ஷாருகான் வாழ்க்கை கதை – தமிழில்

ஷாருக் பிறப்பு:

ஷாருகான் பாலிவுட்டின் கிங் ஆப் கான் மற்றும் பாலிவுட் பாட்ஷா என்றெல்லாம் இன்று அழைக்கப்படுகிறார்.

ஆனால் இவரின் இளமைக்காலத்தில் ஒரு வேலை உணவும் வீடும் இல்லாமல் கஷ்டப்பட்டார்.

ஷாருக்கான் தாஜ் முகமது மற்றும் லதிப் பார்திமா என்பவருக்கு 1965 ஆம் ஆண்டு நவம்பர் 2 புது டெல்லியில் பிறந்தவர்.

இவரின் பெற்றோர்கள் மிகவும் செல்லமாக வளர்த்தனர்.

ஷாருக்கானின் பெற்றோர்கள்  பாகிஸ்தானின் பசவர் என்னும் பகுதியில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்தவர்கள்.

இவர் சிறுவயதில் இருந்தே படிப்பிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கினார்.

இவருக்கு மிகவும் பிடித்த விளையாட்டான கால்பந்து மற்றும் ஹாக்கியில் எப்பொழுதும் முதலிடாமாக திகழ்ந்தார்.

ஷாருக்கான் புதுடெல்லியில் உள்ள செங்கொலம்பியா பள்ளியில் படித்தார்.

இவர் ஸ்மார் ஸ்டூடெண்டாக இருந்தார், இவருக்கு வருட வருடம் “இயர் ஸ்மார்ட் ஆப் ஹானர்” என்ற பட்டத்தை அந்தப்பள்ளி நிர்வாகம் வழங்கியது.

இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே இவரின் தந்தை புற்றுநோயால் இறந்து போனார், அப்பொழுது ஷாருக்கானுக்கு வயது 18.

ஷாருக் ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பயின்றார்.

தன்னுடைய முதுகலை படிப்பை சானியா மேரியா கல்லூரியில் படித்தார்.

அவர் முதுகலை படித்து முடிக்கும் பொழுதே அவரின் தாயார் மரணமடைந்தார்.

ஷாருக்கானின் தாயார் இறந்த பிறகு சினிமா துறையில் எப்படியாது கால்பதித்துவிட வேண்டும் என்று எண்ணினார்.

பின்பு தேசிய நாடக பள்ளியில் சேர்ந்து நடிப்புக் கலையை ஓராண்டு கற்றார்.

வாழ்க்கை போராட்டம்:

அவர் சினிமா துறையில் வாய்ப்பு கேட்டு அலையும் பொழுது அவருக்கு தங்குவதற்கு வீடு இல்லாமல் பீச்சில் இருக்கும் பென்ச்களில் படுத்து உறங்கியிருக்கிறார்.

பின்பு 50 ரூபாய் சம்பளத்திற்கு சீட் அரேன்சிங்க் வேலை செய்து சாப்பாட்டிற்கு வைத்துக் கொண்டிருக்கிறார்.

ஷாருகான் பல இயக்குனர்களிடம் வாய்ப்புக் கேட்டு செல்லும் பொழுது நீ நல்ல நடிச்சாலும் கூட உன்னுடைய மூக்கு சரியில்லை என்று நிராகரித்து விடுவார்களாம்.

அவர் பௌசி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அவருக்கு சினிமா துறையில் இருந்து வாய்ப்புகள் வந்தது.

அவர் மும்பை சென்றிருக்கும் பொழுது கௌரி என்ற ஹிந்து பெண்ணை காதலித்து பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் திருமணம் முடித்தார்.

அவருடைய முதல் படம் “தில் ஆஸ்னா ஹே“ என்றாலும் அவருடையை இரண்டாவது படமான திவானா படமே 1991 ல் முதலில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது.

ஷாருகான்

தில் ஆஸ்னா ஹே படம் 1992 ஆம் ஆண்டு வெளியானது.

இதனால் ஷாருக்கானுக்கு பல படவாய்ப்புகள் தேடி வந்தது, ஆனால் எல்லா படங்களிலும் நடிக்காமல் சிறந்த கதையை தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கினார்.

மேலும் படிக்க  சூழ்ச்சியில் விழுந்து விடாதே – குடும்பக் கதை

இவருக்கு 1997 ஆம் ஆண்டு ஒரு மகளும், பின்பு 2000 ஆண்டு ஒரு மகனும் பிறந்தனர்.

1997 ஆம் ஆண்டு மட்டும் இவர் நடித்த 7 படங்கள் வெளியானது.

பாலிவுட் நடிகர்களில் மிகவும் அதிக சம்பளம் வாங்கும் சாருக்கானின் ஒரு படத்திற்கான சம்பளம் 60 கோடி ஆகும்.

ஷாருக்கான் 1999 ஆண் ஆண்டு “ ரெட் சில்லி எண்டர்டெய்மெண்ட்” என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதனை தன் மனைவி கௌரி கான் பொறுப்பில் நடத்தி வருகிறார்.

இவர் பெஸ்ட் பிலிம் பேர் ஆக்டர் என்ற விருதை 15 முறை  வாங்கியிருக்கிறார்.

“வாழ்க்கையில் இன்பங்களும் துன்பங்களும் நிரந்தரம் இல்லை இரண்டுமே கடந்து போகும்” இதையே ஷாருக்கான் தன் வாழ்க்கை பாடமாக மேடைப் பேச்சுகளில் கூறுவார்

மாவீரன் கர்ணன் கதை – மகாபராதக் கிளைக்கதை

.

1 thought on “ஷாருகான் வாழ்க்கை கதை – தமிழில்”

Comments are closed.