பிக்பாஸ் ராஜூ ஜெயமோகன் வாழ்க்கை கதை

ராஜூ பிறப்பு:

ராஜூ திருநெல்வேலி மாவட்டம் குத்தாலம் அருகில் உள்ள வலசை என்னும் ஊரில் 2 ஜூலை 1991 ஆம் ஆண்டு பிறந்தார்.

இவருடைய அப்பா கிறிஸ்டின், அம்மா ஹிந்து மதத்தைச் சார்ந்தவர்கள்.

இவருடைய அம்மா வீட்டார்கள் லக்ஷ்மண குமார் என்றும் இவரின் அப்பா வீட்டார்கள் எட்வின் ராஜ் என்றும் அழைத்தனர்.

இதனால் தன்னுடைய பெயரை ராஜூ என்று வைத்துக் கொண்டார்.

ராஜூ தன்னுடைய பள்ளிப் படிப்பை திருநெல்வெலியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து முடித்துவிட்டு, கல்லூரி படிப்பை கோயமுத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி கல்லூரியில் B.Sc Visual Communication படித்தார்.

அவருடைய கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக வந்த இயக்குனர் பாக்யராஜ் அவர்கள் ராஜூவின் திறமையைக் கண்டு பாரட்டினார்.

பின்பு அவரே ஒருநாள் போன் செய்து உதவி இயக்குனாரக வாய்ப்பளித்தார்.

இவரின் முதல் சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கனா காணும் காலங்கள் என்னும் சீரியலில் நடித்தார்.

அதன்பின்பு கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சனிடம் வேங்கை மன்னன் என்னும் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றினார்.

பின்பு சரவணன் மீனாட்சி என்ற தொடரில் கவினின் நண்பனாக நடித்தார்.

ராஜூ பல திறமைகளைக் கொண்டவர், இவர் சிறந்த கதையாசிரியர், தொகுப்பாளர், காமெடியன், நடிகர் மற்றும் மெமிக்கிரி ஆர்டிஸ்ட் என்றும் கூறலாம்.

ராஜூவின் திருமண வாழ்க்கை:

இவர் தன்னுடைய 18 ஆவது வயதில் இருந்து தாரிகா என்ற பெண்ணை காதலித்து, தன்னுடைய 29 ஆவது வயதில் திருமணம் செய்து கொண்டார், கிட்டத்தட்ட 11 வருடங்கள் இருவரும் காதலித்து வந்தனர்.

ராஜூ

இவர்களுடைய திருமணம் கோயமுத்தூரில் உள்ள மருதமலை முருகன் கோவிலில் நடந்தது, கொரோனா காலகட்டத்தில் நடந்ததால் யாரும் அதிகமாக திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை.

நடிகர் சிவகார்திகேயன் ராஜூ திருமணத்திற்கு வர முடியாததால் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

ராஜூவும் அவருடைய மனைவி தாரிகாவும் பி.எஸ்.ஜி கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள்.

ராஜூ சின்னத்திரையில் முதன் முதலில் சிறிய ரோலில் நடித்து பின்னர் வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

இவர் முதன் முதலில் நடித்த படம் 2015 ல்  வெளியான துணை முதல்வர் என்னும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.

பின்னர் 2019 ஆம் ஆண்டு இயக்குனர் சிவா அரவிந்த் இயக்கியதும் கவின் நடித்த நட்புனா என்னனு தெரியுமா திரைபடத்தில் கவினின் நண்பனாக நடித்துள்ளார்.

படத்தில் மட்டும் கவினின் நண்பன் இல்லாமல் நிஜவாழ்க்கையிலும் கவினின் நெருங்கிய நண்பர் ஆவார்.

ராஜூ விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் வருண் என்ற கதாபாத்திரத்திலும் நாம் இருவர் நமக்கு இருவர் என்னும் சீரியலில் கதிரேசன் என்னும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

மேலும் படிக்க  அமைச்சர் கக்கன் வாழ்க்கை வரலாறு

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலை கதிரேசன் என்னும் கத்தி கதாபாத்திரத்திற்காகவே நிறைய மக்கள் பார்க்கின்றனர், அந்த அளவிற்கு மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

மேலும் 2015 லில் ஒளிபரப்பான ஆண்டாள் அழகர் என்னும் சீரியலில் நடித்துள்ளார்.

இவருக்கு சோசியல் மீடியாக்களில் மில்லியன் கணக்கில் பாலோயர்ஸ் இருக்கிறார்கள்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளார்.

பிக்பாஸ் ஸ்ருதி பெரியசாமி வாழ்க்கை கதை

1 thought on “பிக்பாஸ் ராஜூ ஜெயமோகன் வாழ்க்கை கதை”

Comments are closed.