You have been blocked from seeing ads.

உன்னை பைத்தியமாக்கும் காதலே – (துளசி)

கிருஷ்ணாவின் காதல்:

துளசி அசையாமல் இருடா கண்ணு மாமா தலையை மட்டும் பின்னிக்குறேன், என்றான் கிருஷ்ணா.

கிருஷ்ணா சொல்ல சொல்ல துளசி வேகமாக தலையை அசைத்துக் கொண்டிருந்தாள்.

அவனால் அவளுக்கு தலையை ஒழுங்காக பின்ன முடியவில்லை, ஹாஸ்பிட்டலுக்கு டைம் ஆகிட்டு சமத்துகட்டி கொஞ்சம் நேரம் அமைதியா இருமா என்று கெஞ்சவும் அமைதியாக இருந்தாள் துளசி.

கிருஷ்ணா அவசர அவசரமாக தன் மனைவியை கிளப்பி விட்டுவிட்டு அவனும் கிளம்பினான்.

கிருஷ்ணாவும் துளசியும் 10 வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்,

இவர்களின் திருமணம் ரெசிஸ்டர் ஆபிசில் தான் நடந்தது. இருவீட்டாரையும் எதிர்த்து தான் திருமணம் செய்தனர். கிருஷ்ணா வீட்டில் எப்படியும் இவர்களை பிரித்து விடவேண்டும் என்று நினைத்து அனைத்து மந்திரம் மாயம் செய்பவர்களிடம் சென்று கொண்டு தான் இருந்தார்கள்.

இவர்கள் இருவரும் ஒரே ஊர் வேறுசாதி என்பதால் அந்த ஊர்மக்கள் இருவீட்டாரையும் ஒதுக்கி வைத்து விட்டார்கள், அவர்களின் ஊர் ஒரு வளர்ச்சி அடையாத குக்கிராமம்.

இன்னும் 100 வருடங்களுக்கு உள்ள பழக்கவழக்கங்களை கடைபிடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

இதனால் இருவீட்டார்களும் அந்த ஊரில் இல்லாமல் வேறு ஊருக்குச் சென்று விட்டார்கள்.

துளசியும் கிருஷ்ணாவும் பொறியியல் படித்தவர்கள் இருவரும் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

துளசியின் காதல்:

துளசி கிருஷ்ணாவை ரொம்ப டீப்பா லவ் பண்ணா, கிருஷ்ணாவும் டீப்பா லவ் பண்ணாலும் அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக லவ் பண்ணா துளசி.

அவனுக்கு ஏதாவது ஒரு பிராபிளம் வந்தாலும் சரி உடல்நிலை சரி இல்லையென்றாலும் முதலில் துளசிதான் பதறிப் போவாள்.

அவன் கம்பெனியில் யாரிடமும் அவமானப்பட்டாலும் துளசியிடம் வந்து சொல்லும் போது துளசிதான் கண்ணீர் வடிப்பாள்.

ஒருநாள் கிருஷ்ணாவும் துளசியும் போனில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவன் இவளை வம்பிழுக்க ஒரு பெண்ணிடம் பேசினேன் என்றான்.

இவள் அந்த நம்பரை பிளாக்ல போடு என்றாள்.

நான் போட மாட்டேன் என்றான்.

இதுவே இருவருக்கும் பயங்கர சண்டையாக முடிந்தது, இறுதியில் கிருஷ்ணா நான் தூக்கு போடுகிறேன் இன்றுதான் கடைசிநாள் என்று சொல்லிவிட்டு போனை வைத்து விடுகிறான்.

துளசி

You have been blocked from seeing ads.

துளசிக்கு கால் கைகள் எல்லாம் வெட வெடத்துப் போனது அவனின் வார்த்தையை கேட்டு, அவனுக்கு போன் செய்கிறாள், போன் சுவிட்ச் ஆப் என்று சொன்னதும் அவளுக்கு மூளை குழம்ப ஆரம்பித்துவிட்டது.

திரும்ப திரும்ப போன் செய்து கொண்டே இருக்கிறாள், அவளுக்கு முகம் எல்லாம் வியர்க்க ஆரம்பித்துவிட்டது, ஒரு பைத்தியம் பிடித்தவள் போல் தன் ரூமை விட்டு ஓட வெளியே ஆரம்பித்துவிட்டாள்.

மேலும் படிக்க  சந்து – உன்னியார்ச்சாவின் காதல் கதை

ஒரு 3 மணிநேரம் ரூம்முக்கு வெளியே நடந்து கொண்டிருந்தாள். சுயநினைவில் இல்லாமல் இருந்தால் கூட சொல்லலாம்.

அவளுடைய தோழியை எழுப்பி அவளிடம் சொல்கிறாள் அவள் காலையில் பேசிக்கொள்ளலாம் தூங்கு என்கிறாள்.

துளசி வந்து படுத்தாள், ஆனால் அவள் பைத்தியம் பிடிக்கும் முதல் ஸ்டேஜ்கு சென்றாள், அவனுக்கு என்ன ஆயிறுக்கும் என்று நினைத்துக் கொண்டே இருந்தாள். காலையில் அவளுக்கு மார்னிங்க் ஷிப்ட்.

பைத்தியமாகும் துளசி:

6 மணிக்கு ஷிப்ட்க்கு சென்று மார்னிங்க் மீட்டிங்க் நடந்து கொண்டிருக்கும் பொழுதே துளசிக்கு மூளை குழம்ப ஆரம்பித்துவிட்டது அவனை நினைத்து, மீட்டிங்கில் அனைவரின் முன்னிலையிலும் எனக்கு பைத்தியம் பிடித்ததுபோல் இருக்குதுனு அழுக ஆரம்பித்து விட்டாள், முகம் எல்லாம் வியர்க்க ஆரம்பித்து விட்டது.

அவளின் தோழி அவர்கள் வீட்டில் அவுங்க அம்மாக்கும் அப்பாக்கும் சண்டை அதை நினைத்து தான் அழுகிறாள் என்று சமாளித்தாள்.

பிறகு முகம் கழுவி விட்டு தண்ணீர் குடிக்க வைத்தாள் தோழி, துளசிக்கு மறுபடியும் அவனின் நினைவுகள் வந்தது அவனிடம் பேசினால் மட்டும் தான் சரியாகும் என்று நினைத்து தன் காதலனுக்கு போன் செய்ய போகிறாள் தன் தோழியை அழைத்துக் கொண்டு.

கால் பண்ணா பிசினு வந்தது அப்பொழுது, அவன் போனை ஆன் செய்து விட்டு தன் நம்பரை பிளாக்கில் போட்டு விட்டான் போல என்று நினைத்தாள்.

தன் தோழியின் போனில் இருந்து கால் பண்ண சொன்னாள், அவள் போன் பண்ணி இவள் இப்படி பைத்தியம் மாறி நடந்து கொள்கிறாள் ஒழுங்காக பேசுங்க என்றாள்.

அதற்குப் பிறகு தான் அவன் நன்றாக பேசினான், நான் விளையாட்டுக்குத்தான் அப்படி சொன்னேன் என்றான். உன்னைய விட்டு எங்கே போகப் போறேன் என்றான். அவனின் குரலைக் கேட்ட பிறகே துளசி நார்மலா வந்தா….

அவளின் அந்த மகிழ்ச்சியான தருணத்தை சொல்ல வார்த்தையில்லை.

அன்று பூராவும் மகிழ்ச்சியாக வேலை செய்தாள், ஆனாலும் அன்றிலிருந்து அவனின் போன் சுவிட்ச் ஆப் ஆகிருந்தாள் இவளுக்கு பைத்தியம் பிடிக்க ஆரம்பித்து விடும், அந்த சமயத்தில் இவள் தற்கொலை முயற்சிக்கு போக கூட நினைப்பாள் அவனுக்கு என்னமோ ஆகிவிட்டது நாம் உயிரோடு இருக்கக் கூடாது என்று நினைப்பாள்.

தான் அருகில் இருந்தால்தான் சரியாகும் துளசிக்கு என்று நினைத்து இரண்டு வீட்டையும் அவளை திருமணம் செய்து கொண்டான் கிருஷ்ணா.

இருவருக்கும் திருமணம்:

திருமணம் செய்து இருவரும் ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க, துளசியும் கர்ப்பம் ஆனாள்.

ஒருநாள் கிருஷ்ணா பைக்கில் போகும் பொழுது ஒரு சின்ன ஆக்சிடென்ட் ஆகிவிடுகிறது.

மேலும் படிக்க  சந்திரவதனி கௌதமராஜனின் காதல் கதை

அருகில் இருந்தவர்கள் அவனின் போனை எடுத்து துளசிக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லிவிட்டு கிருஷ்ணாவை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

துளசி அதிர்ச்சியில் உறைந்து போகிறாள்.

தன் கணவனைப் பார்க்க ஓடுகிறாள் மருத்துவமனைக்கு. தன் கணவனின் அருகில் அமர்ந்து இருக்கிறாள்.

அதிர்ச்சியில் கிருஷ்ணா:

கிருஷ்ணாவுக்கு கையில் லேசான காயம் மற்றும் மயக்கம் வந்ததால் அவனுக்கு குளுக்கோஸ் போட்டுக்கொண்டு இருந்தனர்.

கிருஷ்ணா ஒரு 20 நிமிடத்தில் மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தவனுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

அவனின் மனைவி ஹாஸ்பிட்டலின் சுவற்றைப் பார்த்து தன்னால் பேசிக் கொண்டிருந்தாள்.

அன்றிலிருந்து அவளை ஒரு குழந்தையாக பார்த்துக் கொண்டிருக்கிறான் கிருஷ்ணா.

இந்தக் கதையில் வரும் பாதி நிகழ்வுகள் உண்மையில் நடந்தது, இப்படியும் உண்மையாக காதலிக்கும் பெண்களும் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

உண்மையாகவே தன் காதலனை நினைத்து வருந்துவர்களுக்கு இந்த கதாநாயகியின் வலி தெரிந்திருக்கும்.

காதல் கற்றுக் கொடுத்த பாடம் – காதல் கதை
You have been blocked from seeing ads.

2 thoughts on “உன்னை பைத்தியமாக்கும் காதலே – (துளசி)”

Comments are closed.