You have been blocked from seeing ads.

கண்ணனின் கதை – தமிழ் குடும்பக் கதை

கண்ணன் தாய்:

சின்னத்தம்பியின் முதல் மனைவி தன்னுடைய பிரசவத்தின் போது ஒரு ஆண்குழந்தையை பெற்றுக்கொடுத்து விட்டு கண்ணை மூடிவிட்டாள்.

அந்தக் குழந்தை பிறந்ததிலிருந்து பசுவம்பாலை மட்டும் கொடுத்து வளர்த்து வந்தார் சின்னத்தம்பி.

அந்தக் குழந்தைக்கு கண்ணன் என்ற பெயரை வைத்தார்.

சின்னத்தம்பியின் உறவினர்கள் அவன் குழந்தையை வைத்து கஷ்டப்படுவதைப் பார்த்து அவனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்தனர்.

சின்னத்தம்பியின் இரண்டாவது மனைவியின் பெயர் பரமேஸ்வரி, அவள் திருமணம் ஆன புதிதில் கண்ணனை நன்றாகத்தான் கவனித்துக் கொண்டாள்.

அவளுக்கென்று ஒரு குழந்தை பிறந்தபின் கண்ணனை சரியாக கவனித்துக் கொள்வதில்லை.

அவனுக்கு ஒரு திண்பண்டங்களைக் கூட கொடுக்க மனசு வராது பரமேஸ்வரிக்கு, அனைத்தையும் அவள் பெற்ற மகனுக்கே மறைத்து வைத்து கொடுப்பாள்.

இதைக் கவனித்த சின்னத்தம்பிக்கு பரமேஸ்வரியின் மீது எல்லையில்லா கோவம் வந்தது.

இதனால் அடிக்கடி அவளுடன் சண்டையும் போட்டுக் கொண்டிருந்தார்.

பரமேஸ்வரியின் மகனுக்கு படிப்பு சுத்தமாக வரவில்லை, நல்ல பழக்கவழக்கங்களும் இல்லை.

ஆனால் கண்ணனோ நல்ல படிக்கும் மாணவனாகவும் நல்ல குணம் உள்ளவனாகவும் இருந்தான்.

பரமேஸ்வரியின் செயல்:

ஒருநாள் பரமேஸ்வரியுன் மகன் வீட்டில் இருந்த 100 ரூபாயை எடுத்துக் கொண்டு அவனுடைய நண்பர்களுடன் குடிக்க கிளம்பி விட்டான் அந்த சிறுவயதிலே.

பரமேஸ்வரிக்கு கண்ணன் தான் எடுத்திருப்பான் என்று அவனை கம்பு உடையும் அளவிற்கு அடிக்கிறாள்.

கண்ணன் நான் அந்தப் பணத்தை எடுக்கவில்லை சித்தி என்னை நம்புங்கள் என்று கதறியும் அவளின் மனம் இறங்காமல் அவனை வீட்டை விட்டு துரத்தினால், அப்பொழுது சின்னத்தம்பி வேலைக்கிச் சென்றிருந்தார்.

பரமேஸ்வரி சந்தர்ப்பம் எப்பொழுது கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருந்தால் கண்ணனை துரத்த, இப்படி ஒரு நல்ல வாய்ப்பை தவற  விடுவாளா.

சின்னத்தம்பி இரவு வீட்டுக்கு வந்ததும் கண்ணன் பணத்தை எடுத்திருக்க மாட்டான் உன்னுடைய மகன் தான் எடுத்து குடித்து இருக்கிறான் என்று அவளை அடித்தார்.

கண்ணனை அந்த ஊர் முழுக்கத் தேடினார் ஆனால் அவன் கிடைக்கவில்லை.

கண்ணனுக்கு அப்பொழுது ஒரு 13 வயதுதான் இருக்கும், அவனுக்கு எங்கே போவது என்றே தெரியாமல் அழுது கொண்டிருந்தான்.

அப்பொழுது அவன் கையில் ஒரு 10 ரூபாய்தான் இருந்தது, அவனின் அப்பா தினமும் கொடுக்கும் காசுகளை சேமித்து வைத்திருந்தான்.

கண்ணனின் வேலை:

அதை வைத்துக்கொண்டு திருப்பூர் மட்டுமே செல்ல முடிந்தது அவனால், ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினான் எதாவது வேலை இருக்கா என்று.

ஒருநாள் முழுவதும் சாப்பிடாமல் வேலை தேடிக் கொண்டிருந்தான்.

ஒரு ஹோட்டலில் வேலை கேட்பதற்காக உள்ளே நுழையும் பொழுது மயக்கம் போட்டு கீழே விழுந்தான்.

மேலும் படிக்க  பகவான் பரசுராமர் வாழ்க்கை கதை

அவனை அந்த ஹோட்டலில் உள்ளவர்கள் தூக்கி தண்ணீர் தெளித்து டீயை குடுக்க வைத்தனர்.

அந்தக் கடைக்காரரிடம் தன்னுடைய சித்தி அவனை வீட்டை விட்டு துரத்தியதையும் அதனால் வேலை தேடுவதாகவும் சொன்னான்.

அவனுக்கு அங்கே வேலை போட்டுக் கொடுத்தார், அந்த ஹோட்டலிலே தங்கிக்கொள்ளவும் சொன்னார்.

அவன் நல்ல திறமையாக வேலை செய்வதோடு மட்டுமல்லாமல் நம்பிக்கை நாணயமாக இருந்தான், இதனால் அவனுக்கு கேசியராக பதவி உயர்வு கொடுத்து சம்பளத்தையும் உயர்த்தினார்.

கண்ணன்

You have been blocked from seeing ads.

அவனும் வருகின்ற சம்பளத்தை வைத்து ஒரு வீடும் கட்டினான்.

பரமேஸ்வரியின் மகன் வளர வளர அனைத்து தீய பழக்கங்களுக்கும் அடிமை ஆனான், அந்த கிராமத்திலே அவனின் நண்பர்களுடன் சேர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கத் துவங்கினான்.

ஒருநாள் பரமேஸ்வரியின் மகனையும் அவனின் நண்பர்களையும் போலீஸ் புடித்துச் சென்றனர், அவர்களின் மேல் ஏற்கனவே பல திருட்டு கேஸ் இருந்தது.

சின்னதம்பியும் மாரடைப்பால் இறந்து போய்விட்டார்.

கண்ணன் வீடு வாங்கிய பிறகு ஒரு காரையும் சொந்தமாக வாங்கினான்.

கோயிலில் பரமேஸ்வரி:

அன்று தான் கார் வாங்கிய முதல்நாள் என்பதால் காரை கோயிலுக்குச் ஓட்டிச் சென்றான்.

கோயிலின் வெளியில் இருந்த பிச்சைக்காரர்களுக்கு கையில் இருந்த காசுகளை போட்டுக் கொண்டே சென்றான்.

அவர்களின் அருகில் ஒரு அம்மா அழுத வண்ணம் அமர்ந்து இருந்தாள், இவனுக்கு அந்த முகத்தை பார்த்ததும் தூக்கி வாரிப்போட்டது.

அது அவனுடைய சித்தி, கண்ணன் அவளிடம் என்னை தெரிகிறதா? நான் தான் கண்ணன் என்று சொன்னதும், ஓ……… என்று கதறி அழுகிறாள்.

நான் உன்னை வீட்டை விட்டு துரத்தியதற்குத்தான் இன்று இந்த நிலைமையில் இருக்கிறேன்.

உன்னுடைய அப்பாவும் இறந்து போய்விட்டார், உன்னுடைய தம்பியும் ஜெயிலில் இருக்கிறான் என்று சொல்லிக் கொண்டே அழுதாள் பரமேஸ்வரி.

கண்ணன் அவளின் கண்ணீரை துடைத்து அவளை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்றான்.

அன்றிலிருந்து பரமேஸ்வரி கண்ணனை தன் மகனாக நினைக்கத் துவங்கினாள்.

தனக்கு துன்பம் செய்தவர்களுக்கும் அவர்களின் இக்கட்டான நிலையில் உதவி புரிந்தாலே போதும் அதுவே அவர்களுக்கு நாம் கொடுக்கும் தண்டனை ஆகும்.

சூழ்ச்சியில் விழுந்து விடாதே – குடும்பக் கதை
You have been blocked from seeing ads.

1 thought on “கண்ணனின் கதை – தமிழ் குடும்பக் கதை”

Comments are closed.