You have been blocked from seeing ads.

பிக்பாஸ் இமானுவேல் அண்ணாச்சி வாழ்க்கை கதை

இளமை காலம்:

இமானுவேல் அண்ணாச்சி தூத்துக்குடியில் உள்ள திருவழுதிநாடார்  என்னும் ஊரில் 1968 டிசம்பர் 7 ஆம் தேதி பிறந்து இருக்கிறார்.

இவருக்கு தற்போது வயது 52 ஆகும்.

இவருடைய தந்தை கட்சி மேடைப் பேச்சாளர் ஆவார்.

இவருடன் உடன் பிறந்தவர்கள் இரண்டு அண்ணன் மற்றும் ஒரு தம்பி ஆவார்.

இமானுவேலை அனைவரும் இமான் அண்ணாச்சி என்றே அழைப்பார்கள்.

தூத்துக்குடியில் படிப்பை முடித்த இவர் அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கும் பொழுது அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது.

இவர் தன்னுடைய சொந்த ஊரில் மளிகை கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

இவர் மளிகை கடைக்கு வருபவர்களிடம் நகைச்சுவையாக பேசியதால் கடைக்கு வருபவர்கள் நீ சினிமாவில் நகைச்சுவை நடிகனாக நடிக்கலாம், உனக்கு திறமை இருக்கிறது என்று ஊக்கமளித்தனர்.

ஏற்கனவே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால் இவர்கள் சொன்னதும் மேலும் ஆசை அதிகரித்தது.

பின்பு மளிகை கடையில் வேலை பார்த்து சம்பாதித்த 100 ரூபாயை எடுத்துக் கொண்டு சென்னைக்கி கிளம்பினார்.

அங்கு கலைத்துறையினர் இலவசமாக தங்கும் விடுதில் தங்கி வேலை தேட ஆரம்பித்தார்.

கிடைத்த வேலையை செய்தார், ஆனால் சிறிது நாட்களிலே அவர் சினிமவில் நடிக்கதான் வந்திருக்கிறார் என்பதை அறிந்த கடையின் முதலாளிகள் வேலையை விட்டு அகற்றிவிட்டனர்.

இவர் இப்படியே 13 கடைகளில் வேலை பார்த்தார் 18 வருடங்களாக.

இவர் வேலை பார்த்துக் கொண்டே சினிமா ஆடிசனுக்கு சென்று கொண்டிருப்பார், அப்படியே ஒருநாள் வானொலி தொகுப்பாளர் வேலைக்கு ஆடிசனுக்கு சென்றிருந்தார்.

அவர்கள் இவரை ஒரு டயலாக்கை பேசிக்காட்ட சொல்லியதும், இவர் நன்றாக பேசி முடித்து விட்டு எப்பொழுது ரிசல்ட் வரும் என்று கேட்டார்.

அவர்கள் 10 நாட்கள் ஆகும் என்று சொல்லியதும் 10 நாட்கள் வரை காத்திருந்தார்.

ஆனால் அவரை ரிசக்ட் செய்து இருந்தனர், காரணம் கேட்டால் உங்களுடைய குரல் நன்றாக இல்லை என்று பதிலளித்துள்ளனர்.

வாழ்க்கையில் வெளிச்சம்:

பின்பு பல போராட்டங்களுக்குப் பிறகு அவருக்கு மக்கள் தொலைக்காட்சியில் கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை என்ற நிகழ்சியின் தொகுப்பாளராக பணி புரிய வாய்ப்பு கிடைத்தது.

ஆதித்யா தொலைகாட்சியில் சொல்லுங்கண்ணே சொல்லுங்க என்ற நிகழ்சியிலும் தொகுப்பாளராக இருந்தார்.

அவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கித்தந்தது சன் டிவியில் ஒளிபரப்பான குட்டிஸ் சுட்டீஸ் என்ற நிகழ்ச்சி.

இவர் 2006 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.

இவர் நடித்த முதல் படம் சென்னை காதல்.

மேலும் படிக்க  பிக்பாஸ் பாவ்னி ரெட்டி வாழ்க்கை கதை

அண்ணாச்சி

You have been blocked from seeing ads.

இமான் அண்ணாச்சி வளர்ந்து வரும் காமடி நடிகர்களில் ஒருவராக உள்ளார்.

இவர் ஒரு காமடி நடிகர் மட்டுமல்லாமல் 2016 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இவருடைய மனைவி பெயர் ஆக்னெஸ் பிரியா, இவரின் மகளின் பெயர் ஜெஃபி செல்வி.

இவருடைய சம்பளம் 2 இலட்சம்.

இவர் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலும் நடித்து உள்ளார்.

இமான் அண்ணாச்சி பன்முகம் கொண்டவர் என்றே கூறலாம்.

தற்பொழுது விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்சியில் கலந்து உள்ளார்.

ஷாருகான் வாழ்க்கை கதை
You have been blocked from seeing ads.

1 thought on “பிக்பாஸ் இமானுவேல் அண்ணாச்சி வாழ்க்கை கதை”

Comments are closed.