பிக்பாஸ் அக்ஷரா ரெட்டி வாழ்க்கை கதை

பிறப்பு:

அக்ஷரா ரெட்டி பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான், ஆனால் இவர்களின் பூர்வீகம் ஆந்திரப் பிரதேசம் ஆகும்.

அக்ஷரா சுதாகர் ரெட்டி என்பவருக்கும் கௌரி ரெட்டி என்பவருக்கும் செப்டம்பர் 10, 1994 ஆம் ஆண்டு மகளாகப் பிறந்தார்.

அவருக்கு தற்பொழுது 27 வயது நடந்து கொண்டிருக்கிறது.

இவருக்கு ஒரு அண்ணனும் இருக்கின்றார், அவருடைய பெயர் ஷ்ரவன் ரெட்டி ஆகும்.

அக்ஷராவின் உண்மையான பெயர் ஷ்ரவ்யா ரெட்டி ஆகும், இவர் மாடலிங்க் துறையில் வந்த பிறகே அக்ஷரா ரெட்டி என்று மாற்றிக் கொண்டார்.

இவரை வீட்டில் அனைவரும் குக்கு என்று செல்லமாக அழைப்பார்கள்.

அவரின் அண்ணனை பப்லு என்று அழைப்பார்கள்.

இவர் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர், இவரின் தந்தை சொந்தமாக ஒரு கம்பெனி நடத்திக் கொண்டிருந்தார்.

ஒருநாள் சுதாகர் ரெட்டி கம்பெனிக்குச் காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது அவர் காரை ஓட்டிக் கொண்டிருந்த அக்ஷராவின் அண்ணனான ஷ்ரவன் மீது சரிந்து விழுந்தார்.

முதலில் அவர் விளையாடுகிறார் என்று தான் நினைத்தார், ஆனால் சிறிது நேரத்தில் அவரது சுவாசம் குறையத் தொடங்கியது, இதனால் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவர்கள் உங்கள் தந்தை ஹாட் அட்டாக்கால் இறந்து விட்டார் என்றனர்.

அக்ஷராவிற்க்கு 8 வயது தான் நடந்தது, அவரது தந்தை சுதாகர் இறக்கும் பொழுது.

அக்ஷராவின் அண்ணனான ஷ்ரவன் ரெட்டி அக்ஷராவை விட 7 வயது பெரியவர்.

அவரின் தந்தை இறந்தபின் அந்த இடத்தில் இருந்து அவரின் அண்ணன் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

மாடலிங்க் துறையில் அக்ஷரா ரெட்டி:

பள்ளிப்படிப்பை படித்துக் கொண்டிருக்கும் பொழுதே அக்ஷராவிற்கு தான் ஒரு மாடலாக வேண்டும் என்று ஆசை கொண்டார்.

தன்னுடைய தாயின் பரிந்துரைப்படி கல்லூரிப் படிப்பை முடித்தார்.

இவர் சென்னையில் தன்னுடைய பள்ளிக்கல்வியை முடித்தவுடன் ஜார்சியாவில் உள்ள டிபிலிசி பல்கலைக்கழகத்தில் B.SC PSHYCOLOGY படிப்பை படித்தார்.

அக்ஷரா தன்னுடைய 20 வயதிலே மாடலிங்க் துறையில் நுழைந்தார், இவர் மாடலிங்கை கற்றுக் கொள்வதற்காக 3 மாதம் பயிற்சி எடுத்தார்.

இவர் கிட்டத்தட்ட 150 க்கு மேல் உள்ள மேடைகளில் கலந்து கொண்டு RAMP WALK பண்ணியிருக்கிறார்.

2018 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான வில்லா டூ வில்லேஜ் நிகழ்ச்சியில் கலந்து கண்டு ரன்னராக வந்தார்.

இவர் 2019 ஆம் ஆண்டு இந்திய அழகி என்ற பட்டத்தையும் உலக அழகி என்ற பட்டத்தையும் பெற்றார்.

மேலும் இவர் 2016 ஆம் ஆண்டு மிஸ் ஆந்திரப் பிரதேஸ் என்ற பட்டத்தையும் மிஸ் நேவிகுயின் என்ற பட்டத்தையும் வென்றிருக்கிறார்.

மேலும் படிக்க  பிக்பாஸ் இமானுவேல் அண்ணாச்சி வாழ்க்கை கதை

அக்ஷரா ரெட்டி

இவர் குமரன் சில்க்ஸ், ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ், BSNL போன்ற விளம்பரங்களில் நடித்துள்ளார்.

இவருடைய தாய்மொழியான தெலுங்கில் 2020 ஆம் ஆண்டு பில்கேட்ஸ் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தமிழில் ஹேப்பி நியூ இயர் என்ற குறும்படத்திலும் கதாநாயகியாக் நடித்துள்ளார்.

இவர் கன்னட மொழியிலும் படம் நடித்துள்ளார்.

அக்ஷரா தற்பொழுது விஜய் தொலைக்காட்சி நடத்திய வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

பிக்பாஸ் ஐக்கி பெர்ரி வாழ்க்கை கதை

1 thought on “பிக்பாஸ் அக்ஷரா ரெட்டி வாழ்க்கை கதை”

Comments are closed.