You have been blocked from seeing ads.

இந்திரா காந்தி வாழ்க்கை கதை – தமிழில்

இந்திரா காந்தி இளமைகாலம்:

இந்திரா காந்தி ஜகவர்லால் நேருவுக்கும் கமலா நேருவுக்கும் 1917 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் நாள் பிறந்தார்.

ஜகவர்லால் நேருவின் தந்தையான மோதிலால் நேரு தன்னுடைய தாயின் நினைவாக இந்திராணி என்று தன் பேத்திக்கு பெயர் வைத்தார்.

ஆனால் ஜகவர்லால் நேருவோ பிரிய தர்சினி என்று வைத்தார், இறுதியில் இருவர் வைத்த பெயரையும் ஒன்றாக்கி இந்திரா பிரிய தர்சினி என்றானது.

இந்திரா சிறுவயதில் இருக்கும் பொழுது அரசியலில் அதிக ஆர்வம் இருந்தது.

தன்னுடைய சிறுவயதில் ஆங்கிலேயருக்கு எதிரான அந்திய துணி எரிப்பு போராட்டத்தில் தன்னுடைய இரண்டு ஆங்கிலேய துணிகளை தான் தங்கியிருந்த மாடியில் எரித்தார்.

இவர் ஆங்கிலேயரின் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார் ஆரம்ப கல்வியை, ஆனால் இது ஜகவர்லால் நேருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை இருப்பினும் மோதிலால் நேருவின் கட்டாயத்துக்காக ஆங்கிலேயரின் பள்ளியில் படித்தார்.

கமலா நேருவும் சுதந்திர போராட்டத்தில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.

கமலா நேரு சிறுவர்கள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட ஒரு அமைப்பினை அமைத்து அதில் இந்திராவையும் இணைத்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது இந்திராவைப் போலவே பெரோஸ் கான் என்ற சிறுவனும் விடுதலைப் போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்பணித்துக் கொண்டான்.

இந்திராவின் காதல்:

இந்திராவும் பெரோஸ் கானும் நல்ல நண்பர்களாக பழகி வந்தனர்.

கமலா நேரு இந்திரா பள்ளிப் படிப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுதே உடல் நலக் குறைவால் இறந்து போனார்.

`     ஜகவர்லால் நேருவும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு அடிக்கடி சிறை சென்றதால் இந்திரா தனிமையை உணர்ந்தார்.

பெரொஸ் கானும் இந்திரா காந்தியும் மேற்படிப்புக்காக வெளிநாடு சென்று படித்துக் கொண்டிருக்கும் பொழுது அவர்களது நட்பு காதலாக மாறியது.

பெரோஸூம் இந்திராவும் வெளிநாட்டிலே திருமணம் செய்து கொண்டனர்.

இந்திரா

You have been blocked from seeing ads.

பெரோஸ் கான் ஒரு இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர்.

இவர்களின் திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் நேரு சோகத்தில் இருந்ததைப் பார்த்து காந்தி பெரோஸ் கானை தன்னுடைய மகனாக தத்து எடுத்துக் கொண்டார்.

அன்றிலிருந்து பெரோஸ் கான் பெரோஸ் காந்தி என்றழைக்கப்பட்டார்.

இந்திராவிற்கு திருமணம் ஆன பொழுது வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடந்து கொண்டிருந்தது.

அதில் கலந்து கொண்டதால் 80 நாட்கள் சிறையில் வாசம் செய்தார்.

பெரோஸ் காந்திக்கும் இந்திரா காந்திக்கும் ராஜீவ் காந்தி மற்றும் சஞ்சை காந்தி என்ற இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர்.

1947 லில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தபின் பிரதமராக பதவியேற்றார் நேரு.

அவருக்கு பக்கபலமாக இந்திராவும் அனைத்து அரசியல் கூட்டங்களிலும் பங்கேற்றார்.

மேலும் படிக்க  பிக்பாஸ் பாவ்னி ரெட்டி வாழ்க்கை கதை

இந்திரா தன் தந்தைக்கு துணையாக டெல்லியிலே தங்கிவிட்டார், இதனால் பெரோஸ் காந்திக்கு மிகுந்த வருத்தம்.

1947 முதல் 1964 வரை நேரு பிரதமராக இருந்தார். 1964 இல் அவர் உடல் நலக்குறைவால்  இறந்து போனார்.

பிரதமரான இந்திரா காந்தி:

பின்னர் லால் பகதூர் சாஸ்திரி என்பவர் பிரதமராக பதவியேற்றார், அவர் இறந்த பின் மூன்றாவது பிரதமராக இந்திரா பதவியேற்றார்.

இவர் பிரதமராக இருந்த காலத்தில் பாகிஸ்தான் பிரச்சனையை சரிசெய்தார்.

இவர் தன்னுடைய இரண்டாவது மகனான சஞ்சை காந்தியை தன்னுடைய அடுத்த அரசியல் வாரிசாக ஆக்க நினைத்தார்.

ஆனால் அதற்கிடையில் சஞ்சை காந்தி இறந்து விட்டார், பின்னர் தன் மூத்த மகனான ராஜூவ் காந்தியை அரசியலில் ஈடுபடுத்தினார்.

அப்பொழுது பஞ்சாபில் அதிகம் வாழ்ந்த சீக்கியர்கள் தங்களுக்கென தனி நாடாக காலிஸ்தானை அறிவிக்க வேண்டும் என்று பிரச்சனை செய்து கொண்டு இருந்தனர்.

இதனால் பொற்கோவிலில் தங்கியிருந்த சீக்கியர்களை இந்திய இராணுவப் படைகள் தாக்கினர், இதில் 100 சீக்கியர்கள் இறந்து போயின.

இந்திரா காந்தியை பலிதீர்ப்பதற்காகவே இரண்டு சீக்கியர்கள் பாதுகாவலர்களாக பணியில் சேர்ந்து சந்தர்பம் பார்த்து இந்திரா காந்தியை சுட்டு வீழ்த்தினர்.

அவரது உடலில் 33 குண்டுகள் பாய்ந்து இருந்தது, அதில் 3 குண்டுகள் உடலை துளைத்துக் கொண்டு சென்றது.

சுபாஷ் சந்திர போஸ் சிறுவயது கதை

You have been blocked from seeing ads.