MOTIVATIONAL STORY – ஆராய்ந்து செயல்பட வேண்டும்

எந்த ஒரு செயலையும் ஆராய்ந்து செயல் பட வேண்டும்:

நாம் அனைவரும் இறந்த பிறகு நம்முடைய பாவ புண்ணிய கணக்குகளை பார்பதற்கு எமலோகத்தில் சித்திரகுப்தன் இருக்கிறார். ஒருநாள் பார்வதி தேவி ஒரு ஓவியம் வரைகிறாள், அது அழகான சிறுவனைப் போல் இருக்கிறது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த சிவன் அந்த சித்திரத்திற்கு உயிர் கொடுக்கிறார். அந்த பாலகன் சித்திரத்தில் இருந்து உருவானதால் சித்திரகுப்தன் என்னும் பெயரும் சூட்டி எமலோகத்தில் பாவ புண்ணிய கணக்குகள் பார்க்கும் வேலையை கொடுக்கிறார். அன்றும் சித்திரகுப்தன் தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார், அப்போது ஒரே நாட்டைச் சேர்ந்த அரசன் மற்றும் மந்திரியின் கணக்குகள் வந்தது.

நாவலாபுரம் என்னும் நாட்டை ஆட்சி செய்தவர் தான் நாகேந்திரன் என்னும் அரசன். இவர் மிகவும் இரக்க குணமானவர். தன்னுடைய மக்களின் குறைகளை கண்டறிய ஒருநாள் மாறுவேடம் தறித்து சென்றார். அப்போது நகருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு சிறிய நிலத்தையும் அதன் அருகில் ஒரு குடிசையையும் கண்டு வியந்து போகிறார். அந்த சிறிய நிலத்திலும் அழகாக விவசாயம் பண்ணி இருக்கும் விதத்தைக் கண்டு. அப்போது அந்த குடிசையில் இருந்து ஒருவன் வெளியில் வருகிறான். அவனிடம் விசாரிக்கிறார் மன்னர். அவனுடைய பெயர் கண்ணதாசனும் அவனுக்கு அங்கு விவசாயம் செய்து கிடைக்கும் பணம் போதவில்லை என்றும் வேறு வேலையும் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறினான் அவன், இவரை ஒரு வழிப்போக்கன் என்று நினைத்து.   

      மறுநாள் காலை கண்ணதாசனுக்கு மன்னரிடம் இருந்து அழைப்பு வருகிறது. அங்கு சென்ற அவனுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அரசன் அவனுக்கு இந்த நாட்டின் அமைச்சர் பதவியில் நியமிருத்திருந்தார். அரசன் அவ்வாறு செய்யக் காரணம் அந்த சிறிய நிலத்திலே இவன் வளமையாக விவசாயம் செய்கிறான், இவன் அமைச்சர் ஆனால் நாடே செழிப்பாக இருக்கும் என்று கருதி இப்பதவியை வழங்கினார். கண்ணதாசனை மந்திரயாக நியமித்ததிலிருந்து அவனை நேரடியாக மக்களிடம் பேசி குறைகளை அறிந்து வரச் சொல்வார். அவன் மக்களிடம் பேசிவிட்டு நாட்டு மக்கள் அனைவரும் உங்கள் ஆட்சியில் எந்தக் குறையும் இல்லாமல் வளமோடு வாழ்கிறார்கள் என்றான். கண்ணதாசனின் பொருப்பில் பல ஆண்டுகள் போய்க் கொண்டிருந்தது, அவனே மக்களை நிர்வகித்து வந்தான். ஒருநாள் ஒரு கொல்லைக்கார கும்பலால் அரசனும் அமைச்சனும் சந்திரகுப்தனிடம் நிற்கிறார்கள்.

     பாவ புண்ணிய கணக்குகளைப் பார்த்து முடித்துவிட்டு சந்திரகுப்தன் இருவரையும் பார்த்து, உங்கள் இருவருக்கும் பாவக்கணக்குகளே அதிகமாக உள்ளது என்கிறார். இதைக் கேட்ட கண்ணதாசன் அதை ஒத்துக் கொள்வதைப் போல் தலையை குனிந்து கொள்கிறான். ஆனால் அரசனுக்கு ஒன்றும் புரியவில்லை ஏன் எனக்கு பாவம் அதிகம் என்கிறீர்கள் என்று கோவமாக கேட்கிறார் சித்திரகுப்தனிடம். பல ஆண்டுகளாக உன்னுடைய ஆட்சியில் மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், இதோ நீயே பார் என்கிறார். அதில் பல ஆண்டுகளாக கண்ணதாசன் மக்களிடம் அதிக வரிகளை வாங்கியும் தொல்லையும் கொடுத்து இருக்கிறான். மக்களின் கண்ணீரும் துயரும் மன்னரின் கணக்கில் எழுதப்பட்டிருக்கிறது. மன்னருக்கு மறுபடியும் கோவம் தாங்கமுடியாமல் அவன் பண்ணுன பாவத்திற்கு ஏன் என்னுடைய பாவக் கணக்கில் எழுதுனீர்கள் என்று கேட்கிறார். அதற்கு சித்திரகுப்தன் சிரித்துக் கொண்டே தவறு அளித்தது அவன் தான், ஆனால் சரியாக ஆராயாமல் அவனுக்கு பதவி அளித்தது நீங்கள் தானே, அதனால் இந்தப் பாவமும் உங்கள் கணக்கில் தான் சேரும் என்றார். அப்போது தான் மன்னருக்கு புரிந்தது அவனுடைய திறமையை ஆராய்ந்த நான் அவனுடைய குணத்தை ஆராயமல் போனது தன் தவறு என்று.

மேலும் படிக்க  MOTIVATIONAL STORY - (எண்ணம்போல் உயர்வு)

கருத்து:

     எந்த ஒரு செயல் செய்தாலும் அதில் உள்ள நல்லவைகளையும் தீமைகளையும் ஆராய்ந்து பிறகு முடிவு எடுக்க வேண்டும். இல்லையென்றால் அந்த மன்னரின் நிலைமையே அனைவருக்கும் வரும்.  

Spread the love