You have been blocked from seeing ads.

ரத்தன் நாவல் டாடா கதை – தமிழில்

ரத்தன் பிறப்பு:

ரத்தன் டாடா 1937 லில் நாவல் டாடாவிற்கும் சோனு டாடாவிற்கும் மகனாகப் பிறந்தார்.

இவரின்  தந்தை நாவல் டாடா மற்ற டாடாக்களைப் போல் ஒரு பணக்காரர் இல்லை.

சிறுவயதிலே தன் தந்தையை இழந்ததால் அனாதை ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டார்.

ரத்தன் டாடா – நவாஜ்பாய் டாடா தம்பதியினருக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை.

ரத்தன் டாடா யார்யென்றால் டாடா நிறுவனத்தை தோற்றுவித்தவரான ஜாம்ஜெட்ஷி டாடாவின் மகன் ஆவார்.

திடீரென்று உடல் நலக்குறைவால் ரத்தன் டாடா இறந்து விட்டார், அவருக்கு கொல்லி வைப்பதற்கு கூட மகன் இல்லை.

இதனால் தனக்கு ஒரு வளர்ப்பு மகனை தத்து எடுக்க முடிவு செய்தார் நவாஜ்பாய் டாடா.

பின்பு தனது தூரத்து உறவுக்கார 12 வயது சிறுவனான நாவல் டாடாவை வளர்ப்பு மகனாக தந்து எடுத்து வளர்தார்.

நாவல் டாடாவிற்கும் சோனு டாடாவை திருமணம் செய்து வைத்தார் நவாஜ்பாய்.

அவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது, அதற்கு தன் கணவன் பெயரான ரத்தன் என்னும் பெயரை வைத்தார் நவாஜ்பாய்.

நாவல் டாடாவும் சோனு டாடாவும் திருமணம் ஆனதிலிருந்து சண்டை மட்டுமே அதிகமாக போட்டுக் கொண்டிருப்பார்கள்.

இதனைப் பார்த்து அதிக மனவேதனைக்கு ஆளாகுவார் ரத்தன்.

ஒருகட்டத்தில் நாவல் டாடாவும் சோனு டாடாவும் முழுமையாகவே பிரிந்து சென்று விட்டனர்.

அதனால் ரத்தன் டாடா தன் பாட்டியான நவாஜ்பாயிடம் வளர்ந்தார்.

அமெரிக்காவில் ரத்தன்:

ரத்தன் டாடா வளர்ந்த பின்பு மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார், அவருக்கு கட்டடக்கலை படிக்கவே விருப்பம் ஆனால் அவரின் தந்தை மெக்கானிக்கல் இஞ்சினியரிங்க் படிக்க ஆணையிட்டார்.

ரத்தனும் சில நாட்கள் மெக்கானிக்கல் இஞ்சினியரிங்க் பிரிவில் சேர்ந்து படித்தார், பின்பு தன் பாட்டியின் அனுமதியுடன் கட்டடக்கலை பிரிவில் சேர்ந்து படித்தார்.

ரத்தனுக்கு பணக்காரனாக வாழவே பிடிக்காது, சாதாரண மனிதனைப் போல் வாழவே நினைப்பார்.

இந்தியாவில் அவர் பள்ளிக்குச் சென்றால் கூட காரில் தான் செல்வார், தன்னைச் சுற்றி நான்கு பாதுகாவலர்கள் எப்பொழுதும் இருப்பார்கள்.

பணத்தின் நிழலில் வாழ்வது அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை, அமெரிக்காவில் அவர் ஒரு சாதரண மனிதனாக வாழ்ந்தார்.

இந்தியாவில் இருந்து குறிப்பிட்ட பணத்தையே அமெரிக்காவிற்கு கொண்டு செல்ல முடியும்.

பணம் காலியான பிறகு அவர்கள் வேலை செய்து சாப்பிட வேண்டும்.

ரத்தனும் கொண்டு சென்ற பணம் தீர்ந்த பிறகு ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து தன்னுடைய செலவை செய்தார்.

ஆனால் ரத்தனுக்கு இந்த வாழ்க்கை ரொம்ப பிடித்திருந்தது, தன்னுடைய சொந்த உழைப்பில் சாப்பிட..

மேலும் படிக்க  விடியலை நோக்கி காத்திருந்தாள்

ரத்தன்

You have been blocked from seeing ads.
அவர் மீண்டும் இந்தியாவிற்கே செல்லக் கூடாது அமெரிக்காவிலே இருந்து விடலாம் என்று நினைத்தார்.

ஆனால் ரத்தனின் பாட்டியான நவாஜ்பாய் உடல்நிலை சரியில்லை என்று கூறி இந்தியா வரவழைக்கப்பட்டார் ரத்தன்.

பாட்டியின் உடல்நிலை சிறிதுநாளில் சரியானதும் மறுபடியும் அமெரிக்காவிற்கே சென்றார்.

அங்கு அவருக்கு நல்ல சம்பளத்தில் ஒரு வேலை கிடைத்தது. அதனால் அங்கே தங்கிவிடலாம் என்று முடிவு செய்தார்.

ஆனால் மறுபடியும் தனது ஆருயிரான பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை என்று போன் வந்ததும் விரைந்து இந்தியா வந்தார், தன் பாட்டியின் வேண்டுகோளால் இந்தியாவிலே தங்கினார்.

ஒரு மாதகாலத்திலே நவாஜ்பாய் இறந்து போனார், அதனால் மறுபடியும் அமெரிக்காவுக்கே செல்லலாம் என்று முடிவு செய்தார் ரத்தன்.

அப்பொழுது டாடாவின் சேர்மனான ஜே.ஆர்.டி டாடா ரத்தனை டாடா நிறுவனத்திலே பணிபுரியச் சொன்னார்.

டாடா நிறுவனத்தில் ரத்தன்:

ரத்தனும் டாடா மோட்டர் நிறுவனத்தில் அடித்தள வேலையைச் செய்தார், இயந்திரத்தை ஆப்ரேட்டர் செய்யும் பணியினைச் செய்தார்.

இதே போல தான் ஜே.ஆர்.டி டாடாவும் அடித்தளத்தில் இருந்து தொழிலைக் கற்றார்.

ஜே.ஆர்.டி டாடா ரத்தன் டாடாவின் செயல்களை கவனித்துக் கொண்டிருந்தார்.

அவரின் துருதுருப்பான செயல்களும் முற்போக்கு தொழில் சிந்தனைகளும் ஜே.ஆர்.டி டாடாவை கவர்ந்தது.

அதனால் ரத்தன் டாடாவை நெல்கோ நிறுவனத்தின் தலைவராக நியமித்தார்.

நெல்கோ நிறுவனத்தில் தன்னால் முடிந்தவரை புதிய யுக்திகளை பயன்படுத்தி அந்த நிறுவனம் வளர்ச்சி பெற தன் உழைப்பைப் போட்டுக்கொண்டே இருந்தார் ரத்தன்.

ஆனால் அதிக லாபம் கொண்டுவர முடியவில்லை.

பின்பு ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்திற்கு தலைவராக நியமிக்கப்பட்டார் ரத்தன்.

அதிலும் தன்னால் முடிந்தவரை அதிக உழைப்பை போட்டார், ஆனால் அதிலும் அதிக லாபம் கிடைக்கவில்லை.

பின்பு டாடாவின் மேலதிகாரிகள் அந்த டெக்ஸ்டைல் நிறுவனத்தை மூட முடிவு செய்தனர்.

இதனை தடுக்க முயற்சி செய்தார் ரத்தன் ஆனால் யாரும் காதில் கூட கேட்கவில்லை.

அந்த ஆலையில் வேலைசெய்த ஆயிரக்கணக்கான ஊழியர்களின் நிலையைக் கண்டு வருந்தினார்.

பின்பு தனக்கு போனஸாக கொடுத்த பணத்தை அந்த ஊழியர்களிடமே கொடுத்து விட்டார்.

அப்பொழுது டாடா மோட்டஸின் சேர்மன் ஓய்வு பெறும் வயதை எய்தினார், அதனால் ஜே.ஆர்.டி டாடா ரத்தனை டாடா மோட்டர்ஸின் தலைவராக நியமித்தார்.

டாடா மோட்டர்ஸின் தலைவராக ரத்தன் இருப்பது அந்த நிறுவனத்தின் மூத்த தலைவர்களுக்கு பிடிக்கவில்லை.

வயதில் சிறியவனை போட்டதால் ரத்தன் சொல்லும் கருத்துகளை பொருட்படுத்தாமல் இருந்தனர்.

டாடா நிறுவனத்தின் சேர்மன்:

பின்பு டாடா குழுமத்தின் தலைவர் ஜே.ஆர்.டி டாடாவிற்கு 88 வயதை தாண்டியது.

மேலும் படிக்க  கற்கால மனிதனின் மூடநம்பிக்கை

அனைவரும் அடுத்து தலைவர் யார் என்று பேச ஆரம்பித்தனர், ஜே.ஆர்.டி டாடாவிற்கு யாரை நியமிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

பின்பு 1991 ஆம் ஆண்டு மொத்த டாடா நிறுவனத்திற்கும் ரத்தன் டாடா சேர்மனாக நியமிக்கப்பட்டார்.

அதன் பின்பு ரத்தன்  தன் சொந்த நாட்டிலே கார் தயாரிக்கும் பணியில் இறங்கினார்.

அதனை அனைவரும் தடுத்தனர், ஆனால் யார் பேச்சையும் கேட்காமல் 30 வயது  பொறியியல் இளைஞர்களைக் கொண்டு கார் வடிவமைப்பதில் வெற்றி கண்டார்.

இந்தியாவில் முதன் முதலில் தயாரித்த கார் டாடா இண்டிகா.

பின்பு நானோ காரையும் மிகக் குறைந்த விலையில் தயாரித்தார்,

பின்பு உலக சந்தையில் உள்ள கம்பெனிகளையும் டாடா நிறுவனத்துடன் இணைத்து அதிக லாபத்தை ஈட்டினார்.

முதலில் இவரை மதிக்காத மூத்த தலைவர்கள் இவரின் இந்த செயல்களால் வாயடைத்துப் போயின.

ரத்தன்  21 ஆண்டு டாடா குழுமத்தின் சேர்மனாக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

அப்துல்கலாம் சொல்லும் கதை
You have been blocked from seeing ads.