You have been blocked from seeing ads.

இருளான வாழ்வில் ஒளியாய் வந்த காதல் – சாஹிரா

சாஹிரா கல்லூரி வாழ்க்கை:

அரபு நாடுகளில் எல்லாம் பெண்கள் பள்ளிக்கோ கல்லூரிக்கோ செல்வது அரிதாக இருந்தது,  சாஹிரா கல்லூரி சென்று படிக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டிருந்தால், அவர்கள் வீட்டில் கல்லூரிக்கு செல்ல அனுமதி தராமல் இருந்தனர், காரணம் கண்ட பசங்களும் காதல் செய்வார்கள் இதனால் அவளின் வாழ்க்கை தான் பாழாகும்.

சாஹிரா காதலில் விழாமல் இருந்தாலும் அவளின் வயசு எப்படியும் அவளை காதலுக்கு இழுத்துச் செல்லும் என்று கருதினர்.

சாஹிரா அவளின் பெற்றோர்கள் என்ன சொல்லியும் நான் கல்லூரிக்குச் சென்று படித்து ஆகவேண்டும் என்று அடம்பிடித்துக் கொண்டே இருந்தால், இதனால் அவளின் பெற்றோரும் மனம் இறங்கத்தான் செய்தனர்.

நீ கல்லூரிக்கு சென்று வருவது என்றால் அங்கு எந்தப் பையன் கூடவும் பேசவும் கூடாது பார்க்கவும் கூடாது எந்தவித பிரச்சனைகளையும் கொண்டு வரக் கூடாது என்றனர்.

எதாவது பிரச்சனை வந்தால் மறுநாள் நீ கல்லூரிக்கு போகக் கூடாது இதற்கு சரி என்றால் நீ கல்லூரிக்கு போகலாம் என்றனர் அவளின் பெற்றோர்.

அவளும் சரி என்று ஒப்புக்கொண்டாள். அவள் கல்லூரிக்குச் சென்று நன்றாகப் படித்தாள்.

அஜ்மலின் காதல்:

அவள் கல்லூரிக்கு போகும் பொழுதும் வரும்பொழுதும் அஜ்மல் அவள் பின்னாடியே சென்று கொண்டிருந்தான்.

சாஹிராவிற்கு நன்றாகவே தெரிந்தது யாரோ நம்மை தினமும் பின்தொடர்கிறார்கள் என்று.

தெரிந்தும் அவள் தெரியாததுபோல் நடந்து செல்வாள்.

இப்படியே மூன்று வருடமும் ஆகியது.

ஒருநாள் அஜ்மல் சாஹிரா முன் வந்து ஒரு கடிதத்தைக் தயக்கத்துடன் கொடுத்தான். அவன் கொடுக்கும் வேளையில் தான் அவளின் கண்களை நேருக்கு நேராக பார்த்தான்.

இத்தனை நாட்களாக அவளின் பின்னாடியே சென்றதால் அவளின் மான்விழி கண்களை காணதவனாய் ஆகிவிட்டான். அவளை நேரே சந்தித்த பிறகுதான் வருந்திகிறான்.

அவள் அந்தக் கடிதத்தை பிரித்துப் பார்த்தால் அதில், அன்பே சாஹிரா நான் உன்னை 3 வருடங்களாக காதலிக்கிறேன், உன்னை நான் கரம் பிடிக்க வேண்டும் என்றே ஆசைக்கொள்கிறேன். உன்னுடைய பதிலுக்காக காத்திருக்கிறேன் என்று எழுதியிருந்தது.

சாஹிரா தன் தோழியிடம் இந்தக் கடிதத்தைப் பற்றிச் சொல்கிறாள். அதற்கு அவளின் தோழி இவன் என்னுடைய சித்தி பையன் தான், உன்னை ரொம்ப சீரியஸாக காதலிக்கிறான்.

உன்னிடம் வந்து இவ்வளவு நாள் அவன் காதலை சொல்லாமல் இருந்ததற்கு காரணம் உன் குடும்பத்தின் கட்டுப்பாடுகளைப் பற்றி அவனிடம் முன்னாடியே கூறியிருந்தேன்.

அவன் மிகவும் நல்லவன் மிகப் பெரிய வசதியானவனும் கூட உனக்கு பிடித்திருந்தால் உங்கள் வீட்டில் வந்து பேச சொல் என்றாள் அவளின் தோழி.

மேலும் படிக்க  விடியலை நோக்கி காத்திருந்தாள்

சாஹிராவிற்கும் அஜ்மலை பிடித்து இருந்தது, ஆனாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருந்தால்.

ஒருவழியாக சாஹிராவும் தன் கல்லூரி படிப்பை முடிக்கும் தருவாய்க்கு வந்தாள்.

தன் தோழியின் மூலமாகவே அவனை வந்து என்னுடைய வீட்டில் பேச சொல் வீட்டில் சம்மதம் என்றாள் திருமணம் செய்து கொள்ளலாம் என்றாள்.

அஜ்மலும் சாஹிராவின் பெற்றோரிடம் முறைப்படி பெண் கொடுக்கும்படி கேட்டான்.

சாஹிரா தந்தையின் உடல்நிலை:

அவளின் தந்தை, எல்லோரிடமும் கலந்து பேசிவிட்டு முடிவை ஒருவாரம் கழித்து சொல்கிறோம் என்றார்.

அவனும் அதற்கு சம்மதம் தெரிவித்து விட்டு வந்தான். சாஹிராவின் தந்தைக்கு திடீரென உடல்நிலை மோசமானது அவரை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் சென்றனர்.

அவருக்கு இரத்தப் பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரிந்தது.

அவர்கள் வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் விற்றுவிட்டு அவளின் தந்தைக்கு மருத்துவச் செலவு செய்தார்கள்.

அவர்கள் குடும்பம் இப்பொழுது சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தது.

இதனால் சாஹிராவின் தாய் அவளிடம் நீ மட்டும் தான் இப்பொழுது படித்து முடித்து இருக்கிறாய் உன்னுடைய தம்பியும் தங்கையும் படித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

குடும்பப் பொறுப்பு:

உன் தந்தை இருந்த இடத்தில் இருந்து இந்தக் குடும்பத்தின் பாரத்தை ஏற்கவேண்டும்.

இன்னும் ஒரு 3 ஆண்டுகள் கழித்து திருமணம் செய்யலாம் நீ வேலைக்குச் சென்று நம்முடைய கஷ்டத்தை போக்குவாயா என்று சொல்லிக் கொண்டே கண்ணீர் வடிக்கிறாள் அவளின் தாய்.

சாஹிரா அஜ்மலிடம் சென்று தன் குடும்பத்தின் நிலையை எடுத்துச் சொல்கிறாள், தந்தையின் இடத்தில் இருந்து நான் தான் குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று.

அஜ்மலும் எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறான் உன்னுடைய குடும்பத்தை நான் பார்த்துக் கொள்கிறேன் அவர்களும் என்னுடைய குடும்பத்தில் ஒருவர்கள் தான் என்று மன்றாடிப் பார்க்கிறான் அவள் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.

சாஹிரா வேலைக்குப் போய் அவளின் குடும்பத்தை கவனித்துக் கொள்கிறாள்.

சாஹிரா தன் தந்தைக்கு உடல்நிலை சரி இல்லாமல் போனதில்ருந்து ஒரு இயந்திரமாகவே நகர்ந்து கொண்டிருந்தாள்.

ஒழுங்கான தூக்கம் இல்லை, சாப்பிடகூட நேரம் இல்லாமல் வேலை செய்து கொண்டே இருந்தாள்.

அவளின் தந்தை புற்றுநோயால் அவதிப்பட்டு இரண்டு ஆண்டில் இறந்தும் போனார்.

தன் கணவனின் பிரிவை தாங்க முடியாமல் தினமும் அவரை நினைத்து நினைத்து அழுது ஒழுங்காக சாப்பிடாமல் இறந்து போனாள் சாஹிராவின் தாய்.

இப்பொழுது சாஹிராவின் தலையில் இரண்டு மடங்கு பாரம் வந்து விழுந்தது, அவளுக்கு இப்பொழுது தம்பியும் தங்கையுமே உறவாக உள்ளனர்.

மேலும் படிக்க  ஜோதா – அக்பர் காதல் கதை - தமிழில்
சாஹிராவின் ஏமாற்றம்:

அவர்களை நன்றாகப் படிக்க வைத்தாள் சாஹிரா. அவளின் தம்பி படித்து முடித்துவிட்டு வேலைக்குச் செல்லும் நிலையில் இருக்கும் பொழுது அவன் விரும்பிய பெண்ணுடன் சென்று திருமணம் செய்து கொண்டான்.

சாஹிரா, தம்பி சென்றால் என்ன நமக்கு நம்முடைய தங்கை இருக்கிறாள் என்று மனதை தேத்திக் கொண்டிருந்தாள்.

ஆனால் அவளின் தம்பி திருமணம் செய்து கொண்ட ஒரு மாதத்தில் அவளின் தங்கையும் தன் காதலனுடன் திருமணம் செய்து கொண்டாள்.

இப்பொழுது சாஹிரா தனிமரமாய் நிற்கிறாள் அவளுக்கென்று யாரும் இல்லாமல் ஒரு அனாதையாக வாழ்கிறாள்.

கண்ட ஆண்களும் அவளின் வீட்டிற்கு வந்து தொந்தரவு செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

sahira

You have been blocked from seeing ads.

அவள் மனதில் தனிமை என்ற உணர்வும் இந்த சமுதாயத்தில் ஒரு பெண் தனியாக வாழ்வது ரொம்ப கஷ்டம் என்று உணர்ந்தாள்.

நாளுக்கு நாள் அவளின் வாழ்வு இருட்டாக மாறிக் கொண்டே போகிறதே என்ற உணர்வு அவளுக்குள் வளரத் தொடங்கியது.

தன் குடும்பத்திற்காகத் தானே நான் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தேன் இன்று என் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று வருந்திக் கொண்டிருந்தாள்.

ஒருநாள் ஏதேச்சையாக அவளின் கல்லூரித் தோழியை சந்தித்தாள்.

அவளின் வீட்டிற்கு வரும்படி சொல்லியிருந்தாள் சாஹிராவும் அவளை சந்திப்பதற்கு செல்கிறாள்.

அங்கு அஜ்மலும் வந்திருந்தான், ஆனால் அஜ்மலுக்கும் திருமணம் ஆகவில்லை சாஹிராவிற்காவே காத்துக் கொண்டிருந்தான்  10 வருடங்களாக.

பின்பு சாஹிராவை தன் உறவுக்காரர்களின் முன்னிலையில் கோலகாலமாக திருமணம் செய்து கொண்டான்..

இருட்டாய் இருந்த சாஹிராவின் வாழ்வில் தீப ஒளியாய் வந்தான் அவளின் காதலன் அஜ்மல்.

உயிருக்கு கொடுத்த இறுதிப் பரிசு

You have been blocked from seeing ads.