கல்லூரி காதல் கதை – வர்ஷா

வர்ஷா பலமாக யோசித்துக் கொண்டிருந்தாள், அருணிற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல்.

வர்ஷா பார்பதற்கு சுமாராகத் தான் இருப்பாள், ஆனால் நல்ல குணமுடையள், படிப்பில் மட்டும் கொஞ்சம் மந்தமாக இருப்பாள்.

ஆனால் அருணோ அதற்கு எதிர்மாறாக இருப்பான் பார்ப்பதற்கு சூப்பராக இருப்பான், படிப்பில் மிகவும்  கெட்டிக்காரன்.

அருணும் வர்ஷாவும் டிப்பளமோ முதலாம் ஆண்டு படித்து வருகின்றனர்.

அவர்கள் கிளாஸில் படிக்கும் ராதிகா என்ற பெண்ணிற்கு அருண் மேல் ஒருவித ஈர்ப்பு இருந்தது, ராதிகாவும் நல்லா படிக்கும் பெண், இருவரும் தான் எந்த ஒரு நிகழ்ச்சியையும் முன்னின்று நடத்துவார்கள்.

அதனால் அருணும் ராதிகாவுடன் நன்றாக பேசுவான்.

கிளாஸில் எக்ஜாம் முடிந்து பேப்பர் கொடுக்கும் பொழுது அருணிற்கும் ராதிகாவிற்கும் பாராட்டு மட்டுமே கிடைக்கும், வர்ஷாவிற்கு திட்டு மட்டும் தான் கிடைக்கும்.

வர்ஷா அனைத்து பாடத்திலும் 2 அல்லது 3 மதிப்பெண் தான் பெற்றிருப்பாள்.

இதனால் ராதிகா வர்ஷாவைப் பார்த்து கிண்டல் செய்வாள் நீ தான் கிளாசிலே மக்காக இருக்கிறாய் என்று, அவளின் வார்த்தையைக் கேட்டு மணமுடைந்து போவாள் வர்ஷா.

ராதிகா நன்றாக படிக்கும் பெண் மட்டும் தான் அவளிடம் ஒரு நல்ல குணங்கள் கூட இல்லை, எல்லோருடைய மனதையும் கஷ்டப்படுத்தும் குணம் கொண்டவள்.

அருணிற்கு இவளின் செயல்கள் சுத்தமாக பிடிக்காது, பலமுறை அறிவுரை வழங்கியிருக்கிறான், ஆனால் அவள் திருந்த மாட்டாள்.

வர்ஷா ஒரு குழந்தையை போல் நடந்து கொள்வாள்.

ஆனால் யார் யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று நன்றாக தெரிந்து வைத்திருந்தாள், அவள் யார் மனதையும் புண்படுத்தும்படி நடந்து கொள்ள மாட்டாள்.

காதல்:

வர்ஷாவை ஒருதலையாக காதலித்து வந்தான் அருண், பின்பு ஒருநாள் வர்ஷாவின் தோழியின் மூலமாக தன் காதலை தெரிவித்தான்.

அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தான் யோசித்துக் கொண்டிருக்கிறாள்.

மறுநாள் காலையில் அவளின் பதிலுக்காக காத்திருந்தான் அருண், வர்ஷாவிற்கு பிடித்திருந்தாலும் கூட சற்று தயங்கினாள்.

அருண் அவள் அருகில் வந்து நின்றதும், வர்ஷாவின் இதயம் படபடத்துப் போனது, அவனின் அருகில் நிற்பது அதுவே முதல் தடவை, அதுவும் மிக நெருக்கத்தில்.

உன்னுடைய பதிலுக்காக காத்திருக்கிறேன் நேற்றிலிருந்து என்றான்.

வேண்டாம் என்றாள் அவள், அருணோ அவளை விடாமல் ஏன் வேண்டாம் என்னை பிடிக்கவில்லையா? என்றான்.

அவள் பதில் ஏதும் சொல்லாமல் தலை குனிந்தபடி நின்று கொண்டிருந்தாள்.

அவன் மீண்டும் அவளை விடாமல் அவளின் தாடையைப் பிடித்து அவனின் முகம் பார்க்கும்படி செய்தான்.

அவள் இதை எதிர்பார்க்காதவளாய் இருந்தாள், அவனின் ஸ்பரிசத்தால் வர்ஷாவின் உடல் சிலிர்த்துக் கொண்டது.

மேலும் படிக்க  வெள்ளையம்மாள் வெள்ளைச்சாமி காதல் கதை

சொல் வர்ஷா, ஏன் உனக்கு வேண்டாம்? பதில் கூறு என்று நச்சரித்துக் கொண்டிருந்தான் அருண்.

வர்ஷா

அவள் மெல்லிய குரலில் தலையை குனிந்தபடி பிடித்திருக்கிறது, ஆனால்……….. என்று இழுத்துக் கொண்டிருந்தாள்.

அருணின் மனதில் பட்டாம்பூச்சி சிறகடித்து கொண்டிருந்த மறுநொடியே நின்று போனது அவளின் ஆனால் என்ற இழுவை.

என்ன ஆனால் சொல் என்றான், அதற்கு வர்ஷாவோ நீ ரொம்ப நல்லா இருக்கா, நல்லா படிக்கிறாய் ஆனால் நான் அதில் கால்வாசி கூட இல்லாமல் இருக்கிறேன், உனக்கு நான் பொருத்தமில்லை என்று அனைவரும் கிண்டல் செய்வார்கள் என்று தான் யோசிக்கிறேன் என்றாள்.

இதைக் கேட்டதும் அருண் வயிறு குலுங்க சிரித்தான், இதற்கு தான் கவலை கொள்கிறாயா?

நாம் வாழ்க்கை நடத்துவதற்கு இந்த அழகோ படிப்போ தேவை இல்லை, இந்த அழகு இன்னும் 10 வருடம் மட்டுமே இருக்கும், நாம் படித்து வாங்கும் மார்க் இந்தக் கல்லூரியில் இருக்கும்வரை தான் நல்ல பெயரைத் தரும்.

ஒரு வேளைக்குச் செல்வதற்குக் கூட நம்முடைய திறமை தான் வேணும், இந்த மார்க் சஸ்ட் ஒரு கேட் பாஸ் மட்டும் தான்.

இதற்காக நீ ஒன்றும் கவலை கொள்ளாதே, நாம் குடும்பம் நடத்துவதற்கு நல்ல பக்குவமான குணம்தான் வேண்டும் அது உன்னிடத்தில் நிறையவே இருக்கு என்றான்.

அவனின் வார்த்தையைக் கேட்டதும் வர்ஷாவின் மனதில் ஆயிரம் வண்ணத்துப் பூச்சிகள் சிறகடித்தன

ஒரு கிராமத்து காதல் கதை

.