CHANDHIRAVATHANI KOWTHAMARAJAN LOVE STORY

சந்திரவதனி கௌதமராஜனின் காதல் கதை…..

பாவல்பூர் மன்னனின் கோபம்:

     இந்தியா சுதந்திரம் அடைந்த நாட்களில் அனைத்து சமஸ்தானங்களும் இந்தியாவோடு இணைய உத்தரவு விட்டது இந்திய அரசு. ஆனால் சில ஜமீன்கள் மட்டும் இணைய மறுத்தனர். அப்படி இணைய மறுத்த ஒரு ஜமீன் தான் பாவல்பூரை ஆட்சி செய்த வீரகாலர். அவரின் நட்பு தேசமான துர்காபூரின் ஜமீன் தேவவர்மர் இந்தியாவோடு இணைய சம்மதம் தெரிவித்திருந்தார். இந்தச் செய்தியைக் கேட்டதும் இன்னும் தீக்கனளில் எரிந்து கொண்டிருந்தது வீரகாலரின் இதயம். அப்பொழுது இந்திய அரசு அனுப்பியிருந்த ஒரு கடிதத்தை பிரித்து படித்தார் சேனாதிபதி, அதில் “பாவல்பூர் ஜமீன் அவர்களுக்கு, இந்தியா ஒரே தேசமாக உருவாக வேண்டும் என்ற திட்டப்படி அனைத்து சமஸ்தானங்களும் இணைகின்றன. இணைய மறுத்தால் இணைக்கப்படும் என்று அரசாங்க முத்திரையுடன் வந்தது.

பாவல்பூர்க்கும் துர்க்காபூர்க்கும் இடையே பகை:

     வீரகாலர் கோபத்துடன், நம் நட்பு ஜமீன் தேவவர்மனும் இந்திய அரசின் காலடியில் தன் தேசத்தை வைத்துவிட்டு வந்திருக்கிறான். இனிமேல் பாவல்பூர்க்கும் துர்காபூருக்கும் இடையே உள்ள பாலம் உடைக்கப்படும், போக்குவரத்து நிறுத்தப்படும் மற்றும் தொடர்பு அனைத்தும் துண்டிக்கப்படும் என்றார் வீரகாலர். அதற்குள் சேனாதிபதி எழுந்து அனைத்தும் நிறுத்தலாம் ஆனால் தங்கள் மகளின் காதலால் ஏற்பட்ட நிச்சயத்தை எப்படி நிறுத்த முடியும்? என்றார். வீரகாலரின் முகம் இறுக்கமாய் ஆனது எங்கே சந்திரவதனி என்றார். அவள் துர்க்காபூருக்கு இசைபயில சென்றிருக்கிறாள் என்றால் மனைவி.

சந்திரவதனிக்கும் கௌதமனுக்கும் இடையே காதல்:

     இசைப்பள்ளியில் சந்திரவதனியை மாயா மாளவ ராகத்தை பாடச் சொல்கிறார் சகஸ்ரநாம பண்டிதர். இவளும் பாடத்தொடங்கினாள். குருவே வணக்கம் என்று கௌதமன் வந்து நின்றான், அனைவரும் வியந்து பார்த்தனர். நானும் இசைப் பயில வந்திருக்கிறேன் என்றான் கௌதமனன். சரி அமருங்கள் என்றார். பண்டிதர் சரிகமபதி என்று பாடினர். கௌதமன் சந்திரவதனி என்று பாடிக் கொண்டிருந்தான். சந்திரவதனி மூக்கு சிவந்தது. பண்டிதர் அவளை முகாரி ராகம் பாடச் சொன்னார், அவளும் பாடுவதற்கு வாய் எடுத்தாள் அதற்குள் கௌதம் பாடாதே என்று கத்தினான். நீ முகாரி ராகம் பாடக்கூடாது என்றான். பண்டிதர் ஏன்? என்று படபடத்தார். அவள் முகாரி ராகம் பாடக் கூடாது. நீ பாடியது போதும் வா என்றான். அவளை அள்ளிக் கொண்டு துர்க்கா கோயிலுக்கு புறப்பட்டான்.

     சந்திரவதனி ஆள்நடமாற்றம் இல்லாத கோயிலில் கோபித்துக் கொண்டு இருந்தாள். ஏன் என்னை முகாரி ராகம் பாட வேண்டாம் என்று சொன்னீர்கள் என்று வினவினாள். அதற்கு அவன் அது சோக ராகம் அதை நீ பாடக் கூடாது என்றான். அவள் உள்ளுக்குள் அழுதாள். அவன் அவள் மடியில் படுத்தான். அவளுடைய அழகிய கண்ணத்தை வருடிக் கொண்டிருந்தான். சந்திரவதனியை கௌதமன் தன் அழகிய விரல்களாலும் உதடுகளாலும் இம்சைத்துக் கொண்டிருந்தான். அவள் இது கோவில் என்றாள், அதற்கு அவனோ இருக்கட்டும் சாமி கண்ணை மூடிக் கொள்ளட்டும் என்றான். அவர்கள் இருவரும் தன்னை மறந்து சொர்க்கத்திற்கே சென்று கொண்டிருந்தனர்.

மேலும் படிக்க  GOWDAMA PUTHAR LIFE STORY IN TAMIL

வீரகாலரின் உத்தரவு:

     பாவல்பூர் ஜமீன் ஒரு எரிந்த காடாய் காட்சியளித்துக் கொண்டிருந்தது. இந்திய அரசுக்கு பதில் கடிதம் அனுப்பினார், அதில் தன் தாய் மண்ணை மாற்றானுக்கு அடிமையாக்கச் செய்யும் இதயம் பிணத்திற்கு இருக்க வேண்டிய உறுப்புகள் நாங்கள் உயிருள்ள மனிதர்கள் என்று எழுதியிருந்தது. படைகள் தயாராகுங்கள் வீட்டிற்க்கு ஒருத்தர் ஆணோ, பெண்ணோ ஒரு வீரன் வா. இனி துர்காபூர் முதல் எதிரி இந்திய அரசு இரண்டாவது எதிரி என்றார் வீரகாலர். நட்பு ஜமீனாக இருந்த துர்க்காபூரின் எல்லைகள் பிரிக்கப்பட்டன. சிறு நூறு பேரைக் கொண்ட படை ஒன்றை திரட்டினார்.

     அப்பொழுது துர்காபூரின் ஜமீன் தேவவர்மன் அங்கு வந்தார். நண்பா இந்தியாவோடு இணைந்து விடு என்றார். நீ இங்கிருந்து சென்று விடு என்றார் வீரகாலர். சிந்தித்து செயல்படு, வேண்டாம் பிடிவாதம் என்றார் தேவவர்மன். ஒரு பாடை செய்து வை போரில் திரும்பி நான் வந்துவிட்டல் அது உனக்கு இல்லையென்றால் அது எனக்கு என்றார். சந்திரவதனியை என் மகன் கௌதமனுக்கு ஒப்படைத்து விட்டு செல் என்றார். நான் கலப்படம் இல்லாத மனிதர்களுக்கே பெண் கொடுப்பேன் என்றான் வீரகாலர், இறுதியில் முடிவாக என்ன சொல்கிறாய் என்றார் தேவவர்மன். தன் கையில் வைத்திருந்த துப்பாக்கி குண்டுகளை தேவவர்மனின் மார்பில் செலுத்திவிட்டு முடிவு இதுதான் என்று சொல்லி புறப்பட்டார்.

சந்திரவதனிக்கு பேரதிர்ச்சி:

     அவர்கள் இருவரும் சொர்க்கத்தை சென்று திரும்பி முடித்து விட்டு இயல்பு நிலைக்கு திரும்பினர். நாம் இருவரும் சேர்ந்து விட முடியுமா? என்று கண்ணீர் விட்டாள். நேரம் அதிகம் ஆனதால் தான் வந்த இரகசிய வழியில் புறப்பட்டார். போகும் போது எதாவது சொல்லிவிட்டுப் போ என்றான் கௌதம், அதற்கு அவன் நீங்கள் எனக்குள் என்றாள் தன் வயிற்றை தடவியபடி. அவனுக்கு ஒன்றும் புரியாமல் கையசைத்தான்.

     அவள் மாளிகைகளுக்குள் நுழைந்ததும் ரத்த வெள்ளத்தில் கிடந்த கௌதமனின் தந்தையைப் பார்த்து அலறினாள். வா மகளே என்றான் வீரகாலர். அந்த இரத்தத்தை எடுத்து எனக்கு திலகமிடு என்றான். நான் கௌதமனுக்கு என்ன பதில் சொல்வது என்று கதறினாள். அவனை தூக்கி எரிந்துவிடு என்றார். அவர் என் வயிற்றிலும் உயிராய் வளருகிறார் என்றாள். வீரகாலர் கோவத்தின் உச்சிக்கி சென்று விட்டு தன் மகளை அறைந்தார். அவள் மயங்கி கீழே விழுந்தாள்.

     அப்போது இந்திய ராணுவம் நுழைந்துவிட்டது என்ற செய்தியை சேனாதிபதி கூறினான். வீரகாலர் ஒரு முடிவு எடுத்தார் ஒரு வெள்ளி வாளை எடுத்துக் கொண்டு சந்திரவதனியின் வயிற்றில் குத்தினார், பின்னர் தன் மனைவியிடம் நான் இல்லாமல் உன்னால் வாழ முடியுமா? என்றார். முடியாது என்றாள் அவர் மனைவி, அவளுடைய நெஞ்சிலும் கத்தியை சொருகினார். தன் அறையில் வந்து வெள்ளி வாளை நேரே நிறுத்திவிட்டு, ஒரு களங்கத்தை தர என் மகளுமில்லை தனிமையில் விட்டு செல்ல என் மனைவியும் இல்லை என் ஜமீன் கொடி கீழே இறக்கும் முன் என் உயிர் நிம்மதியாக போகும் என்று கத்தியில் பாய்ந்தார்.

மேலும் படிக்க  VILLAGE LOVE STORY CHINNAMAA- SELAIYAN

கௌதமராஜனின் காதல்:

     தன் தந்தை வெகுநேரமாகியும் காணாததால் அவரை தேடி பாவல்பூர் ஜமீனுக்கு வந்தான். அவன் உள்ளே நுழைந்ததும் அமைதியாக இருந்தது. தன் தந்தையின் சடலம் தன் காதலியின் சடலம் மற்றும் காதலியின் பெற்றோர்கள் சடலத்தைக் கண்டு பிரமை பிடித்தவன் போல் ஆகிப் போனான். தன் காதலியின் சடலத்தை மட்டும் தூக்கிக் கொண்டு ஓரிடத்தில் குடிசை கட்டி அங்கு அவளுக்கு சமாதி கட்டி தாடியுடனும் மௌனத்துடனும் அந்த குடிசையில் வாழ்ந்தான். யாரும் சந்திரவதனி என்று கூப்பிட்டால் மட்டும் திரும்பி பார்ப்பான். ஒரு ஷாஜகானைப் போல் வாழ்ந்து மடிந்தான்.  

Spread the love