You have been blocked from seeing ads.

விடியலை நோக்கி காத்திருந்தாள்

ருத்ராவின் கனவு:

ருத்ரா தன் வீட்டின் பால்கனியில் அமர்ந்து கொண்டு காலண்டரை பார்த்து நாளை தேதி 31 என்று சொல்லிக் கொண்டு பெருமூச்சு விட்டாள்.

இன்னையோடு கஷ்டம் தீர்ந்துச்சுபா நாளைக்கு என் கணவருக்கு சம்பளம் வந்துவிடும் பிடித்ததை வாங்கி சாப்பிடலாம். என்று கனவு கண்டாள்.

ருத்ராவின் கணவன் சங்கர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஜூனியர் இன்ஜினியராக வேலை பார்க்கிறான்.

அவனுக்கு மாதம் எல்லாம் பிடித்தது போக கையில் 22,000 தான் சம்பளம் வரும்.

இதை வைத்து தான் குடும்பத்தை ஓட்டனும், அவர்கள் வண்டி டீவ்வில் எடுக்காத வரைக்கும் குடும்பம் நடத்துவதற்கு போதுமானதாகவே இருந்தது.

ருத்ரா இந்த மாதம் எவ்வளவு செலவு ஆகும் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருந்தால் சம்பளம் வருவதற்கு முன்னரே.

வீட்டு வாடகைக்கு 6500, வண்டி டீவ்க்கு 3500, கடன் ஒரு 3000, சாப்பாட்டு செலவுக்கு 3000, வீட்டுக்கு தேவையான பாத்திரம் வாங்க 1000. அப்பாடா மீதம் 5000 இருக்கும் போல இந்த மாசம் இதை வைத்து ஓட்டி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.

மறுநாள் மதியம் சம்பளமும் வந்தது, கடன் எல்லாம் போக 5000 மீதம் இருந்தது. சிக்கன், மட்டன் எல்லாம் நல்லா சாப்பிடனும் என்று எண்ணும் பொழுது தான் அவளுக்கு ஹாஸ்பிட்டல் செலவு நினைவுக்கு வந்தது.

சரி ஹாஸ்பிட்டலுக்கு எவ்ளோ வந்துடும் 2500 க்குள்ள தான் வரும் என்று லேசாக விட்டுவிட்டாள்.

ருத்ராவின் செலவு:

அந்தக் கடவுள் ருத்ராவின் கணக்கை மட்டும் தான் உத்துக் கவனித்துக் கொண்டிருப்பார் போல, அடுத்த நாள் நார்மல் செக்- அப் புக்காக தனியார் மருத்துவனைக்கு சென்றனர்.

அவள் அப்பொழுது 7 மாசமாக இருந்தாள். டாக்டர் அன்றைக்குனு பார்த்து 7 பிளட் டெஸ்ட், 7 வது மாசம் ஸ்கேன், இ.சி.ஜி, இதய ஸ்கேன், அவரோட ஒபினியன் அப்பறம் மாத்திரை வேறு இதைப் பார்த்ததும் ருத்ராவிற்கும் சங்கருக்கும் தலையே சுற்றி விட்டது.

வைத்திருக்கும் 5000 த்தில் எப்படி இவ்வளவும் பண்ணுவது என்று, ருத்ரா அந்த டாக்டரை திட்டிக் கொண்டே வருகிறாள், எதுக்கு ஹார்ட் டாக்டருக்கெல்லாம் எழுதி கொடுக்கிறாங்க என்று.

ருத்ரா

You have been blocked from seeing ads.

ஹார்ட் டாக்டர் சுலையாக 3000 வாங்கி விட்டார். பிளட் டெஸ்ட் 900, ஸ்கேன் 1100, இ.சி.ஜி. 200, டாக்டர் பீஸ் மற்றும் மாத்திரை 650.

மொத்தமா 5650 வந்தது, வேறு என்ன செய்வது சங்கர் தன் நண்பனிடம் 2000 கடனாக வாங்கினான்.

இவர்கள் கவர்மெண்ட் ஹாஸ்பிட்டலிலும் பார்த்துக் கொண்டிருந்தார்கள் பிரைவேட்டிலும் பார்த்துக் கொண்டார்கள், டெலிவரிக்கு யாரும் வராமல் போனால் என்ன செய்வது என்று யோசித்து பிரைவேட்டிற்கு சென்றார்கள்.

மேலும் படிக்க  உயிருக்கு கொடுத்த இறுதிப் பரிசு

ருத்ரா மனதிற்குள் அழுதாலும் வெளியில் சிரித்துக் கொண்டு வந்தாள். தன் கணவனிடம் இந்த கடவுள பாருங்களேன் நம்ம ஒரு பிளான் போட்டா அவரு ஒரு பிளான் போட்டு வைக்கிறாருனு.

நம்மளுக்கு எப்பதான் இந்தக் கஷ்டம் தீருமோ என்று புலம்பிக் கொண்டிருந்தாள்.

அதற்கு சங்கர் அந்த கடவுளுக்கு தெரியும் எப்பொழுது யார் யாருக்கு என்ன என்ன கொடுக்க வேண்டுமென்று, நீ எதைப் பத்தியும் கவலை கொள்ளாதே என்றான்.

ருத்ராவும் மனதை தேத்திக்கொண்டு 1500 ரூபாய் இருக்குங்க அதை வைத்து குடும்பத்தை நடத்திடுறேன் என்றாள்.

இரவு உணவு முடித்துவிட்டு தூங்கப் போகும் பொழுது சங்கரின் நெருங்கிய நண்பன் ஒருவன் இவனிடம் கால் பண்ணி எனக்கு உடம்பு சரி இல்லாமல் வீட்டுல இருக்கேன்டா மாப்புள ஒரு 100 ரூபாய்க்கு ஈசி பண்ணிவிடுடா எங்க ஊருல ஈசி பன்ற கடை இல்லை என்றான்.

சரிடா நான் போட்டு விடுறேன் என்று சொல்லி விட்டு அவனுக்கு ஈசி பண்ணிவிட்டான்.

ருத்ராவும் சரி 100 ரூபாய் தானே மீதம் இருக்கும் பணத்தை வைத்து சமாளிக்கலாம் என்று நினைத்தாள்.

இரண்டு நாள் கழித்து சங்கரின் கல்லூரி நண்பன் ஒருவன், இவனிடம் பேசி ஒருவருடம் இருக்கும், அவன் கால் பண்ணி ஒரு 100 ரூபாய் இருக்காடா, ரொம்ப அர்சன்ட் என்றான், சங்கரும் இருக்குடா என்றான், இன்னொரு 100ரூபாய் இருந்தா சேர்த்து போட்டு விடுடா என்றான்.

அதற்கு சங்கர் நானும் கடன் வாங்கி தான்டா வச்சிருக்கேன் மச்சான், சரி போட்டு விடுறேன் என்று கூறிவிட்டு அவனுக்கு 200 ரூபாய் அனுப்பி விட்டான்.

ருத்ராவின் கோவம்:

ருத்ராவிற்கு அவன் நண்பன் 200 கேட்டபொழுது தெரியாது அவள் தூங்கிக் கொண்டிருந்தாள், சங்கர் அவர்கள் சாப்பிடும் பொழுது சொல்கிறான் என்னுடைய நண்பனுக்கு 200 ரூபாய் கொடுத்து விட்டேன் என்று.

ருத்ராவிற்கு கோவம் தாங்க முடியவில்லை அர்சன்ட்னா 100 ரூபாய் மட்டும் கொடுத்திருக்கலாமே நாமலே இந்த மாசத்தை எப்படி ஓட்டுவோமுனு தெரியாம இருக்கோம், இன்னைக்கி தேதி 10 தான் ஆகுது. இன்னும் 20 நாள் எப்படி 1000 ரூபாயை வைத்து சமாளிக்கிறது என்று கத்த ஆரம்பித்து விட்டாள்.

சங்கருக்கு ருத்ராவை எப்படி சமாதனப்படுத்துவது என்று தெரியாமல் இருந்தான்.

சங்கரும் அவள் ஆசைப்பட்ட பொருளை கூட வாங்கிக் தரமுடியவில்லை, அவள் கர்பமான நாளிலிருந்து ஒழுங்கான சாப்பாடு கூட இல்லை, அவள் எந்த பொருளும் வாங்கித்தர சொல்ல மாட்டாள். இருக்குற வரைக்கும் புடிச்சத சாப்பிடனும் என்கிற குணம் உடையள்.

மேலும் படிக்க  மூன்சென் ஸ்ரீரங்கநாதர் காதல் கதை

ஆனால் திருமணம் ஆன புதிதில் கொஞ்சம் நல்லா சாப்பாட்டங்க அப்பறம் கன்சீவ் ஆனதிருந்து ஹாஸ்பிட்டலுக்கே ஒரு தொகையை செலவழித்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் ஆரம்பத்தில் வீடு தேடும்பொழுது காதல் திருமணம் என்பதால் யாரும் வீடு தர முன்வரவில்லை அதனால் அவர்கள் அப்பாட்மெண்டில் அதிக ரெண்ட்க்கு தங்க வேண்டிய கட்டாயமாக இருந்தது.

குழந்தை பிறந்த பிறகு வேறுவீடு மாறிவிடலாம் அப்பொழுது ஒரு 2500 ரூபாயவது மிச்சாகும் என்று நினைத்தனர்.

பின்பு சங்கர் ருத்ராவின் அருகில் சென்று கவலைப்படாதே கண்ணம்மா அடுத்த மாசம் இந்த நிலைமை சரியாகி விடும் என்றான்.

ருத்ராவும் அடுத்த மாதமாது நம் வாழ்வில் விடியல் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருந்தாள்………..

உன்னை பைத்தியமாக்கும் காதலே – (துளசி)
You have been blocked from seeing ads.

1 thought on “விடியலை நோக்கி காத்திருந்தாள்”

Comments are closed.