின் கவிதை:

ஔரங்கசீப்பின் அரண்மனையில் அகில்கான் என்னும் இளைய கவிஞன் தன் கவிதையால்அனைவரையும் கிரங்கடித்துக் கொண்டிருந்தான்.

ஆலம்பானா ஔரங்கசீப் புன்னகைத்தபடி, ஆஸ்தான கவிஞன் அகில்கானே அபாரமாக உள்ளது உனது கவிதை என்கிறார்.

அவனுடைய ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு கிலோ தங்கம் பரிசாக கொடுக்கப்படுகிறது. காதலிக்கிறாயா அகில்கான் என்று ஔரங்கசீப் கேட்கிறார்.

அவன் வெட்கத்தில் புன்னகைக்கிறான். அவனின் கவிதைகளை இரசித்தபடி இருந்தது மாடத்தின் துவாரத்தில் இருந்த ஜெகபுன்னிசாவின் கண்கள்.

அகில்கான் அரண்மனைக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் ஔரங்கசீப்பின் மூத்த மகளான ஜெகபுன்னிசா அவனை தன் இதயத்திற்கு நுழைய அனுமதி வழங்கியிருந்தாள்.

ஔரங்கசீப்பிற்கு நான்கு பெண்கள் இருந்தன. 1.ஜெகபுன்னிசா 2.முலைன் சுல்தான் 3.ஜீனத் நிஷா 4.பக்ருன்னிசா.

இதில் முலைன் சுல்தான் என்பவள் அகில்கான் ஜெகபுன்னிசாவை தன் கவிதையால் கொள்ளை அடித்துக் கொண்டான் என்பதை யூகித்தாள்.

முலைன் சுல்தானின் சூழ்ச்சி:

பின்பு அகில்கானுடன் நட்பாகி அவனிடம் உண்மையை வரவழைக்க நாடகம் ஆடினாள். ஒருநாள் முலைன் சுல்தானை தன் நண்பனாக கருதி ஜெகபுன்னிசா மீது உள்ள காதலை உளறி விட்டான் அகில்கான்.

அவள் தன் தந்தையான் ஔரங்கசீப்பிற்கு தகவல் தெரிவித்தாள்.

ஜனனா என்னும் அந்தப்புரத்தில் ஒரு ஜெகபுன்னிசாவின் மடியில் அகில்கான் படுத்து தன் கவிதையால் அவளை வருடிக் கொண்டிருந்தான்.

ஜெகபுன்னிசா

You have been blocked from seeing ads.

அக்கா, அப்பா வருகிறார் என்று பயந்தபடி நுழைந்தாள் பக்ருன்னிசா. அறைக்குள் நுழைந்து கண்காணித்தான், மகள்கள் மூவரும் மட்டுமே இருந்தன.

அகில்கான் பெண் உடைக்குள் இருந்தான். அவர்கள் முக்காடிட்டு இருந்தன.

 ஔரங்கசீப்பின் செயல்:

சரி மகள்களே நான் வருகிறேன் என்று புறப்பட்டார்.

ஆனால் அவரின் கண்கள் அகில்கானின் ஆண் காலணிகளை பார்த்து விடுகிறது.

முதல் முறை ஏமாந்தவன் இரண்டாம் முறை தன் இரண்டு மகள்களை ஏதோ ஒரு காரணமாக ஜனனாவில் இருந்து வெளியேற்றினார்.

ஔரங்கசீப், அகில்கானும் ஜெகபுன்னிசாவும் சந்திக்க ஏற்பாடு செய்தார்.

அகில்கானும் ஜெகபுன்னிசாவும் ஒரே அறையில் இருந்தன, ஔரங்ககசீப் வந்தார் அறையை நெருங்கியதும், தன் இரண்டு தங்கைகளும் இங்கில்லை என்பதை அறிந்த ஜெகபுன்னிசா குளியல் அறையில் கழுத்தளவு தண்ணீரில் நீர்க்கொப்பரைக்குள் அகில்கானை மறைத்து வைத்தாள்.

அவள் நீர்க்கொப்பரைக்குள் ஒளிய வைத்ததையும் கண்டுபிடித்து விட்டான் ஔரங்கசீப்.

மகளே நான் குளிக்க வேண்டும் நீ சென்று ஓய்வெடு என்றான்.

நாம் நீராடா வேண்டும் நீர்க் கொப்பரையை கொதிக்க வையுங்கள் என்றான் எண்ணெய் பூசிய உடலில்.

அகில்கானின் காதல்:

தந்தை அரை நிர்வாணமாக இருக்கையில், தான் நிற்க முடியாமல் தூரப் போனாள். நீர்க்கொப்பரைக்குள் அகில்கான், நீர்க்கொப்பரை தீ மூட்டப்பட்டது.

மேலும் படிக்க  முத்துராமலிங்கத் தேவர் வரலாறு

வெளியே வந்தால் இரையாகி விடுவேன் ஜெகபுன்னிசாவும் வதைக்கபடுவாள்.

பொறுமையோடு இருந்தான். நீர் சூடானது.

கொப்பரை கொதித்தது, நீரும் கொத்திதது, உள்ளிருந்து ஒரு சத்தம் வரவில்லை.

ஔரங்கசீப்பின் கண்கள் சிவந்தன கொப்பரையை போலவே, இவன் காதல் தீவிரவாதி என்று கத்தியபடி கொப்பரையின் மூடியை திறந்தனர் உள்ளே வெள்ளை வெளேர் என்று வெந்து கிடந்தான் அகில்கான்.

காட்டுக்குள் ஒர் காதல் தீ – காதல் கதை
You have been blocked from seeing ads.