You have been blocked from seeing ads.

பகவான் பரசுராமர் வாழ்க்கை கதை

பரசுராமரின் பிறப்பு:

பரசுராம் விஷ்ணு பகவானின் ஆறாவது அவதாரம் ஆகும்.

ரிசிக முனிவர் காதி மன்னனின் மகளான சத்தியவதியை திருமணம் செய்ய ஆசைப்பட்டு அவரிடம் பெண் கேட்டார்.

செல்வ செழிப்புடன் வாழ்ந்த தம் பெண்ணை ஒரு முனிவருக்கு கொடுக்க மனம் இல்லாததால் ரிசிக முனிவரிடம் நான் கன்னிகா தானம் செய்ய வேண்டுமென்றால் நீங்கள் 1000 தெய்வ அம்சம் பொருந்திய குதிரைகளை கொண்டு வர வேண்டும், அதன் காது பச்சை நிறத்திலும் மற்ற பாகங்கள் அனைத்தும் வெள்ளை நிறத்திலும் இருக்க வேண்டும் என்றார் காதி.

முனிவரும் காதி அரசன் சொன்ன பச்சை நிற காதுகளை உடைய குதிரைகள அனைத்து இடங்களிலும் தேடிப்பார்த்தார், ஆனால் கிடைக்கவில்லை.

பின்னர் வருண பகவானிடம் வேண்டினார், வருண பகவான் அருளால் அவருக்கு 1000 தெய்வ அம்சம் பொருந்தியத குதரைகள் கிடைத்தது.

பின்னர் காதி அரசனிடம் குதிரைகளை கொடுத்து விட்டு சத்தியவதியை திருமணம் செய்து கொண்டார்.

ரிசிக முனிவருக்கும் சத்தியவதிக்கும் திருமணம் ஆகி பல வருடம் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்தது.

காதி மன்னருக்கும் நாட்டை ஆட்சி செய்வதற்கு ஒரு ஆண் குழந்தை இல்லாமல் இருந்தது.

இதனால் சத்தியவதி தன் கணவனான ரிசிக முனிவரிடம் தனக்கும் தன் தாயாருக்கும் புத்திர பாக்யம் பெற வரம் தாருங்கள் என்று வேண்டினாள்.

ரிசிக முனிவர் தன் தவ வலிமையால் சத்தியதிக்கு அந்தண குணம் உள்ள குழந்தையும் அவளின் தாயாருக்கு சத்திரிய குணம் உள்ள குழந்தையும் பிறக்க வேண்டும் என்று மந்திரத்தை சொல்லி அந்த உணவை இரு பங்காய் பிரித்து வைத்து விட்டு இருவரும் சாப்பிட்டுங்கள் என்று சொல்லி  குளிக்கச் சென்று விட்டார்.

அப்பொழுது சத்தியவதியும் அவளின் தாயும் உணவை மாற்றி உண்டு விட்டனர்.

இதையறிந்த ரிசிக முனிவர் பதறிப் போனார், இதனால் சத்தியவதியின் தாயாருக்கு விஸ்வாமித்திரர் மகனாகப் பிறந்தார்,

அவர் சத்திரியனாக இருந்தாலும் அந்தண குணத்துடன் பிறந்தார்.

அவர் சிறிது காலம் ஆட்சி செய்து விட்டு பின்பு தவ வாழ்க்கையை நோக்கி சென்று விட்டார்.

சத்தியவதிக்கி மகனாகப் பிறந்தவர் தான் சமதக்கனி முனிவர்.

சமத்கனி தன் தந்தையிடமிருந்து அனைத்து கலைகளையும் பெற்றார்.

பின்னர் சமத்கனிக்கு ரேணுகா தேவி என்ற பெண்ணை திருமணம் முடித்து வைத்தனர்.

இவர்கள் இருவருக்கும் 5 ஆண் குழந்தைகள் பிறந்தது.

சமத்கனி முனிவருக்கும் ரேணுகா தேவிக்கும் ஐந்தாவது மகனாகப் பிறந்தவர் தான் பரசுராமர்.

இவருக்கு ராமன் என்றே பெயரிட்டனர் இவர்கள் பெற்றோர்கள், இவரின் தவ வலிமையால் சிவனிடமிருந்து பரசை பெற்றதால் இவருக்கு பரசுராமர் என்ற பெயர் வந்தது.

மேலும் படிக்க  காமராஜர் சிறுவயது கதை - தமிழில்

பரசு என்றால் கோடாரி என்ற பொருள். இந்தக் கோடாரியைக் கொண்டு தான் 21 தலைமுறை சத்திரிய வம்சத்தை அளித்தார்.

 சமத்கனி முனிவரின் ஆணை:

ரேணுகா தேவி பதிவிரதையாக வாழ்ந்து வந்தாள், அவள் எப்பொழுதும் பச்சை மண்ணால் பானை செய்து அதில் நீர் எடுத்து வந்து சாமிக்கி பூஜை செய்வாள்.

ஒருநாள் வானில் சென்ற கந்தவர்வன் ஒருவனைப் பார்த்து, இந்த கந்தவர்கள் மட்டும் ஏன் இப்படி அழகாக இருக்கிறார்கள் என்று நினைத்தாள்.

இதனால் அவளால் பச்சை மண்ணால் பானை செய்ய முடியவில்லை, அவள் பானை செய்ய செய்ய உடைந்து போகிறது.

நேரம் ஆகியும் ரேணுகா வராததால் சமத்கனி முனிவர் தன்னுடைய ஞான திருஷ்டியால் நடந்ததை அறிகிறார்.

இதனால் கடும்கோபமுற்று தன்னுடைய 4 மகன்களையும் அழைத்து ரேணுகாதேவியின் தலையை வெட்டுமாறு ஆணையிடுக்கிறார்.

ஆனால் யாரும் அதை ஏற்கவில்லை, இதனால் தன்னுடைய நான்கு மகன்களுக்கும் சடம் ஆகுங்கள் என்று சாபம் அளிக்கிறார்.

தன்னுடைய ஐந்தாவது மகனான பரசுராமனை அழைத்து உன் தாயின் தலையை வெட்டுமாறு ஆணையிட்டார்.

பரசு மறுவார்த்தை பேசாமல் தன் தாயின் தலையை துண்டித்தார், இதனால் மனம் மகிழ்ச்சி அடைந்த சமத்கனி முனிவர் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார் பரசுவிடம்.

என் தாயும் சகோதரர்களும் மீண்டும் உயிர்பிக்க வேண்டும் மேலும் என் தாயை நான் தான் கொன்றேன் என்ற எண்ணம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று வரம் கேட்டார்.

சமத்கனியும் அனைவரையும் உயிர்பிக்கச் செய்தார்.

கார்த்த வீரிய அர்ச்சுனன்:

ஒருநாள் கார்த்த வீரிய அர்ச்சுனன் என்ற மன்னன் காட்டிற்கு வேட்டையாட வரும் பொழுது பசி எடுத்தால் அருகில் இருந்த சமத்கனி முனிவரின் இல்லத்திற்கு வருகை வந்தார்.

அவர் சென்ற சிறிது நேரத்திலே வந்திருந்த அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

கார்த்த வீரியனுக்கு ஓரே ஆச்சர்யம் எப்படி இவ்வளவு குறுகிய நேரத்தில் இவ்வளவு உணவு சமைக்க முடியும் என்று.

சமத்கனி முனிவரிடமும் இந்த சந்தேகத்தைக் கேட்டார், அதற்கு முனிவர் என்னிடம் கேட்டதைக் கொடுக்கும் காமதேனு பசு உள்ளது, அதனால் தான் இவ்வளவு சீக்கிரம் உணவு கொடுக்க முடிந்தது என்றார்.

பரசுராமர்

You have been blocked from seeing ads.

இந்தப் பசுவை என்னிடம் தாருங்கள் என்றான் கார்த்த வீரியன், ஆனால் முனிவரோ தர மறுத்து விட்டார்.

இதனால் பசுவை தன்னுடைய நாட்டிற்கு இழுத்துச் சென்று விட்டான் கார்த்த வீரியன்.

இதை அறிந்த பரசுராமர் கார்த்த வீரியன் நாட்டிற்குச் சென்று அவனை கொன்று விட்டு பசுவை அழைத்து வந்தார்.

இதனால் கோபம் கொண்ட கார்த்த வீரியன் மகன்கள் பரசுராமர் காட்டிற்கு சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த சமத்கனி முனிவரின் தலையை வெட்டி எடுத்து சென்றனர்.

மேலும் படிக்க  THIPPU SULTAN RENGANHAYAGI LOVE STORY IN TAMIL

வீட்டிற்கு வந்து நடந்ததை அறிந்த பரசு, கார்த்த வீரியன் மகன்களை கொன்று தன் தந்தையின் தலையை எடுத்து வந்து இறுதிச் சடங்கு செய்தார்.

ரேணுகா தேவி சமத்கனி முனிவரின் உடலைப் பார்த்து 21 முறை நெஞ்சில் அடித்து அழுததால் தான் பரசுராமர் 21 தலைமுறை சத்திரியர்களை அழித்தார்.

பரசுராம் இன்றும் மகேந்திர பருவதத்தில் வாழ்ந்து வருகிறார் என்று கூறுகிறார்கள்.

பீமன் வாழ்க்கை கதை – மகாபாரதக் கிளைக்கதை
You have been blocked from seeing ads.