பிக்பாஸ் ஐக்கி பெர்ரி வாழ்க்கை கதை

ஐக்கி பெர்ரி பிறப்பு:

ஐக்கி பெர்ரி தஞ்சாவூரில் காமாராஜ் மற்றும் ஜெயகௌரி என்பவருக்கு மகளாக 1993 ஆம் ஆண்டு ஆகஸ்டு 11 ல் பிறந்தார்.

இவருக்கு சகோதர சகோதரிகள் யாரும் இல்லை, வீட்டிற்கு ஒரே பிள்ளை ஆவார்.

ஐக்கி சிறுவயது முதலே படிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் அனைத்து கலைகளை கற்பதிலும் ஆர்வம் காட்டினார்.

ஐக்கியின் தந்தையான காமராஜ் தான் ஐக்கி மல்டி டேலண்டாக வர காரணமானவர், அவர் தான் பாட்டு, நடனம் என எல்லா கிளாஸிருக்கும் அழைத்துச் செல்வார்.

இவரின் தாயான ஜெயகௌரி ஒரு ஆங்கில பேராசிரியராய் இருந்தாலும், தன்னுடைய மகளுக்கு தன் தாய்பொழியான தமிழின் மகத்துவத்தை எப்பொழுதும் எடுத்துச் சொல்லிக் கொண்டிருப்பார்.

ஐக்கிபெர்ரி தன்னுடைய பள்ளிப் படிப்பை தஞ்சாவூரில் உள்ள மகரிஷி வித்யா மண்டிர் பள்ளியில் படித்தார்.

பின்னர் கல்லூரிப் படிப்பை பாண்டிச்சேரியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர மருத்துவக் கல்லூரியில் MBBS படித்துள்ளார்.

இவர் டாக்டார் ஆனாலும் பாடலில் மேல் உள்ள ஈர்ப்பால் ரேப்பராகா வந்தார்.

தென் இந்தியாவிலே முதல் பெண் ரேப்பர் என்ற பெருமை ஐக்கியையே சேரும்.

இவர் மருத்துவத்துறையில் காஸ்மெடிக் சர்சரி துறையில் பணியாற்றி வருகிறார்.

ஐக்கிபெர்ரி சொந்தமாக கிளினிக் ஒன்றும் நடத்தி வருகிறார்.

ஐக்கியின் காதல்:

இவருக்கு தேவ் என்ற காதலன் இருக்கிறார், ஐக்கி தன்னுடைய கல்லூரி வாழ்க்கையில் இறுதியாண்டின் போது தான் தன் காதலனான தேவ்வை சந்திருக்கிறார்.

இவர்கள் இருவரும் முதலில் பேஸ்புக் நண்பர்கள் ஆவார், ஒரு ஆல்பம் சாங்க் தயார் செய்வதற்காக ஐக்கி தேவின் உதவியை நாடினாள்.

அதுவே அவர்களின் முதல் சந்திப்பு, பின்னர் அவர்களின் நட்பு அதிகமாக காதலாக மாறியது.

ஐக்கி

இவர் தன் காதலுடன் 8 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றார், தன்னுடைய பெற்றோர்களின் சம்மதம் கிடைத்தால் தான் திருமணம் என்ற முடிவில் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

ஐக்கி பெரியின் உண்மையான பெயர் ஐக்கியா காமராஜ். அவருக்கு KD PERRY என்ற ரேப்பரை பிடித்ததால் தன்னுடைய பெயரையும் ஐக்கி பெயர் மாற்றிக் கொண்டார்.

இவர் பாடகியான ரம்யா NSK விடம் சிறிது நாட்கள் பயிற்சிகள் பெற்றார், பின்னர் ஏ. ஆர். ரஹ்மான் நடத்தும் KM MUSIC CONSERVATORY யில் படித்தார்.

ஐக்கிபெர்ரி முதலில் ரேப்பராக வருவதற்கு வீட்டில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள், பின்னர் தான் ஏற்றுக் கொண்டனர்.

இவர் முதன் முதலில் ஆங்கிலத்திலேயே ரேப் சாங்க் எழுதியுள்ளார். பிறகு தான் தமிழில் எழுடியுள்ளார்.

இவருடைய பாடல்கள் தமிழ்நாட்டில் பெற்ற வரவேற்ப்பை விட வெளிநாடுகளில் தான் அதிக வரவேற்ப்பை பெற்றது.

மேலும் படிக்க  உயிரோடு இருக்கும்போதே நினையுங்கள்

இவரே சொந்த பாடல்களை எழுதும் திறமை பெற்றவர்.

ஐக்கிபெர்ரி பெர்ரி ஒரு பாடலாசொரியர், பாடகி, டேன்சர் மற்றும் டாக்டர் ஆவார்.

கிளினிக்கில் இருக்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் இவர் ஸ்டூடியோவில் தான் இருப்பாராம்.

இவருடைய காதலன் தேவ்வும் எப்பொழுதும் உடன் இருப்பார்.

ஐக்கி பெர்ரி இமான் இசையில் சில பாடல்கள் பாடியுள்ளார்.

இவர் தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபாரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.  

பிக்பாஸ் ராஜூ ஜெயமோகன் வாழ்க்கை கதை

 

1 thought on “பிக்பாஸ் ஐக்கி பெர்ரி வாழ்க்கை கதை”

Comments are closed.