பிக்பாஸ் பிரியங்கா தேஸ்பாண்டா வாழ்க்கை கதை

பிறப்பு:

பிரியங்கா தேஸ்பாண்டே கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹுபாலி என்னும் இடத்தில் 28 ஏப்ரல், 1990 ஆம் ஆண்டு தேஸ்பாண்டே என்பவருக்கும் சுனிதா என்பவருக்கும் மகளாகப் பிறந்தார்.

பிரியங்கா கர்நாடகாவில் பிறந்து இருந்தாலும் இவர்களது பூர்விகம் ஆந்திரப் பிரதேசம் ஆகும்.

இவருக்கு தற்போதைய வயது 31 ஆகும்.

“    பிரியங்காவிற்கு ரோகித் என்ற தம்பி இருக்கிறான்.

பிரியங்காவின் செல்லப் பெயர் சின்னா ஆகும்.

இவர் தன்னுடைய பள்ளிப்படிப்பை ஹுபாலியில் உள்ள அந்தோணியா பள்ளியில் முடித்துள்ளார்.

தன்னுடைய கல்லூரிப் படிப்பை சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் விஸ்காம் படித்துள்ளார்.

இவருக்கு 11 வயது ஆகும் பொழுது இவரது தந்தை இறந்து விட்டார், அப்பொழுது அவரது தம்பிக்கு 9 வயது நடந்தது.

இவரது தாயாரான சுனிதா தேஸ்பாண்டே ஒரு சிவில் இஞ்சினியர் ஆகும்.

பிரியங்காவின் அம்மா சுனிதா தேஸ்பாண்டே பிரியங்கா பள்ளிப் படிப்பை முடித்தவுடன் தன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு சென்னை வந்து விட்டார்.

சுனிதா பொறியியல் பட்டதாரி என்பதால் சென்னையில் வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றினார்.

இவரது தந்தை இறக்கும் பொழுது அவருக்கு வயது 36, இவரது தாய்க்கு 34 ஆகும்.

சுனிதா தேஸ்பாண்டே மறுதிருமணம் செய்யாமல் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் நன்றாக படிக்க வைத்தார்.

பிரியங்காவிற்க்கு சிறுவயதிலிருந்தே ஏரோசஸ் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது, அதனால் எதாவது ஒரு டிகிரி படிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் விஸ்காம் படித்தார்.

பிரியங்காவின் வாழ்க்கை:

இவர் விஸ்காம் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் பொழுதே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அழகிய பெண்களே என்னும் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார்.

அப்பொழுது அந்த வேலைக்கு அவர் வாங்கிய முதல் சம்பளம் 5000 ஆகும்.

இவர் படித்து முடித்து விட்டு ஐபியலில் புரொமோட்டராக வேலை பார்த்தார்.

பிரியங்கா சன் டிவி, சுட்டி டிவி மற்றும் விஜய் தொலைக்காட்சியிலும் தொகுப்பாளராக பணியாற்றிருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் இவரை அறிமுகம் செய்தது அதே தொலைகாட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய ம.க.ப. ஆனந்த் ஆவார்.

பிரியங்கா மார்ச் 2013 இல் இருந்து விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார்.

இவர் தொகுத்து வழங்கிய சூப்பர் சிங்கர் நிகழ்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு அனைவருக்கும் பிரபலமாகிப் போனார்.

அந்த நிகழ்ச்சியில் பிரியாங்காவின் நகைச்சுவையான பேச்சிற்கு ஒரு ரசிகர் பட்டாளமாகவே இருக்கிறது.

இவர் அதே விஜய் டிவியில் சூப்பர் சிங்கரின் அசிஸ்டெண்ட் டைரக்டரான பிரவீன் என்பவரை காதலித்து கடந்த 2016 ஆம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

மேலும் படிக்க  பிக்பாஸ் அக்ஷரா ரெட்டி வாழ்க்கை கதை

பிரியங்கா

இவருடைய தம்பியான ரோகித் தேஸ்பாண்டேவும் இன்ஞ்சினியங்க் முடித்து விட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

பிரியங்கா தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்சியில் கலந்து உள்ளார்.

இவர் சூப்பர் சிங்கர் ஜூனியர், கிங்க்ஸ் ஆப் காமெடி ஜூனியர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

கலக்கப் போவது யாரு என்ற நிகழ்ச்சியில் ஜட்சாகா இருந்து உள்ளார்.

இவர் விஜய் தொலைக்காட்சிக்கு வந்த பிறகு எம்.பி.ஏ கரசில் முடித்துள்ளார்.

பிரியங்கா சிறந்த பெண் தொகுப்பாளர் என்ற விருதையும் பெற்றிருக்கிறார்.

பிக்பாஸ் அக்ஷரா ரெட்டி வாழ்க்கை கதை