You have been blocked from seeing ads.

உயிரோடு இருக்கும்போதே நினையுங்கள்

வேலுச் சாமியின் வீடு:

வேலுச்சாமி வீட்டில் திருவிழாவைப் போல ஆட்கள் அலைமோதிக் கொண்டிருந்தனர்.

வேலுச்சாமியின் உறவினர்கள் சாரசாரையாக வந்த வண்ணமும் போன வண்ணமும் இருந்தார்கள்.

வேலு தன் வாயில் கேட்டின் மேல் அமர்ந்து இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார்.

இன்னையோடு வேலுச்சாமி செத்து 16 நாள் ஆகுது, எல்லோரும் அவரின் கருமாதிக்குத் தான் இப்படி சாரைசாரையாக வந்து கொண்டிந்தனர்.

வேலுக்குப் பிடித்த நாட்டுக்கோழி குழம்பு, இடியாப்பம், குடல் குழம்பு, ரவா லட்டு, பனியாரம், கேசரி, ஆட்டுக்கால் பாயா, பழங்கள் அதுமட்டுமல்லாமல் 21 வகையான உணவுப் பொருட்களை வேலுச்சாமியின் போட்டோ முன் வைத்து படைத்துக் கொண்டிருந்தார்கள் அவரின் மகன்களும் மருமகள்களும்.

வேலுச்சாமி இவர்கள் படைப்பதெல்லாம் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.

வேலுச்சாமியின் குடும்பம்:

வேலுக்கு 3 மகன்களும் 2 மகள்களும் இருந்தனர். வேலுச்சாமி பெரிய பண்ணையக்காரர்.

அவர் வாழ்ந்த காலத்தில் ஒரு செல்வந்தரைப் போல வலம் வந்து கொண்டிருந்தார்.

அவருக்கு 50 ஏக்கரில் தென்னை தோப்புகளும் 20 ஏக்கரில் வாழைத்தோப்புகளும் 10 ஏக்கரில் மாந்தோப்புகளும் இருந்தன.

3 வீடுகளும் 200 பவுன் நகைகளும் வைத்திருந்தார், தன்னுடைய 2 மகள்களுக்கும் 100 பவுனில் நகைகள் போட்டு திருமணம் முடித்து வைத்தார்.

அந்த ஊர் மக்களுக்கு வேலுச்சாமியின் வீட்டில் எதாவது விஷேசம் என்றால் போதும் நல்ல உணவு சாப்பிடலாம் எதவாது நன்கொடை அளிப்பார் என்று நினைத்துக் கொண்டிருப்பர்கள்.

அவரின் மகளின் திருமணத்தின் போது 3 நாள் நல்ல திருவிழாப் போல் கொண்டாடி மகிழ்ந்தனர்.

வேலுச்சாமி சென்றாலே அந்த ஊர் மக்கள் கையெடுத்து கும்பிடுவார்கள்.

வேலுச்சாமி தன்னிடம் இல்லையென்று வருபவர்களுக்கு போதிய பணத்தை கொடுத்து உதவுவார்.

மகன்களின் திருமணம்:

அவரின் மூன்று மகன்களுக்கும் ஏழ்மையான வீட்டில் இருந்தே பெண் எடுத்தார்.

ஏழ்மையான வீட்டில் இருந்து பெண் எடுத்தால் தான் அனைவரின் கஷ்டமும் புரிந்து நடந்து கொள்வார்கள் என்று நினைத்தார்.

ஆனால் அவர் நினைத்தர்க்கு எதிர்மாறாக இருந்தார்கள் மூன்று மருமகள்களும்.

மூன்று மகன்களுக்கும் சரி சமமாக சொத்து பிரித்து கொடுக்கும் வரை வேலுச்சாமியும் அவரின் மனைவியையும் நன்றாக கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

நேர நேரத்திற்கு உணவு, டீ, பால் அனைத்தும் தானாக வந்து கொண்டு இருந்தது.

மருமகள்களின் செயல்கள்:

சொத்து பிரித்துக் கொடுத்தப் பிறகு தான் அவருக்கு மூன்று மருமகள்களின் சுயரூபம் தெரிந்தது.

வேலுச்சாமியும் அவரின் மனைவியும் 6 மாதகாலம் ஒவ்வொரு மகன் வீட்டில் சாப்பிட்டு கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்.

ஒரு 2 வாரம் தான் நல்ல உணவு கொடுத்திருப்பார்கள், அதற்குப் பிறகு இருவருக்கும் கஞ்சியும் ஊறுகாய்யும் தான்.

மேலும் படிக்க  இருப்பது ஒரு வாழ்க்கை - வானதி கதை

வேலுச்சாமியின் மனைவிக்கு ஏற்கனவே சர்க்கரை வியாதி இருந்தது, இதில் தினமும் மூன்று வேலைக்கும் பழைய சாதத்தை மட்டுமே உணவாகக் கொடுத்தார்கள்.

அவருடைய மனைவியும் நல்ல உணவு இல்லாமலும் சர்க்கரை வியாதி முற்றியும் இறந்து போனார்.

அவரின் மனைவி இறந்ததிலிருந்து பழைய சோறும் பாதியாகக் குறைந்தது.

2 மற்றும் 3 நாட்களுக்கு உள்ள உணவுகளை கொடுப்பாள் மருமகள்.

வீட்டில் வளர்க்கும் நாய்க்கு கூட ஒழுங்காக சோறு போடுவார்கள், வேலுச்சாமிக்கி சோறைப் போட்டு உள்ளே இருந்தபடியே கையால் தள்ளி விடுவாள்.

ஒருநாள் வேலுவின் மூத்த மருமகள் அந்தக் கிழவி போகையிலே இந்தக் கிழவனும் போகாம கிடந்துக்கிட்டு நம்ம உயிர வாங்குவது, அதுக்கு  சோறு போட்டு கொடுக்கனும் நேர நேரத்துக்கு என்று தன் உறவுக்கார பெண்ணிடம் சொல்லிக் கொண்டிருந்தாள், அது வேலுச்சாமியின் காதுக்கும் கேட்டது.

\வேலுச்சாமி

You have been blocked from seeing ads.

வேலு ஒருவாய் சோற்றுக்காக இப்படி எல்லாம் பேச்சைக் கேட்கனுமா இதுக்கு மேல் உயிரோடு இருக்கக் கூடாது என்று நினைத்து மாந்தோப்பிற்கு சென்று தூக்கு மாட்டிக் கொண்டு இறந்து போனார்.

அவரின் உடலைக் கூட ஒருநாள் கழித்து தான் தேடிக் கண்டு பிடித்து எடுத்தார்கள்.

ஆனால் இன்று அவருக்கு பிடித்த உணவுகளை எல்லாம் படைத்து வைத்திருந்தாள் மருமகள். இதனால் தான் வேலுச்சாமி சிரித்துக் கொண்டிருக்கிறார் காகத்தின் உருவத்தில் இருந்து.

இன்று பல மருமகள்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் உயிரோடு இருக்கும் பொழுது ஒருவாய் நல்ல சோறு போடமாட்டாங்க.

செத்த பிறகு பிடித்தை வகை வகையாக படைத்து வைப்பார்கள், அப்படி படைத்து வைப்பதால் என்ன பயன்கிடைக்கப் போகிறது என்று தெரியவில்லை.

இன்னும் 20 வருடம் கழித்து நாமும் ஒரு மாமியார் ஆகப்போகிறோம், நமக்கும் இந்த நிலைமை தான் வரும் என்பதை ஒவ்வொரு மருமகளும் உணர்ந்து செயல்பட்டலே போதும் அனைத்து முதியோர்களும் நிம்மதியாக வாழ்வார்கள்.

முதியோர் இல்லங்களும் நம் நாட்டில் அதிகரிக்காமல் இருக்கும்.

இன்னும் தன்னுடைய மாமனார் மாமியார்களை தன்னுடைய பெற்றோர் போல் நினைக்காமல் சுமைகளாக நினைக்கும் மருமகள்களுக்கு இந்தக் கதை சமர்பணம்.

கடவுள் போட்ட முடிச்சு – காதல் கதை
You have been blocked from seeing ads.

1 thought on “உயிரோடு இருக்கும்போதே நினையுங்கள்”

Comments are closed.