அரிச்சந்திரன் விஸ்வாமித்திரர் கதை – தமிழில்

அரிச்சந்திரன் திருமணம்:

காசி என்னும் நாட்டை ஆட்சி செய்து வந்த மன்னன் தான் அரிச்சந்திரன்.

இவன் சந்திரமதியின் சுயம்வரத்திற்கு சென்றிருந்தான், அப்பொழுது அவன் கண்ணிற்கும் மட்டும் சந்திரமதியின் கழுத்தில் இருந்த தாலி தெரிந்தது.

சந்திரமதியின் முற்பிறவியில் கௌதம முனிவர், நீ யாரை அடுத்த ஜென்மத்தில் திருமணம் செய்து கொள்கிறாயோ அவனுடைய கண்ணிற்கு மட்டுமே உன் கழுத்தில் இருக்கும் தாலி தெரியும், அவனே உன்னுடைய கணவன் என்ற வரத்தை அளித்திருந்தார்.

அதனால் சுயம்வரத்தின் பொழுது அரிச்சந்திரன் கண்ணில் மட்டும் தாலி தெரிந்ததால் அவனுக்கு மாலை சூட்டி மணவாளனாக ஆக்கிக் கொண்டாள்.

இருவருக்கும் திருமணம் முடிந்து ஆனந்தமாக வாழ்ந்தார்கள், பின் அவர்களுக்கு லோகிதாசன் என்னும் மகன் பிறந்தான்.

லோகிதாசன் மேல் அளவுகடந்த அன்பு வைத்திருந்தனர் இருவரும், சந்திரமதியை விட அரிசந்திரன் தன்னுடைய உயிருக்கும் மேலாக பாசம் வைத்திருந்தான் லோகிதாசன் மீது.

அரிச்சந்திரன் நல்லாட்சி புரிந்து வந்தான், மேலும் உண்மையை மட்டும் பேசி வந்தான், கொடை என்று வருபவர்களுக்கு வாரி வழங்கி கொண்டிருந்தான்.

அப்பொழுது சனீஸ்வரரின் பார்வை அரிச்சந்திரன் மீது விழுந்தது, சனீஸ்வரரின் பார்வை பூலோகத்தில் முதல் முறையாய் விழுந்தது அரிச்சந்திரன் மீதே.

சனீஸ்வரரின் பார்வை பட்டால் ஏழரை ஆண்டு வரை பல இன்னல்கள் வந்து கொண்டிருக்கும், ஆனால் ஏழரை ஆண்டு முடியும் பொழுது நமது வாழ்வில் எதாவது நல்லது செய்து விடு செல்வார்.

சனீஸ்வரர் அரிச்சந்திரனை சோதிப்பதற்கு விஸ்வாமித்திரரை ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டார்.

அரிச்சந்திரனின் புகழ்:

தேவலோகத்தில் அரிச்சந்திரனின் புகழைப் பற்றி வசிஸ்ட முனிவர் இந்திரனிடம் சொல்லிக் கொண்டிருந்தார், அரிச்சந்திரன் என்னும் மன்னன் சத்தியத்தை மட்டும் உரைப்பவன், பூலோகத்தில் அவனே நல்முறையில் ஆட்சி செய்து வருகிறான் என்று.

ஆனால் விஸ்வாமித்திரர் வசிஸ்டர் சொல்வதை ஏற்காமல் அரிச்சந்திரனை நான் பொய் சொல்ல வைக்கிறேன் என்று வசிஸ்டரிடம் வாதம் செய்து விட்டு அதை நிரூபித்துக் காட்ட பூலோகத்தில் உள்ள அரிச்சந்திரனின் அரண்மனைக்குச் சென்றார்.

விஸ்வாமித்திரரை அன்புடனும் பணிவுடனும் வரவேற்றார் அரிச்சந்திரன்.

தனக்கு யாகம் வளர்க்க உன்னிடம் செல்வம் பெற வந்தேன், நான் கேட்கும் செல்வத்தை உன்னால் தர இயலுமா என்று கேட்டார் விஸ்வாமித்திரர்.

அதற்கு அரிச்சந்திரன் தாங்கள் என்ன வேண்டுமோ கேளுங்கள் தருகிறேன் என்றான்.

விஸ்வாமித்திரர் ஒரு நாணயத்தை எடுத்து இதை நான் மேலே எரியும் பொழுது அது எவ்வளவு தூரம் செல்கிறதோ அந்த அளவிற்கு நீ செல்வம் தர வேண்டும் என்றார்.

அரிச்சந்திரனும் அதற்கு ஒப்புக் கொண்டார், பின் தன்னுடைய செல்வங்களை எல்லாம் தந்து விட்டு தன்னுடைய மனைவியையும் மகனையும் அழைத்துக்கொண்டு அரண்மனையை விட்டுச் சென்றான்.

மேலும் படிக்க  வீரமங்கை வேலுநாச்சியார் கதை

ஆனால் இன்னும் அவனால் செல்வத்தைக் முழுமையாக கொடுக்க முடியவில்லை, நான் கூலி வேலை செய்து தங்களுக்கு கொடுத்து சத்தியத்தை காப்பாற்றுவேன் என்றான்.

துயரம்:

அவன் வேறு ஊருகளில் வந்து வேலை தேடுகிறான், ஆனால் யாரும் கொடுக்கவில்லை, மீறி கொடுக்க நினைக்கும் நபர்கள், உனக்கு என்ன வேலை தெரியும்? இதற்கு முன்னால் என்ன வேலை செய்தாய் என்று கேட்கும் பொழுது, நான் அரசனாக இருந்தேன் என்று உண்மையை கூறவும் யாரும் கொடுக்கவில்லை, மாறாக கேலி செய்தனர்.

அவன் பொய் சொல்லியிருந்தால் கூட எதாவது ஒரு வேலை கிடைத்திருந்திருக்கும், ஆனால் உண்மையை பேசியதால் மூவருக்கும் உண்ண உணவு இல்லாமல் இருந்தனர்.

காட்டில் கிடைக்கும் சிறிதளவு பழங்களையும் தன்னுடைய மகனுக்கு கொடுத்து விட்டு இருவரும் பசியோடு பல நாட்களை கழித்தனர்.

மூவரின் உடலிலும் வெறும் தோலும் எலும்புமே காட்சியளித்தது.

அப்பொழுது காட்டின் வழியே சென்ற செல்வந்தர் இவர்களைப் பார்த்து, உன்னுடைய மனைவியை என்னுடைய மாளிகையில் அடிமையாக வைத்துக் கொள்கிறேன், உன்னுடைய மனைவியை விற்கும் பணத்தை வைத்துக் கொண்டு உன்னுடைய கடனை அடைத்துவிடு என்றான்.

அரிச்சந்திரனும் அதற்கு ஒப்புக் கொண்டான், தன்னுடைய மகனை தன்னுடன் வைத்துக் கொள்ள விரும்பினான், ஆனால் அவன் தாயுடன் சென்றால் கூட ஒரு வேளையாது நல்ல உணவு உண்பான் என்று நினைத்து அனுப்பினான்.

தன் மனைவி குழந்தைகளை விற்ற பணத்தைக் கொண்டு விஸ்வாமித்திரனின் கடனை அடைத்தான், ஆனால் விஸ்வாமித்திரர் இன்னும் கடன் அடையவில்லை என்றார்.

பின்பு அரிச்சந்திரன் ஒரு வெட்டியானிடம் வேலைக்குச் சேர்ந்தான், வரும் பிணங்களை எரித்துக் கொண்டு அதில் வரும் வருமானங்களைக் கொண்டு விஸ்வாமித்திரரின் கடனை அடைத்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது அரிச்சந்திரனின் மகன் லோகிதாசன் செல்வந்தரின் வீட்டில் படுத்துக் கொண்டிருக்கும் பொழுது நாகம் தீண்டி இறந்து போனான்.

அவனுடைய உடலை எரிக்கக் கூட பணம் இல்லாமல் இருந்தாள் சந்திரமதி, உடலை எரிக்க பணம் இல்லாததால் அரிச்சந்திரன் அந்த உடலை எரிக்கவில்லை.

அரிச்சந்திரன்

பின்பு சந்திரமதியிடம் உன்னுடைய தாலியை விற்று பணம் கொடு, இந்த பிணத்தை எரிக்கிறேன் என்றான்.

சந்திரமதிக்கு தெரிந்து விட்டது பிணத்தை எரிப்பது தன்னுடைய கணவன் அரிச்சந்திரன் தான் என்று, அரிச்சந்திரனுக்கு இது தன்னுடைய மனைவி தான் என்று தெரிந்தது, ஆனாலும் கூலி இல்லாமல் பிணத்தை எரிக்க மாட்டேன் என்றான்.

தன்னுடைய சேலையில் பாதியை லோகிதாசனின் உடலில் கிழித்து போர்த்திருந்தால் மீதி சேலையைத் தான் அணிந்திருந்தாள், பின் அந்த சேலையையும் கழட்டி கொடுக்க முயற்ச்சிக்கும் பொழுது தேவர்களும் விஸ்வாமித்தரரும் அவர்களின் முன் தோன்றி அவர்களின் பழைய தோற்றமான அரசன் அரசி தோற்றத்தை கொடுத்தனர், பின் லோகிதாசனையும் உயிர்ப்பித்தனர்.

மேலும் படிக்க  அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு

உன்னுடைய சத்தியத்தை சோதிப்பதற்காகத் தான் இத்தனை சோதனைகளும் நடத்தப்பட்டது, ஆனால் நீ சத்தியததை காப்பாற்ற தவறவில்லை, இனி சத்தியத்திற்கு எடுத்துக்காட்டாய் உன்னுடைய பெயரே காலம் உள்ளவரை இருக்கும் என்றனர் தேவர்கள்.

விஸ்வாமித்திரரின் மூலமாக இந்த சோதனை நடந்ததால் அரிச்சந்திரன் பெயரின் பின்னால் விஸ்வாமித்திரர் பெயர் வந்தது.

விஸ்வாமித்திரர் வாழ்க்கை வரலாறு – தமிழில்