ஜாக் மா வாழ்க்கை கதை – MOTIVATIONAL STORY

ஜாக் மா சீனாவில் உள்ள ஹாங்சௌ என்ற இடத்தில் 1964 ஆம் ஆண்டு அக்டோபர் 15 பிறந்தார்.

இவருக்கு ஒரு அண்ணனும் ஒரு தங்கையும் இருந்தனர், இவர் சிறுவயதில் இருந்தே தோல்விகளையும் அவமானங்களையும் சந்தித்து வந்தார்.

இவர் துவக்கப்பள்ளி படிக்கும் பொழுது 2, 3 முறை ஒரே வகுப்பில் படித்தார், அவரின் அந்த பிஞ்சி வயதிலே தோல்விகள் அவரை தொடர ஆரம்பித்தது.

பள்ளி வாழ்க்கையில் தான் பல வருடம் படித்தார் என்று பார்த்தால் கல்லூரி வாழ்க்கையிலும் அப்படித்தான் படிக்க நேர்ந்தது.

அவருடைய உருவ தோற்றத்தைக் கண்டும் பல மாணவர்கள் கேலி செய்திருக்கிறார்கள்.

ஜாக் மா

படிப்பு மட்டும் தான் வாழ்க்கை, அது வரவில்லை என்றால் நம்மால் வாழ்வில் முன்னேறவே முடியாது என்று நினைக்கும் மனிதர்களுக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாய் இருக்கிறார் ஜாக் மா.

இவர் வாழ்வில் வெற்றியை சந்திந்தத்தை விட தோல்விகளையே அதிகமாக சந்தித்தார், ஆனால் அவர் தோல்விகளைக் கண்டு துவண்டு போகாமல், அந்த தோல்வியில் இருந்து பல அனுபங்களைக் கற்றுக் கொண்டார்.

இன்று உலக நாடுகள் அனைத்தும் திரும்பி பார்க்கும் அளவிற்கு வளர்ந்து நிற்ப்பதற்கு காரணம் அவருடைய நம்பிக்கையும் விடாமுயற்சி மட்டுமே.

ஜாக் மா சிறுவயதில் இருந்தே ஆங்கிலம் கற்பத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

இதனால் சீனாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவருக்கு இலவசமாக சுற்றுலா வழிகாட்டியாக திகழ்ந்தார், அப்பொழுது தான் ஆங்கிலம் கற்க முடியும் என்ற எண்ணத்தில் இவ்வாறு செய்தார்.

பின்னர் இவர் ஹாங்சௌவில் உள்ள நார்மல் பல்கலைகழகத்தில் ஆங்கிலத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.

இந்தக் கல்லூரியிலும் இவருக்கு வெகு எளிமையாக இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை, பலமுறை இவரது விண்ணப்பத்தை நிராகரித்தது அந்தக் கல்லூரி. ஆனால், சற்றும் தளராத ஜாக் மா அவரது விடாமுயற்சியினால் அந்தக் கல்லூரியில் சேர்ந்தார்.

விடாமுயற்ச்சி !

கல்லூரி படிப்பை முடித்த அவர் பல நிறுவனங்களில் வேலைக்காக ஏறி இறங்கினார், ஆனால் தோல்விகள் மட்டுமே துரத்திக் கொண்டிருந்தது.

இவரது வாழ்வில் நடந்த இன்னல்களை இவரது இன்டர்வியுவில் பலமுறை கூறியுள்ளார்.

போலீஸ் தேர்வுக்கு இவருடன் வந்த 4 பேருக்கு வேலை கிடைத்தது ஆனால் இவருக்கு மட்டும் வேலை கிடைக்கவில்லை.

அதே போல் கே. எப். சி நிறுவனத்தில் வேலைக்குச் சென்ற 24 பேரில் அனைவருக்கும் வேலை கிடைத்தது இவரைத் தவிர.

இவரும் 40 க்கு மேற்பட்ட கம்பெனிகளில் வேலை கேட்டு அலுத்துப் போய்விட்டார், பின்னர் அவர் படித்த கல்லூரியிலே ஆங்கிலப் பேராசியராக பணியாற்றினார்.அவர் வேலை பார்த்துக் கொண்டே டியான்சி பல்கலைகழகத்தில் எம்.பி.ஏ படித்துக் கொண்டிருந்தார்.

மேலும் படிக்க  அப்துல்கலாம் சொல்லும் கதை - MORAL STORY

இன்று வேலை தேடி கிடைக்காமல் இருக்கும் இளைஞர்கள் ஜாக் மா வின் வாழ்க்கைப் போராட்டத்தை நினைவு கூர்ந்து பார்த்தாலே போதும் இதெல்லாம் ஒரு கஷ்டமா என்று தான் நினைக்கத் தோன்றும்.

ஜாக் மா

இன்று அடித்தளத்தில் இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஜாக் மா தான் ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார்.

இவர் ஒருமுறை அமெரிக்காவிற்கு சென்ற பொழுது இணையதளத்தின் மூலம் அனைத்து நாடுகளில் உள்ள பீரை தேடி உள்ளார், அப்பொழுது சீனாவில் உள்ள பீரையும் சர்ச் செய்து உள்ளார், ஆனால் சீனாவை பற்றிய ஒரு செய்திகள் கூட இணையத்தில் இல்லாமல் இருந்தது.

அப்பொழுதுதான் அவருக்கு தெரிந்தது சீன மக்களுக்கு இணையம் என்பதைப் பற்றி முற்றிலும் அறிமுகம் இல்லாமல் இருக்கிறார்கள் என்று.

    சாதனை!

பின்பு தன் அமெரிக்க நண்பர்களைக் கொண்டு சீன யெல்லோபபேஜ் என்ற இணையத்தை உருவாக்கினார்.

பின்னர் 1999 ஆம் ஆண்டு தன் நண்பர்களுடன் உதவியுடன் அலிபாபா என்ற வலைதளத்தை தொடங்கினார், ஆனால் முதலில் இந்த வலைதளத்தை உருவாக்க பணமுதலீடு செய்ய யாரும் முன்வரவில்லை, இவர் பல வங்கிகளில் கடன் பெற்றுத்தான் நடத்தினார்.

முதல் இரண்டு ஆண்டுகளில் நஷ்டமாக இருந்தது, ஆனால் ஜாக் மா விற்கு நம்பிக்கை மட்டும் குறையவில்லை, எப்படியும் முன்னேறி விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் கொண்டிருந்தார்.

அவருக்கு லாபம் ஈட்டித் தராமல் இருந்தாலும் இரவும் பகலும் அந்த வலைதளத்திற்காக உழைத்துக் கொண்டிருந்தார்.

அவர் நினைத்தது போல வலைதளம் தொடங்கி மூன்றாம் ஆண்டு லாபம் பார்க்கத் தொடங்கியது. சில வருடங்களிலே பில்லியன் கணக்கில் லாபம் வந்தது. பின்பு சீனாவில் முதல் பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்தார்.

சீனா மட்டுமல்லாமல் உலக நாடுகள் அனைத்தும் ஜாக் மா வைப் பற்றியும் அலிபாபா வலைதளத்தையும் அண்ணாந்து பார்க்கத் தொடங்கின.

இன்றுவரை அலிபாபா வலைதளம் பெற்ற லாபத்தை எந்த வலைதளமும் முறியடிக்கவில்லை, அந்த அளவிற்கு வளர்ந்து நின்றது.

உலக பணக்காரர்கள் பட்டியலில் இருக்கும் நபர்கள் அனைவரும் சிறுவயதிலிருந்தே பணக்காரர்களாக இருந்து வந்தவர்கள், ஆனால் ஜாக் மா மட்டும் தான் அடித்தளத்தில் இருந்து வளர்ந்து வந்தவர்.

ஜாக் மா வின் முற்போக்கு சிந்தனையே அவரின் வாழ்க்கைக்கு வெளிச்சத்தை தந்தது.

ஒரு ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்த ஜாக் மா வினால் சாதிக்க முடியுமென்றால் நம்மால் ஏன் முடியாது என்று ஒவ்வொரும் நினைத்து தன்னுடைய உழைப்பை போட்டாலே போதும் வெற்றி தானாகவே வந்து சேரும்.

சிலருக்கு வெற்றி சீக்கிரம் வந்து விடும், சிலருக்கு பல வருடங்கள் கழித்துக் கூட வரும். ஆனால் நம்முடைய விடாமுயற்சியும் நம்பிக்கையும் விட்டுவிடாமல் இருக்க வேண்டும்.

மேலும் படிக்க  MOTIVATIONAL STORY - ஜென் துறவி

ஜாக் மா விற்கு படிக்க இடம் கொடுக்காத நார்மல் பல்கலைக்கழகம் அவரது வெற்றிக்குப்பின் அவரை சிறப்பு விருந்தினராக அழைக்க வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள்.

ஒருவன் வெற்றி அடையும் வரை அவன் என்ன சொல்ல வருகிறான் என்று காது கொடுத்து கூட கேட்க மாட்டாது இந்த உலகம். ஆனால் ஒருவன் வெற்றி  பெற்று விட்டான் என்றால் அவன் சொல்வது அனைத்தும் வேதமாக மாறிவிடும்.

2 thoughts on “ஜாக் மா வாழ்க்கை கதை – MOTIVATIONAL STORY”

Comments are closed.