You have been blocked from seeing ads.

MOTIVATIONAL STORY – மாயாவின் அவமானம்

மாயாவின் வறுமை:

கோவிலூர் என்ற கிராமத்தில் மாயா என்ற பெண் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.

இவளின் பெற்றோர்கள் திருமணம் செய்த நாளிலிருந்தே சண்டை போட்டுக் கொண்டே இருந்தனர்.

மாயா நிம்மதியாக தேர்விற்கு படிக்கக் கூட முடிவதில்லை.

இதனால் தினமும் தனது பெற்றோர்களை நினைத்து வேதனை கொண்டிருந்தாள்.

அவள் ஏழை குடும்பத்தில் பிறந்ததால் அவள் படிப்பதற்குத்  தேவையான குறிப்பேடுகளை வாங்க முடியாமல் இருந்தாள்.

மாயாவின் தோற்றம்:

மாயா கருப்பாகவும் சற்று உயரம் குறைவாகவும் இருப்பாள்.

இந்தச் சமுதாயத்தில் அழகாக இருக்கும் பெண்களையே மதிப்பார்கள், ஆனால் மாயாவோ அழகாகவும் இல்லை, நல்ல நிறமாகவும் இல்லை.

இதனால் அவள் தன் வாழ்வில் அதிக அவமானங்களையே சந்தித்திருந்தாள்.

மாயா தன்னை எல்லோரும் மதிக்க வேண்டும் என்று நினைத்தாள்.

அவள் கருப்பாக இருப்பாளே தவிர, நீதி நேர்மையாக வாழ்பவள். ஒரு எறும்புக் கூட துரோகம் நினைக்காதவள்.

அவள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அவளின் நிறத்தைப் பார்த்தும் உயரத்தைப் பார்த்தும் கிண்டல் செய்வார்கள்.

அவளுக்கு பள்ளிக்கு போகவே புடிக்காமல் தனியாக அழுது கொண்டிருப்பாள் தன் வீட்டில் வந்து.

அவள் பத்தாம் வகுப்பு படித்தால் அவளின் தாய் அவளை கட்டாயமாக பள்ளிக்கு அனுப்பி வைத்தாள்.

இவள் பள்ளிக்குச் சென்ற பின்பும் அழுது கொண்டிருந்தாள் தனக்கு மட்டும் ஏன் நிம்மதியான வாழ்க்கை அமையவில்லை என்று.

பள்ளியிலும் அவமானம், வீட்டிலும் நிம்மதி இல்லை ஏன் தான் நாம் பிறந்தோம் என்று வருந்திக் கொண்டிருந்தாள்.

நண்பனின் அறிவுரை:

அப்பொழுது அந்தப் பள்ளியில் படிக்கும்  இவளுடைய நண்பனான ஆதித்யா என்னும் மாணவன் இவளின் அருகில் வந்து ஆறுதல் சொல்கிறான்.

நீ கருப்பாக இருந்தால் என்ன உன்னிடம் நல்ல குணம் இருக்கிறது, நல்ல படிப்பதற்கு திறமை இருக்கிறது. பிறகு எதற்கு அழுது கொண்டிருக்கிறாய்.

உன்னுடைய அழகு உனக்கு எப்பொழுதும் சோறு போடப் போவதில்லை, உன்னுடைய படிப்பும் திறமையும் தான் உனக்கு துணை நிற்கும் என்றான்.

நீ நன்றாகப் படித்தாள் உன்னை கிண்டல் செய்யும் அனைவரின் வாயையும் மூடலாம்.

உனக்கு நீ விரும்பும் மரியாதையும் கிடைக்கும், உன்னை அசிங்கப் படுத்திய மாணவர்கள் முன் வாழ்ந்து காட்ட வேண்டும்.

அழுதால் மட்டும் ஒன்றும் ஆகப் போவதில்லை என்றான்.

அவளுக்கு அப்பொழுது தான் மண்டையில் உரைத்தது. நாம் ஏன் இவர்கள் கிண்டல் செய்வதை  பொருட்படுத்த வேண்டும்.

அவர்கள் வாயில் விரல் வைக்கும் அளவிற்கு நாம் படித்து முன்னேற வேண்டும் என்று நினைத்தாள் மாயா.

அன்றிலிருந்து படிக்கத் துவங்கினாள், அவள் ஒருநாளில் 4 மணி நேரமே தூங்கினாள்.

மேலும் படிக்க  ஆப்ரகாம் லிங்கனின் காதல் கதை

மீதி நேரம் படித்துக் கொண்டே இருப்பாள், தன்னிடம் படிக்க போதிய குறிப்பேடுகள் இல்லாததால் தன் நண்பர்களிடம் வாங்கி படித்துவிட்டுக் கொடுப்பாள்.

மாயாவின் வெற்றி:

அவளுக்கு பத்தாம் வகுப்பு தேர்வு வந்தது, நன்றாக தேர்வு எழுதினாள்.

அவள் 490 மதிப்பெண் பெற்று அந்த மாவட்டத்தில் முதல் இடத்தைப் பெற்றாள்.

அப்பொழுது அவளுக்கு எல்லையில்லாத ஆனந்தம், ஏனென்றால் மரியாதையே கிடைக்காமல்  தன் வாழ்நாள் முழுவதும் அவமானங்களைப் பெற்றவளுக்கு இந்த நிகழ்வு பேரானந்ததைத் தந்தது.

அவள் மாவட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்றதால் அரசாங்கமே அவளின் முழுப் படிப்புச் செலவையும் ஏற்றுக் கொண்டது.

maayaa1

You have been blocked from seeing ads.

அவள் படித்து அந்த ஊரிலே தாசில்தாராக பணியில் அமர்ந்தார்.

அவளை கிண்டல் செய்தவர்கள் அந்த ஊரில் ஒரு சைக்கிள் கடையிலும் கூலி வேலையும் செய்து கொண்டிருந்தனர்.

அவள் சொந்த ஊரிலே அரசாங்கத்தின் வாகனத்திலே சென்று வருவாள்.

அவளை கிண்டலும் கேலியும் செய்தவர்கள் வாழ்வில் முன்னேறாமல் இவளின் உயர்ந்த நிலைமயைக் கண்டு வெட்கி தலை குனிந்தனர்.

கருத்து:

நம் வாழ்வில் துவண்டு கீழே விழுகப் போகும் பொழுது கைதூக்கி விட ஒரு நல்ல நண்பன் இருந்தால் போதும் வாழ்வில் வெற்றி பெறலாம்.

தனக்கு அழகு இல்லை, பணம் இல்லை, மரியாதை இல்லை என்று வருந்திக் கொண்டிருக்காமல் தன்னிடம் என்ன திறமை இருக்கிறது என்று பார்த்து அதில் வெற்றிபெற முயற்சிக்க வேண்டும்.

மாயா  பிறருடைய கேலியையும் கிண்டலையும் பொருட்படுத்தி இருந்து பள்ளிக்கு வராமல் இருந்திருந்தால் அவள் இன்று ஒரு தாசில்தாராக வந்திருக்க முடியாது.

நாமும் நம்மை அசிங்கப்படுத்தியவர் முன் வாழ்ந்து காட்ட வேண்டும் என்றால் கடின உழைப்பும் விடாமுயற்சியும் மட்டுமே வேண்டும்.

ஜென் துறவிக் கதை
You have been blocked from seeing ads.

1 thought on “MOTIVATIONAL STORY – மாயாவின் அவமானம்”

Comments are closed.