You have been blocked from seeing ads.

காலம் உள்ளவரை காத்திருந்தான்

முதல் சந்திப்பு:

பாண்டி கடைக்கி போய் 5 முட்டையும் சீனியும் வாங்கிவிட்டு வாப்பா என்று பாண்டியின் அம்மா சொன்னவுடன் பாண்டி தன்னுடைய சைக்கிளை எடுத்துக் கொண்டு கடைக்கு விரைந்தான்.

அவன் கடையின் அருகில் செல்லும் பொழுது பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்த ஒரு மூதாட்டி மயங்கி கீழே விழுந்தாள்.

அந்தக் கடையின் அருகில் ஒரு 12 பேர் இருந்திருப்பார்கள் ஆனால் யாரும் கண்டு கொள்ளவில்லை, ஒரு இளம்பெண் மட்டும் ஓடி வந்து அந்தப் பாட்டியை தன் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு தன்னிடம் இருந்த தண்ணியை எடுத்து பாட்டியின் முகத்தில் வேகமாக அடித்தாள்.

அந்தப் பாட்டிக்கி மயக்கம் தெளிந்து கண் விழிக்கும் பொழுது தண்ணீர் குடிக்க வைத்தாள்.

பின்பு அருகில் இருந்த கடைக்குச் சென்று ஒரு டீயையும் வடையையும் வாங்கி வந்து சாப்பிட வைத்து விட்டு விசாரித்தாள், எங்கே போக வேண்டும் பாட்டி என்று.

அந்தப்பாட்டி பண்ணையூருக்குப் போகனும் தாயி என்றாள், அவள் அருகில் நின்ற ஆட்டோவைப் பிடித்து அதில் ஏற்றி விட்டாள் தன்னிடம் இருந்த பணத்தை ஆட்டோக்காரரிடம் கொடுத்து பத்ரமாக இறக்கி விடுங்க என்று கூறினாள்.

அருகில் இருந்தவர்கள் வேடிக்கை மட்டுமே பார்த்தனர், பாண்டிக்கு இந்த இளம்பெண்ணின் இரக்க குணம் ஏதோ செய்யத் தொடங்கியது.

அவள் செல்லும் வரை கடையை விட்டு நகராமல் பாண்டி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளும் ஒரு பேருந்து வந்தவுடன் அதில் ஏறிச் சென்றுவிட்டாள்.

பின்பு பாண்டி சீனியையும் முட்டையையும் வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் சென்றான்.

அவன் வீட்டிற்கு சென்றும் கூட அந்த இளம்பெண்ணின் முகம் கண்ணுக்குள் வந்து போய்க் கொண்டே இருந்தது.

இரவு உணவு முடித்துவிட்டு சீக்கிரம் தூங்க போய்விட்டான் பாண்டி நாளைக்கி முதல்நாள் கல்லூரிக்கிச் செல்ல வேண்டும் என்று.

பாண்டிக்கு ஒருவித ஆர்வமும் பயமும் இருந்தது கல்லூரியை நினைத்து.

கல்லூரி வாழ்க்கை:

பாண்டியும் அவனுடைய நண்பனும் நன்றாக படிப்பவர்கள் என்பதால் அவர்கள் இருவரும் முதல் பெஞ்சிலேயே அமர்ந்து கொண்டனர்.

அப்பொழுது அவளின் வகுப்புக்கு நிறைய பெண்கள் வந்து கொண்டிருந்தனர்.

அவனுக்கு நடப்பது கனவா இல்லை நினைவா என்று தோன்றியது, நேத்துப்பார்த்த அதே அழகிய நங்கை அவனின் வகுப்புக்குள் வந்து கொண்டிருந்தாள்.

அவளும் நன்றாக படிக்கும் பெண் போல முதல் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

பாண்டிக்கு மனதில் புதுவித ஆனந்தமாக இருந்தது, இந்த குணவதியின் பெயர் என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

அப்பொழுது அவளின் தோழி ஒருத்தி அன்பு இந்த ட்ரெஸ் உனக்கு நல்ல இருக்குடி என்றாள்.

மேலும் படிக்க  அப்துல்கலாம் சொல்லும் கதை - MORAL STORY

பொருத்தமான பெயரைத்தான் வைத்திருக்கிறார்கள் அவளின் பெற்றோர் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்தான்.

அந்த வகுப்பில் உள்ள பெண்கள் அனைவரும் ஆண்களிடம் சகஜமாக பேசினர், நண்பர்களாகவும் காதலர்களாகவும் சகோதர்களாகவும்.

ஆனால் அன்பு எந்த ஒரு ஆணின் முகத்தையும் அண்ணாந்து கூட பார்த்தது கிடையாது.

எதாவது படிப்பு சம்பந்தாமா கேட்டால் ஓரிரு வார்த்தையில் பதில் சொல்லி விட்டு நகர்ந்து விடுவாள்.

அவளின் இந்தச் செயலும் பாண்டியை மேலும் காதலிக்க தூண்டியது.

பாண்டியும் பலமுறை அன்புவிடம் காதலைச் சொல்ல முயன்றான், ஆனால் அவள் திரும்பிக் கூட பார்க்க மாட்டாள்.

ஒருநாள் வகுப்பில் இவள் மட்டும் அமர்ந்து செமினாருக்கு நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது லன்ச் ப்ரேக் என்பதால் எல்லோரும் சாப்பிட்டு விட்டு லேட்டாகத்தான் வகுப்புக்கு வருவாங்க.

பாண்டியும் செமினாருக்கு நோட்ஸ் எடுப்பதற்காக அன்று சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு வகுப்பிற்கு வந்தான்.

காதலை சொல்லும் பாண்டி:

பாண்டியும் அன்பும் வகுப்பில் நன்றாக படிக்கும் மாணவர்கள் என்பதால் அவர்கள் இருவரையும் ஆசிரியர் முதலில் செமினார் எடுக்கச் சொல்லியிருந்தார்.

பாண்டி இன்று தன் காதலை சொல்லிவிட வேண்டும் எல்லோரும் வருவதற்கு முன்னரே என்று நினைத்து, அன்புவிடம் ஏதோ சந்தேகம் கேட்பது போல் அவளின் அருகில் சென்று தான் காதலிப்பதாக தெரிவித்தான்.

அதற்கு அன்பு என்னை தொந்தரவு செய்யாதீர்கள் எனக்கு இது எல்லாம் பிடிக்காது என்று கூறினாள்.

நீ என்னை காதலிக்க வேண்டாம் அன்பு என்னை திருமணம் செய்துகொள் என்றான்.

என்னை மன்னித்துவிடுங்கள் நீங்கள் வேறு ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றாள்.

அதற்கு பாண்டி, நீ எப்படி இருந்தாலும் ஒருநாள் திருமணம் செய்து கொள்ளப் போகிறாய் தானே, அது நானா இருந்தால் என்ன? என்றான்.

அன்பு கோவத்துடன் நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறிவிட்டு வகுப்பை விட்டு வெளியே சென்றாள்.

பாண்டிக்கு ஏமாற்றமாக இருந்தாலும் அவளின் வார்த்தைக்குப் பின்னால் ஏதோ வலி இருக்கிறது என்று தோன்றியது.

அவனும் அதற்குப் பிறகு அவளை தொந்தரவு செய்யவில்லை. நல்ல நிலைக்கு வந்தவுடன் அவர்கள் வீட்டிற்குச் சென்று பேசிக்கொள்ளலாம் என்று நினைத்தான்.

அவன் கல்லூரி முடித்துவிட்டு ஒரு தனியார் பேங்கில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

பெண் கேட்டல்:

தன்னுடைய பெற்றோர்களை அழைத்துக் கொண்டு அன்புவை பெண்கேட்கச் சென்றான்.

ஆனால் அன்பு அப்பொழுதும் ஒத்துக் கொள்ளவில்லை, இவனுக்கு காரணம் புரியவில்லை.

இவளின் தாயை தனியாக அழைத்து நான் இவளை கல்லூரியில் படிக்கும் பொழுதில் இருந்தே காதலித்து வருகிறேன்.

மேலும் படிக்க  பிருத்திவிராஜன் சம்யுக்தாவின் காதல் கதை

அவள் அப்பொழுதே என் காதலைய் ஏற்கவில்லை, ஆனால் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அப்பொழுது சொல்லும் பொழுதே அவளின் மனதில் ஏதோ வலி இருந்ததாகத் தெரிந்தது.

அன்புக்கு எதாவது காதல் தோல்வியா என்று கேட்டான்.

அதற்கு அன்புவின் தாய் இல்லப்பா, அவளுக்கு ஒரு 12 வயசு நடக்கும் பொழுது ஒரு கொள்ளைக்கார கும்பல் இவளை கடத்திச் சென்று பாலியல் கொடுமைகள் செய்தனர்.

பாண்டி அன்பு

You have been blocked from seeing ads.

நாங்களும் பிள்ளையை காணுமுனு எல்லா இடமும் தேடினோம், ஒரு காட்டுக்குள்ள உடம்பெல்லாம் காயத்துடன் சுயநினைவு இல்லாமல் கிடந்தாள்.

இந்தச் சம்பவம் நடந்ததிலிருந்து நாங்க அந்த ஊரை விட்டுவிட்டு இந்த ஊருக்கு வந்துடோம்.

அன்றிலிருந்து இவளுக்கு ஆண்கள் என்றாலே பிடிக்காது, அவளின் அப்பா அண்ணன் கிட்ட கூட ஒழுங்கா பேச மாட்டா ஒரு வார்த்தையில் மட்டும் தான் பதில் சொல்லுவா.

நாங்களும் திருமணம் பண்ணிக்கொள் என்று கெஞ்சாத நாளிலில்லை தம்பி என்று சொல்லி கண்ணீர் விட்டாள்.

பாண்டிக்கு இதைக் கேட்ட பிறகுதான் இன்னும் அவளை அதிகமாக காதலிக்க வேண்டும் என்று தோன்றியது.

பாண்டி அன்புவிடம் உனக்கு நடந்தது ஒரு விபத்து தான் அதை நினைத்து நீயேன் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க வேண்டும், உன்னை இராணி மாதிரி நான் பார்த்துக் கொள்கிறேன் என்னை திருமணம் செய்து கொள் என்று வேண்டினான்.

ஆனால் அவன் பேசியது அவள் மனதின் எண்ணைத்தை துளி அளவு கூட மாற்றவில்லை.

பாண்டி அன்புவிடம் உன் மனம் மாறும்வரை உனக்காக காத்திருப்பேன்.

உன்னைத் தவிர வேறு ஒரு பெண்ணை இந்தச் ஜென்மத்தில் மணக்க மாட்டேன், நீ ஒருவளே என் இதயராணி என்று கூறி விட்டு வந்தான்.

பாண்டியும் அவளுக்கு மனம் மாறும் என்று காத்துக் கொண்டிருந்தான்.

அவனுக்கு வயதும் 40 ஐத் தொட்டது அப்பொழுதும் காத்துக் கொண்டிருந்தான்.

காத்திருந்தான் காலம் உள்ளவரை……………..தன் காதலிக்காக……….

நீதான் என் கண்மணி – காதல் கதை
You have been blocked from seeing ads.

1 thought on “காலம் உள்ளவரை காத்திருந்தான்”

Comments are closed.