You have been blocked from seeing ads.

ஒன்றும் கொண்டு செல்லப் போவதில்லை

ஐயாதுரை குணம்:

பனையூர் என்னும் கிராமத்தில் ஐயாதுரை என்னும் முதியவர் வாழ்ந்து வந்தார்.

இவருக்கு 20 ஏக்கரில் தோட்டங்கள் இருந்தனர்.

இவருக்கு ஒரே ஒரு மகன் மட்டும் தான், இவருடைய மனைவி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் இறந்து போனார்கள்.

ஐயாதுரை மகா கஞ்சன், யாருக்கும் ஒரு பொருள் கொடுக்க மனசு வராது.

தன் மகனையே அதிகம் படிக்க வைத்தால் பணம் செலவு ஆகிடும் என்று நினைத்து பள்ளிப் படிப்போடு நிறுத்தி விட்டார்.

மனைவி, மகன் ஆசைப்பட்ட பொருள்களை கூட வாங்கி கொடுக்க மாட்டார், ஏன் அவரே நல்லது கெட்டதை வாங்கி சாப்பிட மாட்டார்.

பணம் குறைந்து விடும் என்று நினைப்பார்.

ஐயாதுரை செயல்:

ஒரு தடவை தன்னுடைய தோட்டத்தில் வேலை செய்யும் பெண்ணின் மகனுக்கு டெங்கு காய்சல் வந்திருந்தது, மருத்துவச் செலவுக்காக அந்தப் பெண் இவரிடம் ஒரு 3000 ரூபாய் கேட்டிருந்தால் கடனாக.

அவளின் நிலை அறிந்தும் பணம் இல்லை 200 ரூபாய் தான் இருக்கு, நீ வேறு யாரிடமுமாது பெற்று கொள் என்று சொல்லி விட்டார்.

அவளால் 3000 ரூபாய் கடனை திருப்பி அடைக்க முடியாது என்று நினைத்தார்.

அவளுடைய மகனும் சரியான மருந்து மாத்திரைகள் வாங்கி கொடுக்க முடியாததால் இறந்தும் போனான்.

அந்தப் பெண் ஐயாதுரையை பார்க்கும் பொழுது எல்லாம் கரிச்சு கொட்டிக்கொண்டு தான் இருந்தாள்.

அவள் மட்டும் இல்லை அந்த ஊர் மக்களே ஐயாதுரையை திட்டிக் கொண்டு தான் இருப்பார்கள்.

இவன் கடைசி காலத்துல பணத்தான் திங்கப்போறான் போல, அதான் இப்படி சொத்து சேத்து வைக்கிறான் என்று சாடை மாடையாக திட்டுவதை கேட்டும் கேக்காத மாறி வருவார் ஐயாதுரை.

ஐயாதுரையின் சாபம்:

அவர்களின் சாபமோ என்னவோ ஐயாதுரைக்கு திடீரென்று உடல் நிலை சரி இல்லாமல் போனது.

அவருடைய கைகளிலும் கால்களிலும் முதலில் லேசான கட்டிகள் வந்தது, அது அம்மையாக தான் இருக்கும் என்று வீட்டிலே 7 நாட்கள் முடங்கி கிடந்தார்.

பின்னர் அந்தக் கட்டிகள் எல்லாம் பெருசாகியது, உடல் முழுதவதும் பரவத் தொடங்கியது.

அவரை கவனித்துக் கொள்ள அவருடைய மனைவி கூட உயிரோடு இல்லை, அவருடைய மகனும் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு இரவு லேட்டாகத்தான் வருவான்.

ஐயாதுரை

You have been blocked from seeing ads.

அவருக்கு அந்த கட்டிகளில் இருந்து நீர் வடிய ஆரம்பித்து விட்டது, அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லக் கூட அவனுடைய மகன் முன் வரவில்லை.

காரணம் இவன் ஆசைப்படதை ஒன்று கூட செய்ததில்லை ஐயாதுரை.

மேலும் படிக்க  அமைச்சர் கக்கன் வாழ்க்கை வரலாறு

நாட்கள் போக போக ஐயாதுரையின் உடலில் உள்ள கட்டிகள் வெடித்து சலம் வைக்க தொடங்கியது, அது தொழுநோயாக மாறியது.

அவருடைய மகன் நீ இவ்வளவு நாட்களாக பணம் பணம் என்று பேய் மாதிரி தானே திரிந்தாய், இன்று இந்த பணத்தை வைத்து சாப்பிட்டுக் கொள் என்று ஒரு மூட்டை நிறைய பணத்தை எடுத்து வந்து கொட்டினான்.

ஐயாதுரை ஒழுங்காக சாப்பிட்டே பல நாட்கள் ஆகி இருந்தது, அவர் தலையில் துணியை போட்டுக் கொண்டு ஒரு உணவகத்திற்குள் நுழைந்தார்.

அவரின் உடலைப் பார்த்ததும் ஹோட்டல் ஊழியர்கள் அவரை விரட்டினர்.

அவர் கையில் அவ்வளவு பணம் இருந்தும் ஒருவாய் சோறு கூட கிடைக்கவில்லை.

நான் நிறைய பணம் வைத்திருக்கிறேன், உணவு கொடுங்கள் என்று கேட்டும், உன்னுடைய பணத்தை நாங்க தொட்டா உன்னுடைய நோய் தான் எங்களுக்கும் வரும், நீ இங்கிருந்து கிளம்பு என்று ஒரு பிச்சைக்காரரை நடத்துவதைப் போல் நடத்தினர்.

ஐயாதுரைக்கு அந்த ஊர் மக்கள் சாடை மாடையாக பேசியது அப்பொழுது தான் யாபகத்திற்கு வந்தது, இவன் கடைசி காலத்தில் பணத்தை தான் திங்கப் போறான் போல என்று.

என்னிடம் இவ்வளவு பணம் இருந்தும் பசியாறவில்லையே, இதற்கு தான் இதை நான் சேமித்து வைத்தேனா? என்று நினைத்து வருந்திக் கொண்டிருந்தார்.

நான் செய்த தவறுக்கு கடவுள் தக்க தண்டனை கொடுத்து விட்டார். பணம் மட்டும் வாழ்க்கை இல்லை, நான் சாகும் பொழுது ஒன்றையும் கொண்டு செல்ல போவதில்லை, இனிமேலும் இந்தப் பணம் நல்லதுகாக பயன்படட்டும் என்று நினைத்து, ஒரு கோயிலுக்குச் சென்று அங்கு அமர்த்திருக்கும் ஏழை எளியவருக்கும் பிச்சைக்காரருக்கும் தானம் அளிக்கிறார்.

அந்த ஏழையின் சிரிப்பில் கிடைத்த சந்தோஷத்தை அன்று தான் முதன் முதலில் காண்கிறார்.

இரண்டொரு நாட்களில் ஐயாதுரையும் இறந்து போகிறார், மனம் திருந்தி.

கருத்து:

நாம் சாகும் பொழுது ஒன்றையும் எடுத்துச் செல்லப் போவதில்லை என்று உணர்ந்தாலே போதும், மற்றவருக்கு உதவும் மனப்பான்மை தானாவே வந்து விடும்.

இறுதியில் மிஞ்சி இருப்பது ஒரு பிடி சாம்பல் மட்டுமே…… இருக்கும் பொழுதே அனைத்தையும் அனுபவித்து விட்டு செல்ல

வேண்டும்.

இருப்பது ஒரு வாழ்க்கை – வானதி கதை
You have been blocked from seeing ads.