You have been blocked from seeing ads.

சலீம் – அனார்கலி காதல் கதை – தமிழில்

சலீம் பிறப்பு:

சலீம் முகலாய பேரசர்களில் சிறந்து விளங்கிய அக்பர் மற்றும் ஜோதாவின் மகன் ஆவார்.

அக்பருக்கு 3 மனைவிகளும் 5 மகன்களும் இருந்தனர்.

அக்பரின் மற்ற மகன்கள் அனைவரும் போர்க் கலைகளை கற்காமல் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தனர்.

அக்பரின் மூன்றாவது மகனான சலீம் மட்டுமே சிறுவயது முதலே வீரமாகவும் விவேகமாகவும் இருந்தான்.

அதனால் தனக்குப் பிறகு சலீம் தான் இந்த முகலாய பேரரசை ஆட்சி செய்ய வேண்டும் என்று எண்ணினார்.

மற்ற மகன்களால் இந்த பரந்து விரிந்த முகலாய சாம்ராஜ்யத்தை கட்டுக்குள் கொண்டு வர இயலாது என்றும் அவருக்கு தோன்றியது

ஜோதாவும் அக்பரும் சலீம் மேல் அதிக அன்பை செலுத்தினார்கள், அதனால் சலீம் சிறுவயதிலே அடம்பிடிக்கும் குணம் கொண்டவனாக வளர்ந்தான்.

சிறுவயதிலே சலீம் அனைத்து கலைகளையும் கற்றான், அவன்  குட்டி அக்பராகவே விளங்கினான்.

அவனை அரண்மனையில் அனைவரும் குட்டி மகாராஜா என்றே அழைப்பார்கள்.

சலீம் தன்னுடைய வாலிப வயதை எட்டும் வரையிலும் முறையான போர்ப்பயிற்ச்சிகளைக் கற்றான்.

அக்பர் அடுத்த அரசன் சலீம் தான் என்று அறிவிப்பதற்கு ஒரு விழாவை ஏற்ப்பாடு செய்திருந்தார்.

அந்த விழாவில் அறுசுவை உணவுகளும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் நடந்து கொண்டிருந்தது.

அனார்கலி நடனம்:

இறுதியில் தான் அனார்கலியின் நடனம், அனார்கலியின் நடனத்தை பார்ப்பத்ற்காக அனைத்து மக்களும் காத்துக் கொண்டிருந்தனர்.

அனார்கலி தேவலோகத்தில் வாழும் பெண்களைப் போல் ஆடைகளை உடுத்தி ஒரு தேவதைப் போலவே காட்சியளித்தாள்.

அனார்கலி தன் காந்தக் குரலால் ஒரு பாடலை பாடிக் கொண்டே நடனத்தை ஆடினாள்.

அந்த அரங்கில் இருந்த ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் அவளின் அழகிலும் நடனத்திலும் மயங்கிப் போனார்கள்.

வாலிப வயதில் இருந்த இளவரசன் சலீமும் அனார்கலியின் அழகில் மயங்கித்தான் போனான்.

அனார்கலி அக்பரின் அரண்மனையில் நடனம் ஆடும் மங்கை ஆவாள், அவளுடைய பெற்றோர்கள் சிறுவயதிலே இறந்து விட்டதால் அவளின் உறவுக்காரர்கள் அக்பரின் அரண்மனையில் சேர்த்தனர்.

அனார்கலியின் உண்மையான பெயர் நாதிரா பேகம் அல்லது ஜெனிபுன்னிசா என்பது தான்.

அவளின் நடனத்தைக் கண்டு வியந்து அக்பர் அவளுக்கு அனார்கலி என்று பெயர் சூட்டினார். (அனார்கலி – மாதுளை மொட்டு)

சலீமின் காதல்:

அனார்கலியின் மீது சலீமிற்கு காதல் வரத் தொடங்கியது, சலீம் அனார்கலியின் அந்தப்புரத்திற்கு நுழைந்து தன் காதலை வெளிப்படுத்தினான்.

அனார்கலி சலீமின் காதலை ஏற்கவில்லை, ஆனால் சலீம் அனார்கலியை விடாமல் தொந்தரவு செய்து கொண்டிருந்தான்.

உங்களின் காதலை நான் ஏற்றால் எனக்குத் தான் ஆபத்து வரும், அதோடு மட்டுமல்லாமல் இந்த நாட்டை ஆட்சி செய்யப் போகும் ஒரு மன்னர் என்னைப் போன்ற நடன மங்கையை திருமணம் செய்து கொண்டால் ஆட்சி புரியும் தகுதியை இழந்தவராவர் என்று கூறினாள்.

மேலும் படிக்க  காலம் உள்ளவரை காத்திருந்தான்

சலீம்

You have been blocked from seeing ads.

எனக்கு உன்னைத் தவிர வேற எதுவும் தேவையில்லை, நீ எனக்கு கிடைத்தால் மட்டும் போதும் என்று பதிலளித்தான்.

அவன் என்ன சொல்லியும் அனார்கலி அவன் காதலை ஏற்கவில்லை, சலீமின் மீது அனார்கலிக்கும் காதல் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை, எப்படியும் சலீமை நாம் திருமணம் செய்து கொள்ள முடியாது பிறகு எதற்கு அவனின் காதலை ஏற்க வேண்டும் என்று நினைத்தாள்.

சலீம் ஒரு நாள் எப்பொழுதும் போல தன் காதலை சொன்னான் அவள் மறுப்பை தெரிவித்தாள், உடனே அருகில் இருந்த வாளை எடுத்து தன் கையில் அருத்துக் கொண்டான்.

அதைக் கண்டதும் அனார்கலி பதறிப்போனாள், அவனின் கைகளுக்கு கட்டுகள் போட்டு அப்படியே அவனை அணைத்துக் கொண்டாள்.

பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்துக் கொண்டிருந்தனர், இவர்களின் காதல் அரண்மனையில் உள்ளவர்களுக்கும் காட்டுத்தீ போல பரவத் தொடங்கியது.

அக்பர் அவர்களின் காதலை ஏற்க முன்வந்தாலும் முகலாய ஆட்சியில் ஒரு நடன மங்கையை மணந்தவன் நாட்டை ஆளும் தகுதி இல்லாவதன் என்ற வழக்கம் இருந்து கொண்டிருந்தது.

அக்பரின் செயல்:

இதனால் அக்பர் அனார்கலியை அழைத்து நீங்கள் பிரிந்து விடுவதே நல்லது, சலீமை இனிமேல் நீ தனியாக சந்திக்கக் கூடாது மீறி சந்திதால் உன்னுடைய உயிரை நீ இழக்கக் கூட நேரிடலாம் என்று மிரட்டினார்.

சலீம் அக்பரிடம் நான் அனார்கலியை மறக்க முடியாது, எனக்கு இந்த ஆட்சிப் பொறுப்பை விட அவள் தான் முக்கியம் என்று கூறியதும் அக்பர் அந்த ஒரு நொடி அதிர்ந்து போனார்.

சலீமை தவிர மற்ற மகன்களுக்கு நாட்டை ஆட்சி செய்யும் தகுதி இல்லை, தனக்குப் பிறகு இந்த முகலாய ஆட்சி முடிவுக்கு வரப்போகிறதோ என்று பயந்தார் அக்பர்.

நன்கு யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார் அக்பர், அனார்கலியை நாடு கடத்த வேண்டும், அப்பொழுது தான் சலீம் ஒழுங்காக இருப்பான் என்று நினைத்தார்.

தன் படைவீரர்களைக் கொண்டு இரகசியமாக அனார்கலியை நாடு கடத்தினார் அக்பர்.

ஆனால் இந்தச் செய்தியை சலீமும் அனார்கலியின் தோழியின் மூலம் அறிந்தான், தனக்கு தெரிந்த நண்பர்களின் மூலம் அனார்கலியின் இருப்பிடத்தை அறிந்தான் சலீம்.

அனார்கலியை ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்திருந்தான், இதனால் அக்பர் சலீமின் மீது மிகுந்த கோபம் அடைந்தார்.

சலீம் அவனின் நண்பர்களின் உதவியுடன் அக்பரின் மீதே போர் புரிந்தனர், ஆனால் அவர்கள் தோல்வியைச் சந்தித்தினர், இதனால் அக்பர் சலீமை சிறையில் அடைத்தார்.

ஆனால் அனார்கலியை கண்டுபிடிக்க முடியவில்லை அக்பரால், இதனால் ஒரு அறிவிப்பை விடுத்தார், ராஜ துரோகியான அனார்கலி சரணடையவில்லை என்றால் சலீமிற்கு மரண தண்டனை வழங்கப்படும் என்று அறிவித்தார்.

மேலும் படிக்க  மாவீரன் நெப்பொலியன் வாழ்க்கை கதை

முகலாய அரசில் இளவரசனை காதலிப்பது ராஜ துரோகமாக கருதப்பட்டது.

அனார்கலியின் இறப்பு:

இதனால் அனார்கலி அக்பரின் அரண்மனைக்கு விரைந்து வந்தாள், நான் சலீமை கடைசியாக ஒருமுறை பார்த்து விடுகிறேன் அதன் பிறகு எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள் என்றாள்.

சலீமும் அனார்கலியும் சந்தித்தனர், இருவரும் கண்ணீர் வடித்தனர், பின்னர் நேரம் ஆகிவிட்டது என்று இருவரையும் வீரர்கள் அழைத்துச் சென்றனர்.

அனார்கலியை அழைத்துச் சென்று ஒரு குழிக்குள் இறக்கி அவளைச் சுற்றி செங்கல்லால் மூடினர் வீரர்கள்.

ஒவ்வொரு கல்லும் வைத்து பூசும் பொழுதும் கண்களை இறுக மூடி சலீமிடம் இருந்த நேரத்தையே நினைத்துக் கொண்டிருந்தாள்.

அவள் கடைசி கல்லை வைத்து பூசும் பொழுது இது மாதிரியான தண்டனையை வேறு யாருக்கும் இனி கொடுக்காதீர்கள் என்று சொல்லிக் கொண்டே கண்ணை மூடினாள்.

சலீமிற்கு 3 நாட்கள் கழித்து தான் அனார்கலியின் மரணச் செய்தி கிடைத்தது, அவன் அவளின் கல்லறையின் அருகில் வந்து கதறினான், அழுது கொண்டே அவள் கல்லறையின் சுவரை அணைத்துக் கொண்டான்.

லைலா – மஜ்னு காதல் கதை
You have been blocked from seeing ads.

1 thought on “சலீம் – அனார்கலி காதல் கதை – தமிழில்”

Comments are closed.