You have been blocked from seeing ads.

சூழ்ச்சியில் விழுந்து விடாதே – குடும்பக் கதை

ரவியின் வேலை:

ரவிக்கு ஒரு 30 வயது இருக்கும், அவன் 2 ஆண்டுகளாக்கு முன் தான் வி.ஏ.ஒ தேர்வில் வெற்றி பெற்று பதவியில் அமர்ந்தான் ரவி.

இப்பொழுது அவனுக்கு பாலையூர் என்னும் ஊரில் ட்ரான்ஸ்பர் கிடைத்தது, அந்த ஊருக்கு தன் மனைவியுடனும் சென்று கொண்டிருந்தான்.

ரவிக்கு அந்த ஊர்  ரொம்ப பிடித்து இருந்தது, காரணம் இங்கு எல்லா வசதிகளும் இருந்தது நல்ல பசுமையான வயல்வெளிகள், கரவை மாடுகள், காய்கறி தோட்டங்கள்.

அந்த ஊரிலே வீட்டுக்குத் தேவையான பொருட்களை எல்லாம் வாங்கி விடலாம்.

ரவி ஏற்கனவே வேலை பார்த்த இடத்தில் ஒரு அரிசி வாங்கக் கூட 15 கிலோ மீட்டர் செல்ல வேண்டும், அது ஒரு வளராத குக்கிராமமாக இருந்தது, அதனால்தான் ட்ரான்பஸ்பர் ஆகி இங்கு வந்துவிட்டான்.

ரவியின் மனைவி செல்வியும் பி.எட் படித்திருந்தாள், அவளுக்கும் வேலைக்கி போக வேண்டும் என்று ஆசைதான் ஆனால் ஏற்கனவே இருந்த ஊரில் பள்ளிகூடம் ரொம்ப தொலைவில் இருந்ததால் வேலை பார்க்காமல் இருந்தாள்.

இந்த ஊரில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் தான் இருந்தது, அதனால் அவளுக்கும் இந்த ஊரை ரொம்ப பிடித்துப் போய்விட்டது.

செல்வி ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிந்தாள்.

வசந்தாவின் குணம்:

அவர்களின் வீட்டின் அருகில் வசந்தா என்பவள் வசித்து வந்தாள், அவளுக்கு 55 வயது இருக்கும்.

அவள் ஒரு பொறாமை பிடித்தவள், அடுத்தவர்கள் நல்லா வாழ்ந்திட்டா போதும் இவளுக்கு வயிறு எறிய ஆரம்பிச்சிடும்.

எப்படியும் அவர்கள் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி விடுவாள், அந்த ஊரில் பாதிக் குடும்பத்தில் சண்டை வருவது இவளின் சகுனி வேலையால் தான் இருக்கும்.

வசந்தா

You have been blocked from seeing ads.

செல்வியின் வீடு பக்கத்தில் உள்ள நிறைய குட்டி பசங்களின் பெற்றோர்கள் இவளை டியூசன் எடுக்கச் சொன்னார்கள்.

அவளும் அவர்கள் கேட்டுக்கொண்டதால் ஒரு 2 மணி நேரம் சாயந்திர நேரத்தில் பாடம் எடுத்தால்.

வசந்தாக்கு புதுசா வந்திருக்கும் ரவியும் செல்வியும் இப்படி வேலை பார்த்து பணம் சம்பாதிக்கிறது வயிறு எரிச்சாலாக இருந்தது. வசந்தாவுக்கு அவளை விட வசதியில் அதிகமாக இருந்தால் சுத்தமாக பிடிக்காது.

இவர்கள் இருவருக்கும் சண்டையை மூட்டி பிரித்து விட வேண்டும் என்று நினைத்தாள்.

ஒருநாள் செல்வியைப் பார்க்க பக்கத்து ஊர்க்காரர் வந்திருந்தார், அதைப் பார்த்த வசந்தா, செல்வி பள்ளிக்கூடம் சென்ற பிறகு உங்க வீட்டுக்கு யார் யாரோ வந்துட்டு போறாங்க என்று முடிச்சுப் போட்டாள்.

ரவி யார் வந்தா என்று கேட்டான் யாரோ வண்டியில் வந்தாங்க என்றாள்.

செல்வியும் டியூசன் டென்சன் சமையல் வேலை எல்லாத்துனாலயும்  ரவிக்கிட்ட சொல்ல மறந்துட்டா.

மேலும் படிக்க  கண்ணப்ப நாயனார் வாழ்க்கை கதை – தமிழில்
ரவியின் செயல்:

ரவிக்கி வேலைக்கி போயும் வசந்தா சொன்னது தான் ஓடிக் கொண்டே இருந்தது.

அவன் சாயந்திரம் சீக்கிரமே வீட்டுக்கு வந்து செல்வியிடம் கேட்டான் நேற்று யாரு வீட்டுக்கு வந்தது என்று.

டியூசனுக்காக கேட்க வந்திருந்தாங்க யாரோ பக்கத்து ஊர் காரங்களலாம், அவுங்க பையன் சுத்தமா படிக்க மாட்டேங்குறானாம் அதான் கேட்டுட்டு போனாங்க என்றாள். இருந்த வேலையில அத சொல்ல மறந்துட்டேன் என்றாள்.

அவன் பதில் ஏதும் சொல்லாமல் அங்கிருந்து சென்று விட்டான், அவனுக்கு செல்விமேல் சந்தேகம் என்னும் வேர் விடத்தொடங்கியது.

அவள் அவர்கள் வந்ததை சொல்லாமல் மறைத்து விட்டாள் என்று நினைத்தான்.

அவள் டியூசன் எடுப்பதால் நிறைய குழந்தைகளின் அப்பா வண்டியில் விட வந்தனர்.

சில நேரங்களில் எல்லாம் செல்வியின் வீட்டில் வெளியே அமர்ந்து இருந்து அழைத்துச் செல்வார்கள்.

வசந்தா சந்தர்பம் கிடைக்கும் பொழுது எல்லாம் ரவியிடம் செல்வியைப் பத்தி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லிக்கொண்டே இருப்பாள்.

ஒருநாள் மதியமே ரவி வீட்டுக்கு வந்து விட்டான் தலைவலி என்று, அப்பொழுது  அவனின் வீட்டு வாசலில் ஒரு வண்டி சத்தம் கேட்டது, வெளியில் சென்று பார்த்தான் செல்வியும் ஒரு ஆணும் ஒன்னா பைக்கில் வந்திருந்தனர்.

செல்வி பள்ளிக்கூடத்தில் மயக்கம் போட்டு விழுந்ததால் அவளை வீட்டில் விட்டு செல்வதற்காக உடன் பணிபுரியும் ஆசிரியர் வந்திருந்தார்.

ஆனால் ரவிக்கி செல்வியை வெட்டிக் கொல்லலாம் போல் இருந்தது தான் இவள் ஏன் வண்டியில் வர வேண்டும் என்று.

அவளுக்கு உடல்நிலை சரி இல்லை என்று கூட பார்க்காமல் அவளை கன்னத்தில் அறைந்தான்.

வசந்தாவுக்கு இவர்கள் சண்டை போடுவது கேட்டுக் கொண்டிருந்த்து, சன்னலை தொறந்து வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

செல்வி ரவி இப்படி சந்தேகப்பட்டு சண்டை போடுவது புடிக்காமல் தன்னுடைய அம்மா வீட்டிற்க்குச் சென்று விட்டாள்.

ரவி தன்னுடைய ஆபிஸ் சென்றதிலேருந்து சோகமாக இருந்தான் இதனைக் கவனித்த உதவியாளர் பெண் ஒருத்தி ஏன் சார் இன்னைக்கு இவ்ளோ சோகமா இருக்கீங்க என்றாள்.

அவன் வீட்டில் நடந்ததை கூறினான், அவள் சிரித்துக் கொண்டே வசந்தா உங்க பக்கத்து வீட்டில் இருக்கும் வரை இப்படி சண்டை வந்துகிட்டுதான் இருக்கும்.

அவளுக்கு அந்த ஊரில் யாரும் நல்லா வாழ்ந்திடக் கூடாது, அவர்களின் குடும்பத்தில் எப்படியும் சகுனி வேலை செய்து சண்டையை மூட்டி விடுவாள்.

நீங்கள் போய் உங்கள் மனைவியை அழைத்து வாருங்கள் என்றாள்.

அவனுக்கே அசிங்கமாக இருந்தது வசந்தாவின் பேச்சைக் கேட்டு நம்ம மனைவி மேல் சந்தேகப்பட்டுடமே என்று.

மேலும் படிக்க  புத்தரின் வாழ்க்கை வரலாறு கதை

எல்லா ஊர்களிலும் வசந்தா போன்ற நபர்கள் தான் அதிகம் வாழ்கிறார்கள், நாம் நல்ல நிலைக்கு வந்துவிட்டால் போதும் அவர்களை எப்படி வீழ்த்துவது என்றே பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

அவர்களின் சூழ்ச்சியில் விழுந்து விடாமல் கவனமாக வாழ்கையை நடத்த வேண்டும்.

உயிரோடு இருக்கும்போதே நினையுங்கள்
You have been blocked from seeing ads.

1 thought on “சூழ்ச்சியில் விழுந்து விடாதே – குடும்பக் கதை”

Comments are closed.