You have been blocked from seeing ads.

லைலா – மஜ்னு காதல் கதை – தமிழில்

லைலா மஜ்னு பால்ய பருவம்:

\     லைலா அரபு நாட்டில் பிறந்த பேரழகி, அவள் சிறு வயதில் இருக்கும் பொழுதே அவளுடைய தாயை இழந்து விட்டாள்.

தன்னுடைய மகளுக்காகவே மறுதிருமணம் செய்யாமல் தன் வாழ்நாளை கழித்தார் லைலாவின் தந்தை.

ஆனால் லைலா தாய் பாசத்திற்காக ஏங்கக்கூடாது என்பதற்காக அவளின் தந்தை லைலாவிற்கு ஒரு செவிலி தாயை ஏற்பாடு செய்திருந்தார்.

தன் மகளுக்கு அனைத்து சந்தோஷங்களையும் கொடுக்க வேண்டும் என்று நினைத்து, அவளுக்கு பிடித்த அனைத்து பொருட்களையும் வாங்கி கொடுப்பார்.

லைலாவின் தந்தை ஆரம்ப காலத்தில் மிகச்சிறிய வணிகனாக இருந்து தன் கடின உழைப்பால் மிகப் பெரிய பணக்காரனாக வளர்ந்தவர்.

தன் மகள் கல்வி அறிவிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று எண்ணி அவளை பாடசாலைக்கு அனுப்பி வைத்தார்.

கயஸ் என்ற சிறுவனும் லைலாவின் தெருவில் வசிப்பவன் தான். லைலாவுடன் ஒன்றாக படிப்பவன்.

லைலாவும் கயஸூம் ஒரு தெரு என்பதால் நண்பர்களாகி விட்டார்கள்.

ஆரம்பத்தில் லைலா பாடசாலைக்கு செல்லும் பொழுது அவளுடைய செவிலி தாய் அவளுக்கு பாதுகாப்பாக வருவாள்.

நாளடைவில் லைலாவிற்கு நிறைய நண்பர்கள் கிடைத்து விட்டனர், அதனால் செவிலித்தாயை வரவேண்டாம், நானே தோழிகளுடன் பாதுகாப்பாக சென்று வருவேன் என்றாள்.

லைலா அவளின் இரண்டு தோழிகள், கயஸ் அவனின் ஒரு நண்பன் இவர்கள் ஐவரும் ஒன்றாகவே பள்ளிக்குச் செல்வார்கள்.

மஜ்னுவின் காதல்:

நாட்கள் செல்ல செல்ல லைலாவின் குணத்திலும் அழகிலும் தன்னையே மறக்கத் தொடங்கினான் கயஸ்.

லைலாவிற்கும் கயஸ் மேல் இனம்புரியாத அன்பு இருந்தது.

ஒருமுறை இவர்கள் பள்ளி விட்டு வரும்பொழுது சாலையில் இருந்த குழியை கவனிக்காமல் லைலா கால் தவறி கீழே விழுந்து விட்டாள்.

அவள் விழுந்த அடுத்து நொடியே கயஸ் ஓடிப் போய் அவளை அப்படியே வாரி எடுத்தான்.

அவளின் கட்டை விரலில் இருந்து இரத்தம் வழியத் தொடங்கியது.

கயஸின் இதயத்திலும் கண்களிலும் நீர் பெருகியது, லைலா கூட அழுகாமல் தான் நின்று கொண்டிருந்தால், ஆனால் லைலாவிற்கு அவன் மேல் காதல் வரத் தொடங்கியது.

இவனின் இந்த பாசம் அவளை கட்டிப் போட்டு விட்டது.

ஆனால் இருவரும் தன் காதலை சொல்லிக் கொள்ளாமல் இருந்தார்கள்.

லைலாவிற்கு காலில் அடிபட்டதால் அவள் இரண்டு நாட்கள் பள்ளிக்கு வராமல் இருந்தாள்.

அப்பொழுது கயஸ் அவளை பார்க்க முடியாமல் பைத்தியம் பிடித்தவன் போல் ஆகிவிட்டான்.

அவளை நினைத்து கவிதை எழுதத் தொடங்கினான்.

     துளிறிய விதையாய்; மலர்ந்த மலராய்;

     மழையாய் மனதில் சிலையாய் வந்தாய்!

     தோழியென்ற தோரணையில் தோன்றியவள் நீயோ!

     கண்டது கனவோ; கண்ணிமைக்க மறந்தேனோ!

     உன் குரல் கேட்டு சுழற்றும் கண் பார்த்து

    பேசிட வார்த்தைகள் தான் தவிக்கிறேன் நான்!

   நேரம்தனை காணவில்லை உன்னுடன் இருக்கையிலே!

   கண்ணிரண்டும் கலங்கியதே நீ பிரிந்து செல்கையிலே!

  மீண்டும் தான் வருவாயோ! என்னை உயிர்பிக்க செய்வாயோ!

என்று லைலாவை நினைத்து கயஸ் கவிதை எழுதிக் கொண்டிருந்தான்.

மேலும் படிக்க  பிக்பாஸ் இமானுவேல் அண்ணாச்சி வாழ்க்கை கதை
கயஸ் மஜ்னு ஆனது:

அப்பொழுது அவனின் நண்பர்கள் அவனை என்னடா கயஸ் லைலா மேல் மஜ்னு ஆகிவிட்டாயா என்று சொல்லிக் கொண்டே சிரித்தார்கள்.

அரபு மொழியில் மஜ்னு என்றால் பைத்தியம் என்று பொருள்.

லைலா இரண்டு நாள் கழித்து பள்ளிக்கு வரும்பொழுது அவளுக்கு மஜ்னு எழுதிய கவிதையப் பற்றி அவளின் வகுப்பு தோழர்கள் தெரிவித்தனர்.

அவளும் அந்த கவிதையைக் கேட்டு வெட்கி தலை குனிந்தாள்.

லைலாவும் அவனின் மேல் எல்லையில்லா காதலில் மூழ்கத் தொடங்கினாள்.

மஜ்னு லைலா பேரை தன்னுடைய புத்தகத்திலும் தன் வீட்டின் சுவற்றில் மட்டுமல்லாமல் தெருவில் உள்ள சுவர்களிலும் எழுதத் தொடங்கினான்.

இதனால் அவனின் தெருக்காரர்களும் அவனை மஜ்னு என்று அழைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இந்தச் செய்தி லைலாவின் தந்தைக்கு தெரிய வந்ததும் லைலாவை பாடசாலைக்கு அனுப்பாமல் நிறுத்தி விட்டார்.

லைலாவை பார்க்க முடியாமல் போனதால் மஜ்னு பித்து பிடித்தவன் போல் லைலாவின் வீட்டின் அருகே நின்று கொண்டிருப்பான்.

லைலாவும் அவனின் பிரிவால் வாடினாள்.

நாட்கள் இப்படியே ஓடிக் கொண்டிருந்தது, ஒருநாள் லைலா அவள் வீட்டு சன்னலில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால், அப்பொழுது மஜ்னு ஒரு மரத்தடியில் அமர்ந்து லைலாவின் வீட்டையே பார்த்து கொண்டிருப்பது தெரிந்தது.

லைலாவின் காதல்:

லைலா ஒரு கடித்ததில் நானும் உன்னை காதலிக்கிறேன் உன்னைப் பார்க்காமல் என்னாலும் இருக்க முடியவில்லை என் தந்தையிடம் வந்து முறைப்படி பெண் கேள் என்று எழுதி மாடியில் இருந்து தூக்கிப் போட்டாள் அவன் இருக்கும் இடம் நோக்கி.

அந்த கடிதத்தைப் பார்த்ததும் மஜ்னு மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான்.

லைலாவும் நம்மை காதலிக்கிறாள், இதற்கு மேல் இந்த உலகத்தில் என்ன வேண்டும் என்று எண்ணினான்.

அரபுநாடுகளில் ஒரு வழக்கம் இருந்தது, பெண் பார்க்க செல்லும் பொழுது மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டார்க்கு நகைகளும் பரிசுப் பொருள்களும் வாங்கிச் செல்ல வேண்டும்.

மஜ்னுவிற்கும் அம்மா இல்லை அப்பா மட்டும் தான், அவரும் ஒரு காலத்தில் பெரிய வணிகனாக இருந்தவர்.

தொழில் நஷ்டத்தில் சென்றதால் வறுமை நிலைக்கு வந்தார்கள்.

மஜ்னுவின் தந்தையும் மகனின் இந்த நிலையைக் கண்டு லைலாவையே திருமணம் முடித்து வைத்து விடலாம் என்று நினைத்து அவர்களின் வீட்டிற்கு பெண் கேட்டு போனார்கள்.

தன் வீட்டில் இருந்த தன் மனைவியின் நகைகளை எடுத்துக் கொண்டும் புதிய பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்டும் சென்றார்கள்.

மஜ்னுவின் அவமானம்:

லைலாவின் தந்தை மஜ்னுவின் தந்தையையும் மஜ்னுவையும் அவமானப் படுத்தி வெளியே அனுப்பி விட்டார்.

ஒன்றும் இல்லாத உங்களுக்கு என் மகள் கேட்குதா? இனிமேல் இந்தப் பக்கமே வந்து விடாதீர்கள் என்று கடுஞ்சொற்களால் பேசினார் லைலாவின் தந்தை.

மஜ்னுவின் நண்பன் நீ வேலைக்கு போய் சம்பாதித்து நல்ல நிலைக்கு வந்தால் தான் லைலாவின் தந்தை உனக்கு பெண் கொடுப்பார்.

மேலும் படிக்க  புலவர் புகழேந்தியின் வாழ்க்கை கதை

எதாவது வேலைக்கு செல் என்றான். மஜ்னுவிற்கு கவிதை எழுதுவதை தவிர ஒரு வேலையும் செய்யத் தெரியாது.

செல்வந்தர்களை புகழ்ந்து கவிதை பாடினால் அவர்கள் பரிசுகள் தருவார்கள் என்று அவன் நண்பன் சொன்னதும், மஜ்னுவும் ஒரு செல்வந்தரின் வீட்டிற்குச் சென்று கவிதை பாடினான்.

அந்தக் கவிதையைக் கேட்டதும் செல்வந்தருக்கு கோவம் தாங்க முடியவில்லை, என்னைப் பற்றி பாடாமல் ஒரு பெண்ணைப் பற்றி பாடுக்கிறானே? இவன் உண்மையிலே மஜ்னுவாகத் தான் இருப்பான் போல் என்று எண்ணினார்.

லைலாவை பெண் கேட்டு ஒரு பெரிய செல்வந்தர் வந்தார், லைலாவிற்கு மஜ்னுவைத்தவிர வேற யாரையும் திருமணம் செய்ய விருப்பம் இல்லை.

லைலா

You have been blocked from seeing ads.

அவளால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் இருந்தாள்,

லைலாவின் தந்தை அந்த செல்வந்தருக்கு நிச்சயம் செய்தார்.

லைலாவின் திருமணம்:

லைலா அவளின் தந்தையிடம் பலவாறு மன்றாடினாள், நான் கயஸ் மேல் உயிரே வைத்திருக்கிறேன் என்னை அவனுக்கே திருமணம் செய்து வையுங்கள் என்று வேண்டினாள்.

ஆனால் அவர் அதை பொருட்படுத்தவில்லை.

வலுக்கட்டாயமாக அந்த செல்வந்தருக்கு மணம் முடித்து வைத்தனர்.

மஜ்னுவிற்கு இந்தச் செய்தி தெரிந்ததும் அவன் மனமுடைந்து எங்கு செல்கிறோம் என்பது கூட தெரியாமல் கால்போன போக்கில் நடந்தான்.

இறுதியில் ஒரு பாலைவனத்தில் தனியாகவே லைலாவின் பெயரை சொல்லி புலம்பிக் கொண்டிருந்தான்.

லைலா – மஜ்னுவின் காதல்:

லைலாவும் திருமணம் ஆனதிலிருந்து மஜ்னுவை நினைத்து ஒருவாய் கூட உணவு உண்ணாமல் இருந்தால், இதனால் அவளின் உடல்நிலை மிகவும் மோசமானது.

பார்ப்பதற்கு ஒரு எலும்புக்கூடைப் போல் காட்சியளித்தாள், அவளும் கயஸின் பெயரையே சொல்லிக் கொண்டிருந்தாள்.

திருமணம் ஆகி 21 நாளிலே மஜ்னுவின் பிரிவு தாங்க முடியாமல் லைலா இந்த மண்ணை விட்டு மறைந்தாள்.

மஜ்னுவிற்கு லைலாவின் இறந்த செய்தியை கூற அவனின் நண்பன் அவனைத் தேடிச் பாலைவனம் சென்றான்.

அவன் அங்கு கிடைக்க வில்லை, இறுதியில் லைலாவின் சமாதிக்குச் சென்று பார்த்தான்.

அங்கு மஜ்னு லைலா சமாதிமேல் படுத்த படியே கிடந்தான், அவனின் நண்பன் மஜ்னுவின் அருகில் சென்று பார்க்கும்பொழுது தான் தெரிந்தது அவன் உயிரோடு இல்லை பிணமாக கிடக்கிறான் என்று.

அவளின் சமாதியைச் சுற்றிலும் கவிதையால் நிரப்பி இருந்தான் மஜ்னு.

தேவதாஸ் – பார்வதி காதல் கதை – தமிழில்
You have been blocked from seeing ads.

1 thought on “லைலா – மஜ்னு காதல் கதை – தமிழில்”

Comments are closed.