You have been blocked from seeing ads.

MOTIVATIONAL STORY – தடையைக் கண்டு ஓடாதே

மன்னரின் ஆட்சி:

முன்பொரு காலத்தில் பிருந்தாவனம் என்னொறொரு அழகிய நாடு இருந்தது.

அதனை பார்திபன் என்னும் மன்னன் ஆட்சி புரிந்து வந்தான்.

அந்த நாட்டில் அனைவரும் எந்தக் குறையுமின்றி மக்கள் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தனர்.

அரசவை:

     அன்று அரசவையில் மன்னர் மந்திரியிடம் நம்முடைய ஆட்சியில் மக்களுக்கு ஏதாவது குறை உள்ளதா? என்று வினவினார்.

     அதற்கு மந்திரி அனைவரும் தங்களின் ஆட்சியில் எக்குறையும் இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால்….

     சொல்லுங்கள் மந்திரியாரே  அப்புறம் ஏன் ஆனால் என்று இழுக்கிறீர்கள் என்றார் மன்னர்.

     நம் நாட்டு மக்களுக்கு ஒரே ஒரு குறை மட்டும்தான் உள்ளது, அது என்னவென்றால் பொதுநலமாக இருக்காமல் ஒரு பிரச்சனை வந்தவுடன் பிறரை குறை சொல்லிக் கொண்டு சண்டை போடுகிறார்கள் என்றார்.

     உடனே மன்னருக்கு ஒரு யோசனை வந்தது, நம் நாட்டில் உள்ள மக்களை சோதித்து பார்க்க வேண்டும் என்று.

மன்னரின் சோதனை:

     மன்னர் தன் படைவீரர்களைக் கொண்டு ஒரு பெரிய பாறையை நகர்த்தி மக்கள் அனைவரும் செல்லும் பாதையின் நடுவில் போடச் சொன்னார்.

     பின்பு மன்னரும் மன்னரின் ஆட்களும் அந்தப் பாறை போடப்பட்ட இடத்திற்கு பக்கத்தில் இருந்து மறைந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

rock on road_1

You have been blocked from seeing ads.

     மக்களும் பெரிய செல்வந்தர்களும் பெரிய வணிகர்களும் அந்தப் பாறையை சுற்றி சென்று கொண்டிருந்தனர்.

     அப்படி செல்லும் மக்கள் அனைவரும் இப்படி நடுரோட்டில் பாறை கிடக்கிறது, இதைக் கூட சரி செய்யாமல் இந்த மன்னன் என்னதான் ஆட்சி செய்கிறார் என்று மன்னரை திட்டிக் கொண்டே சென்றனர்.

பெரியவரின் செயல்:

அப்பொழுது தலையில் ஒரு பெரிய கூடையில் காய்கறிகளை சுமந்தபடி ஒரு பெரியவர் வந்தார்.

     நடுரோட்டில் இப்படி பாறை கிடக்கிறதே இதை நகர்ந்தி விட்டு இந்தப் பாதையையே பயன்படுத்தலாமே? பின்பு மக்கள் அனைவரும் ஏன் பாறையை சுற்றி செல்ல வேண்டும் என்று யோசித்தார்.

     பின்பு அவர் தன் தலையில் சுமந்துவந்த காய்கறிக் கூடையை ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு அருகில் இருந்த ஒரு பெரிய கடப்பாறை போன்ற நீள் வடிவத்தில் உள்ள கல்லைக் கொண்டு வந்து பாறையின் அடிப்பகுதியில் நுழைத்து அதை நகர்த்த முயற்ச்சி செய்தார்.

     அவரால் நகர்த்த முடியவில்லை, அந்தப் பாரையை ஒரு 3 பேர் சேர்ந்தால் நகர்த்தி விடலாம்.

     இந்தப் பெரியவருக்கு உதவி செய்யக் கூட யாரும் வரவில்லை எல்லோரும் அவரவர் வேலையை நோக்கி மட்டுமே சென்று கொண்டிருந்தனர்.

மேலும் படிக்க  கண்ணப்ப நாயனார் வாழ்க்கை கதை – தமிழில்

     அதோடு மட்டுமல்லாமல் இந்தப் பெரியவரையும் பார்த்து இவருக்கு இதெல்லாம் தேவையா? ஏன் இப்படி அந்தப் பாறையை நகர்த்த முயற்சிக்கிறார், அவரும் வேறுவழியில் செல்ல வேண்டியது தானே? என்று குறை மட்டும் சொல்லிக் கொண்டே சென்றனர்.

     இதை அனைத்தையும் மன்னர் பார்த்துக் கொண்டிருந்தார்.

     பின்னர் அந்தப் பெரியவர் அருகில் கிடந்த பொருட்களையும் கற்களையும் கொண்டு ஒரு  நெம்புகோல் போன்ற ஆயுதத்தை தயாரித்து அதன் மூலம் முயற்ச்சி செய்கிறார்.

     இப்பொழுது பாறை ஒரு அடி தூரத்திற்கு நகர்ந்தது. பெரியவருக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.

     மீண்டும் நகர்துகிறார், பாறை இப்பொழுது முக்கால்வாசி நகர்ந்து உருண்டோடியது.

     மறுபடியும் வேகமாக ஒரு தள்ளு தள்ளினார் பெரியவர், ரோட்டின் ஓரத்திற்கே சென்றது.

     பெரியவர் அதை நகர்த்தி விட்ட சந்தோஷத்தில் தன்னுடைய காய்கறிக் கூடைகளை நோக்கி வரும்பொழுது தான் பார்க்கிறார்.

     அந்தப் பாறை இருந்த இடத்தில் ஒரு பட்டுத்துணியால் ஆன பையின் உள்ளே பொற்காசுகளும் ஒரு செப்பு பட்டயமும் இருந்தது.

     அந்தக் செப்பு பட்டயத்தில் இந்தப் பாறையை யார் நகத்துகிறார்களோ அவர்களுக்கு இந்தப் பொற்காசுகள் அனைத்தும் பரிசாக வழங்கப்படும்,  என்று எழுதி இருந்தது.

     அந்தப் பெரியவர் ஆனந்தத்தில் தனக்கு சொந்தமான பொற்காசுகளையும் காய்கறிக் கூடைகளையும் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றார்.

     மன்னருக்கு நம்முடைய நாட்டில் ஒருவராது நல்ல எண்ணத்தோடு இருக்கிறாரே என்று மனம் மகிழ்ந்தார்.

கருத்து:

     நம்முடைய வாழ்வில் ஒரு தடை வருகிறது என்றால் அதைக் கண்டு ஒதுங்கிச் செல்லாமல் அந்தத் தடையை ஒரு வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும்.

     அவர் வயதில் பெரியவராக இருந்தாலும் அவருடைய சக்திக்கு அந்தப் பாறையை நகர்த்த முடியாது என்று யோசிக்காமல் அந்த தடையை நகர்த்த வேண்டும் என்று அவர் நினைத்ததே அவரின் வாழ்வுக்கு தேவையான பொற்காசுகள் கிடைத்ததற்கு காரணம்.

     கடவுள் நமக்கு ஒரு தடையை கொடுக்கிறார் என்றால் நம்முடைய வாழ்வில் ஒரு படிக்கு மேலே உயர்த்தி செல்லப் போகிறார் என்று நினைத்து அந்த தடையை சாதகமாக பயன்படுத்துங்கள்.

MOTIVATIONAL STORY – மாயாவின் அவமானம்

You have been blocked from seeing ads.