You have been blocked from seeing ads.

அப்துல்கலாம் சொல்லும் கதை – MORAL STORY

அப்துல் காதர் ஆர்வம்:

    அப்துல்கலாம் தன் வாழ்நாள் முழுதுவம் நேர்மையாகவும் உண்மையாகவும் வாழ்ந்து வந்தவர்.

     அவர் அடிக்கடி மாணவர்களுக்கு உரையாற்றும் போதும் தன்னுடன் பணி புரிவோர்களுக்கும் உண்மைக்கும் நேர்மைக்கான கதையைச் சொல்வார்.

     புகழ்பெற்ற துறவியான ஷேக் அப்துல் காதர் அல்-ஜிலானி சிறுவனாக இருந்த பொழுது அவரின் வாழ்வில் நடந்த கதையை சொல்வார்.

 

அப்துல்கலாம்

You have been blocked from seeing ads.

     அப்துல் காதருக்கு சிறுவயதில் இருந்தே நிறைய நுணுக்கமாக அறிவுத் திறனை பெற வேண்டும் என்று ஆர்வம் இருந்தது.

     அப்துல் காதர் தன் தாயிடம் சென்று, “என்னுடைய அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ள பாக்தாத் செல்கிறேன் தாயே” அனுமதி தாருங்கள் என்றான்.

     காதரின் தாய் மறுப்பு ஏதும் சொல்லாமல் அவனுக்கு பாக்தாத் செல்ல அனுமதி அளித்தார்.

     அப்துல் காதருக்கு அவனின் தாய், பாக்தாத் செல்வதற்காக 40  பொற்காசுகளை அவனின் சட்டைப் பையில் வைத்து பையுடன் சேர்த்து தைத்தார்.

தாயின் அறிவுரை:

பின்பு அவனை வழி அனுப்புவதற்காக  தன் வீட்டு வாசலில் வந்து அப்துல் காதரிடம், “நீ எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும் உண்மையையும் நேர்மையையும் விட்டுத் தவறக் கூடாது”.

     உன்னிடம் இருக்கும் அனைத்துப் பொருட்களை இழக்க நேரிட்டாலும், உன்னுடைய உயிரே போகும் நிலமைக்கு வந்தாலும் உண்மையை மட்டும் பேச வேண்டும், இதை பின்பற்றுவேன் என்று சத்தியம் செய்து விட்டு செல் மகனே என்றார்.

     அப்துல் காதரும் சத்தியத்தை செய்து விட்டு, மற்றவர்களுடன் ஒரு சிறு மாட்டு வண்டியில் புறப்பட்டான்.

     அவர்கள் அனைவரும் ஒரு அடர்ந்த காட்டின் வழியே செல்லும் பொழுது அவர்களைச் சுற்றி வளைத்தனர் கொள்ளைக்காரர்கள்.

     அப்துல் காதரருடன் வந்த அனைவரின் உடைமைகளையும் பறித்துக் கொண்டனர்.

     பின்பு ஒரு கொள்ளைக்காரன் அப்துல் காதரிடம் வந்து நீ ஏதாவது கொண்டு வந்தாயா? என்று கேட்டான்.

     அதற்கு காதரோ என் சட்டைப் பையில் 40 தங்க நாணயங்கள் இருக்கிறது என்றான்.

அப்துல் காதரின் நேர்மை:

இவன் சொன்னத்தைக் கேட்டு அந்தக் கொள்ளைக்காரன் சிரித்தான் இவனிடம் 40 பொற்காசுக்காளா இருக்கப் போகிறது என்று.

     அவனை எதுவும் செய்யாமல் விட்டு விட்டான், காரணம் அவன் ஒரு ஏழைச் சிறுவனைப் போல் இருந்ததால் அவனிடம் ஒன்றும் இருக்காது என்று நினைத்தான்.

     அப்பொழுது அந்த இடத்திற்கு கொள்ளைக்காரர்களின் தலைவன் வந்தான்.

     அவனிடம் அப்துல் காதரை அழைத்துச் சென்றான் ஒரு கொள்ளையன், இவனிடம் 40 பொற்காசுகள் இருக்கிறது என்கிறான், அது நம்புவது போலவா இருக்கிறது என்றான்.

மேலும் படிக்க  வீரமங்கை வேலுநாச்சியார் கதை

     உடனே கொள்ளையனின் தலைவன் உன்னிடன் உண்மையில் 40 பொற்க்காசுகள் இருக்கிறதா? என்றான்.

     ஆம் என் தாய் என்னுடைய சட்டை பையில் 40 பொற்காசுகளை வைத்து சட்டையுடன் தைத்து இருக்கிறார் என்றான்.

     அவனின் சட்டைப் பையை சோதித்துப் பார்க்கச் சொன்னான் அந்தத் தலைவன்.

     உள்ளே 40 பொற்க்காசுகள் இருந்தது, அதனைப் பார்த்து அந்தத் தலைவனுக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை.

     நீ ஏன் எங்களிடம் 40 பொற்காசுகள் இருக்கு என்று சொன்னாய், நீ இல்லை என்றே சொல்லி இருக்கலாமே என்று கேட்டான்.

     அதற்கு அப்துல் காதர் என்னுடைய தாய் எந்த ஒரு கஷ்டமான சூழ்நிலையிலும் உண்மையிலும் நேர்மையிலும் இருந்து தவறக் கூடாது என்றார்.

     என்னுடைய 40 பொற்காசுகள் போனாலும் பரவாயில்லை என் தாயின் சத்தியத்தை மீற மாட்டேன் என்றான்.

கொள்ளையரின் மனமாற்றம்:

அவனின் வார்த்தையைக் கேட்டு கொள்ளையர்கள் அனைவரும் விம்மி அழுதனர்.

     நீ இந்தச் சிறுவயதிலே உன் தாயின் வார்த்தையை மீற கூடாது என்று நினைக்கிறாய், ஆனால் நாங்கள் பல வருடங்களாக எங்களுடைய குடும்பத்திற்கும் கடவுளுக்கும் உண்மையாக இல்லாமல் தவறுகளையே செய்துள்ளோம்.

     இன்று முதல் நாங்கள் அனைவரும் இந்தத் தொழிலை செய்ய மாட்டோம், இனி நீயே எங்களின் தலைவன் என்று கூறினார்கள்.

     அப்துல் காதரின் தாய் சொன்ன அந்த வார்த்தைகள் தான் அவரை பிற்காலத்தில் உலகம் போற்றும் புனிதத் துறவியாக மாற்றியது.

     அப்துல் காதரைப் போலவே அப்துல்கலாம் தன் வாழ்நாள் முழுவதும் நேர்மையை கடைபிடித்ததோடு மட்டுமல்லாமல் தன்னைச் சுற்றி உள்ளவர்களையும் நேர்மையின் வழியில் மாற்ற நினைத்தார்.   

கண்ணனின் கதை – தமிழ் குடும்பக் கதை

You have been blocked from seeing ads.

2 thoughts on “அப்துல்கலாம் சொல்லும் கதை – MORAL STORY”

Comments are closed.