You have been blocked from seeing ads.

கற்கால மனிதனின் மூடநம்பிக்கை

கற்கால மனிதனின் வாழ்க்கை:

கற்காலத்தில் மனிதன் தங்களுக்கு ஒரு தலைவனும் ஒரு குடும்பத்தையும் கொண்டு வாழ்ந்து வந்தனர்..

அந்தக் காலத்தில் ஒரு கிராமத்தில் வாழும் மனிதர்களுக்கு யாருக்கும் கண்கள் தெரியாது.

வாழ்வில் வெளிச்சம் என்பதை அறியாதவர்கள், தன் கணவன் யார்? குழந்தைகள் யார் என்பதைக் கூட அறியாதவர்கள்.

அப்படி வாழ்ந்து வரும் மக்கள் அதிகமாக கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தவர்களாக இருந்தனர்.

அவர்கள் துஷ்ட தெய்வத்திற்கு பலி கொடுப்பதையும் அதிகமாக நம்பினார்கள்.

அப்படி இருட்டு உலகில் வாழும் மக்கள் வசிக்கும் இடத்திற்கு நிரஞ்சா என்னும் விழி தெரிந்தவன் வந்தான்.

புதிய மனிதரின் வருகை:

அங்கு வசிக்கும் மக்கள் புதிதாக வந்திருக்கும் மனிதனைப் பார்த்து இவன் தேவதையின் மகனோ என்றும் சிலர் இவன் துஷ்ட தெய்வத்தின் தூதுவனோ என்று அஞ்சினார்கள்.

அந்த ஊரில் மனிதர்களைத் தான் துஷ்ட தெய்வத்திற்கு பலியிடுவார்கள்.

ஒவ்வொரு பௌர்ணமி நாள் அன்றும் ஒவ்வொரு மனிதர்கள் அந்த துஷ்ட தெய்வத்திற்கு பலியிட்டனர்.

நிரஞ்சாவிற்கு அங்கு தெரிந்தது என்ன என்றால் சுமகாவும் அவளது தங்கை மாய்லியும் தான்.

அவனின் காதல்:

நிரஞ்சாவிற்கு மாய்லி மேல் காதல் வந்தது, மாய்லி ஒரு கண் தெரியாத பதுமையாக வாழ்ந்தாள்.

ஆனால் அவளின் நற்குணங்களும் நலினமும் அவளுடைய மென்னையான பேச்சும் அவளின் மேல் காதல் வர காரணமாக இருந்தது.

ஒரு பௌணர்மி நாளென்று மாய்லியின் தம்பி அந்த துஷ்ட தெய்வத்திற்கு பலியிட தேர்வாகி இருந்தான்.

அன்றுதான் மாய்லி அம்மாவிற்கு பிரசவமும் நடந்தது, அவளுடைய தம்பி

அங்கு பலியிட்ட பிறகு இங்கு இவளின் தாய்க்கு பிரசவம் நடந்தது.

நீலமா பழம்:

அப்பொழுது ஒரு மருத்துவப்பெண் பிறந்த குழந்தையை தன்னுடைய காலில் வைத்துக் கொண்டு அதற்கு ஒரு பழத்தை எடுத்து அதில் உள்ள கொட்டையை எடுத்து வீசிவிட்டு அதன் சாறை மட்டும் அதன் வாயில் விட்டாள்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த நிரஞ்சா அந்தப் மருத்துவப் பெண்ணிடம் இது என்ன பழம் என்று கேட்டான்.

அதற்கு அவள் இதன் பெயர் நீலமா பழம் என்றாள்.

அந்தக் காலத்தில் பிறந்தவுடன் குழந்தைகள் இறந்ததால் இந்தப் பழத்தை பிறந்த குழந்தைகளுக்கு கொடுக்கும்படி அரசர் ஆணையிட்டார்.

இது தேவதை கொடுத்த பழம் என்றாள், அதற்கு நிரஞ்சா இந்தப் பழத்தை நானும் உண்ணலாமா என்றான்.

உண்ணலாம் என்றாள், ஆனால் கொட்டையை உண்ணக் கூடாது என்றாள். அவனும் தன் நண்பனான சுமகாவை அழைத்துக் கொண்டு அந்த நீலமா பழத்தின் மரத்தில் உள்ள பழங்களை வயிறு முட்ட முட்ட தின்னனான்.

மேலும் படிக்க  புரூஸ் லீ வாழ்க்கை கதை - தமிழில்
கண்பார்வை பறிபோனது:

ஆனால் அவன் தின்ன சிறிது நேரத்தில் அவனின் பார்வைகள் மங்கலாகத் தொடங்கியது.

நேரம் ஆக ஆக அவனின் கண்ணுக்கு அனைத்தும் இருட்டாகவே காட்சியளித்தது. அவனுக்கு கண் தெரியாததால் அலறினான், கத்தினான், கதறினான்.

அவன் பாறைகளின் மீதும் முட்களின் மீதும் மோதி கீழே விழுந்தான்.

நிரஞ்சா

You have been blocked from seeing ads.

அவன் இந்த நீலமா பழத்தை தின்றதால் தான் தனக்கு பார்வை போனது, யாரும் இதை தின்னாதீர்கள் என்று கத்தினான்.

அங்குள்ள மக்கள் கடவுள் கொடுதப் இந்தப் பழத்தை இப்படி சொல்கிறானே என்று கோபம் அடைந்தனர்.

இவன் இப்படி கடவுளுக்கு எதிராக ஆரவாரம் பண்ணியதால் அங்கு உள்ள அரசன் இவனை கைது செய்ய ஆணையிட்டான்.

அவனை கைது செய்து ஒரு பலி பீடத்தில் தள்ளி விட்டனர்.

இவனைப் பார்க்க மாய்லியும் சுமகாவும் தான் எண்ணினார்கள்.

மாய்லி இவனின் அருகில் சென்று கைகளைப் பிடித்தாள்.

நிரஞ்சாவிற்கு மாய்லியைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது, என்ன செய்ய இயலும் அவனால், அவன் அவளின் வாசனையை மட்டுமே உணர முடிந்தது.

நீலமா பழத்தின் கொட்டையின் சாறு:

நிரஞ்சாவின் வாயில் அந்த நீலமா பழத்தின் கொட்டையை அரைத்து ஊற்றி அவனை கொல்ல அரசர் ஆணையிட்டார்.

அந்தக் கொட்டையின் சாற்றை கட்டயமாக நிரஞ்சாவின் வாயில் ஊற்றினார்கள் இரண்டு அடியாட்கள்.

அவனுக்கு அவனைச் சுற்றியுள்ள இடமும் அமைதியாக தெரிந்தது.,

அவன் கண்களை திறக்க முயற்சிக்கிறான் ஆனால் அவனால் முடியவில்லை.

மீண்டும் முயற்சிக்கிறான், அவன் கண்ணில் பார்வை தெளிவாக தெரிந்தது.

அவன் முதலில் இருந்த பலத்தை விட 2 மடங்கு அதிகமான வீரியம் கொண்டவனாக இருந்தான்.

நிரஞ்சா மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான் தனக்கு பார்வை வந்து விட்டதை எண்ணி.

மாய்லியும் சுமகாவும் ரொம்ப மகிழ்ச்சியடைந்தனர்.

நீலமா பழத்தின் கொட்டையை அரைத்துக் குடித்தால் அனைவருக்கும் கண்பார்வை வந்து விடும் என்றான்.

சிலபேர் இவனின் பேச்சை நம்பினர், ஆனால் சில பேர் இவன் பிதற்றிக் கொண்டிருக்கிறான் என்று நினைத்தனர்.

ஆனால் நிரஞ்சன் அனைவர் காலிலும் விழுந்து நம்பச் சொன்னான்.

அவன் அன்று இரவே மாய்லியை அழைத்துக் கொண்டு நீலமா பழத்தின் கொட்டையை அரைத்து அனைவரையும் பருக வைத்தான்.

மக்களின் பார்வை:

மறுநாள் காலையில் அனைவரும் எழுந்து பார்த்தார்கள் அனைவருக்கும் பார்வை வந்து விட்டது.

அனைவரும் தன்னுடைய கணவனையும் குழந்தைகளையும் இயற்கையையும் மரத்தையும் முதல் முறையாகக் கண்டு இரசித்தனர்.

பின்பு தனக்கு பார்வை அளித்த இரஞ்சாவைப் பார்க்க அனைவரும் அவனைத் தேடினர்.

அப்பொழுது ஒருவன் அங்குவந்து பலிபீடத்தில் ஒருவனின் பிணம் கிடைக்கிறது என்றான்.

மேலும் படிக்க  குமண வள்ளல் கதை - தமிழ் கதை

எல்லோருக்கும் பார்வையை வரழைத்த இரஞ்சாவிற்கு மரணமே பரிசாக கிடைத்தது.

மாய்லி தன் காதலான இரஞ்சாவை பிணமாகவே பார்த்தாள்.

சித்தன்னவாசலில் நடந்த காதல் கதை
You have been blocked from seeing ads.