You have been blocked from seeing ads.

அம்முக்குட்டி – தமிழ் சிறுகதை

அன்று ரத்தினா மணமகள் போல் அலங்காரம் செய்து கொண்டிருந்தாள், காரணம் என்னவென்றால் அவளை அன்றைக்கு பெண் பார்க்க வருகிறார்கள் மாப்பிளை வீட்டில் இருந்து.

வரிசை வரிசையாக கார் வந்து நின்று கொண்டிருந்தது, ரத்தினாவிற்கு மனதிற்குள் ஒருவித இனம்புரியா சந்தோஷம் அதை வெளிக்காட்ட முடியாலும் உள்ளுக்குள்ளே வைக்க முடியாமலும் தவித்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் இவளின் நாணத்தைக் கண்டு அவளின் தோழிகள் அனைவரும் கிண்டல் செய்து கொண்டிருந்தனர்.

அவர்களின் கேலியில் இவளும் ஆனந்தம் அடைந்தாள், பின்பு ரத்தினாவின் அம்மா அவளை அழைத்தாள்.

எல்லோருக்கும் காபி கொடு என்றாள் தன் கையில் வைத்திருந்த தட்டை கொடுத்து, ரத்தினாவும் அன்ன நடை போட்டு குனிந்த தலை நிமிராமல் அனைவருக்கும் காபியைக் கொடுத்தாள்.

மாப்பிளையின் அருகில் செல்லும் பொழுது அனைவரும் அவர்தான் மாப்பிளை நிமிந்து பாத்துக்கோமா, அப்புற எல்லாம் பாக்க முடியாது என்றனர் சற்று கேலிக்கையான குரலில்.

அவளும் சற்றும் தலையை உயர்த்தி பார்த்து விட்டு ஓடி வந்தாள், அவளின் வெட்கத்தைக் கண்டு அங்கிருந்தவர்கள் அனைவருமே வயிறு குலுங்க சிரித்தனர்.

பின்பு மாப்பிள்ளையும் பொண்ணையும் தனியா பேச விடுங்க என்று கூட்டத்தில் ஒரு குரல் கேட்டதும் ரத்தினாவிற்கு முகம் எல்லாம் வியர்க்க ஆரம்பித்து விட்டது.

பின் மாப்பிள்ளை வீட்டிற்குள் வந்தார், ரத்தினாவின் தோழிகளும் அறையை விட்டு வெளியே சென்றனர்.

ரத்தினா எதுவும் பேசாமல் மாப்பிள்ளை கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

இருவரும் பேசி முடித்த பின் மாப்பிள்ளை எனக்கு பொண்ண பிடிச்சிருக்குனு சொன்னதும் ரத்தினாவின் பதிலை எதிர் பார்த்துக் கேட்டனர்,

அவளும் எனக்கும் புடிச்சிருக்கு என்று சொல்லி விட்டு மீண்டும் அறைக்குள் ஓடி விட்டாள்.

திருமணம்!

பின் இருவருக்கும் ஊரே வியக்கும் வண்ணம் திருமணம் நடந்தது, ரத்தினா அவளின் பேருக்கு ஏற்றார்போல் இரத்தினம் போலத்தான் சொளிப்பாள். அவளின் கணவனின் பெயர் சந்துரு.

சந்துரு திருமணம் ஆனதில் இருந்தே ரத்தினாவை அம்முக்குட்டி என்று தான் அழைத்து வந்தான்.

காலையில் அம்முக்குட்டி எழுந்திரிக்கும் முன்னாடியே சந்துரு எழுத்திரித்து வீட்டு வாசலில் சாணி தெளிச்சி கோலம் போட்டு அம்முக்குட்டிக்கி டீ போட்டு விட்டு தான் அவளை எழுப்புவான்.

அம்முக்குட்டி – தமிழ் சிறுகதை

You have been blocked from seeing ads.

இப்படியே நாட்களும் ஓடிக் கொண்டிருந்தது, அம்முக்குட்டியும் கர்ப்பம் தரித்தாள்.

சந்துரு அவளுக்கு செய்யும் பணிவிடைகளைப் பார்த்து அந்த ஊர் மக்களே கண்ணு வைத்தனர், எப்புடி தாங்குறான் பாரு பொண்டாட்டிய என்று.

அம்முக்குட்டிக்கு குழந்தை பிறக்க 6 மாதம் இருக்கும் பொழுதே சந்துரு சிங்கப்பூர் சென்று விட்டான்.

சந்துரு விற்கு ஊருக்குப் போக துளி கூட விருப்பம் இல்லை இருந்தாலும் அவனின் பெற்றோர்கள் விருப்பத்திற்காக சென்றான்.

தினமும் இரவு 8 மணி ஆனதும் போனும் கையுமாகத்தான் இருப்பாள் அம்முக்குட்டி சந்துருவின் அழைப்பிற்காக.

இருவரும் தன்னுடைய காதலையும் காமத்தையும் போனிலே வெளிப்படுத்திக் கொண்டனர்.

சிறிது நாட்களிலே அம்முக்குட்டிக்கி அழகான பெண் குழந்தை பிறந்தது, அதைப் பார்க்க வேண்டுமென்று குமுறிக் கொண்டிருந்தான் சந்துரு.

அம்முக்குட்டியின் ஆனந்தம்!

பிறகு தன்னுடைய கம்பெனியில் மூன்று மாதம் விடுப்பு கேட்டுவிட்டு வீட்டிற்கு வந்தான் தன்னுடைய ஆசை மனைவியையும் மகளையும் பார்க்க.

வீட்டிற்கு வந்ததும் தன்னுடைய மகளை பார்க்கும் முன் தன் மனைவியை மார்போடு அணைத்துக் கொண்டான், இருவரின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் பல நாட்கள் பிரிவின் வலி அந்தக் கண்ணீரில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

பின்னர் தன்னுடைய மகளையும் பார்த்து ஆனந்தம் கொள்கிறான், அவனுடைய மகள் அப்படியே அவளுடைய மனைவியை அச்சு அடித்தது போல் இருந்ததைப் பார்த்து.

மேலும் படிக்க  காலம் உள்ளவரை காத்திருந்தான்

சந்துரு அவன் மகளை குட்டி அம்முகுட்டி என்று தான் கூப்பிட்டான், மறுபடியும் அவன் வந்ததிலிருந்து மகாராணியாய் வாழ்ந்து கொண்டிருந்தாள் அம்மு.

ஆம், அவன் வந்ததிலிருந்து அம்மு ஒருவேலை கூடச் செய்வதில்லை, அவளின் இருந்த இடத்திற்கே சாப்பாட்டு வந்துவிடும்.

அந்தச் சாப்பாட்டைக் கூட இவள் அள்ளி சாப்பிட வேண்டிய சிரமம் இருக்காது சந்துருவே ஊட்டியும் விட்டிருவான்.

சந்துருவின் இந்தச் செயல்களைக் கண்டு அந்த ஊர்மக்கள் மறுபடியும் கண்ணு வைத்தனர்.

அனைவருமே சந்துருவைப் பற்றித்தான் பேசினார்கள், ஊருலேர்ந்து வந்ததும் பொண்டாட்டிய தரையில காலு வைக்க விட மாட்டிங்குறானே என்று.

இப்படியே நாட்கள் உருண்டோடியது அவன் வந்து 88 நாட்கள் ஆகிவிட்டது, இன்னும் இரண்டு நாட்களில் மறுபடியும் ஊருக்கு செல்லும் நேரம் வந்தது.

இதை நினைத்து அம்முக்குட்டி வருந்திக் கொண்டிருந்தாள், எப்படி மறுபடியும் உங்களை பிரிந்து இருக்குறதுனு.

எனக்கும் தான் அம்முகுட்டி போகவே பிடிக்கலை என்ன செய்றது நாமளும் மத்தவங்க மாதிரி நல்ல நிலைமைக்கு வரனுமுல அதுக்காக கொஞ்ச நாள் பிரிந்து இருந்து தான் ஆகனும் என்றான் கண்ணீரோடு.

அம்முக்குட்டி – தமிழ் சிறுகதை

அப்பொழுது வாசலில் சந்துருவின் நண்பர்கள் அனைவரும் வந்திருந்தனர், என்னடா மச்சான் 2 நாளைல ஊருக்குப் போற எங்களுக்கு ட்ரீட் வச்சிட்டு போடா என்றனர்.

சந்துருவும் சிரித்துக் கொண்டே உங்களுக்கு வைக்காமலா போய்டுவேனா இருங்கடா கிளம்பி வரேன் என்று சொல்லிக் கொண்டே சட்டையை எடுத்து மாட்டிக்கிட்டு அம்முக்குட்டியிடம் சொல்லிட்டு தன்னுடைய பைக்கை முறுக்கினான்.

நண்பர்களுடன் நல்லா சரக்கை குடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கும் பொழுது சந்துருவிற்கு கண் இருட்டிக் கொண்டே வந்தது, வண்டியை சரியாக ஓட்ட முடியாமல் வலைத்து வலைத்து ஓட்டிக் கொண்டே சென்றான்.

அப்பொழுது எதிரே வந்த லாரி சந்துருவின் பைக்கின் மீது மோதியது, சந்துரு நிலை தடுமாறி கீழே விழுந்தான்.

அவன் ஹெல்மட்டும் அணியவில்லை, அவன் விழுந்ததில் அவனின் தலையில் மூளைக்கு போகும் நரம்பில் இரத்தம் உறைந்து விட்டது.

சந்துரு நிலை!

அப்படியே மயங்கிய நிலையிலே கிடந்தான், அவனை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் சென்றனர் அவனின் நண்பர்கள்.

அவன் அப்பொழுது மூடிய கண்கள் மறுபடியும் திறக்காமலே இருந்தான், டாக்டர்கள் இவருக்கு மூளையில் பலமான அடிபட்டிருக்கு உடனடியாக ஆப்ரேசன் செய்யவும்.

அப்படி செய்தால் இவர் சுயநினைவுக்கு வருவார், இப்பொழுது ஹோமாஸ் ஸ்டேஜ்ல தான் இருக்காரு.

ஆப்ரேசன் உடனடியா பண்ணலைனா இவர் பிழைக்க மாட்டார்னு சொன்னாரு.

இந்தத் தகவல்களை எல்லாம் அறிந்த அம்முக்குட்டி அலறி அடித்துக் கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு ஓடி வந்தாள்.

தனக்கு திருமணத்திற்குப் போட்ட அனைத்து நகைகளையும் விற்று பணத்தைக் கட்டினாள்.

மூன்று நாட்கள் ஆனது, ஆனால் சந்துரு படுத்த படுக்கையாக இருக்கிறான், அவளுடைய நகைகளை விற்ற பணங்கள் எல்லாம் செலவு ஆனது.

அப்பொழுது அவளுடைய சொந்தக்காரர்கள் தங்களால் முடிந்த பணத்தை கொடுத்து உதவினர்.

சிலர் 30000, சிலர் 50000 கொடுத்து உதவினர், 5 நாட்கள் ஆனது சந்துருவின் அருகில் அம்மு படுத்திருந்தாள்.

அப்பொழுது சந்துருவின் கை விரல்கள் அசைந்தது, அம்முக்குட்டிக்கி பேரானந்தமாக இருந்தது.

அவளுக்குள் ஒரு நம்பிக்கை வந்தது எப்படியும் என் கணவன் பிழைத்து விடுவான் என்று.

அவனின் அருகிலே இருந்தாள், 10 நாட்கள் ஆனது, அப்பொழுது டாக்டர்கள் மீண்டும் ஒரு ஆபரேசன் செய்யனும் பணம் கட்டுங்க என்றனர்.

அம்முக்குட்டிக்கி என்ன செய்வதென்று புரியாமல் தன்னுடைய நிலங்கள் அனைத்தையும் விற்றாள்.

மேலும் படிக்க  கல்லூரி காதல் கதை - வர்ஷா

கணவன் உயிரோடு வந்தால் போதும் வேறு எதுவும் தேவை இல்லையென்று நினைத்து.

15 நாட்கள் ஆனது டாக்டர்கள் வெளியே வந்து உங்களுடைய கணவன் இறந்து விட்டார், பெட் ஜார்ஜ பே பண்ணிட்டு பாடிய வாங்கிட்டு போங்க என்றனர்.

அந்த இடத்திலே தலையில் அடித்துக் கொண்டு கதறினாள் அம்முக்குட்டி.,

அவள் சொல்லி அழுத வார்த்தைகள் ஒருநாள் கூட பிரிய மனம் இல்லாம இருந்த எனக்கு வாழ்நாள் முழுவதுமா என்னை பிரிந்து செல்ல வேண்டும்.

அவளின் கதறல்களைக் கேட்ட அனைவருமே கண்ணீர் விட்டனர், அவள் கதறி கதறி மயக்க நிலைக்குச் சென்றாள்.

பிறகு அவளின் உறவினர்கள் அம்முக்குட்டியின் முகத்தில் தண்ணீர் அடித்து வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

சந்துருவின் பாடியையும் அவனின் உறவினர்கள் பணத்தைக் கட்டி வாங்கி வந்தனர்.

அம்முக்குட்டி 6 மாதம் முழுவதுமாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தாள்.

அம்முக்குட்டியின் வீட்டார்கள் சந்துருவின் பைக் மேல் மோதிய லாரிக்காரனின் மீது கேஸ் போட்டிருந்தார்கள்.

விதியின் விளையாட்டு!

அவர்களும் வக்கீலுக்கு பணம் கட்டி அலுத்துப் போனதால் வாங்க வீட்டுக்கு பேசி முடிவு எடுக்கலாம் என்று சொன்னதால் அம்முவையும் அழைத்துக் கொண்டு அவர்களின் வீட்டிற்குச் சென்றார்கள்.

அங்கு அவர்கள் பணம் தான் கொடுக்கப் போகீறார்கள் என்று பார்த்தால் ஒரு சாமி ஆடும் நபரை அழைத்து வந்து சாமியை அழைத்து பேசினார்கள்.

அந்த ஆக்சிடென்டுக்கு இந்தப் பொண்ணு தான் காரணம் உன்னை கல்யாணம் பண்ணுனதாலதான் அவன் செத்தான்.

உனக்கு கல்யாண கிரகமே இல்லை, உனக்கு 25 வயசுல தான் கல்யாண கிரகம் இருக்கு, அதற்கு முன்னாடி உனக்கு பண்ணுனதால தான் அவன் இறந்தான் என்று கூறியதும் அம்முக்குட்டியின் கணவர் வீட்டார்கள் அனைவரும் அம்முக்குட்டியை அந்த இடத்திலே திட்ட ஆரம்பித்து விட்டனர்.

அம்முக்குடியின் நாத்தனாரும் உன்னுடைய ராசியால் தான் என் அண்ணன் செத்துருச்சி, தரித்தனம் பிடித்தவளே என்று அவளை நோகடித்தாள்.

இவர்களின் வார்த்தைகளை எல்லாம் கேட்க முடியாமல் தன்னுடைய குழந்தையை அழைத்துக் கொண்டு தன் தாய் வீட்டிற்குச் சென்றாள் அம்மு.

அவள் ராணியாய் வாழ்ந்தாள் அவளுடைய கணவன் இருக்கும் வரை, அவர் இறந்த பின் அவளின் பரிதாப நிலையைக் கண்டு அந்த வானம் கூட கண்ணீர் வடித்தது தன் மழைநீரால்.

அவளின் அந்த நிலைக்கு காரணம் அந்த ஊர்மக்களின் கண்கள் தான். அவளின் வாழ்க்கையைக் கண்டு பொறாமை கொண்டார்கள் பாதிபெண்கள், கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது சொன்னது சும்மாவா இருக்கும்.

அம்முவிம் வாழ்வில் சந்தோஷத்தை நிறையக் கொடுத்த கடவுள், அது எல்லாம் ஒரு குறிப்பிட்ட நாளுக்குத்தான் எழுதி வைத்திருந்தாற் போல.

யார் தலையில் என்ன எழுதியிருக்கோ அது படி தான் நடக்கும், மின்மினிப் பூச்சியாய் சொளித்த அவள் வாழ்விலும் இருட்டு நிரந்தரமாகிப் போனது.

பிறவி – நன்னெறிக் கதை
You have been blocked from seeing ads.

1 thought on “அம்முக்குட்டி – தமிழ் சிறுகதை”

Comments are closed.