You have been blocked from seeing ads.

சிறகொடிந்த பட்டாம்பூச்சியின் வாழ்க்கை

செல்லமாளின் இளம்வாழ்க்கை:

பூஞ்சோலை கிராமத்தில் ஒரு பட்டாம்பூச்சியாய் வயல்வெளிகளில் திரிந்து கொண்டிருந்தாள் செல்லம்மா.  அவளுக்கு ஒரு 17 வயசு இருக்கும்.

அவளுக்கு 4 தங்கச்சி ஒரு தம்பி, இவளே மூத்தவள் என்பதால் சிறுவயதில் இருந்தே பள்ளிக்கூடத்திற்குச் செல்லாமல் தன்னுடைய தம்பி தங்கச்சிகளை கவனித்துக் கொண்டு வந்தாள்.

இவள் சிறுவயதிலே அருகில் இருக்கும் கிராமங்களுக்கு கூலிக்கு வேலைக்குப் போவாள், கலை எடுக்கவும்,கதிர் அறுக்கவும் செல்வாள்.

அவள் அடிக்கடி வயலூர் கிராமத்தில் தான் வேலைக்குச் செல்வாள், அங்கு தான் நிறைய வேலைகள் இருக்கும், தன்னுடைய பெரிய தங்கச்சியையும் உடன் கூட்டிச் செல்வாள்.

அவர்கள் வயலூருக்கு போகும் பொழுதும் வரும்பொழுதும் கந்தன் வயலில் நாத்து பறித்துக் கொண்டே வாங்க பொண்டுகளா வந்து சாப்பிட்டு போங்க என்று அழைப்பான் செல்லம்மாலையும் அவள் தங்கச்சியையும்.

கந்தனுக்கு ஒரு 34 வயது இருக்கும், அவனுக்கு இன்னும் திருமணம் ஆகாமல் இருந்தது.

அவனும் தன்னுடைய அண்ணனின் பசங்களை தான் பிள்ளைகளைப் போல் வளர்த்து வந்தான்.

கந்தனுக்கும் நிறைய இடங்களில் பெண் பார்த்தார்கள் தான் ஆனால் ஜாதகம் சரி இல்லாததால் அவனுக்கு திருமணம் தடை பட்டுக் கொண்டே இருந்தது.

செல்லம்மாளின் திருமணம்:

கந்தனின் அண்ணன் செல்லம்மாள் அடிக்கடி வயலூருக்கு வேலைக்கு வருவதைப் பார்த்து விட்டு அவளின் அப்பாவிடம் போய் பெண் கேட்டான் தன் தம்பி கந்தனுக்கு.

செல்லம்மாளின் தந்தையும் சரி கட்டிவைக்கிறேன் என்று வாக்கு அளித்தார். செல்லமாளை எப்படியாது தள்ளிவிடவேண்டும் என்று எண்ணினான் அவளின் தந்தையான செல்லக்கண்ணு.

ஆனால் செல்லமாளுக்கு ஒரு துளிகூட இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை, செல்லமாளுக்கும் கந்தனுக்கும் 17 வருடம் வயது வித்யாசம் இதனால் அவள் தூக்குப் போடவும் முயற்சி செய்தாள்.

செல்லம்மா

You have been blocked from seeing ads.

நிறைய பெரியவர்கள் செல்லமாளுக்கு அறிவுரை வழங்கினார்கள், அவர்களின் சொல்லை மீற முடியாமல் செல்லமாளும் அரைகுறை மனதுடன் திருமணதிற்கு ஒத்துக் கொண்டாள்.

செல்லமாளுக்கு கந்தனை பிடிக்கவில்லை என்றாலும் கல்யாணம் ஆனப் பிறகு வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் அவனுடன் வாழ நினைத்தாள்.

அவளே வாழ நினைத்தாளும் கந்தன் பழைய பழக்க வழக்கத்தில் இருந்து மாறமல் இருந்தான்.

அவனுடைய சிந்தனைகள் வேறு மாதிரியாக இருந்தது, இதனால் இருவருக்கும் இடையில் தினமும் சண்டை வரத் தொடங்கியது.

அவளின் சித்தப்பா வயது இருக்கும் ஒரு ஆணை திருமணம் முடித்து வைத்தாள் அவளும் என்னதான் செய்வாள்.

செல்லமாளின் தந்தை செல்லக்கண்ணு 5 பொம்பளப் புள்ளைகள் இருக்கு அதில் 3 வயசுக்கு வந்திருச்சு, மூத்தவளை எப்படியாது கரைசேத்திடனும் நினைச்சுதான் இந்த திருமணத்துக்கு ஒத்துக்கிட்டார்.

மேலும் படிக்க  ஒன்றும் கொண்டு செல்லப் போவதில்லை
செல்லமாளின் வாழ்க்கை:

அவரின் பாரம் குறைய செல்லமாளின் வாழ்க்கையை பலியாக்க நினைத்தார் செல்லக்கண்ணு.

செல்லமாளும் திருமணம் ஆகி ஒரு வருடத்தை கண்ணீருடன் கழித்து விட்டாள்.

அவளுக்கு ஒருவருடம் ஆகியும் குழந்தை பிறக்காததால் கந்தனும் அவனின் அண்ணன் குடும்பத்தாரும் செல்லம்மாளை கொடுமை படுத்த  ஆரம்பித்து விட்டனர்.

பட்டாம் பூச்சியாய் திரிந்த செல்லமாளின் வாழ்க்கை அனைவரின் வார்த்தையும் கேட்டு நரகமாக மாறத் தோன்றியது அவளுக்கு.

செல்லம்மா பலமுறை தன் கணவனுடன் அனுசரித்து வாழ முயற்சி செய்தும் கந்தன் அதற்கு ஈடு கொடுக்காதவனாய் இருந்தான்.

தன் அம்மா வீட்டிற்கு சென்று விடலாம் என்று நினைத்து பார்க்கும் பொழுது கூட தான் இப்படி வாழா வெட்டியாய் இருந்தால் தன் தங்கச்சிகளுக்கும் திருமணம் ஆகாது என்று நினைத்து தன் உயிரையும் மாய்க்க துணிந்தாள் செல்லம்மாள்.

யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக காட்டிற்குச் சென்று தூக்கு மாட்டிக் கொண்டு இறந்து போனாள்.

இன்னும் சில கிராமங்களில் பல செல்லமாக்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது.

5 பெண் பிள்ளைகளை பெற்றவுடன் அதை எப்படியாது தள்ளி விடவேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பிள்ளைகளின் ஆசை கனவுகளுக்கு மதிப்பு அளிக்காமல் தன்னுடைய சுயலாபத்திற்கு பிள்ளைகளை விலைபேசும் பெற்றோர்களுக்கு இந்தக் கதை சமர்ப்பணம்.

விடியலை நோக்கி காத்திருந்தாள்
You have been blocked from seeing ads.

1 thought on “சிறகொடிந்த பட்டாம்பூச்சியின் வாழ்க்கை”

Comments are closed.