You have been blocked from seeing ads.

ஜோதா – அக்பர் காதல் கதை – தமிழில்

அக்பர் இளமைக்காலம்:

கிபி 16 ஆம் நூற்றாண்டில் முகலாய பேரசராக விளங்கியவர் தான் அக்பர்.

இவர் முகலாய அரசை தோற்றுவித்த பேரரசர் பாபரின் பேரனும் ஹிமாயுனின் மகனும் ஆவார்.

முகலாய அரசு ஆப்கானிஸ்தானிலிருந்து வங்கக்கடல் வரை விரிந்து காணப்பட்டது.

அக்பரின் தந்தை ஹிமாயுதீன் அக்பருக்கு 13 வயது இருக்கும் பொழுதே இறந்து விட்டதால் அக்பரின் தளபதியான பைரவ் கான் அக்பருக்கு 13 வயதிலே முடிசூட்டினார்.

அக்பர் சிறுவயதாக இருந்ததால் அண்டை நாட்டு அரசர்கள் டெல்லியை நோக்கி படையெடுத்தனர்.

அக்பரின் தந்தைக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்த பைரவ் கான் அக்பருக்கும் பக்கபலமாக இருந்தார்.

டெல்லியை நோக்கி படையெடுத்து வரும் அனைத்து மன்னர்களையும் தோல்வியுறச்செய்து அவர்களின் உயிரையும் பறித்தார் பைரவ் கான்.

அக்பர் வாலிபனாக வந்த பிறகு தன் நாட்டுடன் போர் புரிந்து தோல்வியுற்ற மன்னர்களின் மகள்களை மணந்தார்.

அக்பர் திருமணம்:

அப்பொழுது ஜெய்பூரை ஆட்சி செய்த இந்து மன்னரான பார்மல் தன்னுடைய சாம்ராஜ்யத்தை காத்துக் கொள்வதற்காக அக்பருக்கு தன்னுடைய மகள் ஹீரா என்ற ஜோதாவை மணக்க முடிவு செய்தார்.

இந்த திருமணத்தில் அக்பருக்கும் முழு சம்மதம் என்றாலும் ஜோதாவிற்கு ஒரு துளி கூட விருப்பம் இல்லாமல் இருந்தாள்.

அரசியல் காரணங்களுக்காக தன்னை பயன்படுத்துகிறார்கள் என்று மனம் வருந்தினாள் ஜோதா.

ஆனால் அக்பர் ஜோதாவின் பேரைக் கேட்டதுமே திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார், அவர் ஜோதாவின் பேரழகை ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தார்.

ஜோதாவை திருமணம் செய்து கொள்ள பல நாட்டு மன்னர்களும் வரிசையில் நின்னனர், ஆனால் ஜோதாவின் தந்தை தன் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்க்காக ஜோதாவின் திருமணத்தை ஆயுதமாக பயன்படுத்தினார்.

ஜோதா அக்பரை திருமணம் செய்து கொள்ள சில நிபந்தனைகளை கூறினாள் அக்பரிடம்.

அக்பர் முஸ்லீம் என்பதால் தன்னை அவருடைய மதத்திற்கு மாத வற்புறுத்த கூடாது, அவருடைய அரண்மனையில் தனக்கு ஒரு கிருஷ்ணர் கோயில் கட்டி தரவேண்டும்.

இந்த இரண்டு நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டால் திருமணம் செய்து கொள்ளலாம், இல்லையென்றால் வேண்டாம் என்றாள்.

அக்பரோ ஜோதாவின் நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டார்.

இருவருக்கும் திருமணம் கோலகாலமாக நடந்தது.

திருமணம் முடிந்தாலும் ஜோதாவின் மனம் அக்பரை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை, இல்லற வாழ்வில் ஈடுபடாமல் அக்பரின் மேல் வெறுப்பை மட்டுமே காட்டிக் கொண்டிருந்தாள் ஜோதா.

ஜோதா அக்பரின் காதல்:

ஆனால் அக்பருக்கு ஜோதாவின் மேல் உள்ள அன்பை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் இருந்தார், அவளை தன்னுடைய உண்மையான காதலால் மட்டுமே கட்டிப் போட வேண்டும் என்று நினைத்தார்.

மேலும் படிக்க  உயிருக்கு கொடுத்த இறுதிப் பரிசு

ஜோதாவிற்காக அரண்மனையின் உள்ளே ஒரு இந்துக் கோயிலைக் கட்டினார்.

அக்பர்

You have been blocked from seeing ads.

அவளின் அனைத்து தேவைகளையும் செய்து கொண்டே இருந்தார் அக்பர் . பல நாட்டு மன்னர்களை போரில் வீழ்த்தும் அக்பருக்கு ஜோதாவின் குட்டி இதயத்திற்குள் இடம்பிடிக்க தெரியாதவராய் இருந்தார்.

நாளடைவில் அக்பரின் காதலால் ஜோதாவின் மனம் மாறத் தொடங்கியது, அவளும் அக்பரை காதலிக்கத் தொடங்கினாள்.

அவர்கள் காதலின் சின்னமாக பிறந்தவர் தான் ஜஹாங்கிர் என்றழைக்கப்பட்ட சலீம்.

அக்பருக்கு பல மனைவிகள் இருந்தாலும் அவரின் இதயராணியாக இருந்தது ஜோதா மட்டுமே.

சலீம் – அனார்கலி காதல் கதை
You have been blocked from seeing ads.