அமைச்சர் கக்கன் வாழ்க்கை வரலாறு

கக்கன் பிறப்பு:

நேர்மையின் அடையாளமாய் திகழ்ந்த கக்கன் மதுரை மாவட்டம் மேலூர் அருகில் உள்ள தும்பைப்பட்டி என்ற கிராமத்தில் காளிகோயிலின் பூசாரியாய் வேலை பார்த்த கக்கன் மற்றும் குப்பி தம்பதியினருக்கு 9 ஜூன் 1908 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார்.

தன்னுடைய பெயரையே தன் மகனுக்கும் வைத்தார் கக்கன்.

கக்கன் தொடக்க கல்வியை திண்ணை பள்ளிக்கூடத்தில் படித்தார், பின்னர் படிக்க வசதி இல்லாததால் வேலைக்குச் சென்றார்.

அவர் வேலைக்குச் சென்று பணம் ஈட்டினாலும் அவருக்கு படிப்புமேல் இருந்த ஆர்வம் போகமலே இருந்தது.

இதனால் கக்கனின் தந்தை அவரிடம் இருந்த நிலத்தை அடமானம் வைத்து அதில் வந்த பணத்தைக் கொண்டு மேற்படிப்படிப்பு படிக்க வைத்தார்.

கக்கன் மேலூரில் உள்ள பி.கே.என் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தார்.

அவர் சிறுவயது முதலே விடுதலைப் போராட்டத்தில் பங்குகொள்ள விரும்பினார்.

காங்கிரஸின் தலைவர் மற்றும் விடுதலைப் போராட்ட வீரருமான அ. வைத்தியநாதன் ஐயர் உடன் பழக்கம் ஏற்பட்டு அரிசனசேவா சங்கத்தில் இணைந்து பணியாற்றினார்.

அரிசனசேவா சங்கம் என்பது காங்கிரஸ் கட்சியால் நடத்தப்பட்ட ஒன்றாகும், இதில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வியை வழங்குவது, அவர்களுக்கு சேவை செய்வதாகும்.

பட்டியல் இனத்தவருகென்று தனி விடுதி அமைத்துக் கொடுத்தது அரிசனசேவா சங்கம், அதில் விடுதி காப்பாளராக பணியாற்றினார் கக்கன்.

பின்பு அரசியலிலும் ஈடுபடத் தொடங்கினார், 1932 ஆம் ஆண்டு சிறாவயல் ப.ஜூவானந்தம் தலைமையில் தொடக்க கல்வி ஆசிரியரான சொர்ணம் பார்வதியை திருமணம் முடித்தார்.

அவர் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பொழுது சொர்ணம் பார்வதியின் சம்பளமே குடும்பத்தை நடத்த உதவியாய் இருந்தது.

காந்தி மதுரைக்கு வரும்பொழுது அவரை சந்தித்து மதுரையின் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றார் கக்கன்.

கக்கன் பலமுறை சுசந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்குச் சென்றுள்ளார்.

அவர் சிறைக்குச் சென்று திரும்பும்பொழுது அவருக்கு காங்கிரஸ் கட்சியில் புதிய பதவிகள் வகிக்கப்பட்டது.

காங்கிரஸில் இணைந்த அவர் கோவில் நுழைவு போராட்டத்தில் கலந்து கொண்டார்.

அதற்காகன வெற்றியையும் பெற்றனர், ஜூலை 8 1938 ஆம் ஆண்டு அரிசனசேவா சங்கத்தின் தலைவர் அ.வைத்தியநாதன் தலைமையில் 5 பட்டியல் இனத்தவர்கள் மீனாட்சியம்மன் கோவிலில் முதன் முதலில் நுழைந்தனர்.

1946 ஆம் ஆண்டு சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் கக்கன், பின்னர் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மதுரை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

காமராசர் முதலமைச்சாராக இருக்கும் பொழுது கக்கன் அமைச்சராக பதவி வகித்தார், ஒரு பட்டியல் இனத்தில் இருந்து சட்டசபைக்கு வந்த முதல் மனிதர் என்ற பெருமைக்குரியவர் கக்கன் ஆவார்.

மேலும் படிக்க  சிப்ரஸ் தளபதி ஒத்தெல்லோ காதல் கதை

காமராசர் கக்கனுக்கு பொதுப்பணித்துறை,, நீர்வளத்துறை, விவசாயத்துறை அமைச்சர் என்று பல பதவிகளை கொடுத்துள்ளார்.

கக்கன்

அவர் விவசாயத்துறை அமைச்சராக இருக்கும்பொழுது 2 விவசாயக் கல்லூரிகளைக் கட்டினார்.

அதோடு மட்டுமல்லாமல் நிறைய கண்மாய்களும் ஏரிகளும் கிணறுகளும் இவரது ஆட்சி காலத்திலே அமைக்கப்பட்டது.

கக்கனின் செயல்:

கக்கன் விவசாயதுறை அமைச்சராக இருக்கும்பொழுது ஒருமுறை மலேசிய விவசாயதுறை அமைச்சர் கக்கனை சந்திப்பதற்காக வந்தார், அப்பொழுது இவரின் பழைய பேனாவைப் பார்த்துவிட்டு தான் வைத்திருந்த தங்கப் பேனாவை கக்கனிடம் கொடுத்தார்.

அதை வாங்கி அரசுக் கணக்கில் சேர்க்க சொன்னார் தன் பணியாளரிடம், இதைப் பார்த்த மலேசிய அமைச்சர் நான் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் அன்பளிப்பாக கொடுத்தேன், இதை கணக்கில் ஏன் அரசு சேர்க்க வேண்டும் என்றார்.

நான் அமைச்சர் பதவியில் இருந்ததாலே இதை எனக்கு கொடுத்தீர்கள், நான் சாதரண மனிதராக இருந்திருந்தால் எனக்கு கொடுத்திருக்க மாட்டீர்கள், அதனால் தான் பதவியை விட்டு விலகும் பொழுது இதை அரசுக்கு கொடுத்து விடுவேன் என்றார்.

இதனால் கோபம் கொண்ட மலேசிய அமைச்சரே அந்தப் பேனாவை திரும்பப் பெற்றுச் சென்றார்.

கக்கன் தன் வாழ்நாளில் ஒரு ரூபாயைக் கூட லஞ்சமாகவோ அன்பளிப்பாகவோ பெற்றதில்லை.

அவர் அரசு பணிகளுக்காக மட்டுமே அரசு வாகனத்தைப் பயன்படுத்துவார், மத்த காரியங்களுக்கு நடந்து தான் செல்வார்.

அவர் பட்டியல் இனத்து மாணவர்கள் படிப்பதற்கு இரவுநேர பள்ளியை துவங்கினார், அவர்கள் தங்கிப் படிப்பதற்கு விடுதிகளைக் கட்டிக் கொடுத்தார்.

1955 ஆம் ஆண்டு வைத்தியநாத ஐயர் இறந்ததற்கு கக்கனோ அவரது மகன்களைப் போலவே தன் தலையை மொட்டை அடித்துக் கொண்டார்.

இவர் அமைச்சர் பதவியில் இருந்து விலகும் பொழுது வாடகை வீட்டிற்காக தெரு தெருவாக அழைந்தார், தான் அமைச்சராக இருந்த காலத்தில் ஒரு வீடு கூட சொந்தமாக கட்டாமல் இருந்தார்.

பின்னர் அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதால் மதுரை அரசு மருத்துவமனையில் சாதரண வார்டில் அனுமதிக்கப்பட்டு தரையில் படுத்து இருந்து சிகிச்சை பெற்று வந்தார்.

அப்பொழுது அந்த மருத்துவமனைக்கு வந்த எம்.ஜி.ஆர் அவரை பெட் வசதி இருக்கும் அறைக்கு மாற்றச் சொன்னார்.

பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் அரசு மருத்துவ மனையிலே இறந்தும் போனார்.

அவருடைய 6 பிள்ளைகளையும் அரசுப் பள்ளிகளில் தான் படிக்க வைத்தார்.

மக்களுக்கு சேவை செய்வதற்காகவே அரசியலில் நுழைந்து தனக்கென்று ஒன்றும் வைத்துக் கொள்ளாத மாமனிதர் ஆவார், ஆனால் இதில் வருந்தக்கூடிய விஷயம் என்னவென்றால், மற்ற அரசியல் தியாகிகள் மக்களுக்கு தெரிந்ததில் கால்வாசி கூட கக்கனை யாருக்கும் தெரியாதது தான்.

காமராஜர் சிறுவயது கதை – தமிழில்