மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை கதை

தான் இவ்வுலக்கத்தை விட்டு மறைந்து 10 வருடங்களுக்கு மேலாகினும் தன் நடனத்தினாலும் இசையாலும் இன்னும் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர் தான் மைக்கேல் ஜாக்சன்.

வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் பலர் தன்னுடைய வாலிப வயதில் தான் அதிக உழைப்பை போட்டிருப்பார்கள்.

ஆனால் மைக்கேல் ஜாக்சனோ தன்னுடைய 6 வயது முதலே கடின உழைப்பை போட்டார், அவர் கடினமாக உழைத்ததற்கு காரணம் அவருடைய தந்தையே.

இளம் வாழ்க்கை:

மைக்கேல் அமெரிக்காவில் உள்ள இண்டியான என்னும் இடத்தில் 1958 ஆம் ஆண்டு ஆகஸ்டு 29 இல் ஜோசப் வால்டர் மற்றும் கேத்ரின் எஸ்தர் என்பவருக்கு ஏழாவது மகனாகப் பிறந்தார்..

இவருக்கு 4 சகோதரர்களும் 3 சகோதரிகளும் இருந்தனர்.

மைக்கேல் ஜாக்சனின் தந்தைக்கு சிறுவயது முதலே தான் ஒரு பாடகர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது.

அந்த ஆசை நிறைவேறாமல் போக தன்னுடைய ஐந்து மகன்களின் மூலமாவது தன்னுடைய ஆசையை நிறைவேத்த என்ணினார்.

அவர் எண்ணியதும் தவறில்லை, காரணம் அமெரிக்காவில் இவர்கள் பிறந்தாலும் கருப்பினத்தில் பிறந்ததுதான் இதற்கு காரணம்.

கருப்பின மக்களை வெள்ளையர்கள் அடிமையாகவே வைத்து இருந்ததனர், அவர்களை எந்தத் துறையிலும் நுழைய விடுவதில்லை.

அவர்கள் அனுமதித்த ஒரே துறை இசைச்துறை மட்டுமே, அதனால் தான் ஜோசப் வால்டர் தன் மகன்களை ஒரு பாடகர்களாக்க எண்ணினார்.

தன் பாட்டின் மூலமாவது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த எண்ணினார்.

ஜோசப்பின் கனவு தன் மகன்களின் மூலமாக நிறைவேறித்தான் போனது, அவர் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு அபரிவிதமான வளர்ச்சியை அடைந்தார் அவருடைய மகன் மைக்கேல் ஜாக்சன்.

ஒருநாள் தன்னுடைய அறையில் எதர்சியாக பாடி கொண்டிருந்த மைக்கேல் ஜாக்சனின் பாடலைக் கேட்ட அவரின் தாயார் எஸ்தர் இவனை ஜாக்சன் 5 குழுவில் லீட் சிங்கராக பாட வையுங்கள் என்று ஜோசப்பிடம் சொன்னாள்.

ஜோசப் அதை கண்டு கொள்ளவில்லை, பின்னர் மைக்கேல் தன்னுடைய துவக்கப்பள்ளியில் பாட்டுப் போட்டியில் முதல் பரிசு பெற்று வந்தார், அப்பொழுது அவருக்கு வயது 6 தான்.

இதனால் மைக்கேலின் மீது நம்பிக்கை வந்து அவரை லீட் சிங்கராக பாட வைத்தார் ஜோசப்.

ஜோசப்பும் சும்மாக இருப்பதில்லை, தனக்கு ஓய்வு கிடைக்கும் பொழுது எல்லாம் தன் மகன்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டே இருப்பாராம்.

அதுவும் சாதாரண பயிற்சி அல்ல, மிகவும் கடுமையான பயிற்சி காலை 2 மணி முதல் நல்லிரவு 10 மணி வரையும் பயிற்ச்சி கொடுப்பார்.

பயிற்சி கொடுக்கும் பொழுது தூங்கினாலோ அல்லது வராமல் இருந்தாலோ தன்னுடைய பெல்டை கலட்டி அடிப்பாராம் மைக்கேலின் தந்தை.

மைக்கேல் ஜாக்சன்

ஒரு ஆறு வயது குழந்தைக்கு இப்படி பயிற்சி கொடுத்தால் அதன் மனதில் எப்படி இருக்கும்.

இப்படி தன்னுடைய குழந்தைப் பருவத்தை முழுமையாக வாழமல் இருந்ததை எண்ணி மைக்கேல் மிகவும் வருந்தியுள்ளார்.

நான் குழந்தையாக இருந்த பொழுது ஒருநாள் கூட விளையாடியதில்லை என்று கூறுவாராம் தன்னுடைய நேர்காணலின் போது.

அவர் புகழின் உச்சிக்கு சென்ற பின்பும் அவருடைய குழந்தைப் பருவத்தின் வேதனை இருந்து கொண்டே இருந்தது.

கடின உழைப்பு:

ஜோசப் அப்படி பயிற்சி அளிக்காமல் இருந்திருந்தால் இன்று உலகமே வியக்கும் மைக்கேல் ஜாக்சனை நாம் பார்த்திருக்க முடியாது என்பதும் உண்மை தானே!

ஜாக்சன் 5 குழுவில் லீட் சிங்கராக பாடிய மைக்கேலின் பாடலை அந்த நாளில் பிரபலமாகியிருந்த டயானா ராஸ் என்ற பாடகி வெளியிட்டார்.

ஜாக்சன் 5 வின் முதல் ஆல்பமே பயங்கர பிரபலாகி விட்டது, பின்னர் மைக்கேல் டயானா ராஸ் உடன் சேர்ந்து பல மேடைகளில் பாடினார்.

மைக்கேல் தன்னுடைய 9 வயதிலே பாடலின் மூலமாக புகழின் உச்சிக்கே சென்றார்.

இவர் அதோடு மட்டும் நின்று விடாமல் தொடர்ந்து பயிற்ச்சி எடுத்துக் கொண்டே இருந்தார்.

இவர் பாடகி டயானா ராஸை தன்னுடைய தாயின் இடத்திற்கு இணையாகவே நினைத்தார்.

மைக்கேல் ஜாக்சன்

தான் இறந்தால் தன்னுடைய குழந்தைகளை டயானா ராஸிடமே கொடுக்க வேண்டும் என்று அவரே சொல்லி இருக்கிறார், தன்னுடைய தாய் உயிரோடு இருக்கும் பொழுதே டயானா விடம் கொடுக்க சொல்லி இருக்கிறார் என்றார் அவரின் மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பது உங்களுக்கே புரிந்திருக்கும்.

மேலும் படிக்க  மனுநீதிச் சோழன் கதை – (எல்லாளன்)

இவர் 1980 ஆம் ஆண்டுகளில் எல்லாம் உலக பிரபலமாகி இருந்தார், கருப்பினத்தில் பிறந்தவரிலே இவர் தான் முதன் முதலில் உலகப் பிரபலமாகி இருந்தவர்.

இதனால் வெள்ளையர்களுக்கு மைக்கேலின் மீது பொறாமையும் அவனை கவிழ்த்து விட வேண்டும் என்று எண்ணம் இருந்து கொண்டே இருந்தது.

சாதனை:

இவர் ஜாக்சன் 5 குழுவில் சேர்ந்து பாடியதை விட சிறுவயதில் தனியாக பாடிய கச்சேரிகளுக்கே அதிக ரசிகர்கள் இருந்தனர்.

இவர் 1972 ஆம் வெளியிட்ட “காட் டூ பி தேர்” நன்கு விற்பனை ஆகியது, அதனை அடுத்து 1979 ஆம் ஆண்டு வெளிவந்த “ஆப் தி வால்     “ முன்னதை விட அதிக வசூல் பெற்றது.

1982 ஆம் ஆண்டு வந்த திரில்லர் ஆல்பம் உலக அளவில் பல கோடிக்கு விற்பனை ஆனது, அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகரித்து கொண்டே போனது.

அவர் ஒவ்வொரு ஆல்பத்திலும் புதுவிதமான இசை, பாடல், நடனம் என்று இணைத்துக் கொண்டே இருந்தார்.

இவர் பாப் இசையின் மன்னர் என்றும் மூன் வாக்கர் அழைக்கப்படுகிறார், உலகத்திலே யாரும் செய்ய முடியாத அளவிற்கு 45 டிகிரி வரை தன்னுடைய உடலை சாய்த்து நடனம் ஆடுவார்.

பாப் இசை என்றால் பாடல் பாடிக் கொண்டே ஆடுவது ஆகும்.மைக்கேல் ஜாக்சன்

இவர் 13 முறை கிராமிய விருதுகளை மற்றும் அமெரிக்க இசை விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவரது நிகழ்சிகள் எம்.டிவி யில் ஒளிப்பரப்பானது, எம்.டிவியில் ஒரு கருப்பின மனிதனின் நிகழ்ச்சியை வெளியிடுவது அதுவே முதல் முறையாகும்.

அந்த டிவி யும் இதனால் பயங்கர பிரபலமாகிப் போனது.

இதனால் இவர் இரண்டு முறை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

பிளாக் ஆர் ஒயிட் என்ற பாட்டு 27 நாடுகளுக்கு ஒரே நேரத்தில் ஒளிபரப்பப்பட்டது, அதனை 50 கோடி பார்வையாளர்கள் பார்த்தனர்,அதுவே இன்றளவும் உலக அளவில் அதிக பார்வையாளர்கள் பார்த்த பாடல்.  

அவரின் துயரம்!

இவர் 1979 ஆம் ஆண்டு நடனப் பயிற்ச்சி செய்யும் பொழுது அவரது கால் வழுக்கிவிட்டு கீழே விழும்பொழுது அவரது மூக்கு உடைந்து போனது, அதை பிளாஸ்டி சர்சரி செய்தார்.

அதனால் அவருக்கு மூச்சுச் தினறல் அடிக்கடி ஏற்ப்படும், மேலும் இவருக்கு விட்லிகோ என்னும் சரும நோயும் இருந்தது.

இந்த நோயால் இவரது உடலில் வெண்புள்ளிகள் பரவ ஆரம்பித்தன, இதனை சரிசெய்யும் பொருட்டு பலமுறை பிளாஸ்டிக் சர்செரி செய்து கொண்டார்.

பலர் இவரை தன்னுடைய உடல் வெள்ளையாக மாற்றுவதற்குத்தான் பிளாஸ்டி சர்சரி செய்தார் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் இவர் 1984 ஆம் ஆண்டு மேடையில் பில்லி ஜூன் பாடலை ஆடிக் கொண்டிருக்கும் பொழுது வெடி வெடித்து இவருடைய் முடியில் தீ பட்டு எறிந்தது, இதனால் அன்றிலிருந்து தன் தலையில் விக் வைத்துக் கொண்டிருந்தார்.

இதுவும் பலருக்கும் தெரியாது, அவரது போஸ்மாடர்ன் ரிப்போர்டிலே தெரிய வந்தது.மைக்கேல் ஜாக்சன்

இவருக்கு உடலில் இவ்வளவு பிரச்சனைகள் இருந்ததால் தன்னுடைய உடலை முழுவதுமாக மறைக்குமாறு ஆடைகள் உடுத்தியிருந்தார்.

1993 ஆம் ஆண்டு ஒரு விளம்பர நிகழ்ச்சியில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது ஜேம்ஸ் என்ற சிறுவனிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் வந்தது.

ஆனால் அது பொய் என்று ஒரு காணொலி மூலம் அம்பலமாகிவிட்டது.

ஜேம்ஸ் ஸின் தந்தை மைக்கேல் ஜாக்சனின் மீது வழக்கு பதிவு செய்து நஷ்ட இழப்பீடு கேட்பதற்காக இந்த வேலை செய்து இருக்கிறார் என்பது பிறகு தான் தெரிந்தது.

ஜாக்சனும் பல கோடி இழப்பீடாக கொடுத்திருக்கிறார், மேலும் ஜாக்சன் இறந்து 11 வருடம் ஆகியும் ஜேம்ஸ் என்பவர் இன்றுவரை தனக்கு இழப்பீடு வேண்டும் என்றும் ஜாக்சனின் குடும்பத்தின் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்.

மேலும் படிக்க  சுபாஷ் சந்திர போஸ் சிறுவயது கதை

அவர் இறந்தும் அவருடைய பெயரை கெடுக்கும் விதமாக உள்ளது,

திருமணம்:

மைக்கேல் 1996 ஆம் ஆண்டு பிரஸ்லி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் குழந்தைகள் இல்லை. மேலும் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 3 வருடத்தில் பிரிந்து சென்றனர்.

பின்னர் தனக்கு மருத்துவம் செய்த டெபோரே என்ற பெண்ணை 1999 ஆம் ஆண்டு மணந்து கொண்டார்.

இவருக்குத்தான் 2 குழந்தைகள் பிறந்தது, பாரிஸ் மைக்கேல் காதரின் ஜாக்சன் என்ற மகளும் மைக்கேல் ஜோசப் ஜாக்சன் என்ற மகனும் இருந்தனர்.

மைக்கேல் ஜாக்சன்

தன்னுடைய சிறுவயது பருவத்தை அனுபவிக்காமல் செய்த தன் தந்தையின் பெயரை தன் மகனுக்குச் சூட்டியிருக்கிறார்.

மேலும் இவர் இரண்டாவது மனைவியையும் பிரிந்து சென்று, தன் குழந்தைகளுக்கு வாடகை தாயை நியமித்து அதன் மூலம் ஒரு குழந்தையை பெற்றார்.

அந்தக் குழந்தையின் பெயர் மைக்கேல் ஜாக்சன் – 2, தான் அனுபவிக்க நினைத்ததை தன் மகன் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய பெயரை வைத்தார்.

இவர் தன் குழந்தைகளுக்காகவே 2500 ஏக்கரில் நிலம் ஒன்றை வாங்கி அதில் அனைத்து விலங்குகளையும் வைத்திருந்தார்.

பொம்மை வீடுகள் மற்றும் கேளிக்கை ரயில்களை வைத்து அமைத்திருந்தார்.

அது குழந்தைகளுக்காகவே செய்யப்பட்ட பார்க் போல காட்சியளிக்கும், அந்த இடத்திற்கு நெவர் லேண்ட் என்று பெயரிட்டார்.

ஒருமுறை இவரிடம் தொடர்பு கொண்ட பத்திரிக்கையாளர் ஒருவர் இப்பொழுது எந்த ரூமில் இருக்கிறீர்கள் என்று கேட்டதும் நான் குழந்தைகளின் ரூமில் இருக்கிறேன் என்று பதிலளித்துள்ளார்.

இதனை தவறாக எண்ணிய அவர் குழந்தைகளுடன் பாலியல் தொடர்பு வைத்திருக்கிறார் என்று ஊடகங்களில் பரப்ப செய்தார்.

இந்தச் செய்தி காட்டுத்தீ போல் உலகெங்கும் பரவியது, கருப்பின மக்களே அவரை தவறாக பேச ஆரம்பித்து விட்டனர்.

இதனால் மனமுடைந்து போனார், பல ஆண்டுகளாக வெளியில் வராமல் இருந்தார்.

இதனிடைய அவருடைய உடல்நிலையும் மோசமாகிப் போனது, தான் சேமித்து வைத்த சொத்துகளை ஒன்று ஒன்றாக விற்க ஆரம்பித்தார்.

நஷ்ட ஈடு என்ற பெயரில் வேறு இவரிடம் இருந்து பணத்தை வாங்கிக் கொண்டு இருந்தனர் ஜேம்ஸ் குடும்பத்தார்.

சொத்துக்களை ஒவ்வொன்றாக வித்து பிளாஸ்டிக் சர்சரி செய்தார், தன்னிடம் பணம் இல்லாத நிலைக்கு வந்ததால் 2009 ஆம் ஆண்டு ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்ப்பாடு செய்திருந்தார்.

ரசிகர்களுக்கு ஏமாற்றம்!

10 வருடம் கழித்து தன் நடனத்தை காண வருபவர்கள் அதிகமாக எதிர்பாத்திருப்பார்கள் என்று நினைத்து அதிக பயிற்ச்சி எடுத்துக் கொண்டிருந்தார்.

நாளைக்கு நிகழ்ச்சி இருக்கும் பட்சத்தில் தூங்க சென்றார் ஆனால் தூக்கம் பலமணி நேரமாக வரவே இல்லை.

இதனால் தன்னுடைய மருத்துவரிடம் தூக்கம வருவதற்காக மாட்திரையை சாப்பிட்டு படுத்தவர் தான் கண் விழிக்காமே போய்விட்டார்.

2009 ஆம் ஆண்டு ஜூன் 25 நாள் தன் பல கோடி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்து விட்டு இவ்வுலகை விட்டு மறைந்து சென்றார்.

மைக்கேல் தன் ரசிகர்களுக்கு சில விஷயங்களை சொல்லி விட்டு தான் சென்றார்,  அது “இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும் உன் மீது இருக்கும் நம்பிக்கையை விட்டுவிடாதே”!.

ஜாக் மா வாழ்க்கை கதை – MOTIVATIONAL STORY