You have been blocked from seeing ads.

காதல் கற்றுக் கொடுத்த பாடம் – காதல் கதை

அகிலாவின் காதல்:

“அழுகாத அகிலா, நான் அவனிடம் பேசிப்பார்க்கிறேன், உன்னை எப்படியும் ஆதியிடம் சேர்த்து வைக்கிறேன்”, “நான் இருக்கும்பொழுது நீயேன் இப்படி வருந்திக் கொண்டிருக்கிறாய்” என்று அகிலாவிற்கு மகேஷ் ஆறுதல் கூறிக் கொண்டிருந்தான்.

     அகிலாவும் ஆதியும் 3 வருடங்களாக காதலித்துக் கொண்டிருந்தனர். ஆனால் இப்பொழுது அகிலாவை தனக்கு பிடிக்கவில்லை என்றும் நான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறியதால் தான் அகிலா இப்படி அழுது கொண்டிருந்தாள்.

     மகேஷும் அகிலாவும் முகநூலின் வழியாக நண்பர்களானவர்கள்.

இருவரின் ஊரும் 20கிமீ தொலைவில் இருக்கும் என்பதால் அவர்களின் நட்பும் வளர்ந்து கொண்டே சென்றது.

வெண்ணிலாவின் காதல்:

மகேஷும் வெண்ணில்லாவும் காதலித்து வந்தார்கள். வெண்ணிலா யார் என்றால் மகேஷின் உறவுக்கார பெண்தான், அவனுக்கு அத்தை மகள் முறை வேண்டும்.

மகேஷ் மாநிறமாக இருந்தாலும் அழகிய பெண்களை மயக்கும் தோற்றம் உடையவனாகவே இருந்தான்.

வெண்ணிலா மகேஷீன் தெருக்காரப் பெண்தான். அவள் தான் தன் காதலை முதலில் மகேஷிடன் தெரிவித்தாள்.

அப்பொழுது மகேஷிற்கு ஒரு 19 வயது தான் இருக்கும் அவனும் ஓகே என்று சொன்னாலும் முதல் காதலில் வரும் புதுவிதமான மயக்கமும் ஈர்ப்பும் இல்லாமல் இருந்தான்.

மகேஷை விட பேரழகிதான் வெண்ணிலா, ஊரில் உள்ள ஆண்களின் கனவுக் கன்னியாக இருந்தாள். இவளை மணக்க ஆயிரம் ஆண்கள் வரிசையில் நின்னாலும் இவளுக்கு பிடித்தது என்னவோ மகேஷைத்தான்.

அவன் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது வெண்ணிலா மகேஷூக்கு அடிக்கடி போன் செய்து கொண்டிருப்பாள். அவளின் காதல் தூய்மையானதாகவே இருந்தது.

மகேஷின் அலட்சியம்:

மகேஷிடம் எப்பொழுது பேசினாலும் மாமா என்று தான் அழைப்பாள், எப்பொழுதாவது செல்லமாக போடா என்று சொன்னால் போதும் அந்த வாரம் முழுவதும் இதுனால பேசாமல் இருப்பான்.

மகேஷ் மரியாதையை எதிர்பார்ப்பான்.

வெண்ணிலா அவனை விட 3 வயது சிறியவள் ஆனால் குணத்திலும் பக்குவத்தில் மகேஷை விட 10 மடங்கு பெரியவளாக இருந்தாள்.

சொல்லப்போனால் அவளின் உண்மைக்காதலை இவன் அறியத்தவறித்தான் போனான், எந்தவொரு பொருளும் தேடிக் கஷ்டப்பட்டு கிடைத்தால் தானே அதன் மதிப்பு என்னவென்று தெரியும், தானாக வரும் பொருளுக்கு மதிப்பு எப்பொழுதுமே இருக்காது.

இவர்கள் இப்படி சண்டை போட்டுக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் தான் அகிலாவின் நட்பு கிடைத்தது.

மகேஷ் அகிலாவின் நட்பை தொடர நினைத்தான். அகிலாவின் பேச்சு இவனுக்கு அவள் ரொம்ப பக்குவமடைந்த பெண்போல் பேசுகிறாள் என்று தோன்றியது.

அவளும் தான் காதலித்த விஷயங்களை எல்லாம் மகேஷிடம் சொல்லுவாள். அப்படி ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது தான் அகிலா தன்னை மீறி கதறிக் கொண்டிருந்தால் தன் காதலன் என்னை ஏமாற்றி விட்டான் என்று.

நான் இனிமேல் உயிரோடு இருக்க மாட்டேன் மகேஷ், எனக்கு ஆதி ஒரு அப்பாவாக இருப்பேன் என்று சொல்லித்தான் என்னை காதலித்தான். அவனின் வார்த்தையால் நான் நம்பி ஏமாந்து விட்டேன் என்று கண்ணீர் வடிக்கிறாள்.

மேலும் படிக்க  கடைசி வரை வரும் உறவு - தமிழ் கதை

அகிலாவிற்கு அப்பா இல்லை, அவளின் 6 வயதிலே இறந்து போய்விட்டார்.

மகேஷ் ஆதியின் போன் நம்பரை வாங்கிக் கொண்டு அவனிடம் பேசினான் ஆனால் அவன் மகேஷையை வாயில் வந்தபடி திட்டினான்.

அகிலா மீது காதல்:

ஆனால் மகேஷ் அவன் திட்டியதையும் பொருட்படுத்தாமல் காலில் விழுகாத குறையாக கெஞ்சினான், அகிலா கஷ்டப்படுவதைப் பார்க்க முடியவில்லை, அவளை ஏமாற்றி விடாதே என்றான். அவள் கஷ்டப்பட்டா உனக்கு என்னடா அக்கறை வந்தது அவள்மேல், நீ யாருடா அவளுக்கு என்று அனாகரிமாக திட்டினான்.

அவன் அதற்குப் பிறகு மகேஷிடம் பேசாமல் போனை துண்டித்தான்.

மகேஷும் அகிலாவை தற்கொலை முயற்சிக்கு போகவிடாமல் அவளை சமாதனப் படுத்திக் கொண்டிருந்தான்.

நாட்கள் போகப் போக அகிலாமேல் மகேஷுக்கு ஒரு விதமான ஈர்ப்பு வரத் தொடங்கியது. அவன் அவள்மேல் அளவுகடந்த பிரியம் வைக்க ஆரம்பித்து விட்டான்.

அவள் ஒருநாள் போனில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது எனக்கு ரவாலட்டு சாப்பிடனும் போல் தோனுகிறது என்று சொல்லியதும் அப்பொழுதே அவனின் நண்பனின் வண்டியை எடுத்துக் கொண்டு அவளுக்கு வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தான், அப்பொழுது மணி இரவு 12:15 இருக்கும்.

அவனுக்கு முதல் காதலின் இன்பமும் வலியும் அகிலாவிடமே கிடைக்கிறது.

அவள் பிடித்ததை வாங்கிக் கொடுத்ததில் மகேஷீற்கு எல்லையில்லா ஆனந்தமாக இருந்தது.

மகேஷ் அகிலாவை ஒருதலையாக காதலித்துக் கொண்டிந்தான், அவன் வெண்ணிலாவை மறந்து விட்டான்.

அகிலா அவ்வளவு அழகாக இருக்க மாட்டாள், இருந்தாலும் வெண்ணிலா மேல் இல்லாத பாசம் அவனுக்கு அகிலாமேல் வந்தது.

ஒருநாள் அகிலா ஏதோ சண்டை போட்டுக் கொண்டு மகேஷிடம் பேசாமல் இருந்தால் அவளின் குரலைக் கேட்க முடியாததால் பைத்தியம் புடித்தவன் போல  குடித்துவிட்டு நடுரோட்டில் விழுந்து கிடந்தான்.

அவனின் நண்பன் மகேஷிடம் உனக்காக வெண்ணிலா இருக்கும் பொழுது நீ ஏன் மற்ற பெண் பேசவில்லை என்று புலம்புகிறாய்\

வெண்ணிலாவின் நிலைமையை யோசித்துப் பார், நீ இப்படி வேறு பெண் பேசவில்லை என்பதால் ரோட்டில் குடித்துவிட்டு கிடப்பதை கேள்விப்பட்டால் அவளின் மனம் என்ன பாடுபடும் அவளை நினைத்துப்பார் என்றான் அவனின் நண்பன்.

அவன் நண்பன் சொல்வதெல்லாம் அவனின் காதுக்கு ஏறவில்லை. அவன் அகிலாவின் பேரையே முனங்கிக் கொண்டு இருந்தான்.

அவனுக்கு காதல் முற்றத் தொடங்கியது அவள் இல்லாமல் அவனால் வாழ முடியாது என்ற அளவுக்கு காதலிக்க தொடங்கி விட்டான்.

அந்தக் காதலைக் கூட அகிலாவிடம் சொல்லாமல் இருந்தான். நாட்கள் போக போக தன் காதலை அவளிடம் சொல்லியபோது அவள் நீ நல்ல நிலைக்கு வந்த பிறகு எங்கள் வீட்டில் வந்து பெண்கேள் திருமணம் செய்து கொள்ளலாம் என்றாள். இப்பொழுது நாம் ஒருத்தரை ஒருத்தர் நன்றாக புரிந்து கொள்ளலாம் என்றாள்.

இவளின் வார்த்தையைக் கேட்டவுடன் மகேஷ் சந்தோஷத்தில் அப்படியே காற்றில் மிதந்து கொண்டிருந்தான்.

அவளுக்குத் தெரியாது வெண்ணிலாவும் மகேஷூம் காதலித்தது.

மேலும் படிக்க  உன்னை பைத்தியமாக்கும் காதலே - (துளசி)
வெண்ணிலாவின் ஏமாற்றம்:

ஒருநாள் வெண்ணிலா கால் பண்ணி எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் மாமா நீங்கள் வந்து எங்கள் வீட்டில் பேசுங்கள் என்றாள்.

     அதற்கு மகேஷ் உன் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை கட்டிக் கொள் என்னை தொந்தரவு செய்யாதே என்று சொல்லி விட்டு போனை கட் பண்ணி விட்டான்.

     வெண்ணிலா தொடர்ந்து 80 தடவை கால் பண்ணிக் கொண்டே இருந்தால் இவன் போனை சைலன்டில் போட்டு விட்டு தூங்கி விட்டான்.

     அகிலாவிற்கு நிறைய ஆண் நண்பர்கள் இருந்தார்கள், அவள் வேலை செய்யும் இடத்தில் உள்ள ஆண்களிடமும் பேசுவாள்.

     மகேஷிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை அவள் ஆண்களிடம் பேசுவது. அகிலா அவர்களிடம் நான் நட்பாகத்தான் பேசுகிறேன் என்பாள்.

 

மகேஷ்

You have been blocked from seeing ads.

     இதனால இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டிருந்தது.

     ஒருநாள் அகிலா தன்னுடன் வேலை பார்க்கும் நண்பரின் பைக்கில் சென்றுள்ளார். மகேஷ் கேட்டபொழுது பஸ் வரவில்லை அதுனாலதான் வந்தேன் என்று சொன்னாள்.

     பின்பு அவன் அகிலா வேலை செய்யும் இடத்தில் உள்ள நபர்களிடம் விசாரித்தான் அங்கு அவர்கள் அனைவரும் இங்கே வேலை செய்யும் ஒருவனை காதலிக்கிறாள் என்றனர்.

     அவனால் நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை குழப்பத்துடன் வீட்டிற்கு வந்தான்.

அகிலாவின் செயல்:

மாலை வேளையில் டீ குடிப்பதற்க்காக ஒரு ரெஸ்டாரெண்டிற்கு மகேஷூம் அவனின் நண்பனும் சென்றனர்.

அங்கு அகிலா ஒரு பையனுக்கு பப்ஜை எடுத்து ஊட்டிக் கொண்டிருந்தால் இதைப் பார்த்ததும் மகேஷ் அருகில் இருந்த கம்பியை எடுத்துக் கொண்டு அவள் தலையில் ஓங்கி அடித்தான்.

அந்த இடத்திலே சுருண்டு விழுந்தால் அவளின் உயிரும் மெல்ல மெல்ல பிரிந்தது.

மகேஷை போலீஸ் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு சென்றனர். அவன் ஜீப்பில் சென்று கொண்டிருக்கும் பொழுது தான் அவனுக்கு எல்லாம் புரிந்தது நான் இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டு விட்டோம்.

என்னையே உயிராய் நினைத்த வெண்ணிலாவுக்கு நான் செய்த துரோகம் தான் இன்று அகிலா எனக்கு செய்தாள்.

உண்மையான பாசம் பக்கத்தில் இருக்கும் பொழுது தெரியாது அது இல்லாமல் போனால் தான் அதன் அருமை தெரியும்.

அனைவரும் தன் மனைவியிடமோ கணவனிடமோ உண்மையாக இருங்கள் இடையில் வரும் அன்பு இடையிலே சென்று விடும்.

உயிருக்கு கொடுத்த இறுதிப் பரிசு

You have been blocked from seeing ads.

1 thought on “காதல் கற்றுக் கொடுத்த பாடம் – காதல் கதை”

Comments are closed.