You have been blocked from seeing ads.

கடவுள் போட்ட முடிச்சு – காதல் கதை

கவிதாவின் இளமைகாலம்:

கவிதா எட்டாவது படித்து விட்டு வீட்டில் இருக்கும் பொழுது யாராவது வாழைத்தோப்புகளுக்கும் கொய்யாத் தோப்புகளுக்கும் வேலைக்கு கூப்பிட்டால் அவர்களுடன் வேலைக்குச் சென்று வருவாள்.

கவிதா ஒரு வாயாடி, எல்லோரிடமும் சகஜமாக பேசும் குணம் கொள்பவள்.

அங்கு வேலைக்கு செல்லும் இடத்தில் ஒரே கூத்தும் கும்மாளமுமாக இருப்பாள், அனைவரும் அதுனாலே கவிதாவை வம்படியாக அழைத்துக் கொண்டு செல்வார்கள்

அவள் வேலை செய்யவில்லை என்றாலும் பேச்சுத்துணைக்கு அழைத்துச் செல்வார்கள், இப்படி மூன்று வருடம் ஓடி விட்டது.

கவிதாவின் தாத்தா வீடு இரண்டு ஊர் தள்ளி இருந்தது, இவளும் அடிக்கடி அவளின் தாத்தாவைப் பார்க்கச் செல்வாள்.

அவள் தாத்தா வீட்டின் அருகில் வசிப்பவன் தான் குமார், அவன் கவிதாவை வச்ச கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே இருப்பான்.

கவிதாவின் காதல்:

இதை கண்டும் காணாமல் செல்வாள், நாளடைவில் கவிதாவும் அவன் பார்த்துக் கொண்டிருந்தால் இவளும் பதிலுக்கு வச்ச கண் வாங்காமல் பார்த்தால்.

இவன் கண் அடித்தான் அவளைப் பார்த்து, அவள் வெட்கி கீழே குனிந்து கொண்டாள்.

பார்வையில் ஆரம்பித்த அவன் கொஞ்சம் கொஞ்சமாக பேசி அவளை மயக்க ஆரம்பித்தான்.

முதலில் எல்லாம் கவிதா தன் தாத்தாவைப் பார்க்க மாதம் 2 முறை தான் வருவாள், இப்பொழுது எல்லாம் மாதம் 6 முறை வந்து போய்க் கொண்டிருந்தாள்.

கவிதாவின் வயது அவளை காதலில் விழ வைத்தது.

குமாருக்கும் கவிதாவின் வயது தான் இருக்கும் அவன் கல்லு வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

கவிதா ஒரு கருவாச்சியாக இருந்தாள், அதனால் குமார் லேசாக அவளை அழகி என்று சொன்னால் போதும் ஆனந்தத்தில் மிதக்க ஆரம்பித்து விடுவாள்.

அவளை யாரும் இப்படி இதுக்கு முன்னாடி சொன்னதில்லை, அதனால் குமாரை அவளுக்கு ரொம்ப பிடிக்க ஆரம்பித்து விட்டது.

எல்லா ஆண்களும் பெண்களை மயக்க இந்த வார்த்தைகளே பல வருடங்களாக சொல்லிக்கொண்டு வந்தாலும் அதை நம்பி ஏமாறும் பெண்களின் சதவீதமும் இன்னும் குறையவில்லை இந்த உலகத்தில்.

குமாரும் அவள் தாத்தா இல்லாத சமயத்தில் கவிதாவிடம் எல்லை மீறினான், இவளும் காதல் மயக்கத்தில் தன் கற்பு பரிபோவதை அறியாதவளாய் இருந்தாள்.

ஒரு 2 வாரம் தாத்தா வீட்டிலே தங்கினாள்.

கவிதாவின் அம்மா வேலைக்கி உன்னை வரச் சொல்றாங்க வா என்று அழைத்துச் சென்று விட்டாள்

அவள் வேலைக்கு செல்லும் பொழுது முன்பு பேசியதைப் போல் கலகலவென்று யாரிடமும் பேசாமல் சோர்வாக இருந்தாள்.

அடிக்கடி ஓடிப் போய் உக்காந்து கொள்வாள் வேலை பார்க்காமல்.

எல்லோரும் உடம்பு சரி இல்லையா என்று கேட்டதும் இல்லக்கா நல்லாதான் இருக்கேன் என்றாள்.

மேலும் படிக்க  MOTIVATIONAL STORY - மாயாவின் அவமானம்

வேலை விட்டு வரும்பொழுது இவள் மயங்கி கீழே விழுந்தாள், இவளுக்கு தண்ணீர் கொடுத்து கைதாங்கலாக வீட்டுக்கு தூக்கி கொண்டு வந்தார்கள்.

கவிதாவின் செயல்:

வீட்டிற்கு வந்ததிலிருந்து வாந்தியாக எடுத்துக் கொண்டிருந்தாள், கவிதாவின் அம்மா பதறி அடித்துக் கொண்டு பக்கத்து வீட்டுக்கு ஓடினாள் தேன் வாங்க, தேனை குடித்தாலாவது வாந்தி நிக்குமுனு நினைச்சா.

பக்கத்து வீட்டுப் பாட்டிக்கு சந்தேகம் வந்தது கவிதாவின் நாடியைப் பிடித்துப் பார்த்து விட்டு இவ முழுகாம இருக்கா என்றார்.

இதைக் கேட்டதும் கவிதாவின் அம்மா ஒப்பாரி வைத்துக் கொண்டே வெளியில் கிடந்த துடப்பத்தை எடுத்து வந்து கவிதாவின் தோல் பிய்யும் அளவிற்கு அடித்தாள்.

அக்கப் பக்கத்தினர் துடப்பத்தை பறித்து எரிந்து விட்டு, யார் என்னனு விசாரிக்காம அடிச்சா சரி ஆகிடுமா என்றனர்.

அவள் அம்மா யாருடி இப்புடி பண்ணுனது சொல்லு என்று கதறினாள், குமாரு தான் நம்ம தாத்தா பக்கத்து வீட்டு பையன் என்றாள்.

கவிதா ஊர்க்காரர்கள் குமாரையும் அடித்து உதைத்தனர், பின்பு அவனை கவிதாவின் கழுத்தில் தாலி கட்ட வைத்தனர்.

கவிதாவும் குமாரின் குடிசை வீட்டிலே குடும்பம் நடத்தினாள், குமாருக்கு ஒரு சொத்துக் கூட கிடையாது, ஒரு குடிசை வீடு மட்டும் தான்.

கவிதா 6 மாசமாக இருக்கும் பொழுதே வெளியூருக்குச் சென்று வேலை பார்த்து வருகிறேன் என்று கிளம்பினான் குமார்.

குமாரின் எண்ணம்:

குமார் அவளை திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தில் பழகவில்லை அவளை இவனின் இச்சைக்குப் பயன்படுத்திவிட்டு எப்படியும் கழட்டி விட்டு விடலாம் என்று எண்ணியிருந்தான்.

ஆனால் கவிதா ஊர்க்காரர்கள் உதைத்த உதையில் பதில் ஏதும் சொல்லாமல் தாலியைக் கட்டினான்.

குமார் வெளியூருக்குச் சென்று அழகான ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொண்டு அங்கே வாழ்ந்து கொண்டிருந்தான்.

வெளியூரில் இருந்து வந்த குமாரின் ஊர்க்காரன் ஒருவன் சொல்லித்தான் கவிதாவிற்கு அவன் வேறு திருமணம் செய்து கொண்டான் என்றே தெரிந்தது.

கவிதாவுக்கும் குழந்தை பிறந்தது, குழந்தை பிறந்த 4 மாதத்திலே அவள் குழந்தையை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள செங்கல் சூளைக்கு வேலைக்குச் செல்லுவாள்.

குழந்தையை ஒரு மரத்தடியில் தொட்டிகட்டி போட்டு விட்டு வேலையைப் பார்ப்பாள்.

அவள் குழந்தையின் அருகில் ஒரு தொட்டிலில் சேதுவின் குழந்தையும் தூங்கிக் கொண்டிருக்கும்.

சேதுவின் மனைவியும் 10 மாத கைக்குழந்தையை விட்டுவிட்டு தான் காதலித்தவனுடம் ஓடி விட்டாள்.

அன்றிலிருந்து அந்தக் குழந்தைக்கு தாயாகவும் தந்தையாகவும் இருந்து கவனித்துக் கொண்டிருந்தான் சேது.

செங்கல் சூளையில் வேலை பார்க்கும் ஆண்கள் கவிதாவின் கணவன் ஓடிப் போன விஷயம் தெரிந்ததும் அவளிடம் தவறாக நடக்க பலமுறை முயன்றன.

மேலும் படிக்க  மாவீரன் கர்ணன் கதை – மகாபராதக் கிளைக்கதை

ஒவ்வொரு முறையும் சேது அவளை காப்பாற்றுவான்.

சேதுவும் அவளுக்கு பாதுகாப்பு கிடைக்க வேண்டும் இவள் தனியாக இருக்கும் வரை யாராவது தொந்தரவு செய்வார்கள் என்று நினைத்தான்.

கடவுள் போட்ட முடிச்சு:

இவளை நாமே திருமணம் செய்து கொண்டால் இரண்டு குழந்தைக்கும் அப்பாவும் அம்மாவும் கிடைக்கும், இவளுக்கும் பாதுகாப்பாக நாம் இருக்கலாம் என்று எண்ணினான்.

கவிதா

You have been blocked from seeing ads.

சேது கவிதாவிடம் வந்து நாம் இருவரும் ஏன் இப்படி குழந்தைகளை வைத்து கஷ்டப்பட வேண்டும், இருவரும் திருமணம் செய்து கொண்டால் இருவருக்கும் துணைக்குத் துணையாக இருக்கும், நம் குழந்தைகளுக்கும் ஒரு தாய் தந்தை கிடைக்கும் உன்னுடைய முடிவு என்ன என்று கேட்டான்.

அவளுக்கு என்ன முடிவு எடுப்பதென்று தெரியவில்லை, என் தாய் தந்தையிடம் கேளுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றாள்.

கவிதாவின் தாய் தந்தையிடம் முறைப்படி பெண் கேட்டான், கவிதாவின் பெற்றோரும் முழு மனதோடு சம்மதித்தனர்.

அவர்களும் பெண்ணின் வாழ்கைக்கு ஒரு விடிவுகாலம் வந்ததை நினைத்து உள்ளுக்குள் மகிழ்ந்தனர்.

இருவருக்கும் ஒரு கோவிலில் திருமணம் முடித்து வைத்தனர்.

நாம் என்ன தான் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் கடவுள் போட்டு வைத்த முடிச்சே இறுதியில் நிலைபெற்று இருக்கும்.

காலம் உள்ளவரை காத்திருந்தான்
You have been blocked from seeing ads.

1 thought on “கடவுள் போட்ட முடிச்சு – காதல் கதை”

Comments are closed.