You have been blocked from seeing ads.

மாவீரன் கர்ணன் கதை – மகாபராதக் கிளைக்கதை

கர்ணன் பிறப்பு:

துர்வாச முனிவர் ஒருமுறை குந்திபோசனின் நாட்டிற்கு வருகை தந்தார்.

அவரை நன்கு உபசரிக்க அவரின் மகளான குந்தி தேவியை நியமித்திருந்தார் குந்திபோசனின் அரசர்.

`     குந்தி தேவி துர்வாச முனிவரை நன்கு கவனித்து அவருக்கு வேண்டிய உதவிகளை செய்ததில் மனம் மகிழ்ந்து குந்தி தேவிக்கு ஒரு வரத்தை நல்கினார்.

ஒரு மந்திரத்தை சொல்லி, நீ இதை திருமணத்திற்கு முன்பு உபயோகப் படுத்தினால் உனக்கு பலியும் பாவமும் வந்து சேரும்.

இந்த மந்திரத்தை நீ திருமணத்திற்கு பிறகு உபயோகப் படுத்து என்று சொல்லி விட்டு அந்த நாட்டை விட்டு சென்று விட்டார்.

13 வயதே அடைந்திருந்த குந்திதேவி அந்த மந்திரத்தை சொல்லி அதை சோதித்துப் பார்க்க எண்ணினாள்.

காலை வேளையில் குளித்து விட்டு நதிக்கரையின் அருகில் நின்று அந்த மந்திரத்தை உச்சரித்தாள்.

அப்பொழுது சூரிய தேவர் குந்திதேவியின் முன் தோன்றி ஒரு குழந்தையை அவளின் கையில் கொடுத்து விட்டு இவன் பூவுலகில் கர்ணன் என்றே அழைக்கபடுவான், கொடை அளிப்பதில் இவனை மிஞ்சியவர் எவரும் இருக்க மாட்டார்கள் என்று சொல்லி விட்டு மறைந்தார்.

திருமணம் ஆகும் முன் குழந்தை பிறந்ததை அறிந்தால் தன்னுடைய தந்தை உயிரையே விட்டு விடுவார் என்று நினைத்து ஒரு பெட்டியில் பட்டாடைகளும் ஆபரணங்களும் வைத்து ஆற்றில் அந்தப் பெட்டியை மிதக்க விட்டாள்.

கர்ணன் அதிரதன் ராதையிடம் வளர்தல்:

பீஷ்மருக்கு தேரோட்டியாக இருந்த அதிரதன் ஆற்றில் வந்த குழந்ததையை எடுத்து தன் மனைவி இராதையிடம் கொடுத்தார்.

பல வருடம் குழந்தையே இல்லாமல் இருந்ததால் அந்தக் குழந்தையை அவர்களே வளர்த்தனர்.

அந்தக் குழந்தைக்கு கர்ணன் என்று பெயர் வைத்து அழைத்தனர்.

கர்ணன் சிறுவயதிலே இரக்க குணம் கொண்டவனாகவும் இருந்தான்.

யாருக்காவது ஆபத்து என்றால் உடனே விரைந்து அவர்களை காப்பாற்றுவான்.

தனுர்வித்தை மீது ஆர்வம்:

கர்ணன் தேரோட்டியின் வீட்டில் வளர்ந்தாலும் அவனுக்கு சிறுவயதில் இருந்தே வில்வித்தை பயில மிகுந்த ஆசை கொண்டிருந்தான்,அவனே பயிற்சியும் எடுத்துக்கொண்டிருப்பான்.

ஒருநாள் அஸ்தினாபுர அரச குமரர்களுக்களுக்கு இடையே ஒரு போட்டி நடைபெற்றது அதில் அனைத்து ராஜகுமாரர்களும் தோல்வியை சந்தித்தனர்.

அப்பொழுது தன்னுடைய தனுர்வித்தையை கொண்டு அந்த போட்டியில் வெற்றி பெற்றான்.

அவன் வெற்றி பெற்றாலும் கூட அரச குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் கர்ணனின் தந்தைக்கும் ஆனந்தததை அளிக்கவில்லை.

ராஜகுடும்பத்தை தவிர சாமனிய மக்கள் தனுர்வித்தை பயில கூடாது, கர்ணன் தனுர்வித்தைய கற்க நினைத்தால் மகத நாட்டிற்கு செல்லலாம் இந்த நாட்டில் இருந்து கொண்டு தனுர்வித்தையை பயன்படுத்தக் கூடாது என்றனர் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

மேலும் படிக்க  ஔரங்கசீப் மகள் ஜெகபுன்னிசா காதல் கதை

இதனால் கர்ணன் அஸ்தினாபுரத்தை விட்டு நீங்கி மகத நாட்டிற்குச் சென்றான்.

ஆனால் அங்கு அவன் நினைத்த தனுர்கலையை சொல்லித்தர வில்லை, மாறாக விலங்குகளை வேட்டையாடும் வில்வித்தையை கற்றுத் தந்தனர்.

பரசுராமரிடம் தனுர்வித்தை கற்றல்:

இதனால் குரு துரோணாச்சாரியரிடம் வந்து தனக்கு தனுர்கலையை கற்றுத்தரும்படி வேண்டினான், ஆனால் துரோணர் நான் சத்திரியர்களுக்கு மட்டும் தான் பாடம் கற்பிப்பேன் என்று மறுத்து விட்டார்.

இதனால் கோபம் கொண்ட கர்ணன் பரசுராமரிடம் சென்றான், அவரிடம் தான் ஒரு அந்தணர் என்று பொய் உரைத்து கலைகளை கற்றான்.

பகவான் பரசுராம் அந்தண குலத்திற்கு மட்டும் தான் கலைகளை கற்பிப்பார்.

முழு கலைகளையும் கற்றபின் ஒரு நாள் பரசுராம் கர்ணனின் மடியில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்.

அப்பொழுது அவனின் தொடையில் ஒரு வண்டு துளைத்து இரத்தம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது, காலை நகர்த்தினால் அவரின் தூக்கம் கலைந்துவிடும் என்று நினைத்து நகராமல் இருந்தான்.

இரத்தம் பெருக்கெடுத்து பரசுராமரின் காலில் நனைந்தது,இதனால் தூக்கம் கலைந்து நடந்ததை கேட்டார்.

அவன் பதில் சொன்ன மறுநொடியே நீ யார்? நீ அந்தண குலத்தைச் சேர்ந்தவன் இல்லை என்று கோபமாக பேசினார்.

அதற்கு கர்ணன் ஆம் நான் அந்தணன் இல்லை, நான் தேரோட்டியின் மகன், நான் உண்மையை சொல்லியிருந்தால் நீங்கள் என்னை சீடனாக ஏற்றிருக்க மாட்டீர்கள் என்றான்.

நீ உண்மையை சொல்லியிருந்தால் உனக்கு வேறு நல்ல குருவிடம் அனுப்பி இருந்திருப்பேன், நீ என்னிடம் பொய் சொன்னதால் “நீ ஆபத்தான சமயத்தில் உன்னுடைய தனுர்வித்தை மறந்து போய்விடும்” இதுவே நான்  உனக்கு அளிக்கும் சாபம் என்றார்.

துரியோதனின் நட்பு:

அஸ்தினாபுர அரண்மனையில் இளவரசர்களுக்கு போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது அர்ச்சுனன் தன் அம்புகளால் பல வித்தைகளை செய்து கொண்டிருந்தான்.

அப்பொழுது துரியோதனின் மீது பனிக்கட்டிகளை கொண்டு உறைய வைத்திருந்தான், துரியனின் மீதிருந்த பனிக்கட்டிகளை அகற்றினான் கர்ணன்.

அப்பொழுது கர்ணனை அனைவரும் அவமானப்படுத்தினர் தாழ்ச்சி குலத்தைச் சார்ந்தவனே என்று.

கர்ணனின் வீரத்தைக் கண்டு அவனிடம் நட்பு கொள்ள ஆசைப்பட்டு, அவனை அங்கதேசத்தின் அரசாக்கினான் துரியோதனன்.

அன்றிலிருந்து கர்ணனும் துரியோதனின் மீது அளவுகடந்த அன்பை வைத்திருந்தான்.

கர்ணனுக்கு அர்ச்சுனனை விட தான் தனுர்வித்தையில் சிறந்தவன் என்று நிருபிக்க வேண்டுமென்றே நினைந்தான்.

கர்ணன் அங்கதேசத்தின் அரசனான பிறகு 8 திக் விஜயங்களைப் பெற்றான்.

கர்ணன்

You have been blocked from seeing ads.

அவன் அரசன் ஆனதிலிருந்து வறியவர்கள் அனைவருக்கும் தன் நாட்டின் செல்வங்ககளை கொடையாக அளித்தான்.

பின்பு விருஷாலி என்ற பெண்ணை மணந்து ஒரு ஆண் குழந்தையும் பெற்றான்.

மேலும் படிக்க  அம்பிகாவதி அமராபதி காதல் கதை

கர்ணன் ஒரு மாவீரன் ஆவான், அவன் வீரத்தை வைத்து தான் துரியோதனன் குருஷேஸ்திர போரையே நடத்தினான்.

ஆனால் குருஷேஸ்திர போரில் கிருஷ்ணனின் சூழ்ச்சியால் கர்ணன் கொல்லப்பட்டான்.

கர்ணன் இறந்த பிறகே குந்திதேவியின் புதல்வன் என்று உலகிற்கு தெரிந்தது.

ஏகலைவன் கதை – மகாபாரதக் கிளைக்கதை
You have been blocked from seeing ads.

2 thoughts on “மாவீரன் கர்ணன் கதை – மகாபராதக் கிளைக்கதை”

Comments are closed.